பட்ஜெட் விலையில் சிறந்த 7-சீட்டர் வேண்டுமா? அறிமுகமானது கியா கேரன்ஸ் CNG, கிளாவிஸ் CNG 2026
பெட்ரோல், டர்போ-பெட்ரோல், டீசல், EV மற்றும் இப்போது CNG; ஒவ்வொரு வகையான வாடிக்கையாளார்களுக்கும் ஒரு கேரன்ஸ் உள்ளது!
- ஒரு கருத்தை எழுதுக

கியா இந்தியா நிறுவனம், தனது பிரபலமான கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் MPV-க்களில் ஃபேக்டரி-ஃபிட்டட் CNG வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த எரிபொருள் செலவை விரும்பும் பட்ஜெட் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து கேரன்ஸ் CNG ரூ. 12.12 லட்சம் ஆரம்ப விலையிலும் கேரன்ஸ் கிளாவிஸ் CNG ரூ. 12.39 லட்சம் ஆரம்ப விலையிலும் (எக்ஸ்-ஷோரூம்) களமிறக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அறிமுகம் 7-சீட்டர் மார்க்கெட்டில் போட்டியை நிச்சயம் அதிகரிக்கும்.
விலை மற்றும் வேரியண்ட்கள்
கியா கேரன்ஸ் CNG மாடல் ஒரே ஒரு பிரீமியம்(O) வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. அதேசமயம், கேரன்ஸ் கிளாவிஸ் CNG மாடல் HTE மற்றும் HTE(O) என இரண்டு வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இந்த CNG வேரியண்ட்கள் அவற்றின் பெட்ரோல் மாடல்களை விட சுமார் ரூ. 1 லட்சம் கூடுதல் விலையில் வருகின்றன. இந்த விலை அதிகரிப்புக்கு ஃபேக்டரியில் பொருத்தப்பட்ட CNG கிட் மற்றும் அதற்கேற்ப செய்யப்பட்ட சில மாற்றங்கள் முக்கிய காரணமாகும்.
| கியா கேரன்ஸ் CNG |
கியா கேரன்ஸ் கிளாவிஸ் CNG |
||
| வேரியன்ட் |
விலை |
வேரியன்ட் | விலை |
| பிரீமியம்(O) MT |
ரூ.12.12 லட்சம் |
HTE MT |
ரூ.12.39 லட்சம் |
| - |
- |
HTE(O) MT |
ரூ.13.35 லட்சம் |
விலைகள் அனைத்து எக்ஸ் ஷோரூம்க்கானவை
-
கேரன்ஸ் CNG ஆனது அதனுடன் தொடர்புடைய பெட்ரோல்-மட்டும் வேரியன்ட்டை விட ரூ. 1 லட்சம் கூடுதல் விலையில் உள்ளது.
-
அதிக பிரீமியம் கேரன்ஸ் க்ளாவிஸ் சிஎன்ஜிக்கு பெட்ரோல்-மட்டும் பதிப்புகளை விட பிரீமியம் ரூ. 1 லட்சத்தில் ஒரே மாதிரியாக இருக்கும்.
-
இரண்டு கார்களுக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கியா இணையதளம் மூலம் திறக்கப்பட்டுள்ளன.
2026 கியா கேரன்ஸ் CNG & கேரன்ஸ் கிளாவிஸ் CNG: என்ன மாற்றங்கள்?
இந்த CNG மாடல்களில் வெறும் CNG கிட் மட்டும் பொருத்தப்படவில்லை. அதற்கேற்ப சில முக்கியமான மாற்றங்களையும் கியா செய்துள்ளது. இந்த மாற்றங்கள் CNG பயன்பாட்டை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. முக்கியமாக ஸ்பேர் டயர் மற்றும் 7-சீட்டர் அமைப்பு அப்படியே தொடர்வது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
-
DTE கேஜ்: எரிபொருள் தீர்ந்து போவதற்குள் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதைக் காட்டும் DTE கேஜ் இப்போது CNG-க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
-
CNG ஃபியூயல் ஸ்விட்ச்: பெட்ரோலில் இருந்து CNG-க்கு அல்லது CNG-யில் இருந்து பெட்ரோலுக்கு மாற்றுவதற்கான பிரத்யேக ஸ்விட்ச் டேஷ்போர்டிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.


-
ரீடியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன்: CNG சிலிண்டரின் கூடுதல் எடையைச் சமாளிப்பதற்காக காரின் சஸ்பென்ஷன் சிறப்பாக ரீடியூன் செய்யப்பட்டுள்ளது. இது நிலையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்யும்.
-
மூன்றாவது வரிசை இருக்கை: மூன்றாவது வரிசை இருக்கைகளின் சாய்மான கோணங்கள் (recline angles) மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு கூடுதல் வசதியைத் தரும்.
பவர்டிரெய்ன் விவரங்கள்
கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் CNG ஆகிய இரண்டு மாடல்களிலுமே 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பெட்ரோலில் இயக்கும்போது 115 PS பவரையும் CNG-யில் இயக்கும்போது 96 PS பவரையும் வெளிப்படுத்துகிறது. CNG மோடில் பவர் சற்று குறைந்தாலும் அன்றாட நகரப் பயன்பாட்டிற்கு இது போதுமானதாகவே இருக்கும். இதன் முக்கிய நோக்கம் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுதான்.
| இன்ஜின் |
1.5-லி நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் + CNG |
| பவர் |
115 PS (பெட்ரோல்)/ 96 PS (CNG) |
| Torque |
144 Nm (பெட்ரோல்)/ 123 Nm (CNG) |
| டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன்

மேலே குறிப்பிட்டுள்ளபடி கார்களை CNG-யில் இயக்குவது செயல்திறனில் 19 PS மற்றும் 21 Nm அளவில் குறைந்துள்ளன.
போட்டியாளர்கள்
இந்திய சந்தையில் ஃபேக்டரி-ஃபிட்டட் CNG MPV பிரிவில், கியா கேரன்ஸ் CNG-க்கு மிக முக்கிய போட்டியாளராக இருப்பது மாருதி சுஸூகி எர்டிகா CNG. பல ஆண்டுகளாக இந்த செக்மென்டில் எர்டிகா வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. கியா கேரன்ஸ் CNG, அதன் பிரீமியம் அம்சங்கள் மற்றும் ஸ்டைலான டிசைன் மூலம் எர்டிகா-விடம் இருந்து வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சிக்கும். மேலும், மாருதியின் XL6 CNG மாடலும் இதற்கு ஒரு போட்டியாக அமைகிறது.
கார்தேக்கோ சொல்வது...
கியா கேரன்ஸ் CNG மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் CNG குறைந்த எரிபொருள் செலவில் ஒரு பிரீமியம் மற்றும் விசாலமான 7-சீட்டர் காரை எதிர்பார்க்கும் பெரிய குடும்பங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. ஃபேக்டரி-ஃபிட்டட் CNG கிட் என்பதால், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை. வழக்கமான பெட்ரோல் மாடலை விட ரூ. 1 லட்சம் கூடுதல் விலை என்பது சற்று அதிகமாகத் தோன்றினாலும் நீண்ட காலப் பயன்பாட்டில் எரிபொருள் செலவில் சேமிக்க முடியும். செயல்திறனை விட மைலேஜுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இந்த CNG மாடல்களைத் தாராளமாகப் பரிசீலிக்கலாம்.
கேரன்ஸ் CNG மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் CNG பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட்ஸில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!














