1,156 ஹார்ஸ் பவர், ஜெட் வேகம்: நவம்பர் 13-ல் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் டென்ஸா Z9 GT!
இந்த புதிய டென்ஸா Z9 GT காரில் நண்டு போல பக்கவாட்டில் நகரும் கிராப்-வாக் மற்றும் காரை ஒரே இடத்தில் 360 டிகிரியில் திருப்பும் காம்பஸ் டர்ன் போன்ற அட்டகாசமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
புதிய கார் வாங்கும் யோசனையில் உள்ள எங்கள் வாசகர்களில் 50 பேருக்கு பிரத்யேகமாக உதவ நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் நீங்கள் ஆட்டோமொபைல் நிபுணர்களுடன் நேரடியாகப் பேசி உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். இதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களை எங்கள் குழு விரைவில் தொடர்பு கொள்ளும். பிஒய்டி நிறுவனத்தின் துணை சொகுசு பிராண்டான டென்ஸா, இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்னரே தனது Z9 GT மாடலை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைத்து காரின் முழு தோற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த வாரம் டென்ஸா வெளியிட்ட டீசரே இந்த கார் இந்தியாவிற்கு வருவது உறுதி என்பதை தெளிவுபடுத்திவிட்டது.
வெளிப்புற வடிவமைப்பு

டென்ஸா Z9 GT காரின் முகப்புத் தோற்றம் அசல் பிஒய்டி பாரம்பரிய டிசைனைப் பிரதிபலிக்கிறது. கூர்மையான ஸ்வெப்ட்-பேக் LED ஹெட்லைட்டுகள், பம்பரில் அமைக்கப்பட்ட ஷார்ப்பான கட் மற்றும் க்ரீஸ்கள் காரின் முன்பகுதிக்கு தனி கம்பீரத்தைத் தருகின்றன. முன்பக்கம் கீழ்நோக்கிச் சரியும் ஹூட் வடிவமைப்பு காருக்கு ஆக்ரோஷமான லூக்கை கொடுக்கிறது.
காரின் முன்பக்கம் எளிமையான அதேநேரம் அட்டகாசமான வடிவமைப்புடன் காட்சியளிக்கிறது. கீழே நேர்த்தியான LED DRLகள் பொருத்தப்பட்ட பெரிய மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்டுகள் கவனத்தை ஈர்க்கின்றன. பக்கவாட்டில் இருந்து பார்த்தால், எஸ்டேட் வகை கார்களுக்குரிய நீண்ட கூரை அமைப்பு சாலையில் செல்லும் மற்ற கார்களில் இருந்து இதைத் தனித்துக் காட்டுகிறது. கதவுகளில் உள்ள மிருதுவான கேரக்டர் லைன்கள், வீல் ஆர்ச்சுகளுக்கு மேலே உள்ள மஸ்குலர் தோற்றம், மேலும் காரின் லோ-ஸ்டான்ஸுக்கு ஏற்ற 20 இன்ச் மல்டி-ஸ்போக் அலுமினியம் அலாய் வீல்கள் காரின் அழகை இன்னும் தூக்கி நிறுத்துகின்றன.

பின்பக்கம் பார்க்கும்போது அகலமான தோற்றத்துடன் மிகவும் தனித்துவமான காராக இது காட்சி தருகிறது. கூரையின் முனையில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஸ்பாய்லரும், அதன் நடுவில் பார்முலா 1 கார்களில் இருப்பது போல செங்குத்தாக அமைக்கப்பட்ட பிரேக் ஸ்டாப் லேம்பும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் நீளமான கிடைமட்ட LED டெயில் லைட்டுகளும், பின்பக்க பம்பரில் க்ளாஸ் பிளாக் பினிஷ் கொண்ட டிஃப்பியூசரும் காரின் பின்புறத்தை பிரீமியமாகக் காட்டுகின்றன.
உள்துறை வடிவமைப்பு

டெக் பிரியர்களைப் பொறுத்தவரை இந்த காரின் உட்புற கேபின் ஒரு சொர்க்கம் என்றே கூறலாம். இதுவரை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எக்கச்சக்கமான தொழில்நுட்ப வசதிகள் இதில் அடுக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள மூன்று டிஜிட்டல் ஸ்கிரீன்கள் மினிமலிஸ்டிக் லூக்கை தருகின்றன. அதேநேரம் முக்கியமான அம்சங்களை எளிதாகக் கையாள சில பிசிகல் பட்டன்களும் வழங்கப்பட்டுள்ளன.
டேஷ்போர்டின் சில இடங்களில் வுட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் டார்க் சாக்லேட் உடன் கூடிய பெர்க் பெய்ஜ், டார்க் சாக்லேட் உடன் கூடிய ரெட் வெல்வெட் மற்றும் ஃபுல் பிளாக் என மூன்று கலர் ஆப்ஷன்களில் இதன் இன்டீரியர் கிடைக்கிறது.
நேர்த்தியான ஸ்டீயரிங் வீல், கேபினின் பல்வேறு பேனல்களிலும் சீட்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள லெதரெட் மற்றும் ஸ்வீட் மெட்டீரியல் கலவை காருக்குள் அக்மார்க் லக்சூரி அனுபவத்தை அளிக்கின்றன. மேலும் கதவுப் பிடிகளில் பாடல்களின் தாளத்திற்கு ஏற்ப மாறும் மல்டி-கலர் ஆம்பியன்ட் லைட்டிங் வசதியும் உள்ளது.
வசதிகள் & பாதுகாப்பு

