• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    நவம்பர் 25-ல் வரும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட்: ஃபிளெக்ஸ்-ஃப்யூல் இன்ஜின் வருதா?

    இந்த அப்டேட்டட் MPV மாடலில் பெரிய அளவிலான டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், ஃபிளெக்ஸ்-ஃப்யூல் பவர்டிரெய்ன் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தில் கவர்ச்சிகரமான சிறிய மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

    rohit
    rohit
    published on நவ 05, 2026 19:44 ist
    info icon
    published onNov 05, 2026 19:44 IST
    last updated onNov 05, 2026 19:44 IST
    13 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Toyota Innova Hycross Facelift Launch Confirmed

    எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

    சமீபத்தில்தான் இந்தோனேசிய சந்தையில் கியாங் இன்னோவா ஜெனிக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஒரு சிறிய அப்டேட்டைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸை நவம்பர் 25-ல் அறிமுகப்படுத்தவுள்ளதாக இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரைப் பற்றி இதுவரை வெளியாகியுள்ள முக்கிய விபரங்கள் இதோ:

    வெளிப்புறத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸின் சோதனை ஓட்டங்கள் இந்தியாவில் பலமுறை கேமராவில் சிக்கியுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த MPV முன்பை விட சற்று பெரிய கிரில் அமைப்பையும், மாற்றியமைக்கப்பட்ட LED DRLs ஹவுசிங்கையும் பெறக்கூடும். தற்போதைய மாடலில் இந்த DRLs தான் டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படுகின்றன. இதுதவிர, முன் பம்பர் மற்றும் ஃபாக் லேம்ப் ஹவுசிங்கிலும் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.

    Toyota Innova Hycross Front

    காரின் பக்கவாட்டுத் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது. அதிகபட்சமாக, 10-ஸ்போக் கொண்ட 18-இன்ச் அலாய் வீல்களின் ஃபினிஷிங்கில் மட்டும் மாற்றம் செய்யப்படலாம். மற்றபடி ஷார்க் ஃபின் ஆண்டெனா, ORVM-களில் பொருத்தப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் வீல் ஆர்ச் கிளாடிங் ஆகியவை தற்போதைய மாடலில் உள்ளபடியே தொடரும் எனத் தெரிகிறது.

    Toyota Innova Hycross Side

    அதேபோல், காரின் பின்பக்க தோற்றத்திலும் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. மெல்லிய குரோம் பட்டையால் இணைக்கப்பட்ட LED டெயில் லைட்கள், ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் அடையாள பேட்ஜ்கள் ஆகியவை அப்படியே தொடரலாம். இருப்பினும், பம்பரில் மட்டும் சற்று புதுமையான மாற்றங்களை டொயோட்டா கொடுக்க வாய்ப்புள்ளது.

    Toyota Innova Hycross Rear

    இன்டீரியரில் எதிர்பார்க்கப்படும் புதிய அம்சங்கள்

    ஃபேஸ்லிஃப்ட் இன்னோவா ஹைகிராஸின் இன்டீரியர் ஸ்பை படங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்றாலும் சமீபத்தில் இந்தோனேசியாவில் வெளியான மாடலில் உள்ளதைப் போன்ற புதிய டூயல் டிஜிட்டல் டிஸ்பிளேக்களை டொயோட்டா இந்தியாவிலும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேபின் முழுவதும் புதுப்பிக்கப்பட்ட அப்ஹோல்ஸ்டரி மற்றும் புதிய கேபின் கலர் தீம் போன்ற சிறிய மாற்றங்களும் இடம்பெறலாம்.

    Toyota Innova Hycross Facelift

    *இந்தோனேசியானிய இன்னோவா ஜெனிக்ஸ் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

    தற்போதைய இன்னோவா ஹைகிராஸில் உள்ள அதே டேஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இதிலும் தொடரும் என்றே தெரிகிறது. வழக்கம் போல் இந்த ஃபேஸ்லிஃப்ட் MPV மாடலையும் 7 மற்றும் 8 சீட்டர் அமைப்புகளில் டொயோட்டா விற்பனைக்குக் கொண்டுவரும் என நம்பலாம்.

    என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் ?

    முன்பே குறிப்பிட்டது போல, இந்தோனேசிய மாடலில் வழங்கப்பட்ட அதே 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட்டேஷன் ஸ்கிரீன்கள் இதிலும் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த பெரிய திரைகள் தவிர, வென்டிலேட்டட் ஃப்ரண்ட் சீட்கள், 8 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், பனோரமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட் மற்றும் 9-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் போன்ற சொகுசு அம்சங்களும் இதில் வரலாம்.

