• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    ஒரே வருஷம்... 1 லட்சம் சேல்ஸ்! விக்டோரிஸ் காரின் வெற்றியை கொண்டாட வெளியானது ஆரம் எடிஷன்!

    ஸ்டைலிங் அப்டேட் ஒரு புதிய கலர் ஸ்கீம் உடன் வருகிறது. இது உட்புற வண்ணங்களுடன் பொருந்துகிறது.

    adarsh
    adarsh
    published on அக்டோபர் 26, 2026 15:39 ist
    info icon
    published onOct 26, 2026 15:39 IST
    last updated onOct 26, 2026 15:39 IST
    10 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    2026 Maruti Suzuki Victoris

    கடந்த செப்டம்பர் 2025-ல் சந்தைக்கு வந்த மாருதி விக்டோரிஸ் களமிறங்கிய ஒரே ஆண்டிற்குள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் இந்த விற்பனை மைல்கல்லை எட்டிய பயணிகள் வாகனம் இதுவே என்று மாருதி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

    விக்டோரிஸ் மாடலில் புதிதாக வந்துள்ள இந்த ஆரம் எடிஷனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை விரிவாகப் பார்ப்போம்:

    விக்டோரிஸ் ஆரம் எடிஷனில் உள்ள புதுமைகள் என்னென்ன?

    விக்டோரிஸ் ஆரம் எடிஷன் பிரத்யேகமாக ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. இது வெளிப்புறத் தோற்றத்தை மெருகேற்றும் கூடுதல் ஸ்டைலிங் பேக் ஆகும்; பிளாக் மற்றும் காப்பர் வண்ண தீமில் இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில் உள்ள ஆல்-பிளாக் மற்றும் காப்பர் தீமிற்குப் பொருந்தும் வகையில், முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் சைட் ஸ்கர்ட்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் வெளிப்புறத்தில் கூடுதல் குரோம் ஆக்சஸரீஸ்கள், கேபின் மற்றும் பூட் பகுதிகளுக்கான 3D மேட்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. உங்கள் புதிய விக்டோரிஸ் ஹைப்ரிட் காரில் இந்த ஸ்டைலிங் பேக்கை இணைக்க விரும்பினால் அதன் விலை ரூ.22,990 ஆகும்.

    2026 Maruti Victoris Aurum Edition

    ஆரம் எடிஷனில் இடம்பெற்றுள்ள பாகங்கள் மற்றும் அவற்றின் வண்ண விவரங்கள்:

    ஆக்ஸசரீஸ்கள்

    கலர்

    ஃப்ரண்ட் ஸ்கிட் பிளேட்

    கிரே & காப்பர்

    சைட் ஸ்கிட் பிளேட்

    கிரே & காப்பர்

    ரியர் ஸ்கிட் பிளேட்

    கிரே & காப்பர்

    ஃப்ரண்ட் கிரில் கார்னிஷ்

    குரோம்

    ஃப்ரண்ட் பம்பர் அப்பர் கிரில் கார்னிஷ்

    குரோம்

    பாடி சைட் மோல்டிங்

    குரோம்

    ரியர் பம்பர் அப்பர் கார்னிஷ்

    குரோம்

    ஃபெண்டர் கார்னிஷ்

    குரோம்

    வீல் ஆர்ச் கார்னிஷ்

    கிரே & காப்பர்

    டோர் வைசர்

    டார்க் குரோம்

    3D பூட் மேட்

    -

    ரியர் ட்ரங்க் சில் கார்டு

    -

    ஆல்-வெதர் 3D மேட்

    -

    எந்தெந்த குறிப்பிட்ட வேரியண்ட்களில் இந்த ஆரம் எடிஷன் கிடைக்கும் என்பதை மாருதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இது ஹைப்ரிட் மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதால், VXI, ZXI, ZXI ஆப்ஷனல், ZXI பிளஸ் மற்றும் ZXI பிளஸ் ஆப்ஷனல் ஆகிய ஹைப்ரிட் வேரியண்ட்களில் இந்த பேக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாருதி விக்டோரிஸ்: ஒரு பார்வை

    கடும் போட்டி நிலவும் காம்பேக்ட் SUV பிரிவில் மாருதியின் இரண்டாவது தயாரிப்பாக விக்டோரிஸ் திகழ்கிறது. நெக்ஸா ஷோரூம்கள் மூலம் மட்டுமே விற்கப்படும் கிராண்ட் விட்டாராவுக்கு மேலே நிலைநிறுத்தும் வகையில் இது அறிமுகமானது. இந்த செக்மென்ட்டில் பெரிய சந்தைப் பங்கைப் பிடிப்பதற்காக புதிய இன்டீரியர், பெரிய பூட் ஸ்பேஸ் மற்றும் பலருக்கும் எளிதில் அணுகக்கூடிய அரீனா ஷோரூம்கள் வழியே விக்டோரிஸ் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.

    2026 Maruti Suzuki Victoris

    பாரம்பரியமான எஸ்யூவி அமைப்பில் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் செக்மென்ட்டட் எல்இடி DRL அமைப்புகளுடன் விக்டோரிஸ் நேர்த்தியான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் கம்பீரமான முன்பக்க பம்பரில் எல்இடி ஃபாக் லேம்ப்கள், ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஃப்ரண்ட் கேமரா ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

    2026 Maruti Suzuki Victoris

    பக்கவாட்டுத் தோற்றத்தில், நடைமுறைக்கேற்ற வழக்கமான குடும்ப எஸ்யூவியாகத் தெரிந்தாலும், வீல் ஆர்ச் கிளாடிங், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ஸ்போர்ட்டி ரூஃப் ரெயில்கள் போன்றவை காரின் ஸ்போர்ட்டியான தன்மையை உயர்த்துகின்றன.

    பின்பக்க வடிவமைப்பில் இடம்பெற்றுள்ள செக்மென்ட்டட் கனெக்டட் எல்இடி டெயில் லேம்ப், விக்டோரிஸ் காருக்கு சாலையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை அளிக்கிறது.

    2026 Maruti Suzuki Victoris

    உட்புற கேபினைப் பொறுத்தவரை ஸ்ட்ராங்-ஹைப்ரிட் மாடல்களில் ஆல்-பிளாக் தீமும், மைல்ட்-ஹைப்ரிட் மாடல்களில் பிளாக்-அண்ட்-ஒயிட் தீமும் கிடைக்கின்றன. புதிய ஸ்டீயரிங் டிசைன், புத்தம் புதிய டேஷ்போர்டு மற்றும் ஸ்விட்ச்கள் ஆகியவை மற்ற மாருதி கார்களை விட விக்டோரிஸை மிகவும் மாடர்னாக உணர வைக்கின்றன. ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு தாராளமான இடவசதியும் சௌகரியமும் இதில் உண்டு.

    2026 Maruti Suzuki Victoris

    முக்கிய வசதிகளாக, வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay சப்போர்ட் செய்யும் 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் திரை, 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே ஆகியவை உள்ளன. மேலும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட இன்பினிட்டி சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், 8 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் பவர்டு டிரைவர் சீட், கனெக்டட் கார் தொழில்நுட்பம், விருப்பத்திற்கேற்ப மாற்றக்கூடிய ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற சிறப்பம்சங்களும் நிறைந்துள்ளன.

    2026 Maruti Suzuki Victoris

    பாதுகாப்பு வசதிகளில் EBD உடன் கூடிய ABS, லெவல்-2 ADAS தொழில்நுட்பம், ஆட்டோ ஹில்-ஹோல்டு வசதியுடன் கூடிய EPB, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் HDC ஆகியவை உள்ளன. மேலும் BNCAP மற்றும் GNCAP ஆகிய இரண்டு மோதல் சோதனைகளிலுமே விக்டோரிஸ் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்று தனது பாதுகாப்புத் திறனை உறுதிப்படுத்தியுள்ளது.

    பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

    மாருதி விக்டோரிஸ் மொத்தம் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனுடன் வரும் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின், 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்-சிஎன்ஜி எஞ்சின் மற்றும் 1.5-லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் எஞ்சின் ஆகியவை இதில் அடங்கும்.