தொழில்நுட்ப பிரியர்களுக்கு முழுமையான விருந்தாக இந்த கார் இருக்கும். டிரைவருக்காக 13.2 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, முன் இருக்கை பயணியருக்கு என தனியாக 13.2 இன்ச் டச் ஸ்கிரீன், நடுவில் பிரம்மாண்டமான 17.3 இன்ச் சென்ட்ரல் டச் ஸ்கிரீன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, 20 ஸ்பீக்கர்கள் கொண்ட Devialet ஆடியோ சிஸ்டம், ஃபோர்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் மற்றும் பின் இருக்கைகள், பவர் அட்ஜஸ்ட் இருக்கைகள், பனோரமிக் கிளாஸ் சன்ரூஃப், கூலிங் வசதியுடன் கூடிய டூயல் வயர்லெஸ் சார்ஜர்கள், NFC சாவி மற்றும் முன் இருக்கைகளுக்கு இடையே இருவித வெப்பநிலையைத் தரும் மினி-ஃப்ரிட்ஜ் என அத்தனை அம்சங்களும் இதில் அடக்கம்.
பாதுகாப்பு அம்சங்களிலும் டென்ஸா Z9 GT எந்தக் குறையும் வைக்கவில்லை. 9 ஏர்பேக்குகள், Level-2 ADAS Plus பாதுகாப்பு, 360 டிகிரி கேமரா, EBD உடன் கூடிய ABS, ESC, TCS, HDC, டிரைவர் சோர்வை கண்டறியும் டிரைவர் ஃபேட்டிக் மானிட்டர், TPMS மற்றும் முன், பின் பகுதியில் தலா 6 பார்க்கிங் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பவர்டிரெய்ன் விவரங்கள்
சர்வதேச மார்க்கெட்டில் டென்ஸா Z9 GT மாடல் பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) மற்றும் முழு எலக்ட்ரிக் (EV) என இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. அதன் விவரங்கள் இதோ:
| டென்ஸா Z9 GT |
|||
| வேரியண்ட் |
Z9 GT Hybrid |
Z9 GT |
|
| பேட்டரி வகை |
2nd Generation BYD Blade Battery |
2nd Generation BYD Blade Battery |
|
| பேட்டரி கெபாசிட்டி |
63.82 kWh |
122.49 kWh |
|
|
2 Litre turbo-petrol engine |
N/A |
|
| பவர் |
776 PS |
1,156 PS |
|
| டார்க் |
1,035 Nm |
1,210 Nm |
|
| டிரான்ஸ்மிஷன் |
E-CVT |
Single-Speed Automatic |
|
| ரேஞ்ச் |
805 கி.மீ (Combined) |
701 கி.மீ (NEDC Claimed) |
|
| ஃபிளாஷ் சார்ஜிங் (10% to 97%) |
9 minutes |
9 minutes |
|
| 0-100 கிமீ/வேகம் |
3.6 நொடிகள் |
2.7 நொடிகள் |
|
| டிரைவ்டிரெய்ன் | AWD |
AWD |
|
PHEV - பிளக்-இன் ஹைபிரிட் வெஹிகிள், NEDC - நியூ யூரோப்பியன் டிரைவிங் சைக்கிள்
வெளிநாடுகளில் ஹைப்ரிட் மாடலும் விற்கப்பட்டாலும், இந்தியாவில் இதன் முழு எலக்ட்ரிக் வேரியன்ட் மட்டுமே முதற்கட்டமாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், இந்த எலக்ட்ரிக் மாடலில் குறுகிய வளைவுகளில் காரை லாவகமாக இயக்க உதவும் கிராப்-வாக் மோடு, காரின் பின்பக்க மோட்டாரை எதிர் திசையில் இயக்கி ஒரே இடத்தில் 360 டிகிரியில் காரைத் திருப்பும் காம்பஸ் டர்ன் மோடு மற்றும் ரியர்-வீல் ஸ்டீயரிங் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
காரின் அளவுகள் பின்வருமாறு:
| டென்ஸா Z9 GT அளவுகள் |
Z9 GT |
| நீளம் |
Up to 5,195 mm |
| அகலம் |
1,990 mm |
| உயரம் |
1,490 mm |
| வீல்பேஸ் |
3,125 mm |
விலை மற்றும் போட்டியாளர்கள்
டென்ஸா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விலை விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், Z9 GT காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.25 கோடியாக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியச் சந்தையில் இது களமிறங்கும்போது போர்ஷே டேகான், BMW i7 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS ஆகிய சொகுசு கார்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும்.
கார்தேக்கோவின் கருத்து...
சொகுசு கார் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கத் தேவையான அனைத்து தகுதிகளுடனும் டென்ஸா Z9 GT வெளிவந்துள்ளது. பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் வெளிப்புற தோற்றம், ஆடம்பரமான வசதிகள் நிறைந்த உட்புறம் என பயணிகளைத் தாலாட்ட இதில் எல்லாமே உள்ளது. டிரைவிங்கை ரசித்து ஓட்டுபவர்களுக்கும் தாளைக் கிழிக்கும் அளவிலான அசத்தலான பெர்ஃபாமென்ஸ் பேப்பரிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி எல்லாமே நிர்ணயிக்கப்படும் விலையைப் பொறுத்தே அமையும். அந்த சஸ்பென்ஸுக்கு நவம்பர் 13 அன்று அதிகாரப்பூர்வமாக விடை கிடைத்துவிடும்.










