இறுதியாக டார்க் தீம் கிளப்பில் இணைந்தது டாடா சியாரா !... புதிய டார்க் எடிஷன் அறிமுகம்
சியரா டார்க் எடிஷன் ப்யூர் எல் வேரியண்டிலிருந்து கிடைக்கிறது மற்றும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கூடுதலாக இதற்கு ப்ணம் செலுத்த வேண்டியுள்ளது.
- ஒரு கருத்தை எழுதுக

டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட சியரா எஸ்யூவியின் டார்க் எடிஷனை வெளியிட்டுள்ளது. வழக்கமான வேரியண்ட்களை விட சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் சற்று கூடுதல் விலையுடன் வரும் இந்த புதிய எடிஷன் பற்றி பிராண்ட் கூறியுள்ள விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
விலை மற்றும் வேரியண்ட்கள்
| வேரியன்ட் |
1.5-லி NA பெட்ரோல் |
1.5-லி டர்போ-பெட்ரோல் |
1.5-லி டீசல் |
||
| 6-MT |
7-DCT |
6-AT |
6-MT |
6-AT |
|
| பியூர் L டார்க் |
ரூ. 13.99 லட்சம் |
ரூ. 15.29 லட்சம் |
- |
ரூ. 15.44 லட்சம் |
- |
| பியூர் L ஆப்ஷனல் டார்க் |
ரூ. 14.59 லட்சம் |
ரூ. 15.89 லட்சம் |
- |
ரூ. 16.04 லட்சம் |
ரூ. 17.34 லட்சம் |
| பியூர் பிளஸ் L டார்க் |
ரூ. 15.29 லட்சம் |
ரூ. 16.59 லட்சம் |
- |
ரூ. 16.74 லட்சம் |
ரூ. 18.04 லட்சம் |
| அட்வென்சர் பிளஸ் L டார்க் |
ரூ. 17.29 லட்சம் |
ரூ. 18.59 லட்சம் |
ரூ. 19.29 லட்சம் |
ரூ. 18.49 லட்சம் |
ரூ. 19.79 லட்சம் |
| அக்கம்பிளிஸ்டு டார்க் |
ரூ. 18.29 லட்சம் |
- |
ரூ. 20.29 லட்சம் |
ரூ. 19.29 லட்சம் |
ரூ. 20.29 லட்சம் |
| அக்கம்பிளிஸ்டு பிளஸ் டார்க் |
- |
- |
ரூ. 21.29 லட்சம் |
ரூ. 20.59 லட்சம் |
ரூ. 21.59 லட்சம் |
-
டாடா சியரா டார்க் எடிஷன், Pure L வேரியண்ட்டில் தொடங்கி டாப்-ஸ்பெக் அக்கம்பிளிஸ்டு பிளஸ் வேரியண்ட் வரை பல டிரிம்களில் கிடைக்கிறது. இந்த விலை உயர்வு முற்றிலும் காஸ்மெட்டிக் மாற்றங்களுக்காக மட்டுமே. அதாவது பெயிண்ட், வீல்கள் மற்றும் இன்டீரியர் தீம் ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்களுக்காக இந்த கூடுதல் தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்துகிறார்கள். இந்த டார்க் எடிஷன் சியராவின் அனைத்து இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைப்பது ஒரு நல்ல விஷயம். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பவர்டிரெய்ன் உடன் இந்த ஸ்டைலான தோற்றத்தைத் தேர்வு செய்யலாம்.
டார்க் எடிஷனில் என்ன ஸ்பெஷல்?
டார்க் எடிஷனின் முக்கிய ஈர்ப்பு அதன் வெளிப்புற தோற்றம் தான். இந்த எஸ்யூவிக்கு ஃப்ரீசியன் பிளாக் என்ற புதிய கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. பம்பர்களில் உள்ள இன்செர்ட்கள் சாடின் பிளாக் ஃபினிஷில் வருகின்றன, இது காருக்கு ஒரு ஸ்டெல்த் தோற்றத்தை அளிக்கிறது. டாப் டிரிம்களில் 19-இன்ச் அலாய் வீல்கள் கூட முழுவதுமாக கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இது காரின் ஒட்டுமொத்த டார்க் தீமுக்கு வலு சேர்க்கிறது. இது தவிர, ஃபெண்டர்களில் 'Dark' பேட்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தவிர காரின் டிசைனிலோ அல்லது அளவுகளிலோ வேறு எந்த மாற்றமும் இல்லை.


வெளியைப் போலவே, சியரா டார்க் எடிஷனின் கேபினும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, டோர் பேனல்கள் மற்றும் இருக்கைகள் என அனைத்தும் கருப்பு நிறத்தில் உள்ளன. இந்த மோனோடோன் தோற்றத்தை உடைக்க இருக்கைகளில் பர்பிள் நிறத்தில் தையல் வேலைப்பாடுகள் மற்றும் சில இடங்களில் பர்பிள் நிற டிரிம் இன்செர்ட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கேபினுக்கு ஒரு தனித்துவமான மற்றும் பிரீமியம் டச் கொடுக்கிறது. ஹெட்ரெஸ்ட்களில் 'Dark' லோகோ எம்பாஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் டார்க் க்ரோம் பெசல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அம்சங்களை பொறுத்தவரை வழக்கமான வேரியண்ட்களில் என்ன கிடைக்குமோ அதே டார்க் எடிஷனிலும் தொடர்கின்றன.


பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டார்க் எடிஷன் என்பது ஒரு காஸ்மெட்டிக் அப்டேட் என்பதால், இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாடா சியரா மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, அவை அனைத்திலும் டார்க் எடிஷன் கிடைக்கிறது. இதில் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை அடங்கும். இந்த இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. எனவே, செயல்திறனில் எந்த வித்தியாசமும் இருக்காது; வழக்கமான சியராவின் அதே டிரைவிங் அனுபவத்தை டார்க் எடிஷனும் வழங்கும்.
விவரங்கள்:
| இன்ஜின் |
1.5-லி நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.5-லி டர்போ-பெட்ரோல் |
1.5-லி டீசல் |
| பவர் |
106 PS |
160 PS |
118 PS |
| டார்க் |
145 Nm |
255 Nm |
260 Nm (MT)/ 280 Nm (AT) |
| டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT |
*MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், AT- டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
போட்டியாளர்கள்
"டார்க் எடிஷன், டாடா சியராவின் போட்டித்தன்மையை அதன் பிரிவில் மேலும் வலுப்படுத்தும்" என்று நிறுவனம் நம்புகிறது.
டாடா சியரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்ற எஸ்யூவிகளுடன் போட்டியிடுகிறது. இந்த பிரிவில் டார்க் அல்லது பிளாக் எடிஷன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. உதாரணமாக ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மற்றும் கியா செல்டோஸ் X-Line ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த டிரெண்டைப் பின்பற்றி டாடா இப்போது தனது சியராவுக்கும் டார்க் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்டைலான மற்றும் தனித்துவமான தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்
கார்தேக்கோ சொல்வது...
டாடா சியரா டார்க் எடிஷன் அதன் பெயருக்கு ஏற்றவாறு, ஒரு முழுமையான ஸ்டைலிங் பேக்கேஜ் ஆகும். அம்சங்களிலோ அல்லது செயல்திறனிலோ எந்தவிதமான மேம்பாடுகளும் இல்லாமல் முழுக்க முழுக்க காஸ்மெட்டிக் மாற்றங்களை மட்டுமே இது வழங்குகிறது. ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரையிலான கூடுதல் விலை, இந்த ஆல்-பிளாக் தோற்றத்திற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பை பொறுத்தது. சாலையில் தனித்து தெரிய வேண்டும் ஒரு ஸ்டெல்த் மற்றும் பிரீமியம் லுக் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த டார்க் எடிஷன் சரியான தேர்வாக இருக்கலாம். ஆனால் வெறும் அம்சங்கள் மற்றும் செயல்திறனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் வழக்கமான வேரியண்ட்களைத் தேர்ந்தெடுத்து பணத்தை மிச்சப்படுத்தலாம்.