    2026 Maruti Suzuki Victoris

    எஞ்சின் மற்றும் மைலேஜ் விபரங்கள்:

    எஞ்சின்

    1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

    1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் + CNG

    1.5-லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட்

    பவர்

    103 PS

    88 PS

    92 PS

    டார்க்

    139 Nm

    121 Nm

    122 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-speed MT / 6-speed AT

    5-speed MT

    eCVT

    டிரைவ்டிரெயின்

    2WD / AWD (AT only)

    2WD

    2WD

    கிளைம்டு மைலேஜ்

    21.2 kmpl (MT) / 21 kmpl (AT) / 19 kmpl (AWD AT)

    27 km/kg

    28.6 kmpl

    MT - Manual Transmission, AT Torque Converter (automatic), eCVT - Continuously Variable Transmission (automatic) / 2WD - Two-Wheel Drive (front), AWD - All-Wheel Drive 

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    மாருதி சுஸூகி விக்டோரிஸ் ரூ.10.50 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் கிடைக்கிறது.

    போட்டி நிறைந்த இந்த காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் க்ரெட்டா, ரெனால்ட் டஸ்டர், ஸ்கோடா குஷாக், வோக்ஸ்வாகன் டைகுன், கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர், நிஸான் டெக்டான், டாடா சியரா, சிட்ரோன் ஏர்கிராஸ் எக்ஸ், எம்ஜி ஆஸ்டர், ஹோண்டா எலிவேட் மற்றும் டாடா கர்வ் போன்ற பல முக்கிய மாடல்களுடன் விக்டோரிஸ் நேரடியாக மோதுகிறது.

    கார்தேக்கோவின் கருத்து...

    தனது பிரிவில் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு நடைமுறைக்கேற்ற சிறந்த எஸ்யூவிகளில் ஒன்றாக மாருதி விக்டோரிஸ் விளங்குகிறது. டீசல் எஞ்சின் ஆப்ஷன் இல்லை என்பதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இதில் கிடைக்கும் பலதரப்பட்ட பவர்டிரெய்ன் தேர்வுகள் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன. இதன் விற்பனை எண்ணிக்கையைப் பார்க்கும்போது, சிறப்பான வடிவமைப்பு, நவீன வசதிகள் மற்றும் நம்பகமான மாருதி பிராண்டுடன் கூடிய காருக்கு இருக்கும் வரவேற்பு தெளிவாகப் புலப்படுகிறது. குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் நாடு முழுக்க விரிந்துள்ள சர்வீஸ் கட்டமைப்பு ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலமாகும்.

    2026 Maruti Suzuki Victoris

    அதேபோல் பண்டிகைக் காலத்தில் புது கார் வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆரம் எடிஷன் சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு புதிய அப்டேட்டாக அமைந்துள்ளது. ஹைப்ரிட் மாடலின் உட்புற பிளாக் மற்றும் காப்பர் வண்ணத்திற்குப் பொருந்தும் வகையில் கூடுதல் பளபளப்புடன் இந்த பேக் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்டோரிஸ் மற்றும் ஆரம் எடிஷன் பேக்கின் விலை மற்றும் இருப்பு விவரங்களை அறிய உங்களுக்கு அருகிலுள்ள மாருதி சுஸூகி டீலரைத் தொடர்புகொள்ளலாம்.

    விக்டோரிஸ் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமென்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

    இங்கு கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் விக்டோரிஸ் மைல்ட்-ஹைப்ரிட் மாடலினுடையவை மட்டுமே.

    was this article helpful ?

    adarsh
    Adarsh Ashok is a Correspondent for cars at CarDekho Group. He brings his understanding and experience of cars and the motoring industry to all things automotive in the group\'s media wing. By education, he has a master\'s degree in Mass Communication and also majored in Automotive Journalism. His passion for cars and his urge to talk about cars are expressed in the form of news, features and videos on social media. He approaches stories with a keen perspective and experience, be it with vehicles from Fiats to Ferraris. மேலும் படிக்க

    Write your Comment on Maruti Suzuki விக்டோரிஸ்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience