ஹூண்டாய் பேயான் டெஸ்ட் டிரைவ் ரிவ்யூ: பிரீமியம் ஃபீல் இருக்கு, ஆனா போட்டியை சமாளிக்குமா?
ஒரு ஹூண்டாய் காரில் வாடிக்கையாளர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அவை அத்தனையும் இந்த கிராஸ்ஓவர் SUV-யில் அப்படியே இருக்கிறது. ஆனால் விலை சற்றே கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
நாட்டின் மிகக் கடுமையான போட்டி நிலவும் காம்பாக்ட் SUV பிரிவில் லேட்டஸ்ட்டாக நுழைந்திருப்பது ஹூண்டாய் பேயான். இந்த காருக்கு ஒரு சுவாரஸ்யமான பொறுப்பு இருக்கிறது; வென்யூ காருக்கும், விரைவில் பெரிய அளவில் வரவிருக்கும் கிரெட்டாவுக்கும் இடையில் ஏற்படும் ஒரு சிறிய இடைவெளியை நிரப்புவதுதான் அது. பேயான் காம்பாக்ட் SUV பிரிவின் ஆரம்ப விலைப் பகுதியில் அமைந்திருந்தாலும், நவீன ஃபீச்சர்களிலும் உட்புறத்தின் பிரீமியம் உணர்விலும் சிறந்த மதிப்பை வழங்குகிறது.
பேயானை நெடுநேரம் ஓட்டிப் பார்த்த பிறகு, வாங்குவதற்கு முன் நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம்.
ரைடு குவாலிட்டி
இந்த விஷயத்தில் பேயான் அதிக மதிப்பெண்களை அள்ளுகிறது. இதன் அகலமான வடிவமைப்பு மற்றும் கிராஸ்ஓவர் தோற்றம் காரணமாக, சாலையில் இன்னும் அதிக உறுதியுடன் செல்லும் கிரெட்டா போன்ற உணர்வைத் தருகிறது. மேலும், இதன் சஸ்பென்ஷன் சொகுசான பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து டியூன் செய்யப்பட்டுள்ளதால், மேடு பள்ளங்கள் நிறைந்த மோசமான சாலைகளிலும் கூட பயணம் மிகவும் சுகமாக இருக்கிறது.

பொதுவாக ஹூண்டாய் கார்கள் சவாரி சொகுசில் செக்மென்ட்டிலேயே பெஸ்ட் என்று பெயர் எடுப்பது குறைவுதான். ஆனால் வழக்கமான இந்திய கரடுமுரடான சாலைகளிலும் பேயான் தனது அருமையான சஸ்பென்ஷன் மூலம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
டாஷ் மோடு - உடனடி பவர் பூஸ்ட்
CVT என்றாலே லேசான லேக் இருக்கும், அந்த ரப்பர்-பேண்ட் எஃபெக்ட் இருக்கும் என்றொரு பேச்சு உண்டு. ஆனால், ஹூண்டாயின் IVT (இவர்கள் வைத்துள்ள CVT-யின் பெயர்) இந்த ரப்பர்-பேண்ட் எஃபெக்ட்டை பெருமளவில் தவிர்த்து, வீல்களுக்கு பவரை உடனடியாகக் கடத்தி வேகத்தை எகிற வைக்கிறது. அதுமட்டுமின்றி, பேயானில் உள்ள டாஷ் மோடு, ஓவர்டேக் செய்யும்போது கூடுதல் பவர் தேவை என்பதை கார் உணர்ந்து தேவையான உடனடி பவரை வாரி வழங்குகிறது.

மேலும், பேயானில் உள்ள CVT கியர்களை மாற்றுவது போன்ற உணர்வைத் தருவதால், டிரைவருக்கு ஒரு பழக்கப்பட்ட மற்றும் காரோடு இணைந்த டிரைவிங் ஃபீல் கிடைக்கிறது.
ஹூண்டாய் அதன் தகுதியை நிரூபிக்கிறது
ஒரு ஹூண்டாய் கார் என்றாலே ஏராளமான நவீன ஃபீச்சர்கள் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. அதை பேயானும் நிரூபிக்கிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள இரட்டை 12.3-இன்ச் வளைந்த ஸ்கிரீன் செட்டப்—ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டிற்கும், மற்றொன்று டிரைவர் டிஸ்பிளேவிற்கும்—கேபினுக்கு அட்டகாசமான பிரீமியம் லுக்கைத் தருகிறது.

அத்துடன் பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர்கள், கைகொடுக்கும் AI வாய்ஸ் அசிஸ்டண்ட், கீலெஸ் என்ட்ரி, ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற பல சிறப்பம்சங்கள் பேயானை ஒரு ஆடம்பர காராக மாற்றுகின்றன.
குறிப்பிட்ட என்ஜின் தேர்வை எதிர்பார்க்கிறீர்களா?
நீங்கள் ஒரு நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் என்ஜினை மேனுவல் அல்லது CVT ஆப்ஷனுடன் தேடுகிறீர்கள் என்றால், பேயான் உங்களுக்கு சரியான சாய்ஸ். ஆனால், இந்த செக்மென்ட்டில் உள்ள பிற கார்களைப் போல இதில் டர்போ-பெட்ரோல், டீசல் அல்லது ஹைப்ரிட் என்ஜின் தேர்வுகள் எதுவும் இல்லை. அதேநேரம், பேயானில் CNG ஆப்ஷன் 2027 ஜனவரிக்குள் அறிமுகமாகும் என்பதை ஹூண்டாய் உறுதிப்படுத்தியுள்ளது.

இருந்தாலும், இதில் உள்ள 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தேவையான பவர், சிறப்பான மைலேஜ் மற்றும் அமைதியான ரீஃபைன்மென்ட் என எல்லா விதத்திலும் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராகச் செயல்படுகிறது.
தனித்துவமாக ஏதேனும் உள்ளதா?
நாம் முன்பே பார்த்தது போல பேயான் விலைப்பட்டியலின் தொடக்க நிலையைக் குறிவைத்து களமிறங்குவதால் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் மிகவும் பாதுகாப்பான வழக்கமான ஃபார்முலாவையே பின்பற்றியுள்ளது. இதில் அருமையான ஃபீச்சர்களும் தாராள சொகுசும் இருந்தாலும், இதற்கென தனித்துத் தெரியும் வகையிலோ அல்லது தனித்துவமான விற்பனை பலமாகவோ சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை.

இருப்பினும், நகரப் போக்குவரத்தில் எளிதாக ஓட்டுவதற்கும், ஹைவே பயணங்களில் நிம்மதியான சொகுசை அனுபவிப்பதற்கும் ஏற்ற ஒரு கிராஸ்ஓவர் போன்ற SUV-யை நீங்கள் தேடினால், பேயான் உங்கள் விருப்பப் பட்டியலில் நிச்சயம் முதலிடத்தில் இருக்கும்.
கார்தேக்கோ சொல்வது...
ஹூண்டாய் பேயான் பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றமும், எண்ணற்ற நவீன ஃபீச்சர்களும் நிறைந்த ஒரு பிரீமியம் SUV. இந்த பிரிவில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பார்க்கும்போது, தனித்துத் தெரிவதற்கு பதிலாக பேயான் சற்று அதிகமான அளவுக்கு 'சேஃப் கேம்' ஆடியிருக்கிறதோ என்ற எண்ணம் எழலாம். ஆனால் சொகுசு, அமைதியான என்ஜின் ரீஃபைன்மென்ட் மற்றும் ஆடம்பரமான இன்டீரியர் போன்றவற்றில் ஹூண்டாயின் பலம் பேயானிலும் அப்பட்டமாகத் தெரிகிறது.

இந்த புதிய பேயான் பற்றி உங்களுடைய கருத்து என்ன? கீழே உள்ள கமெண்ட்ஸில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!














