• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    இந்த தீபாவளிக்கு கார் வாங்குறீங்களா? பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் பாதுகாப்பான டாப் 5 கார்கள்

    இந்த பட்டியலில் உள்ள இரண்டு மாடல்கள் அச்சு அசலாக ஒரே அளவிலான மதிப்பீடுகளையும் புள்ளிகளையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!

    ninad
    ninad
    published on நவ 05, 2026 18:36 ist
    info icon
    published onNov 05, 2026 18:36 IST
    last updated onNov 05, 2026 18:36 IST
    1 View
    • ஒரு கருத்தை எழுதுக

     Top 5 Safest Cars To Buy This Diwali

    எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

    தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டாலே புதிய வாகனம் வாங்குவது அல்லது அடுத்த மாடலுக்கு மாறுவது நம் வழக்கமான வழக்கம். உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பே முதன்மை நோக்கம் என்றால், மிக உயர்ந்த பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்களைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த முடிவாக இருக்கும்.

    பாரத் NCAP விபத்து சோதனையில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவில் சிறந்த மதிப்பீடுகளைப் பெற்ற டாப் 5 கார்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:

    டாடா ஹாரியர் EV

    BNCAP ரேட்டிங் - 5 ஸ்டார் 

    AOP: 32/32, COP: 45/49

    டாடா ஹாரியர் EV மாடல் பாரத் NCAP சோதனையில் முழுமையான 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்று அசத்தியுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32-க்கு 32 முழுப் புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 45/49 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மாடல், வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் ஹாரியரை விடவும் சற்று கூடுதல் பாதுகாப்பைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Tata Harrier EV

    வலுவான சேஸி, நவீன வசதிகள் நிறைந்த கேபின் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் ரேஞ்ச் ஆகியவற்றுடன், கூடுதல் சிறப்பம்சமாகப் பல்வேறு பாதுகாப்பு வசதிகளையும் ஹாரியர் EV கொண்டுள்ளது. இதில் Level-2 ADAS, பிளைண்ட் வியூ மானிட்டரிங் கொண்ட 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    மஹிந்திரா XEV 9e

    BNCAP ரேட்டிங் - 5 ஸ்டார் 

    AOP: 32/32, COP: 45/49

    இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்றொரு இந்திய நிறுவனமான மஹிந்திராவின் புதிய பார்ன்-எலெக்ட்ரிக் மாடல் XEV 9e. பாரத் NCAP சோதனையில் முழுமையான 5 ஸ்டார் பாதுகாப்பைப் பெற்றுள்ள இந்த கார், பெரியவர்கள் பாதுகாப்பில் 32/32 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 45/49 என்ற அருமையான ஸ்கோரை எடுத்துள்ளது.

    Mahindra XEV 9e

    மஹிந்திரா XEV 9e கூபே போன்ற சாய்வான ரூஃப்லைன் கொண்ட தனித்துவமான SUV தோற்றத்தைப் பெற்றுள்ளது. காரின் முன்பக்கமும் பின்பக்கமும் கனெக்டட் LED லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதன் கூபே அமைப்புக்கு ஏற்றவாறு 663 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டிருப்பதால், குடும்பத்துடன் நீண்ட தூர சுற்றுலா செல்வோர் தாராளமாகப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.

    மஹிந்திரா BE 6 SPORTEQ

    BNCAP ரேட்டிங் - 5 ஸ்டார் 

    AOP: 31.97/32, COP: 45/49

    முழுமையான 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மஹிந்திராவின் மற்றொரு பார்ன்-எலெக்ட்ரிக் மாடல் BE 6 SPORTEQ ஆகும். எதிர்கால கார்களைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் அதேவேளையில், பாதுகாப்பிலும் எந்தவித சமரசமும் செய்யாமல் பெரியவர்கள் பாதுகாப்பில் 31.97/32 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 45/49 என்ற அபாரமான புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன் குழந்தைகள் பாதுகாப்பு ஸ்கோர் XEV 9e மாடலுக்கு நிகராக அமைந்துள்ளது.

    Mahidra BE 6

    விற்பனையில் உள்ள கார்களில் மிகவும் கூலான எலெக்ட்ரிக் மாடலான BE 6 SPORTEQ, ஷார்ப்பான முன்பக்க தோற்றம், சாய்வான கூரை மற்றும் கம்பீரமான வீல் ஆர்ச்களுடன் மிகவும் ஆக்ரோஷமான லுக்கை தருகிறது. பாதுகாப்புக்காக இதில் Level-2 ADAS, அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல முக்கிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    கியா செல்டோஸ்

    BNCAP ரேட்டிங் - 5 ஸ்டார் 

    AOP: 31.70/32, COP: 45/49

    அடுத்ததாக மிகவும் பிரீமியமான மிட்சைஸ் SUV மாடலான கியா செல்டோஸ் இடம் பிடித்துள்ளது. முந்தைய தலைமுறை காரை விட தற்போதுள்ள புதிய தலைமுறை செல்டோஸ் மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு, பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை தட்டிச் சென்றுள்ளது. இதில் பெரியவர்கள் பாதுகாப்பிற்கு 31.70/32 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பிற்கு 45/49 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

    Kia Seltos

    சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் நிறைந்த இன்டீரியர், இரட்டை டிஸ்பிளே செட்டப், டூயல் டோன் லெதரெட் சீட்கள் என ஒரு நிறைவான காம்பாக்ட் SUV-யாக இது திகழ்கிறது. வெளிப்புற கவர்ச்சிக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்களிலும் செல்டோஸ் வலுவாக உள்ளது. அத்துடன் ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கும் ஏற்ப பல்வேறு வகையான பவர்டிரெய்ன் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களையும் இது வழங்குகிறது.

    மாருதி விக்டோரிஸ்

    BNCAP ரேட்டிங் - 5 ஸ்டார் 

    AOP: 31.66/32, COP: 43/49

    குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் நீடித்து உழைக்கும் இன்ஜின் என்ற பாரம்பரிய பெருமைகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ள மாருதி விக்டோரிஸ், பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று, அந்நிறுவனத்தின் மிகவும் பாதுகாப்பான காராக உருவெடுத்துள்ளது. இந்த கார் பெரியவர்கள் பாதுகாப்பில் 31.66/32 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் 43/49 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளது.

    Maruti Victoris

    சிறந்த மைலேஜ் தரும் காம்பாக்ட் SUV-யை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் வசதியுடன் விக்டோரிஸ் கவர்கிறது. மேலும் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள மாருதி சுஸுகி அரீனா நெட்வொர்க் மூலமாக வாடிக்கையாளர்கள் மிக எளிதாக சர்வீஸ் செய்துகொள்ள முடிகிறது.

    கார்தேக்கோவின் கருத்து...

    குடும்பத்திற்கான புதிய காரைத் தேர்வு செய்யும்போது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது மிக அவசியமானது. இந்த பட்டியலில் உள்ள ஐந்து கார்களுமே பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. குறிப்பாக ஹாரியர் EV, XEV 9e மற்றும் BE 6 SPORTEQ ஆகியவை பெரியவர்கள் பாதுகாப்பில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

    மதிப்பீடுகளில் இவை ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்தாலும், ஹாரியர் EV தரும் பிராக்டிகலான அம்சங்கள், XEV 9e மற்றும் BE 6 SPORTEQ மாடல்களின் தனித்துவமான எலெக்ட்ரிக் ஸ்டைல் என ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்புகளைக் கொண்டுள்ளன. அதேபோல கியா செல்டோஸ் மற்றும் மாருதி விக்டோரிஸ் ஆகியவை சிறந்த குடும்ப SUV-யை விரும்புவோருக்கு அட்டகாசமான சாய்ஸாக விளங்குகின்றன.

    பாதுகாப்பிற்கு 5 ஸ்டார் ரேட்டிங் முக்கிய அடித்தளமாக அமைந்தாலும, உங்கள் பட்ஜெட், தினசரி பயன்பாடு மற்றும் இன்ஜின் விருப்பங்களை கருத்தில் கொண்டு சரியான காரை தேர்வு செய்வதே சிறந்தது.

    இந்த 5 மாடல்களில் உங்கள் குடும்பத்திற்கு எந்த காரை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?

    was this article helpful ?

    ninad
    Ninad Mestry is an automotive engineer, dieselhead, and lifelong automotive enthusiast with a passion for cars, motorcycles, and the technology behind them. An engineering graduate, he is particularly interested in vehicle engineering, emerging mobility solutions, and the stories that make every machine unique. When he\'s not exploring the latest developments in the automotive world, he enjoys finding new ways to share automotive experiences and insights with fellow enthusiasts. Whether it\'s a rugged SUV, a practical commuter, a cutting-edge EV, or a classic motorcycle, Ninad is always eager to learn more and dive deeper into all things automotive.மேலும் படிக்க

    Write your Comment on Tata ஹெரியர் EV

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience