• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    புதிய அவதாரத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ்: டிசைன் முதல் இன்ஜின் வரை என்னென்ன மாற்றங்கள்?

    கூடுதல் ஷார்ப்பான லுக், அட்டகாசமான ஸ்போர்ட்டி ஸ்டைலிங் மற்றும் புதிய கியர்பாக்ஸ் அப்கிரேடுடன் விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் வரவிருக்கிறது.

    tirth
    tirth
    published on நவ 05, 2026 18:01 ist
    info icon
    published onNov 05, 2026 18:01 IST
    last updated onNov 05, 2026 18:01 IST
    11 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    2026 Volkswagen Virtus Facelift

    எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்ட்டஸ் காரின் புதிய மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. செடான் கார்களுக்கே உரிய பழக்கமான தோற்றத்தை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, வெளிப்புற வடிவமைப்பில் புத்துணர்ச்சியூட்டும் மாற்றங்களைச் செய்திருப்பதை இந்த டீசர் சுட்டிக்காட்டுகிறது. இந்த காரின் டெஸ்ட் மாடல்கள் ஏற்கனவே பலமுறை சாலைகளில் சோதனை செய்யப்படும்போது தென்பட்டதால், வரவிருக்கும் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மாற்றங்கள் குறித்த ஆரம்பக்கட்ட பார்வையை முன்னரே பெற முடிந்தது.

    ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் டிசம்பரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், 2026 நவம்பர் மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ இது பொது பார்வைக்கு வரலாம். பெரும்பாலான விவரங்களை டீசரில் ரகசியமாக வைத்துள்ள போதிலும், லைட்டிங் அமைப்புகள் மற்றும் சில நுணுக்கமான ஸ்டைலிங் மாற்றங்களை இது உறுதிப்படுத்துகிறது.

    டீசர் வெளிப்படுத்தும் தகவல்கள் என்னென்ன?

    விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புற மாற்றங்களை இந்த டீசர் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. குறிப்பாக முன் மற்றும் பின் பக்க லைட்டிங் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    2026 Volkswagen Virtus Facelift

    முன் பகுதியில், முற்றிலும் புதிய வடிவிலான LED ஹெட்லேம்ப்கள் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட LED DRL இடம்பெற்றுள்ளன.

    2026 Volkswagen Virtus Facelift

    கிரில் பகுதி முழுக்க செல்லும் மெல்லிய லைட் ஸ்ட்ரிப் மூலம் ஹெட்லேம்ப்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒளிரும் ஃபோக்ஸ்வேகன் லோகோவும் இதில் உள்ளதாகத் தெரிகிறது. கிரில்லில் GT பேட்ஜ் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், கீழ் பக்க பம்பர் பெரிய ஏர் இன்டேக்குகள் மற்றும் ஷார்ப்பான வேலைப்பாடுகளுடன் கூடுதல் ஸ்போர்ட்டி தோற்றத்தைப் பெற்றுள்ளது.

    2026 Volkswagen Virtus Facelift
    2026 Volkswagen Virtus Facelift

    சைடு ப்ரொஃபைலில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நீளமான பன்னெட், சாய்வான ரூஃப்லைன் மற்றும் பழக்கமான மூன்று பாகங்கள் கொண்ட அதே நேர்த்தியான கட்டமைப்பு இதிலும் தொடர்கிறது.

    2026 Volkswagen Virtus Facelift

    இருப்பினும், புதிய அலாய் வீல் டிசைன் மற்றும் ஸ்போக் பேட்டர்ன் டீசரில் தென்படுகிறது. இது காரின் புதுப்பிக்கப்பட்ட வெளிப்புற தோற்றத்திற்கு மெருகூட்டுவதுடன், குறிப்பாக GT வேரியண்ட்டிற்கு தேவையான கம்பீரமான ஸ்போர்ட்டி தோற்றத்தை முழுமையாக்குகிறது.

    2026 Volkswagen Virtus Facelift

    பின்பக்கத்தைப் பொறுத்தவரை, புதிய கோணங்களில் செதுக்கப்பட்ட LED டெயில் லேம்ப்கள் காரை அலங்கரிக்கின்றன. இந்த விளக்குகளில் உள்ள கிடைமட்ட மற்றும் அம்பு போன்ற டிசைன், தற்போதைய மாடலை விட புதிய விர்டஸின் பின்பகுதியை மிக ஷார்ப்பாகக் காட்டுகிறது.

    2026 Volkswagen Virtus Facelift

    பூட் லிட் முழுக்க நீளும் கனெக்டட் LED லைட் பார் இதில் கொடுக்கப்படவில்லை; மாறாக வழக்கமான தனித்தனி டெயில் லேம்ப்களே தொடர்கின்றன. ரியர் பம்பரில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, அதேவேளையில் பூட் மற்றும் ஒட்டுமொத்த பின்பக்க அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. பூட் பகுதியில் GT பேட்ஜ் இடம்பெற்றிருப்பது, இதன் ஸ்போர்ட்டியான வேரியண்ட் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

    மேலும் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

    காரின் உள்பகுதி அல்லது மெக்கானிக்கல் மாற்றங்கள் குறித்த தகவல்களை ஃபோக்ஸ்வேகன் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

    2026 Volkswagen Virtus Facelift

    *தற்போதைய விர்ட்டஸ் காரின் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

    தற்போது விற்பனையில் உள்ள விர்ட்டஸ் காரில் 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, வென்டிலேட்டட் ஃப்ரண்ட் சீட்கள், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நவீனப்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் இன்டர்ஃபேஸ் மற்றும் கூடுதல் கனெக்டட் கார் வசதிகள் இடம்பெறலாம்.

    அத்துடன் டிரைவர் சீட்டை எலக்ட்ரானிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி, மேம்பட்ட ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் புதிய பார்க்கிங் அசிஸ்ட் போன்ற சொகுசு அம்சங்களையும் ஃபோக்ஸ்வேகன் சேர்க்கக்கூடும். பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை ADAS தொழில்நுட்பமும் இணைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது, எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

    ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட்: எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் தேர்வுகள்

    தற்போது விற்பனையாகும் விர்ட்டஸ் மாடலில் 1 லிட்டர் TSI மற்றும் 1.5 லிட்டர் TSI EVO ஆகிய இரண்டு டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றின் விவரங்கள்:

    விவரக்குறிப்பு

    1-லிட் TSI

    1.5-லிட் TSI EVO

    எஞ்சின்

    3-cylinder turbo-petrol

    4-cylinder turbo-petrol

    டிஸ்பிளேஸ்மெண்ட்

    1-litre

    1.5-litre

    பவர்

    115 PS

    150 PS

    டார்க்

    178 Nm

    250 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-speed MT* / 6-speed AT^

    7-speed DCT**

    *MT - மேனுவல் டிரான்ஸ்மிஷன், ^AT - ஆட்டோமெட்டிக் டார்க் கன்வெர்டர் , **DCT - டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன்

    ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் இதே இரண்டு இன்ஜின்களே தொடரும் எனத் தெரிகிறது. ஆனால், இதன் பிளாட்ஃபார்ம் மாடலான ஸ்கோடா ஸ்லாவியாவில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தைப் போல, 1 லிட்டர் TSI ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் தற்போதைய 6 ஸ்பீடு யூனிட்டுக்கு பதிலாக 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மாற்றத்தை ஃபோக்ஸ்வேகன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட்: எதிர்பார்க்கப்படும் விலை, வெளியீட்டு காலம் மற்றும் போட்டியாளர்கள்

    புதிய விர்ட்டஸ் காரின் ஆரம்ப விலை சுமார் ரூ. 12 லட்சம் என்ற அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாத அறிமுகத்திற்கு முன்னதாக, 2026 நவம்பர் மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ இது முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்படலாம். அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்த தகவல்களை அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

    விற்பனைக்கு வந்த பிறகு, இந்த ஃபேஸ்லிஃப்ட் விர்ட்டஸ் மிட்சைஸ் செடான் பிரிவில் ஸ்கோடா ஸ்லாவியா, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார்களுடன் நேரடியாகப் போட்டியிடும்.

    கார்தேக்கோவின் கருத்து..

    தனது செக்மெண்ட்டில் ஓட்டுவதற்கு மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும் செடான்களில் ஒன்றாக ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஏற்கனவே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. காரை அடியோடு மாற்றாமல், அதன் வெற்றிகரமான அடித்தளத்தை மேலும் செம்மைப்படுத்துவதே இந்த ஃபேஸ்லிஃப்ட்டின் நோக்கமாகத் தெரிகிறது. ஷார்ப்பான லைட்டிங், மேம்படுத்தப்பட்ட பம்பர்கள் மற்றும் புத்தம் புதிய அலாய் வீல்கள் காரை மிகவும் நவீனமாகக் காட்டுகின்றன. அதோடு வரவிருக்கும் புதிய வசதிகளும், எதிர்பார்க்கப்படும் கியர்பாக்ஸ் அப்கிரேடும் காரை மேலும் கவரும் ஒன்றாக மாற்றும்.

    தற்போதைய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் SUV கார்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், நல்ல தோற்றமும் ஸ்போர்ட்டியான டிரைவிங் அனுபவமும் கொண்ட செடானை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விர்ட்டஸ் ஒரு சிறந்த தேர்வாக அமையும். ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா அல்லது ஹோண்டா சிட்டி ஆகியவற்றுக்கு பதிலாக புதிய விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை நீங்கள் தேர்வு செய்வீர்களா? உங்கள் பதிலை கமென்ட்களில் தெரியப்படுத்துங்கள்.

    was this article helpful ?

    tirth
    Tirth Pandya is a Senior Correspondent with the CarDekho Group and an automotive media professional with over 6 years of experience covering cars, EVs, and the ever-evolving world of mobility. An Automobile Engineering graduate, he specialises in automotive news, feature writing, launch coverage, and experiential storytelling. His love for machines began long before his professional career, fuelled by an enduring fascination with cars and even aeroplanes. Since entering the industry in 2020, he has spent countless hours on the road, chasing stories that take him from bustling city streets to remote off-road trails, always searching for the next great automotive experience. He combines technical expertise with a genuine passion for driving and exploration to bring readers engaging, insightful, and human-centric stories that capture not just the machines but also the emotions, adventures, and people behind them.மேலும் படிக்க

    Write your Comment on Volkswagen விர்டஸ் Facelift

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் சேடன் கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience