• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    காசையும் மிச்சப்படுத்தலாம், எல்லா வசதியும் கிடைக்கும்! கிளான்ஸா V வேரியண்ட் நிஜமாவே வொர்த்தா?

    ஒன்-பிலோவ்-டாப் V வேரியன்ட் டாப்-ஸ்பெக் V(O) போலவே ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சத்தை இதில் இல்லை.

    Anonymous
    published on அக்டோபர் 26, 2026 15:11 ist
    info icon
    published onOct 26, 2026 15:11 IST
    last updated onOct 26, 2026 15:11 IST
    17 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Toyota Glanza

    சமீபத்தில் சந்தையில் அறிமுகமான டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் E, S, G, V மற்றும் V(O) என மொத்தம் ஐந்து வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. முன்பு V வேரியண்ட் மட்டுமே டாப் மாடலாக இருந்த நிலையில், தற்போது புதிதாக V(O) வேரியண்ட் இதன் உச்சக்கட்ட மாடலாக இணைக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே E மற்றும் S வேரியண்ட்களின் சிறப்பம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்த்துள்ளோம்; இந்த கட்டுரையில், டாப் மாடலுக்கு ஒரு படி கீழே உள்ள V வேரியண்ட்டில் என்னென்ன வசதிகள் இடம்பெற்றுள்ளன என்பதை விரிவாக அலசுவோம்.

    விலை

    வேரியண்ட்

    பெட்ரோல் MT

    பெட்ரோல் AMT

    Glanza V

    Rs 9.99 lakh

    Rs 10.59 lakh

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

    கிளான்ஸா V வேரியண்ட்டின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் ரூ.9.99 லட்சம் என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. இதன் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனுக்கு ரூ.60,000 கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், S மற்றும் G வேரியண்ட்களில் கிடைப்பது போன்று, இந்த V வேரியண்ட்டில் ஃபேக்டரி ஃபிட்டட் CNG கிட் ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    வெளிப்புற வடிவமைப்பு

    முன்பக்கம்

    டொயோட்டா கிளான்ஸா தற்போது புதிய ஃபேஸ்லிஃப்ட் பொலிவுடன் வந்துள்ளது. இது மாருதி சுஸுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவை இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வித்தியாசங்களைப் பற்றி மேலும் படிக்க விரும்பினால் எங்களது தனிக் கட்டுரையை வாசிக்கலாம். தோற்றத்தைப் பொறுத்தவரை கிளான்ஸா V வேரியண்ட்டானது இதன் டாப்-ஸ்பெக் V(O) வேரியண்ட்டைப் போலவே அச்சு அசலாகக் காட்சியளிக்கிறது. கீழ் வேரியண்ட்டான G-யிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டும் வகையில் DRL-களுடன் கூடிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் பம்பரில் எல்இடி ஃபாக் லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. V மற்றும் V(O) வேரியண்ட்களுக்கு இடையே உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், விண்ட்ஷீல்டில் பொருத்தப்படும் லெவல்-2 ADAS கேமரா மட்டுமே; அது V(O) மாடலில் மட்டுமே இருக்கும்.

    Toyota Glanza

    பக்கவாட்டுத் தோற்றம்

    V வேரியண்ட்டின் பக்கவாட்டு அமைப்பில் உள்ள அனைத்து டிசைன் கூறுகளும் டாப் மாடலான V(O)-ல் இருப்பதைப் போலவே தொடர்கின்றன. இதில் குரோம் ஃபினிஷ் டோர் ஹேண்டில்கள், ஜன்னல்களைச் சுற்றியுள்ள குரோம் லைன், 16 இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், டர்ன் இண்டிகேட்டர்கள் கொண்ட ORVM-கள், முன்பக்க ஃபெண்டரில் குரோம் இன்சர்ட், கருப்பு நிற சைட் ஸ்கர்ட்கள் மற்றும் கூரையில் பொருத்தப்பட்ட ஷார்க்ஃபின் ஆண்டெனா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து காருக்கு ஒரு பிரீமியம் லுக்கை அளிக்கின்றன.

    Toyota Glanza

    பின்பக்கம்

    பின்பக்கத் தோற்றமும் கூட V(O) வேரியண்ட்டைப் போலவே அப்படியே உள்ளது. இதில் C-வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் ரியர் விண்ட்ஷீல்டுக்கு கீழே குரோம் கார்னிஷ் பட்டையும், அதிலேயே ரியர் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. டெயில்கேட்டின் நடுவில் டொயோட்டா லோகோவும், இடதுபுறம் கிளான்ஸா பேட்ஜும், வலதுபுறம் V பேட்ஜும் கம்பீரமாக அமர்ந்துள்ளன. பம்பரில் ரிஃப்ளெக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது டாப் மாடலுக்கு இணையான வேரியண்ட் என்பதால், ரியர் டிஃபாகர் மற்றும் வாஷருடன் கூடிய வைப்பர் வசதியும் இந்த கிளான்ஸா V-ல் கிடைக்கிறது.

    Toyota Glanza

    கலர் ஆப்ஷன்கள்

    டாப்-ஸ்பெக் V(O) மாடலில் வழங்கப்படும் அதே வண்ணத் தேர்வுகள்தான் இந்த V வேரியண்ட்டிலும் கிடைக்கின்றன. இதில் கேஃப் ஒயிட், புளூயிஷ் பிளாக், டிஜிட்டல் டீல் கிரீன், கேமிங் கிரே, இன்ஸ்டா ப்ளூ, ஸ்போர்ட்டின் ரெட் மற்றும் என்டைசிங் சில்வர் என மொத்தம் ஏழு கவர்ச்சிகரமான நிறங்கள் வழங்கப்படுகின்றன. எந்தெந்த வேரியண்ட்களுக்கு என்னென்ன வண்ணங்கள் கிடைக்கின்றன என்பதை நாங்கள் ஏற்கனவே விரிவாகத் தொகுத்துள்ளோம். அதைப் படித்து உங்களுக்குப் பிடித்த நிறத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

    உள்புற வடிவமைப்பு மற்றும் நவீன வசதிகள்

    கிளான்ஸா V வேரியண்ட்டின் கேபின், டாப்-எண்ட் V(O) போன்றே பிளாக் மற்றும் பெய்ஜ் கலந்த செமி-லெதரைட் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டேஷ்போர்டில் கிளாஸ் பிளாக் இன்சர்ட்டுகளுடன் ட்ரை-டோன் ஃபினிஷிங்கில் மிளிர்கிறது. பின் இருக்கையில் அமரும் மூன்று பயணிகளுக்கும் தலா த்ரீ-பாயிண்ட் சீட்பெல்ட் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முந்தைய மாடலோடு ஒப்பிடும்போது உட்புறத்தில் செய்யப்பட்டுள்ள ஒரே குறிப்பிடத்தக்க மாற்றம் இதுவேயாகும்.

     Toyota Glanza

    வசதிகளைப் பொறுத்தவரை இந்த V வேரியண்ட்டில் தாராளமான நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. இதில் வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay சப்போர்ட் கொண்ட 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், ஆக்டிவ் கூலிங் வசதியுடன் கூடிய வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், உயரத்தை மாற்றியமைக்கும் டிரைவர் சீட், குரூஸ் கண்ட்ரோல், கிளாரியன் நிறுவனத்தின் 6-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் காரிலேயே இயங்கும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

     Toyota Glanza

    பாதுகாப்பைப் பொறுத்தமட்டில், கிளான்ஸா V மாடலில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வருகின்றன. இவற்றுடன் 360 டிகிரி கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் எனப்படும் ESC, ISOFIX சைல்ட் சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன. டாப்-எண்ட் V(O) வேரியண்ட்டோடு ஒப்பிடும்போது, இதில் லெவல்-2 ADAS வசதி மட்டுமே இல்லை. அதாவது அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் அசிஸ்ட், எச்சரிக்கை அமைப்புகள், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் எனப்படும் AEB போன்ற ADAS சார்ந்த தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெறவில்லை.

    பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

    இந்த புதிய அப்டேட்டுடன், பலேனோவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே புத்தம் புதிய 1.2-லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிளான்ஸா தற்போது களமிறங்குகிறது. இதன் தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

    எஞ்சின்

    1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

    பவர்

    83 PS

    டார்க்

    112 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-speed MT, 5-speed AMT

    MT - மேனுவல் டிரான்ஸ்மிஷன் / AMT - ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

    இதே எஞ்சினில் ஃபேக்டரி ஃபிட்டட் CNG கிட் ஆப்ஷனும் உண்டு; ஆனால் அது ஆரம்ப நிலை வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். CNG மோடில் இது 70 PS பவரையும் 102 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். கிளான்ஸா வேரியண்ட்களின் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளைப் பற்றி மேலும் அறிய எங்கள் தனிக் கட்டுரையைப் பார்க்கலாம்.

    போட்டியாளர்கள்

    இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்ஸா, தனக்கு இணையான மாருதி சுஸுகி பலேனோ மாடலுடன் மட்டுமின்றி டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹூண்டாய் i20 ஆகிய முன்னணி ஹேட்ச்பேக் கார்களுடனும் நேரடியாக மோதுகிறது.

    கார்தேக்கோவின் கருத்து...

    டாப் மாடலான V(O)-ல் மட்டுமே கிடைக்கும் லெவல்-2 ADAS வசதியைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த கிளான்ஸா V வேரியண்ட் அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான பேக்கேஜாக விளங்குகிறது. டொயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் ஒரு வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அத்தனை நவீன அம்சங்களும் இதில் தாராளமாகவே உள்ளன. அத்துடன் மேனுவல் மற்றும் AMT ஆகிய இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைப்பதும், சரியான விலையில் அமைந்திருப்பதும் இந்த காரை தவிர்க்க முடியாத தேர்வாக மாற்றுகிறது. இதில் நாம் சுட்டிக்காட்டும் ஒரே குறைபாடு என்னவென்றால் இதற்கு முந்தைய G வேரியண்ட்டில் கிடைக்கும் CNG ஆப்ஷன் இதில் வழங்கப்படாதது மட்டுமே.

    Toyota Glanza

    டொயோட்டா கிளான்ஸாவின் இந்த V வேரியண்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமென்ட் பகுதியில் பதிவிடுங்கள்!

    was this article helpful ?

    Anonymous
    Anonymous

    Write your Comment on Toyota கிளன்ச

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience