• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    கிரெட்டாவுக்கு பட்ஜெட் இல்லையா? ₹10 லட்சத்துல 2026 ஹூண்டாய் பேயான் வந்தாச்சு!

    கிரெட்டாவிற்கும் வென்யூ -விற்கும் இடையில் ஸ்லாட் செய்யப்பட்ட பேயான் வினோதமான ஸ்டைலிங், வசதிகள் நிறைந்த கேபின் மற்றும் ஒரே ஒரு பெட்ரோல் எஞ்சின் உடன் வருகிறது.

    ved
    ved
    published on அக்டோபர் 26, 2026 16:25 ist
    info icon
    published onOct 26, 2026 16:25 IST
    last updated onOct 26, 2026 16:25 IST
    17 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Hyundai Bayon

    நீண்ட நாட்களாக வெளியான டீசர்கள் மற்றும் கசிந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பேயான் காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக களமிறக்கியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காம்பேக்ட் SUV செக்மென்ட்டில் கிரெட்டா மாடலுக்கு இணையாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த கார் தனித்துவமான கிராஸ்ஓவர் வடிவமைப்பு, நவீன வசதிகள் மற்றும் ஸ்மூத்தான பவர்டிரெய்ன் மூலம் பட்ஜெட் விலையிலான SUV சந்தையைக் குறிவைக்கிறது. இந்த புதிய பேயான் காரைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்:

    A post shared by CarDekho India (@cardekhoindia)

    விலை மற்றும் வேரியண்ட்கள்

    2026 பேயான் மாடல் HX2, HX3, HX3 Plus, HX5, HX6, HX8 மற்றும் HX10 என மொத்தம் ஏழு வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் வேரியண்ட் வாரியான விலை நிலவரம்:

    வேரியண்ட்

    பெட்ரோல்

    MT

    CVT

    HX2

    ரூ. 10 லட்சம்

    -

    HX3

    TBA

    -

    HX3 Plus

    TBA

    -

    HX5

    TBA

    TBA

    HX6

    TBA

    TBA

    HX8

    TBA

    TBA

    HX10

    TBA

    TBA

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

    • ஹூண்டாய் பேயான் காரின் தொடக்க விலை ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது

    • அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்ஷிப்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ரூ.11,000 முன்பணத்துடன் இந்த காருக்கான புக்கிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது

    வடிவமைப்பு

    • வழக்கமான SUV போன்ற கிரெட்டாவின் அமைப்பில் இருந்து மாறுபட்டு சற்று வித்தியாசமான கிராஸ்ஓவர் பாணியிலான தோற்றத்தை பேயான் பெற்றுள்ளது.

    • முன்பக்கத்தில் மெலிதான எல்இடி DRL ஸ்ட்ரிப்கள் தலைகீழ் 'L' வடிவில் அமைந்துள்ளன. அவற்றின் நடுவே கிளாஸ் பிளாக் ஸ்ட்ரிப் கொடுக்கப்பட்டுள்ளது. பம்பரில் எல்இடி ஹெட்லேம்ப்களும், முரட்டுத்தனமான தோற்றத்தைத் தரும் சில்வர் ஸ்கிட் பிளேட்டும் பொருத்தப்பட்டுள்ளன

    Hyundai Bayon

    • பக்கவாட்டுத் தோற்றத்தில் வித்தியாசமான டிசைனில் உள்ள 17 இன்ச் அலாய் வீல்கள் உடனடியாகக் கவனத்தை ஈர்க்கின்றன.

    • காரின் கம்பீரமான தோற்றத்தை உயர்த்தும் வகையில் தடிமனான கிளாடிங் உயரமான ரூஃப் ரெயில்கள் மற்றும் மஸ்குலர் பாடி அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

    Hyundai Bayon
    Hyundai Bayon

    • பின்பக்க அமைப்பிலும் முன்பக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தலைகீழ் 'L' வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள் உள்ளன; அத்துடன் பம்பரில் சில்வர் அலங்காரமும், டெயில்கேட்டில் பேயான் பேட்ஜிங்கும் இடம்பெற்றுள்ளன.

    • இந்த காரின் வெளிப்புற அழகை பல கோணங்களில் தெளிவாகப் பார்க்க விரும்பினால் எங்களது பிரத்யேகப் புகைப்படத் தொகுப்பைப் பார்வையிடலாம்.

    Hyundai Bayon

    அளவுகள்:

    நீளம்: 4245 மிமீ, அகலம்: 1810 மிமீ, உயரம்: 1605 மிமீ, வீல்பேஸ்: 2600 மிமீ

    கலர் ஆப்ஷன்கள்

    ஹூண்டாய் பேயான் மொத்தம் ஆறு ஒற்றை நிற தேர்வுகளில் கிடைக்கிறது:

    • அட்லஸ் ஒயிட்

    • டைட்டானியம் பிளாக்

    • ஃபியரி ரெட்

    • கிளாஸி ப்ளூ

    • கோல்டன் ப்ரான்ஸ்

    • எக்கோடோனிக் கிரே

    இவற்றில் ஃபியரி ரெட் மற்றும் அட்லஸ் ஒயிட் ஆகிய வண்ணங்களை கருப்பு நிற கூரையுடன் கூடிய டூயல்-டோன் ஆப்ஷனிலும் பெறலாம். மேலும் தனித்துவமான தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக கிளாஸி ப்ளூ மற்றும் எக்கோடோனிக் கிரே வண்ணங்கள் மேட் ஃபினிஷிங்கிலும் கிடைக்கின்றன.

    எங்களின் சாய்ஸ்:

    இளமைத் துடிப்பும் தனித்துவமும் நிறைந்த ஃபியரி ரெட் வண்ணமே பேயானின் துடிப்பான கேரக்டருக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்துகிறது என்பது எங்கள் கருத்து.

    உள்புற வடிவமைப்பு

    • கேபினின் ஒட்டுமொத்த லேஅவுட் சர்வதேச அளவில் விற்கப்படும் i20 காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • டேஷ்போர்டில் டச்ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய பிரம்மாண்டமான டூயல்-ஸ்கிரீன் செட்டப் உள்ளது. அண்மையில் வெளியாகும் புதிய ஹூண்டாய் கார்களைப் போல இதன் ஸ்டீயரிங் வீலிலும் புதிய 'மோர்ஸ்-கோட்' லோகோ பொறிக்கப்பட்டுள்ளது.

    Hyundai Bayon

    • டாப் வேரியண்ட்களில் வெள்ளை மற்றும் கருப்பு கலந்த டூயல்-டோன் இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளதால் கேபின் வெளிச்சமாகவும் விசாலமாகவும் காட்சியளிக்கிறது.

    • சென்டர் ஏசி வென்ட்கள் சற்று கீழே செங்குத்தான அமைப்பில் கொடுக்கப்பட்டு, அவற்றின் நடுவே கிளைமேட் கண்ட்ரோல்கள் பொருத்தப்பட்டு தனித்துவமான தோற்றத்தைத் தருகின்றன

    Hyundai Bayon

    • பின்பக்க பயணிகளுக்கும் தாராளமான இடவசதி கிடைப்பதுடன், ரியர் ஏசி வென்ட்கள், USB டைப்-C சார்ஜிங் போர்ட்கள் மற்றும் கப் ஹோல்டர்களுடன் கூடிய சென்டர் ஆர்ம்ரெஸ்ட் போன்ற வசதிகளும் உள்ளன.

    Hyundai Bayon

    ஸ்போர்ட்டியான ஃபீல் வேண்டுமா...

    காரின் டூயல்-டோன் வேரியண்ட்களை நீங்கள் தேர்வு செய்தால், சிவப்பு நிற தையல்களுடன் கூடிய ஆல்-பிளாக் இன்டீரியர் தீம் கிடைக்கும். இது வழக்கமான வெளிர் நிறங்களை விட பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

    பூட் ஸ்பேஸ்

    பின்பக்க இருக்கைகள் பயன்பாட்டில் இருக்கும்போதே பேயான் காரில் 505 லிட்டர் பூட் ஸ்பேஸ் தாராளமாகக் கிடைக்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. கூடுதல் லக்கேஜ்களை ஏற்றுவதற்கு வசதியாக 60:40 ஸ்பிளிட் மடிப்பு வசதியும் இதில் உண்டு.

    Hyundai Bayon

    நவீன வசதிகள்

    • பேயான் காரில் ஏராளமான சொகுசு வசதிகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 8 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் பவர்டு டிரைவர் சீட், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் போன் சார்ஜர், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், டிரைவ் மோட்கள், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள் மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM ஆகியவை இதில் அடங்கும்.

    Hyundai Bayon
    Hyundai Bayon

    • வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay சப்போர்ட் கொண்ட 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்துடன் இயங்குவதுடன், 23 பிராந்திய மொழிகளில் வாய்ஸ் கமாண்ட்களைப் புரிந்து செயல்படும் திறன் கொண்டது.

    Hyundai Bayon

    பாதுகாப்பு அம்சங்கள்

    • பாதுகாப்பு விஷயத்திலும் பேயான் வலுவாகவே உள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள், லெவல்-2 ADAS பாதுகாப்புத் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், TPMS, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் எனப்படும் EPB, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் எனப்படும் ESC, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் எனப்படும் HHA மற்றும் முன், பின் மற்றும் பக்கவாட்டு பார்க்கிங் சென்சார்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன

    Hyundai Bayon

    பவர்டிரெய்ன்

    கிரெட்டா மற்றும் வெர்னா கார்களில் பயன்படுத்தப்படும் அதே நம்பகமான 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய பேயானிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விரிவான விபரங்கள்:

    எஞ்சின்

    1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

    பவர்

    115 PS

    டார்க்

    144 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT/CVT

    டிரைவ்டிரெய்ன்

    FWD

    மைலேஜ் மைலேஜ் (ARAI)

    18.6 கிமீ/லி (CVT)

    MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT- கண்டிநியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமெட்டிக்), FWD- ஃபிரன்ட்-வீல் டிரைவ்

    Hyundai Bayon

    ஜனவரி 2027-ல் பேயான் காருக்கான ஃபேக்டரி-ஃபிட்டட் CNG கிட் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் ஹூண்டாய் உறுதி செய்துள்ளது.

    கார்தேக்கோவின் கருத்து...

    சமீபத்திய ஆண்டுகளில் மற்ற மாடல்களின் விற்பனை மந்தமடைந்ததால், ஹூண்டாய் நிறுவனம் தனது ஒட்டுமொத்த வர்த்தகத்திற்கும் கிரெட்டாவையே அதிகம் நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவானது. இதனை மாற்றும் விதமாக பல புதிய தயாரிப்புகளைக் களமிறக்க திட்டமிட்டிருந்த ஹூண்டாய், அதன் முதல் படியாக இந்த பேயானை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த தலைமுறை கிரெட்டா மாடல் உருவத்தில் பெரிதாகவும், அதிக விலையுடனும் வரவுள்ளதால், தற்போதைய கிரெட்டா வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க ஹூண்டாய் இந்த வியூகத்தை வகுத்துள்ளது. கிராஸ்ஓவர் போன்ற தோற்றம் மற்றும் ஒரே ஒரு பெட்ரோல் எஞ்சின் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், சந்தையில் பேயான் எத்தகைய வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இருப்பினும், இதன் கவர்ச்சிகரமான ஆரம்ப விலை பல வாடிக்கையாளர்களை நிச்சயம் கவரும்.

    காம்பேக்ட் SUV வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள், பேயானைத் தவிர பரிசீலிக்க வேண்டிய பிற முன்னணி மாடல்கள் இதோ:

    • ஹூண்டாய் கிரெட்டா: இந்த பிரிவின் எவர்கிரீன் தேர்வாக இருக்கும் கிரெட்டாவின் அடுத்த தலைமுறை மாடல் விரைவில் வரவுள்ளது. பல்வேறு பவர்டிரெய்ன் தேர்வுகள், சிறப்பான பயண மற்றும் நவீன வசதிகளுடன் இப்போதும் நம்பகமான தேர்வாக உள்ளது.

    • கியா செல்டோஸ்: காம்பேக்ட் SUV பிரியர்களின் மற்றொரு விருப்பமான செல்டோஸ் அனைத்துத் தரப்பினரையும் கவரும் அம்சங்களுடன் எவ்வித குறையுமின்றி திகழ்கிறது.

    • டாடா சியரா: ரெட்ரோ வடிவமைப்பு, விசாலமான கேபின், பலவித எஞ்சின் தேர்வுகள் மற்றும் அசத்தலான நவீன வசதிகளை சியரா வழங்குகிறது.

    • மாருதி கிராண்ட் விட்டாரா / டொயோட்டா ஹைரைடர்: ஒரே கட்டமைப்புடன் வெவ்வேறு ஸ்டைலிங்கில் வரும் இந்த இரண்டுமே மிகவும் நடைமுறைக்கேற்ற கார்கள். CNG, ஸ்ட்ராங்-ஹைப்ரிட் மற்றும் AWD போன்ற பவர்டிரெய்ன் தேர்வுகள் இவற்றின் பலம்.

    • மாருதி விக்டோரிஸ்: கிராண்ட் விட்டாராவின் அதே எஞ்சின் அமைப்பைக் கொண்டிருந்தாலும் அதிக இடவசதி, BNCAP மோதல் சோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் நவீன டிசைனுடன் வருகிறது.

    • ரெனால்ட் டஸ்டர் / நிஸான் டெக்டான்: செக்மென்ட்டிலேயே அதிக பவர், சிறந்த வசதிகள், மஸ்குலர் தோற்றம் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் டிரைவிங் ஆர்வலர்களைக் கவரும் மாடல்கள்.

    • ஹோண்டா எலிவேட்: சொகுசான பயண அனுபவம், ஸ்மூத்தான பெட்ரோல் எஞ்சின் மற்றும் விசாலமான கேபினுக்கு பெயர்பெற்ற எலிவேட், சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் மூலம் கூடுதல் வசதிகளுடன் மேம்பட்டுள்ளது.

    • ஃபோக்ஸ்வேக்ன் டைகுன்: சிறப்பான எஞ்சின்கள், துல்லியமான DSG கியர்பாக்ஸ் மற்றும் வோக்ஸ்வாகனின் கிளாஸிக் ஃபீல் ஆகியவற்றுடன் டிரைவிங்கை ரசித்து ஓட்டுபவர்களுக்கான சிறந்த சாய்ஸ்.

    • ஸ்கோடா குஷாக்: டைகுனின் உறவினரான இது கிளாஸியான டிசைனுடன் தனது பிரிவிலேயே முதன்முறையாக பின்பக்க பயணிகளுக்கு மசாஜ் இருக்கை வசதியையும் தருகிறது.

    • டாடா கர்வ்: கூபே-SUV பாணியிலான கவர்ச்சிகரமான டிசைன், பெரிய பூட் ஸ்பேஸ் மற்றும் நீண்ட வசதிகள் பட்டியலுடன் சாலையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் மாடல்.

    • எம்ஜி ஆஸ்டர்: சற்று பழைய மாடலாக இருந்தாலும் பிரீமியம் கேபின் தரம் மற்றும் பணத்திற்கு ஏற்ற முழுமையான திருப்தியைத் தரும் ஒரு SUV

    was this article helpful ?

    ved
    Ved Kulkarni is a Correspondent with CarDekho Group, and an automotive journalist with over 5 years of experience under his belt covering cars, motorcycles, mobility solutions and everything in between. A Product Design graduate, he specialises in analysing market trends, testing cars, creating automotive content and gathering customer insights. His love for vehicles began early, and he has vast hands-on experience with everything from classic cars to imported exotics and even the regular mass market vehicles. His technical expertise, combined with a deep-rooted passion for all things automotive, helps give buyers holistic and knowledgeable advice. மேலும் படிக்க

    Write your Comment on Hyundai bayon

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience