• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    டீலர் யார்டில் கேமராவில் சிக்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ N எடிஷன் ஒன்: தீபாவளிக்கு வருகிறதா ?

    இந்த புதிய ஸ்கார்பியோ N எடிஷன் ஒன் காரில் புதிய கேபின் தீம் உள்ளிட்ட சில வெளிப்புற மற்றும் உட்புற காஸ்மெடிக் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

    ninad
    ninad
    published on நவ 05, 2026 22:42 ist
    info icon
    published onNov 05, 2026 22:42 IST
    last updated onNov 05, 2026 22:42 IST
    4 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Mahindra Scorpio N Edition One Spotted

    எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

    பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு கார் நிறுவனங்களும் தங்களது மாடல்களில் புதிய அப்டேட்களை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் மஹிந்திராவும் இப்போது களமிறங்கியுள்ளது. டீலர்ஷிப்பில் நேரடியாகப் பார்க்கப்பட்டுள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ N ஸ்பெஷல் எடிஷன், மிக விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளதை உறுதிப்படுத்துகிறது.

    அப்படியென்றால், இந்த புதிய எடிஷனில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? காரில் இடம்பெற்றுள்ள முக்கிய மாற்றங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்:

    காரில் என்னென்ன மாற்றங்கள் தெரிகின்றன?

    வெளியாகியுள்ள படங்களில், மஹிந்திரா ஸ்கார்பியோ N காரில் புதிய “Edition One” பேட்ஜ் இடம்பெற்றிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. இந்த புதிய எடிஷன் மூலம் காரின் டிசைனில் சில முக்கிய அப்டேட்கள் வரவுள்ளன; அவை என்னவென்று பார்ப்போம்.

    காரின் முன்பக்கத்தில் வழக்கமாக இருக்கும் 6-ஸ்லாட் கிரில் அமைப்புக்கு பதிலாக, இடைவெளிகளுடன் கூடிய கிடைமட்ட குரோம் ஸ்லாட்டுகளைக் கொண்ட புதிய கிரில் கொடுக்கப்பட்டு, முகப்புத் தோற்றம் புத்துணர்ச்சியுடன் மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர, காரின் முந்தைய மாடலில் உள்ள அதே LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பம்பரில் உள்ள தேள் வால் வடிவ LED DRLs மற்றும் LED ஃபாக் லேம்ப்கள் இதிலும் தொடரும் எனத் தெரிகிறது.

    Mahindra Scorpio N Edition One Front

    பக்கவாட்டுத் தோற்றத்தைப் பொறுத்தவரை 18-இன்ச் அலாய் வீல்கள், கம்பீரமான பாக்ஸி வடிவம் மற்றும் காரின் பின்பகுதியில் தேள் வால் போல முடியும் குரோம் விண்டோ லைன் என தற்போதைய ஸ்கார்பியோ N மாடலை அப்படியே பிரதிபலிக்கிறது. இதில் தென்படும் ஒரே மாற்றம் என்னவென்றால், முன்பக்க ஃபெண்டரிலும், பின்பக்க குவார்ட்டர் கிளாஸுக்குப் பின்னாலும் பொருத்தப்பட்டுள்ள Edition One பேட்ஜ் மட்டுமே.

    Mahindra Scorpio N Edition One Side
    Mahindra Scorpio N Edition One Badge

    காரின் உள்பக்கம் நுழைந்தால் இன்டீரியர் கேபின் தீமில் ஒரு புதுமை தெரிகிறது. டேஷ்போர்டு, டோர் பேனல்கள் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றில் பிளாக் மற்றும் மெரூன் கலந்த புதிய டூயல்-டோன் கலர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

    Mahindra Scorpio N Edition One Interior

    இந்த எடிஷனில் கூடுதலாக என்னென்ன ஃபீச்சர்கள் சேர்க்கப்படும் என்பது குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் வழக்கமான ஸ்கார்பியோ N-லிருந்து சற்று தனித்துவமாகக் காட்டும் ஒரு காஸ்மெடிக் அப்டேட்டாகவே இந்த புதிய எடிஷன் அமைந்திருக்கிறது.

    கார் பற்றிய பொதுவான பார்வை

    சமீபத்தில்தான் ஸ்கார்பியோ N காரில் புதிய அம்சங்கள், டிசைன் மாற்றங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட இன்டீரியர் வடிவமைப்புடன் ஒரு சிறிய அப்டேட் செய்யப்பட்டது. இருப்பினும், வாடிக்கையாளர்களைக் கவரும் அந்த பாரம்பரிய ஸ்கார்பியோவின் மிரட்டலான பாக்ஸி உருவ அமைப்பும், கம்பீரமான தோற்றமும் இதில் அப்படியே தொடர்கின்றன.

    2026 Mahindra Scorpio Facelift

    அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய டேஷ்போர்டு டிசைன், பிரம்மாண்ட பனோரமிக் சன்ரூஃப், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இதில் கிடைக்கின்றன. மேலும், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, வென்டிலேட்டட் ஃப்ரண்ட் சீட்கள், 12-ஸ்பீக்கர் Sony சவுண்ட் சிஸ்டம், 6 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர்டு டிரைவர் சீட், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் ஆட்டோ ஹெட்லேம்ப்கள் ஆகிய நவீன வசதிகளும் உள்ளன.

    Mahindra Scorpio N Infotainment

    பாதுகாப்பு வசதிகளில் புதிய 540-டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், Level 2 ADAS, ESC, HHA, முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், EPB, TPMS மற்றும் HDC உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் ஸ்கார்பியோ N மாடலில் இடம்பெற்றுள்ளன.

    பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

    ஸ்கார்பியோ N மாடல் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இவை இரண்டிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

    விரிவான விபரங்கள் இதோ:

    என்ஜின்

    2-லிட்டர் mStallion டர்போ-பெட்ரோல்

    2.2-லிட்டர் mHawk டீசல்

    பவர்

    203 PS

    Up to 175 PS

    டார்க்

    Up to 380 Nm

    Up to 400 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-speed MT/6-speed AT

    6-speed MT/6-speed AT

    டிரைவ்ட்ரெய்ன்

    RWD

    RWD/4WD

    MT - மேனுவல் டிரான்ஸ்மிஷன், AT - ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்

    RWD - ரியர் வீல் டிரைவ், 4WD - ஃபோர் வீல் டிரைவ்

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    ஸ்கார்பியோ N காரின் ஆரம்ப விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 13.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை ரூ. 25.49 லட்சம் வரை செல்கிறது.

    ஸ்கார்பியோ N-க்கு அதே நிறுவனத்தைச் சேர்ந்த தார் ராக்ஸ் மாடலைத் தவிர சந்தையில் நேரடிப் போட்டியாளர்கள் யாரும் இல்லை. ஆனாலும், இதே விலை வரம்பில் உள்ள மோனோகாக் அமைப்பிலான டாடா சஃபாரி, மஹிந்திரா XUV 7XO, ஹூண்டாய் அல்காஸர் மற்றும் MG ஹெக்டர் போன்ற பிற SUV மாடல்களையும் வாடிக்கையாளர்கள் மாற்றாகக் கருத்தில் கொள்ளலாம்.

    கார்தேக்கோ சொல்வது...

    நீளமான முன்பக்க போனட் பெரிய அலாய் வீல்கள் மற்றும் கம்பீரமான பாக்ஸி லுக் என "ஸ்கார்பியோ" என்ற அடையாளத்தின் பாரம்பரியத்தை ஸ்கார்பியோ N மிகச் சிறப்பாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. சாலையில் ஏற்கனவே லட்சக்கணக்கான ஸ்கார்பியோ N கார்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் வாங்கும் கார் மற்றவற்றிலிருந்து தனியாகத் தெரிய வேண்டும் என்று நினைத்தால், விரைவில் வரவிருக்கும் இந்த எடிஷன் ஒன் உங்கள் விருப்பப் பட்டியலில் நிச்சயம் இடம் பெற வேண்டும்.

    வெளியாகியுள்ள படங்களில் தெரிவது போல, எடிஷன் ஒன் மாடலில் வெளிப்புற மற்றும் உட்புற காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஆனால் அந்த மாற்றங்கள் கூட, உங்கள் குடும்பத்திற்கான இந்த SUV-யை நிச்சயம் கூடுதல் ஸ்பெஷலாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
     

    was this article helpful ?

    ninad
    Ninad Mestry is an automotive engineer, dieselhead, and lifelong automotive enthusiast with a passion for cars, motorcycles, and the technology behind them. An engineering graduate, he is particularly interested in vehicle engineering, emerging mobility solutions, and the stories that make every machine unique. When he\'s not exploring the latest developments in the automotive world, he enjoys finding new ways to share automotive experiences and insights with fellow enthusiasts. Whether it\'s a rugged SUV, a practical commuter, a cutting-edge EV, or a classic motorcycle, Ninad is always eager to learn more and dive deeper into all things automotive.மேலும் படிக்க

    Write your Comment on Mahindra ஸ்கார்பியோ என் இசட்2

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    ரிமோட் ஏசி ஆன்/ஆஃப்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience