• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    சார்ஜ் தீர்ந்துரும்னு பயமே வேணாம்! ஒரே சார்ஜில் 600 கி.மீ-க்கு மேல ஓடும் டாப் 5 எலக்ட்ரிக் கார்கள் இதோ!

    இந்த பட்டியலில் உள்ள மிகவும் மலிவு விலையில் இருக்கும் SUV -தான் மிக அதிக ரேஞ்ச் கொடுக்கக்கூடியது.

    ninad
    ninad
    published on அக்டோபர் 26, 2026 15:56 ist
    info icon
    published onOct 26, 2026 15:56 IST
    last updated onOct 26, 2026 15:56 IST
    6 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Top 5 EVs Under Rs 50 lakh for Road Trips

    தீபாவளி என்றாலே சொந்த ஊருக்குப் புறப்படுவது, உறவினர்களைச் சந்திப்பது மற்றும் நீண்ட நாட்களாகத் திட்டமிட்ட குடும்பச் சுற்றுலா செல்வதுதான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட நீண்ட பயணங்களை பெட்ரோல், டீசல் செலவில்லாமல் மிகக் குறைந்த செலவில் முடிக்க எலக்ட்ரிக் காரை விட சிறந்த வழி என்ன இருக்க முடியும்?

    வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை விட எலக்ட்ரிக் வாகனங்களின் இயங்கு செலவு மிகக் குறைவு என்பதால் பண்டிகைக் கால நெடுந்தூரப் பயணங்கள் உங்கள் பாக்கெட்டைப் பதம் பார்க்காது. அதேவேளையில் குடும்பத்துடன் நெடுஞ்சாலைகளில் சுற்றுலா செல்லும்போது, பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பேட்டரி ரேஞ்சும் மிக முக்கியமானதாகிறது.

    எனவே இந்த தீபாவளிக்கு புத்தம் புதிய எலக்ட்ரிக் காரை வீட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தால், அதிக ரேஞ்ச் தரக்கூடிய ரூ.50 லட்சத்திற்குள் கிடைக்கும் டாப் 5 எலக்ட்ரிக் கார்களின் விவரங்கள் இதோ:

    மஹிந்திரா BE 6 ஸ்போர்ட்டெக்

    விலை - ரூ. 19.45 லட்சம் முதல் ரூ. 26.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    ரேஞ்ச் - 708 கி.மீ

    இந்த வரிசையில் எதிர்காலத் தலைமுறை வடிவமைப்போடு முதலிடத்தில் நிற்கிறது மஹிந்திரா BE 6 ஸ்போர்ட்டெக். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியில் பெரிய 79 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக 286 PS பவரையும் 360 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதிலுள்ள டிரிபிள் ஸ்கிரீன் செட்டப் மற்றும் 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்றவை நீண்ட பயணங்களில் உடன் வருபவர்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கை வழங்கும்.

    Top Safest Cars In India

    மஹிந்திரா BE 6 ஸ்போர்ட்டெக் அதிகபட்சமாக 708 கி.மீ. ரேஞ்ச் தருவதால், மும்பை-கோவா போன்ற நீண்ட தூரப் பயணங்களை சார்ஜிங் இடைவேளைகளைப் பற்றிக் கவலைப்படாமல் மிக எளிதாக முடிக்க முடியும். இதன் ஆரம்ப விலை ரூ.19.45 லட்சம் முதல் தொடங்கி, டாப்-எண்ட் லான்ச் எடிஷனுக்கு ரூ.26.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.

    மஹிந்திரா XEV 9S

    விலை - ரூ. 20.65 லட்சம் முதல் ரூ. 30.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    ரேஞ்ச் - 679 கி.மீ

    அடுத்த இடத்தில் மஹிந்திராவின் மற்றொரு பிரத்யேக தயாரிப்பான ஃபிளாக்ஷிப் XEV 9S எஸ்யூவி உள்ளது. இது பிரபல XUV 7XO மாடலின் எலக்ட்ரிக் பதிப்பாகும்; எலக்ட்ரிக் செக்மென்ட்டிலேயே ஏழு இருக்கைகள் கொண்ட இடவசதியை இது நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

    Mahindra XEV 9S

    நண்பர்கள் மற்றும் பெரிய குடும்பத்துடன் சுற்றுலா திட்டமிடுபவர்களுக்கு இந்த XEV 9S சிறந்த தேர்வாக அமையும்; அதிகப் பயணிகளோ அல்லது கூடுதல் லக்கேஜ்களோ எதுவாக இருந்தாலும் தாராளமாக சமாளிக்கும். மிக முக்கியமாக, இதிலுள்ள பெரிய 79 kWh பேட்டரி பேக் ஒரு முழு சார்ஜில் 679 கி.மீ. ரேஞ்சை வழங்குகிறது. இதன் விலை ரூ.20.65 லட்சம் முதல் ரூ.30.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டாடா சியரா EV

    விலை - ரூ. 18.79 லட்சம் முதல் ரூ. 26.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    ரேஞ்ச் - 665 கி.மீ

    பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் புகழ்பெற்ற டாடா சியரா கார் தற்போது நவீன எலக்ட்ரிக் அவதாரத்தில் மீண்டும் களம் கண்டுள்ளது. சியராவுக்கு உரித்தான ஆல்பைன் ஜன்னல்கள், கம்பீரமான பாக்ஸி வடிவமைப்பு மற்றும் பக்குவமான தோற்றத்துடன் இது பழைய நாஸ்டால்ஜியாவை கண்முன் நிறுத்துகிறது.

    Tata Sierra EV

    நண்பர்களுடன் பழைய நினைவுகளைப் பேசிக்கொண்டே சுற்றுலா செல்லும்போது, பேட்டரி தீர்ந்துவிடுமோ என்ற பதற்றம் பயணத்தைக் கெடுத்துவிடக் கூடாது. அதற்காகவே சியரா EV காரில் 75 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது; இது தாராளமாக 665 கி.மீ. ரேஞ்சை வழங்குகிறது.

    BYD சீல்

    பிரீமியம் வேரியன்ட் விலை - ரூ. 41.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    ரேஞ்ச் - 650 கி.மீ

    ரூ.50 லட்சத்திற்குள் பிரீமியம் சொகுசு மற்றும் ஸ்போர்ட்டியான டிரைவிங் அனுபவத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதற்கு BYD சீல் மட்டுமே தனித்துவமான சாய்ஸ். மினிமலிஸ்டிக் கேபின், டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களில் மிருதுவான சாஃப்ட்-டச் மெட்டீரியல்கள் மற்றும் மிகவும் சௌகரியமான சொகுசு இருக்கைகள் என உட்புறத்தில் ஒரு பிரீமியம் அனுபவத்தை இது தருகிறது.

    BYD Seal

    இதில் இடம்பெற்றுள்ள 82.5 kWh பேட்டரி பேக் 313 PS பவர், 360 Nm டார்க் மற்றும் 650 கி.மீ. ரேஞ்சை வாரி வழங்குகிறது. இந்த எலக்ட்ரிக் செடான் அசத்தலான செயல்திறன் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் உணர்வை சரியான விலையில் தருகிறது. இதன் ஒட்டுமொத்த மாடல்களின் விலை ரூ.41.50 லட்சம் முதல் தொடங்கி ரூ.53.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. உங்கள் பயணங்கள் இன்னும் விறுவிறுப்பாக அமைய வேண்டும் என்றால் BYD சீல் சிறந்த தேர்வாகும்.

    டாடா ஹாரியர் EV

    விலை - ரூ. 21.79 லட்சம் முதல் ரூ. 30.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    ரேஞ்ச் - 627 கி.மீ

    இந்தப் பட்டியலில் உள்ள மிகப்பெரிய பேட்டரி அமைப்புகளில் டாடா ஹாரியர் EV மாடலும் ஒன்று. இதிலுள்ள 75 kWh பேட்டரி பேக் 627 கி.மீ. ரேஞ்சை வழங்குவதுடன் இதன் ஆல்-வீல் டிரைவ் மாடல் 238 PS பவரையும் 504 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

    Top Safest Cars In India

    மிரட்டலான செயல்திறன் விசாலமான கேபின், அதிகப்படியான பூட் ஸ்பேஸ் மற்றும் பல நவீன சொகுசு வசதிகள் என குடும்பத்திற்கான ஒரு முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவியாக இது திகழ்கிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய நகரங்களில் டாடாவின் ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் பரவலாக உள்ளதால், இந்த காரில் நீண்ட தூரப் பயணங்களைத் திட்டமிடுவது மிக சுலபம்.

    கார்தேக்கோவின் கருத்து...

    குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு எலக்ட்ரிக் கார்கள் மிகச் சிறந்த முடிவாகும். குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் பணத்தை மிச்சப்படுத்துவது மிகவும் அவசியமானது. 600 கி.மீட்டருக்கும் அதிகமான கிளைம்டு ரேஞ்ச் கொண்ட இந்த கார்கள், அடிக்கடி சார்ஜிங் போடத் தேவையின்றி நீண்ட தூரப் பயணங்களை எளிதாக்குகின்றன. அதேசமயம் தாராளமான இடவசதியும் நவீன வசதிகளும் குடும்பத்தின் பயண அனுபவத்தை மேலும் இனிமையாக்குகின்றன.

    இருப்பினும் இந்த கிளைம்டு ரேஞ்ச் புள்ளிவிவரங்களை ஒரு வழிகாட்டியாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை வேகம், ஏசி பயன்பாடு மற்றும் லக்கேஜ் எடை ஆகியவற்றைப் பொறுத்து நிஜ சாலைகளில் கிடைக்கும் ரேஞ்ச் சற்றே மாறுபடலாம்.

    எதிர்கால டிசைனில் அசத்தும் BE 6 ஸ்போர்ட்டெக் முதல் ஸ்போர்ட்டியான BYD சீல் வரை இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் உங்கள் தீபாவளிப் பயணங்களை மறக்க முடியாததாக மாற்றும். இந்த பட்டியலில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்திய நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் ரூ.50 லட்சத்திற்குள் அதிக ரேஞ்சுடன் ஆதிக்கம் செலுத்துவதுதான்.

    நீண்ட தூரப் பயணங்களுக்கான சிறந்த எலக்ட்ரிக் கார் என்பது வெறும் காகிதத்தில் அதிக ரேஞ்ச் காட்டுவது மட்டுமல்ல. பயணச் செலவைக் குறைத்து குடும்பத்திற்கு மஹிழ்ச்சியைத் தருவதும்தான்.

    இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டிற்கு எந்த எலக்ட்ரிக் காரைக் கொண்டு வரப்போகிறீர்கள்? உங்கள் விருப்பத்தைக் கீழே கமென்ட்டில் பதிவிடுங்கள்!

    was this article helpful ?

    ninad
    Ninad Mestry is an automotive engineer, dieselhead, and lifelong automotive enthusiast with a passion for cars, motorcycles, and the technology behind them. An engineering graduate, he is particularly interested in vehicle engineering, emerging mobility solutions, and the stories that make every machine unique. When he\'s not exploring the latest developments in the automotive world, he enjoys finding new ways to share automotive experiences and insights with fellow enthusiasts. Whether it\'s a rugged SUV, a practical commuter, a cutting-edge EV, or a classic motorcycle, Ninad is always eager to learn more and dive deeper into all things automotive.மேலும் படிக்க

    Write your Comment on Mahindra பிஇ 6 sporteq

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience