மாருதி பலேனோ ஃபேஸ்லிப்ட் செப்டம்பர் 5-ல் அறிமுகம் : என்ன எதிர்பார்க்கலாம்?
இது சிறிய அப்டேட்களுடன் கொடுக்கப்படலாம் என்றாலும் அது அவசியமானதுதான்
- ஒரு கருத்தை எழுதுக

மாருதி தனது பிரீமியம் ஹேட்ச்பேக் ஆன பலேனோ-வின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை செப்டம்பர் 5, 2026 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. தற்போதைய மாடல் அறிமுகமாகி சுமார் நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இந்த புதிய அப்டேட் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் மாற்றங்களையும் பல புதிய வசதிகளையும் கொண்டு வர இருக்கிறது. ஃபேஸ்லிப்டில் என்ன எதிர்பார்க்கலாம் ?
என்ன எதிர்பார்க்கலாம்?
வெளியான ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டின் முன்பக்கத்தில் புதிய பம்பர், மாற்றியமைக்கப்பட்ட DRL மற்றும் ஒரு புதிய கிரில் டிசைன் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்கவாட்டில் புதிய 16-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்படலாம். காரின் ஒட்டுமொத்த வடிவம் தற்போதைய மாடலைப் போலவே தொடரும்.
பின்புறத்தில் சிறிய பம்பர் மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் டெயில் லைட் டிசைனில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிகிறது.

உட்புறம்
காரின் உட்புறத்திலும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரவுள்ளன. புதிய இன்டீரியர் தீம், மாற்றியமைக்கப்பட்ட டேஷ்போர்டு டிசைன் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சென்டர் கன்சோல் லேஅவுட் ஆகியவை கேபினுக்கு ஒரு ஃப்ரெஷ்ஷான தோற்றத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபியூச்சர்ஸ் & பாதுகாப்பு
2022-ம் ஆண்டு புதிய பலினோ அறிமுகத்தின் போது ஹெட்-அப் டிஸ்ப்ளே, செக்மென்ட்டில் முதல் முறையாக 360-டிகிரி கேமரா உடன் பிரிமியம் கேபின் ஃபீலிங்கை கொடுத்தது. ஆனால் இப்போது 2026-ல் போட்டியைச் சமாளிக்க, இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், தற்போதைய 9-இன்ச் ஸ்க்ரீனை விட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன் போன்ற பல புதிய வசதிகள் சேர்க்கப்படலாம். ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 6-ஸ்பீக்கர் ஆர்கிமீஸ் சவுண்ட் சிஸ்டம், 60:40 ஸ்பிளிட் ரியர் சீட், ரியர் வைப்பர் வாஷர் போன்ற வசதிகள் தொடரும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை டைப் ஏ மற்றும் டைப் சி சார்ஜிங் போர்ட்ஸ், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் புதிதாக சேர்க்கப்படலாம். 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற தற்போதைய பாதுகாப்பு அம்சங்கள் அப்படியே தொடரும்.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்ஸ்
இன்ஜின் ஆப்ஷன்களில் பெரிய மாற்றங்கள் இருக்காது எனத் தெரிகிறது. தற்போதைய 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
| இன்ஜின் |
1.2-litre நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.2-லி நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் வித் சிஎன்ஜி |
| பவர் |
90 PS |
77.5 PS |
| டார்க் |
113 Nm |
98.5 Nm |
| டிரான்ஸ்மிஷன் |
5-speed MT, 5-speed AMT |
5-ஸ்பீடு MT |
| கிளைம்டு மைலேஜ் |
22.35 கிமீ (MT), 22.94 கிமீ (AMT) |
30.61 km/kg |
MT-மேனுவல் டிரான்ஸ்மிஷன் =, AMT- ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

இருப்பினும் பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே பலேனோ-விலும் ஒரு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை & போட்டியாளர்கள்
புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டின் ஆரம்ப விலை சுமார் ரூ. 6.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் ஹூண்டாய் i20, டொயோட்டா கிளான்ஸா, டாடா ஆல்ட்ரோஸ், மற்றும் வரவிருக்கும் சிட்ரோன் C3X போன்ற கார்களுடன் போட்டியிடும்.
கார்தேக்கோ சொல்வது
2026 பலேனோ ஃபேஸ்லிஃப்ட், டிசைனில் சிறிய மாற்றங்களையும், வசதிகளில் பெரிய அப்டேட்களையும் கொண்டு வர இருக்கிறது. சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் போன்ற புதிய ஃபீச்சர்கள், போட்டியாளர்களுடன் சிறப்பாகப் போட்டியிட உதவும். இன்ஜின் ஆப்ஷன்கள் பெரும்பாலும் மாறாமல் இருந்தாலும், டர்போ-பெட்ரோல் இன்ஜின் சேர்க்கப்பட்டால், அது பெர்ஃபாமென்ஸ் விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும். இந்த அப்டேட் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்டில் பலேனோ-வின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.














