அடிச்சு தூக்கிய கிரெட்டா, செல்டோஸ்… செப்டம்பர் மாத SUV சேல்ஸ் ரிப்போர்ட் இதோ!
இந்த பிரிவின் டாப் 10 பட்டியலில் முதல் 3 இடங்களை விக்டோரிஸ், செல்டோஸ் மற்றும் கிரெட்டா ஆகிய கார்கள் பிடித்துள்ளன.
- ஒரு கருத்தை எழுதுக

வரும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியாவில் காம்பாக்ட் SUV ரக கார்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள், ஸ்பெஷல் எடிஷன்கள் மற்றும் சந்தையை அதிரவைத்த புதிய தலைமுறை கார்களின் வருகை என இந்த பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த சூழலில், கடந்த செப்டம்பர் 2026 மாதத்தின் காம்பாக்ட் SUV விற்பனை நிலவரத்தை விரிவாகப் பார்ப்போம்.
செப்டம்பர் 2026-ல் அதிக விற்பனையான டாப் 10 காம்பாக்ட் SUV கார்கள்:
| ரேங்க் |
மாடல் |
செப்டம்பர் 2026 |
ஆகஸ்ட் 2026 |
செப்டம்பர் 2025 |
MoM வளர்ச்சி / சரிவு (%) |
YoY வளர்ச்சி / சரிவு (%) |
|
| 1 |
|
17,657 |
16,288 |
18,861 |
+ 8.4 % |
(- 6.4 %) |
|
| 2 |
|
13,111 |
12,978 |
4,261 |
+ 1.0 % |
+ 207.7 % |
|
| 3 |
|
12,593 |
11,716 |
5,816 |
+ 7.5 % |
+ 116.5 % |
|
| 4 |
|
8,513 |
7,808 |
5,698 |
+ 9.0 % |
+ 49.4 % |
|
| 5 |
|
7,205 |
5,622 |
- |
+ 28.2 % |
- |
|
| 6 |
|
7,115 |
8,234 |
7,608 |
(- 13.6 %) |
(- 6.5 %) |
|
| 7 |
ஸ்கோடா குஷாக் |
1,152 |
1,048 |
769 |
+ 9.9 % |
+ 49.8 % |
|
| 8 |
|
994 |
938 |
1,114 |
+ 6.0 % |
(- 10.8 %) |
|
| 9 |
|
599 |
1,326 |
2,199 |
(- 54.8 %) |
(- 72.8 %) |
|
| 10 |
|
465 |
406 |
- |
+ 14.5 % |
- |
|
| மொத்தம் |
69,404 |
66,364 |
46,326 |
+ 4.6 % |
+ 49.8 % |
முக்கிய அம்சங்கள்...
-
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனையில் சற்று சரிவு கண்டிருந்தாலும், முதலிடத்தை ஹூண்டாய் கிரெட்டா தக்கவைத்துக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2026-ல் மட்டும் 17,600-க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி, ஆகஸ்ட் மாதத்தை விட 8.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் டர்போ-பெட்ரோல் என அனைத்து விதமான ஆப்ஷன்களுடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. இந்த விற்பனை எண்ணிக்கையில் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் கிரெட்டா N-Line மாடல்களும் அடங்கும்.

-
இரண்டாம் இடத்தில் உள்ள மாருதி விக்டோரிஸ் மாடலின் விற்பனை முந்தைய மாதத்தை போல் சீராக இருந்தாலும், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 207 சதவீதம் வரை பிரம்மாண்ட உயர்வைச் சந்தித்துள்ளது. சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுவரும் ஹைபிரிட் மற்றும் CNG எஞ்சின் ஆப்ஷன்கள் இதில் இருப்பதுதான் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

-
விக்டோரிஸ் மாடலைத் தொடர்ந்து கியா செல்டோஸ் 12,593 யூனிட்கள் விற்பனையாகி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மாதந்தோறும் சீரான விற்பனை எண்ணிக்கையைப் பதிவு செய்துவரும் செல்டோஸ் கடந்த ஆண்டை விட 116 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டியுள்ளது. பலதரப்பட்ட பவர்ட்ரெய்ன் தேர்வு மற்றும் மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த பேக்கேஜாக இருப்பதால் இப்போதும் வாடிக்கையாளர்களின் விருப்பமான காராக விளங்குகிறது.

-
ஹோண்டா எலிவேட் மாடல் இந்த பட்டியலில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இதன் விற்பனை 50 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து கடந்த மாதத்தில் வெறும் 599 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. இருப்பினும் எலிவேட் காரின் குறைபாடுகளைக் களைந்து சமீபத்தில்தான் ஹோண்டா நிறுவனம் இதன் அப்டேட்டட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வரும் நாட்களில் அதன் விற்பனையை உயர்த்த உதவும் என எதிர்பார்க்கலாம்.

-
சந்தைக்கு வந்தபோது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரெனோ டஸ்டர், செப்டம்பர் 2026-ல் 500 யூனிட்டுகளுக்கும் கீழ் சரிந்தது. ஆனால் சமீபத்தில் களமிறக்கப்பட்டுள்ள டஸ்டர் ஹைபிரிட் மாடல், வரவிருக்கும் மாதங்களில் இதன் விற்பனை எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தக்கூடும்.

-
ஸ்கோடா குஷாக், ரெனோ டஸ்டர் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய பிற காம்பாக்ட் SUVகள் ஆகஸ்ட் 2026 விற்பனையோடு ஒப்பிடுகையில் 9 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
-
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் காம்பாக்ட் SUV சந்தையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 50 சதவீத அளவிற்கு சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கார்தேக்கோ சொல்வது...
இந்திய ஆட்டோமொபைல் துறையில் காம்பாக்ட் SUV பிரிவு பல்வேறு சிறப்பம்சங்கள், உபகரணங்கள், எரிபொருள் ஆப்ஷன்கள் மற்றும் வெவ்வேறு அளவுகளோடு கூடிய பெரிய மார்க்கெட்டாக உருவெடுத்துள்ளது. கார் வாங்குபவர்கள் பலரும் SUV ரகத்தை நோக்கி நகர்வதால் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாக இது உள்ளது.
இந்த பட்டியலில் அதிக பங்களிப்பை அளித்த கிரெட்டா, விக்டோரிஸ் மற்றும் செல்டோஸ் ஆகிய மூன்று கார்கள் மட்டுமே இணைந்து 43,000-க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. விசாலமான இடவசதி, நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் பரந்த அளவிலான எரிபொருள் தேர்வுகளை வழங்குவதே இந்த கார்களின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.