    Toyota Innova Hycross Infotainment Screen

    பாதுகாப்பைப் பொறுத்தவரை, அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், ESC, 360-டிகிரி கேமரா செட்டப் மற்றும் Level-2 ADAS ஆகிய நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெறலாம்.

    Toyota Innova Hycross ADAS

    என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள்

    ஃபேஸ்லிஃப்ட் இன்னோவா ஹைகிராஸின் மிகப்பெரிய ஹைலைட்டாக ஒரு ஃபிளெக்ஸ்-ஃப்யூல் பவர்டிரெய்ன் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், தற்போது விற்பனையில் உள்ள N/A பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என்ஜின் தேர்வுகளும் தொடர்ந்து வழங்கப்படும். அவற்றின் விவரங்கள்:

    விவரங்கள்

    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (பெட்ரோல்)

    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (ஹைப்ரிட்)

    என்ஜின்

    2-litre N/A petrol

    2-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் செட்டப்

    பவர்

    175 PS

    186 PS (combined)

    டார்க்

    209 Nm

    188 Nm (combined)

    டிரான்ஸ்மிஷன்

    CVT*

    e-CVT*

    *CVT - கண்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன், e-CVT - எலக்ட்ரானிக்கலி கன்ட்ரோல்டு CVT

    Toyota Innova Hycross Engine

    ஸ்ட்ராங்-ஹைப்ரிட் அமைப்பைக் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் ஒரு லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஹைகிராஸ் மாடல் FWD வசதியுடன் மட்டுமே வந்தாலும், டீசல் என்ஜினை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக RWD செட்டப் கொண்ட பழைய இன்னோவா கிரிஸ்டா மாடலையும் டொயோட்டா தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டி கார்கள்

    2026 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் ஆரம்ப விலை சுமார் ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் மாருதி இன்விக்டோவுடன் நேரடியாகப் போட்டியிடும். அதே நேரத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ், டொயோட்டா ரூமியான், மாருதி எர்டிகா மற்றும் XL6 போன்ற கார்களை விட மிகவும் பிரீமியமான ஒரு தேர்வாகவும், இன்னோவா கிரிஸ்டாவுக்கு மாற்றாகவும் இது அமையும்.

    கார் தேக்கோ சொல்வது என்னவென்றால்...

    இந்திய சாலைகளில் தொடர்ச்சியாகப் பல்வேறு டெஸ்ட் டிரைவ்களில் பார்க்கப்பட்ட புதிய இன்னோவா ஹைகிராஸ் ஒருவழியாக இப்போது விற்பனைக்கு வரத் தயாராகிவிட்டது. வழக்கமான டிரைவிங் சொகுசை இன்னும் மேம்படுத்தி, இந்த காரை அடுத்த சில ஆண்டுகளுக்குப் புதுப்பொலிவுடன் வைத்திருக்கும் வகையில் டொயோட்டா சில முக்கிய மாற்றங்களைச் செய்யும் என நம்பலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டுடன் சேர்த்து இன்னோவா ஹைகிராஸின் ஃபிளெக்ஸ்-ஃப்யூல் வேரியண்ட்டையும் டொயோட்டா அறிமுகப்படுத்தினால் அது இந்த காருக்கு கூடுதல் பலமாக அமையும்.

    இன்னோவா ஹைகிராஸ் அல்லது இன்னோவா கிரிஸ்டா... இதில் உங்கள் சாய்ஸ் எது? கீழே உள்ள கமெண்ட்ஸில் உங்க கருத்தைப் பதிவு பண்ணுங்க

    was this article helpful ?

    rohit
    Rohit Shah is a Content Writer with the CarDekho Group and an automotive journalist with nearly seven years of experience covering the automotive industry. He holds a Bachelor\'s degree in Business Management (International Business) and a Post Graduate Diploma in Business Management. Over the course of his career, Rohit has authored more than 2,500 articles for CarDekho, covering topics ranging from new car launches to the latest developments in the Indian and global automotive industries. His interest in cars began in childhood when he started collecting scale models, and he unwinds by taking a car out for a spin. When he\'s not talking or writing about cars, you can find him watching new movies and series or learning new languages.மேலும் படிக்க

    Write your Comment on Toyota இனோவா Hycross

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எம்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    • denza d9
      denza d9
      Rs.1 - 1.10 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • denza z9 ஜிடி
      denza z9 ஜிடி
      Rs.1.25 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • மஹிந்திரா தார் இ
      மஹிந்திரா தார் இ
      Rs.25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw chery icar v23
      jsw chery icar v23
      Rs.20 - 25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw jaecoo j5 இவி
      jsw jaecoo j5 இவி
      Rs.20 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience