• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    தீபாவளிக்கு புது கார் பிளானா? குடும்பத்தோட பாதுகாப்பா பயணிக்க டாப் 5-ஸ்டார் ரேட்டிங் கார்கள்…

    குறைவான விலையில் கிடைக்கும் ஹேட்ச்பேக்குகள் முதல் பிரீமியம் எஸ்யூவிகள் மற்றும் மின்சார கார்கள் வரை இந்த மாடல்கள் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்களில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.

    Anonymous
    published on நவ 03, 2026 16:15 ist
    info icon
    published onNov 03, 2026 16:15 IST
    last updated onNov 03, 2026 16:15 IST
    15 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    BNCAP 5-stars Safety Ratings

    இந்தியாவில் சாமானிய மக்கள் கார் வாங்கத் தொடங்கிய காலத்தில், ஒரு காரைத் தேர்வு செய்வதில் மைலேஜ் மட்டுமே முதன்மையான காரணியாக இருந்தது. அதனால்தான் மாருதியின் எடைக் குறைவான, ஓட்டுவதற்கு உற்சாகம் தரும் சிறிய ஹேட்ச்பேக் கார்கள் சந்தையைக் கட்டி ஆண்டன. மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களின் எதிர்பார்ப்புகளும் மாறத் தொடங்கின; சன்ரூஃப், பெரிய டச்ஸ்கிரீன், அலாய் வீல்கள் என நவீன வசதிகளைக் கேட்க ஆரம்பித்தனர். இப்போது விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளன. முன்னரெல்லாம் டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைத்த பாதுகாப்பு வசதிகள், தற்போது அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான அம்சமாக இடம்பிடித்து வருகின்றன.

    இந்த தீபாவளி பண்டிகைக்குப் புதிய கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்தியாவில் விற்பனையாகும் 5-star Bharat NCAP மதிப்பீடு பெற்ற கார்களின் முழுப் பட்டியல் இதோ. பெரியவர்கள் பாதுகாப்பு மதிப்பீட்டின் ஏறுவரிசை அடிப்படையில் இந்தப் பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பு: 32-க்கு பெறப்பட்ட AOP மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தத் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. கிடைக்கக்கூடிய மாடல்களுக்கான COP மதிப்பீடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    1. வின்ஃபாஸ்ட் VF6 

    27.13/32 (AOP) | 44.41/49 (COP)

    வியட்நாம் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், தனது என்ட்ரி-லெவல் எலெக்ட்ரிக் எஸ்யூவியாக VF6 மாடலை இந்தியாவில் களம் இறக்கியுள்ளது. இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என இரண்டிலுமே 5-star Bharat NCAP மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் நவீன கேபின், டெக்னாலஜி சார்ந்த வடிவமைப்பு மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன் ஆகியவை இந்த பிரிவில் உள்ள வழக்கமான கார்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது.

    VinFast VF6

    2. ஹோண்டா அமேஸ் 

    28.33/32 (AOP) | 40.81/49 (COP)

     ஓட்டுவதற்கு உற்சாகமான அதேநேரம் நம்பகமான கார்களைத் தயாரிப்பதில் ஹோண்டா எப்போதும் தனிப்பெயர் கொண்டது. அந்த வரிசையில் மூன்றாவது தலைமுறை அமேஸ் மாடல், 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்ற மிகச் சில காம்பாக்ட் செடான்களில் ஒன்றாகத் தனது நிலையை உயர்த்தியுள்ளது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் நடைமுறைக்கு உகந்த கேபின் அமைப்பு, குடும்பத்திற்கான சிறந்த காராக இதை மாற்றுகிறது.

    2025 Honda Amaze Crash

    3. வின்ஃபாஸ்ட் VF7

    28.54/32 (AOP) | 45.25/49 (COP)

    இந்திய சந்தையில் VF6 மாடலுக்கு மேல் ஒரு பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவியாக களம் இறக்கப்பட்டுள்ளது வின்ஃபாஸ்ட் VF7. பாரத் NCAP சோதனையில் இரண்டு பிரிவுகளிலுமே 5-ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த காரின் குழந்தைகள் பாதுகாப்பு ஸ்கோர், இந்தப் பட்டியலிலேயே அதிக மதிப்பெண் பெற்ற கார்களில் ஒன்றாக விளங்குகிறது.

    VinFast VF7

    4. மஹிந்திரா XUV 3XO

    29.36/32 (AOP) | 43/49 (COP)

    பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும் சப்-4 மீட்டர் எஸ்யூவி -தான் மஹிந்திரா XUV 3XO. 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்றுள்ளதால், குடும்பத்திற்கான ஒரு பாதுகாப்பான காம்பாக்ட் எஸ்யூவியை வாங்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான சாய்ஸாக இருக்கிறது.

    Mahindra XUV 3XO

    5. டாடா நெக்ஸான்

    29.41/32 (AOP) | 43.83/49 (COP)

    கிராஷ் டெஸ்ட்டில் முதன்முதலில் 5-ஸ்டார் மதிப்பீடு பெற்று சாதனை படைத்த காம்பாக்ட் எஸ்யூவிதான் நெக்ஸான். அதே சாதனையை BNCAP சோதனையிலும் தக்கவைத்துக்கொண்டு, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என இரண்டிலுமே 5-ஸ்டார் மதிப்பீட்டை அள்ளியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் CNG ஆப்ஷன்களில் கிடைப்பதால், அனைத்து விதமான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் இது பூர்த்தி செய்கிறது.

    Tata Nexon

    6. மாருதி சுஸூகி டிசையர்

    29.46/32 (AOP) | 41.57/49 (COP)

    ஹோண்டா அமேஸ்-ஐத் தவிர்த்து, இந்தியாவில் மாஸ் மார்க்கெட் செடான் பிரிவில் 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டை வென்ற மற்றொரு கார் மாருதி சுஸூகி டிசையர் மட்டுமே. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் மற்றும் விசாலமான கேபினுடன் இந்த கார் கிடைக்கிறது.

    Maruti Dzire

    7. டாடா கர்வ்வ்

    29.50/32 (AOP) | 43.66/49 (COP)

    வழக்கமான எஸ்யூவி கார்களைப் போலல்லாமல், சரிவான கூரை அமைப்புடன் தனித்துவமான கூபே-எஸ்யூவி தோற்றத்தில் வருகிறது டாடா கர்வ்வ். பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் மட்டுமின்றி, பிரீமியம் கேபினையும் கொண்டுள்ளதால் மிட்சைஸ் எஸ்யூவி பிரிவில் வித்தியாசமான காரைத் தேடுபவர்களுக்கு இது ஏற்றது. அத்துடன் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீடும் இதற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

    Tata Curvv

    8. டாடா ஆல்ட்ரோஸ்

    29.65/32 (AOP) | 44.90/49 (COP)

    நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்ற கேபின் வசதியுடன் வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் டாடா ஆல்ட்ரோஸ். பெட்ரோல், டீசல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த கார், 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டோடு குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் வலுவான ஸ்கோரைப் பெற்றுத் தனித்து நிற்கிறது.

    Tata Altroz Bharat NCAP crash test

    9. டாடா நெக்ஸான் EV

    29.86/32 (AOP) | 44.95/49 (COP)

     என்ஜின் கொண்ட மாடலின் வலுவான பாதுகாப்பு நற்பெயரை அதன் எலெக்ட்ரிக் பதிப்பான டாடா நெக்ஸான் EV காரும் அப்படியே தொடர்கிறது. பாரத் NCAP சோதனையின் இரண்டு பிரிவுகளிலுமே இது 5-ஸ்டார் மதிப்பீட்டை அள்ளியுள்ளது.

    Tata Nexon EV

    10. டாடா கர்வ்வ் EV

    30.81/32 (AOP) | 44.83/49 (COP)

    ஸ்யூவி ஸ்டைலுடன் முழுமையான எலெக்ட்ரிக் பவர்டிரெய்னை இணைத்து உருவாக்கப்பட்டதுதான் டாடா கர்வ்வ் EV. இதன் வழக்கமான எரிபொருள் மாடலைப் போலவ்ர்ர் இந்த எலெக்ட்ரிக் பதிப்பும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

    Tata Curvv EV

    11. டாடா ஹாரியர் & டாடா சஃபாரி

    30.08/32 (AOP) | 44.54/49 (COP)

    டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டுமே ஒரே பிளாட்பார்ம் மற்றும் பவர்டிரெய்னைப் பகிர்ந்து கொள்கின்றன. ஐந்து பேர் அமரக்கூடிய எஸ்யூவியாக ஹாரியர் இருக்கும் வேளையில், பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக சஃபாரி திகழ்கிறது. இந்த இரண்டு மாடல்களும் பாரத் NCAP சோதனையில் ஒரே மாதிரியான கிராஷ் டெஸ்ட் ஸ்கோரைப் பெற்றுள்ளன.

    Tata Safari

    12. மஹிந்திரா XUV400 EV

    30.38/32 (AOP) | 43/49 (COP)

    காம்பாக்ட் பிரிவில் மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வலம் வருவது மஹிந்திரா XUV400 EV. பயணிகளின் இரண்டு பாதுகாப்பு பிரிவுகளிலுமே 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்றுள்ளதன் மூலம், எலெக்ட்ரிக் திறனுடன் வலுவான பாதுகாப்பையும் இந்த கார் உறுதி செய்கிறது.

    Mahindra XUV400 EV

    13. மாருதி சுஸூகி பிரெஸ்ஸா Brezza

    30.41/32 (AOP) | 43/49 (COP)

    பழைய சுஸூகி மாடல் Global NCAP சோதனையில் 4-ஸ்டார் மட்டுமே பெற்றிருந்த நிலையில் புதிய தலைமுறை கார் 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்று அசத்தியுள்ளது. பெட்ரோல், CNG மற்றும் புதிய டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் இது கிடைக்கிறது. இந்த பாதுகாப்பு மதிப்பீடு குறிப்பிட்ட சில வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Maruti Brezza BNCAP

    14. மாருதி சுஸூகி இன்விக்டோ

    30.43/32 (AOP) | 45/49 (COP)

    மாருதி சுஸூகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணி தயாரிப்பாக உருவான பிரீமியம் த்ரீ-ரோ எம்பிவி கார் மாருதி சுஸூகி இக்விக்டோ. இன்னோவா ஹைகிராஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டு ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் இது கிடைக்கிறது. ஹைகிராஸ் மாடலை விட இதன் AOP ஸ்கோர் சற்றே குறைவாக இருந்தாலும், COP மதிப்பெண் இரண்டுக்குமே சமமாக உள்ளது.

    Maruti Invicto Bharat NCAP Crash Test

    15. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

    30.47/32 (AOP) | 45/49 (COP)

    குடும்பங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பிரீமியம் எம்பிவி கார் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ். இது பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. முந்தைய லேடர்-ஃபிரேம் அமைப்பைக் கைவிட்டு மோனோகாக் சேசிஸை ஏற்றுக்கொண்ட முதல் இன்னோவா மாடல் இதுவே. 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீடும், குழந்தைகளுக்கான சிறந்த பாதுகாப்பு ஸ்கோரும் பெரிய குடும்பங்களுக்கு இதை மிகச் சிறந்த தேர்வாக மாற்றுகின்றன.

    Toyota Innova Hycross crash tested by Bharat NCAP

    16. ரெனால்ட் டஸ்டர் & நிஸான் டெக்டான்

    30.49/32 (AOP) | 45/49 (COP)

    ரெனோவின் அடையாளமாக விளங்கிய மாடலை புதிய தலைமுறை டஸ்டர் மீண்டும் கொண்டு வந்துள்ளது; அதேநேரம் மிட்சைஸ் எஸ்யூவி சந்தையில் நிசானின் புதிய வருகையை டெக்டான் பிரதிபலிக்கிறது. ஒரே பிளாட்பார்மில் கட்டமைக்கப்பட்ட இந்த இரண்டு எஸ்யூவிகளுமே பாரத் கிராஷ் டெஸ்ட்டில் ஒரே மாதிரியான 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

    Renault Duster BNCAP

    17. டாடா பன்ச்

    30.58/32 (AOP) | 45/49 (COP)

    காம்பாக்ட் அளவுகள், உயரமான சீட்டிங் பொசிஷன் மற்றும் சிறந்த கேபின் அமைப்புடன் மைக்ரோ-எஸ்யூவி பிரிவில் அசத்துகிறது டாடா பன்ச். குறைவான பட்ஜெட்டில் மிக வலுவான பாதுகாப்பு கொண்ட காரைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இதன் 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீடு மிகப்பெரிய பலமாக அமைகிறது.

    Tata Punch Bharat NCAP

    18. மஹிந்திரா XUV 7XO

    30.76/32 (AOP) | 44.97/49 (COP)

    மஹிந்திராவின் பிரபலமான த்ரீ-ரோ எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது மஹிந்திரா XUV 7XO. குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவில் இது பெற்றுள்ள 5-ஸ்டார் ஸ்கோர், மற்ற கார்கள் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களுக்கு மிக நெருக்கமாக உள்ளது.

    Mahindra XUV 7XO

    19. ஸ்கோடா கைலாக்

    30.88/32 (AOP) | 45/49 (COP)

    கடும் போட்டி நிறைந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி சந்தையில் ஸ்கோடாவின் முதல் அடியாக களமிறங்கியுள்ளது ஸ்கோடா கைலாக். 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின், உயர்தர கேபின் மற்றும் அந்நிறுவனத்திற்கே உரிய சிறப்பான டிரைவிங் பண்புகளுடன் பாதுகாப்பிலும் 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

    Skoda Kylaq

    20. மஹிந்திரா தார் ராக்ஸ் & டாடா பன்ச் EV (2026)

    31.09/32 (AOP) | 45/49 (COP)

    வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வெவ்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளாக இருந்தாலும் தார் ராக்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட டாடா பன்ச் EV ஆகிய இரண்டுமே பாரத் கிராஷ் டெஸ்ட்டில் சம அளவிலான ஸ்கோரைப் பெற்றுள்ளன. இதில் தார் ராக்ஸ் 5-டோர் லைஃப்ஸ்டைல் எஸ்யூவியாகவும், பன்ச் EV எலெக்ட்ரிக் மைக்ரோ-எஸ்யூவியாகவும் இருப்பதால், ஒரே மாதிரியான பாதுகாப்புத் தரத்துடன் இரண்டு முற்றிலும் மாறுபட்ட ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன

    Mahindra Thar Roxx
    Tata Punch EV BNCAP

    21. டாடா சியாரா

    31.14/32 (AOP) | 44.73/49 (COP)

    டாடா மோட்டார்ஸின் புகழ்பெற்ற பிராண்ட் பெயரை ஒரு நவீன எஸ்யூவி அவதாரத்தில் மீண்டும் மீட்டெடுத்துள்ளது புதிய தலைமுறை டாடா சியாரா. கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் வாங்கும் டாடாவின் பாரம்பரியத்தைத் தொடரும் இந்த கார், பெரியவர்கள் பாதுகாப்பில் 32-க்கு 31.14 மதிப்பெண்களைக் குவித்து அசத்தியுள்ளது.

    Tata Sierra

    22. ஹூண்டாய் வென்யூ 

    31.15/32 (AOP) | 44.46/49 (COP)

    புதிய டிசைன், நவீன அம்சங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் பவர்டிரெய்ன் தேர்வுகளுடன் வந்துள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ, 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்றுப் பாதுகாப்புத் தரத்திலும் ஒரு படி மேலே சென்றுள்ளது.

    Hyundai Venue

    23. மாருதி சுஸூகி e விட்டாரா 

    31.49/32 (AOP) | 43/49 (COP)

    இந்தியாவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி சந்தையில் மாருதி நிறுவனத்தின் முதல் என்ட்ரியாக வந்துள்ளது மாருதி சுஸூகி e விட்டாரா. ஐரோப்பிய சந்தைக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கார் என்பதால், இது 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

    Maruti e Vitara Crash Test

    24. மாருதி சுஸூகி விக்டோரிஸ்

    31.66/32 (AOP) | 43/49 (COP)

    மிட்சைஸ் எஸ்யூவி பிரிவில் மாருதியின் இரண்டாவது மாடலாக அறிமுகமாகியுள்ள மாருதி சுஸூகி விக்டோரிஸ், பெட்ரோல், ஸ்ட்ராங்-ஹைப்ரிட் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. குழந்தைகள் பாதுகாப்பில் சற்று குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், பெரியவர்கள் பாதுகாப்பு ஸ்கோரில் அதை ஈடுகட்டி 5-ஸ்டார் பெற்றுள்ளது.

    Maruti Victoris Bharat NCAP crash test

    25. கியா செல்டோஸ்

    31.70/32 (AOP) | 45/49 (COP)

    போல்டான தோற்றம் தாராளமான நவீன வசதிகள் மற்றும் பல்வேறு என்ஜின் தேர்வுகள் காரணமாக இந்தியாவில் கியாவின் மாபெரும் வெற்றி மாடலாக வலம் வருகிறது செல்டோஸ். தற்போது கிடைத்துள்ள 5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீடு, இந்த செக்மென்ட்டில் காரின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

    Kia Seltos Bharat NCAP

    26. மஹிந்திரா BE 6

    31.97/32 (AOP) | 45/49 (COP)

    எதிர்கால பாணி டிசைன் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கேபினுடன் மஹிந்திராவின் தனித்துவமான எலெக்ட்ரிக் எஸ்யூவியாக உருவெடுத்துள்ளது BE 6. பெரியவர்கள் பாதுகாப்பில் முழு மதிப்பெண் பெறுவதை வெறும் 0.03 புள்ளிகளில் மட்டுமே தவறவிட்டு 31.97 ஸ்கோரைப் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் 49-க்கு 45 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளது.

    Mahindra BE 6

    27. மஹிந்திரா XEV 9e & டாடா ஹாரியர் EV 

    32/32 (AOP) | 45/49 (COP)

    மஹிந்திரா XEV 9e மற்றும் டாடா ஹாரியர் EV ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களுமே பெரியவர்கள் பாதுகாப்பில் 32-க்கு 32 என முழு மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளன. குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் 49-க்கு 45 மதிப்பெண்களை அள்ளியதன் மூலம், இந்த பாதுகாப்புப் பட்டியலின் முதலிடத்தை இரண்டு கார்களும் சமமாகப் பகிர்ந்துகொள்கின்றன.

    Mahindra XEV 9e Bharat NCAP crash test
    Tata Harrier EV Bharat NCAP crash test

    கார்தேக்கோவின் கருத்து...

    5-ஸ்டார் பாரத் NCAP மதிப்பீடு ஒரு காரைத் தேர்வு செய்வதற்கு மிக முக்கியமான காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது மட்டுமே காரைத் தேர்ந்தெடுக்கும் ஒரே காரணியாக இருக்கக்கூடாது. கிராஷ் டெஸ்ட் மதிப்பீடுகள் பயணிகளின் பாதுகாப்பைக் காட்டினாலும், உங்கள் பட்ஜெட், தினசரி பயன்பாடு, பயண சௌகரியம், நவீன வசதிகள் மற்றும் சர்வீஸ் சப்போர்ட் போன்றவையும் சம அளவில் கவனிக்கப்பட வேண்டியவை. பட்ஜெட் ஹேட்ச்பேக், குடும்பத்திற்கான எஸ்யூவி அல்லது எலெக்ட்ரிக் கார் என இன்றைய வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான தேர்வுகள் சந்தையில் உள்ளன. எனவே உங்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய கார்களை முதலில் பட்டியலிட்டு, அதன்பின் அதன் பாதுகாப்பு மதிப்பீட்டை ஒரு முக்கிய அளவுகோலாக வைத்து இறுதி முடிவை எடுப்பதே புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கும்.

    was this article helpful ?

    Anonymous
    Anonymous

    Write your Comment on VinFast விஎஃப்7

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience