ஹூண்டாய் பேயான் Vs மாருதி விக்டோரிஸ்: கொரியன் காரா? ஜப்பானிய காரா? எது பெஸ்ட் சாய்ஸ்!
பேயான் மாடல் கூடுதல் நவீன தொழில்நுட்பங்களையும் அதிக பவரையும் வாரி வழங்குகிறது. மறுபுறம் விக்டோரிஸ் பல்வேறு எரிபொருள் ஆப்ஷன்களுடன் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்று அசத்துகிறது!
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் போட்டியை இன்னும் சூடாக்கும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பேயான் காரை 10 லட்சம் ரூபாய் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் சமீபத்தில் களமிறக்கியுள்ளது. ஹூண்டாயின் எஸ்யூவி வரிசையில் வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய மாடல்களுக்கு இடையே இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வுகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
பேயான் மாடல் தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாத, நன்கு சோதிக்கப்பட்ட பவர்டிரெயின் மற்றும் சிறப்பான வசதிகளுடன் ஹூண்டாயில் இருந்து வெளிவந்துள்ள ஒரு தெளிவான காராகும். இதனால் இதே பிரிவில் எந்தவித அலட்டலும் இல்லாத மற்றொரு காரான மாருதி விக்டோரிஸுடன் இதை நேரடியாக ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. விக்டோரிஸ் தோற்றத்தில் பெரியதாகவும், மக்களிடையே அதிக நம்பிக்கை பெற்ற பிராண்ட் பேட்ஜுடனும் வரலாம். ஆனால் அளவீடுகள், வசதிகள் மற்றும் பவர்டிரெயின் ஆகியவற்றில் எது சிறந்தது? வாருங்கள், ஹூண்டாய் பேயான் மற்றும் மாருதி விக்டோரிஸ் ஆகிய இரண்டையும் ஆழமாக ஒப்பிட்டுப் பார்ப்போம்:
விலை
| மாடல் | ஹூண்டாய் பேயான் |
மாருதி விக்டோரிஸ் |
||
| விலை |
|
|
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்.
ஆரம்ப விலையைப் பொறுத்தவரை விக்டோரிஸை விட ஹூண்டாய் பேயான் 45,000 ரூபாய் குறைவான விலையில் கிடைக்கிறது. டாப்-எண்ட் மாடலிலும் பேயான் கார் விக்டோரிஸை விட 1.99 லட்சம் ரூபாய் வரை மலிவாகவே உள்ளது; விக்டோரிஸின் டாப் வேரியண்ட்டில் கிடைக்கும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் அமைப்பே இந்த கூடுதல் விலைக்கு முக்கியக் காரணமாகும்.
பரிமாணங்கள்
| அளவுகள் |
ஹூண்டாய் பேயான் |
மாருதி விக்டோரிஸ் |
வித்தியாசம் |
| நீளம் | 4245 mm |
4360 mm |
(- 115 mm) |
| அகலம் |
1810 mm |
1795 mm |
+ 15 mm |
| உயரம் |
1605 mm* |
1655 mm |
(- 50 mm) |
| வீல்பேஸ் |
2600 mm |
2600 mm |
0 mm |
*ரூஃப் ரெயில்களுடன்
-
பேயான் பார்ப்பதற்கு சிறிய எஸ்யூவி போலத் தெரிந்தாலும் விக்டோரிஸை விட அகலத்தில் 15 மிமீ அதிகமாகவே உள்ளது.

-
இருப்பினும் நீளம் மற்றும் உயரத்தில் விக்டோரிஸ் முறையே 115 மிமீ மற்றும் 50 மிமீ பேயானை விடப் பெரியதாக இருக்கிறது.

-
இரண்டு கார்களிலுமே வீல்பேஸ் சரியாக 2600 மிமீ என்பதால், தாளளவில் பின் இருக்கை லெக்ரூம் இடவசதி ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்த செக்மென்ட்டிலேயே இவை இரண்டும் மிக அதிக லெக்ரூம் கொண்டவை என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு நடுத்தர குடும்பத்திற்குத் தேவையான போதுமான இடவசதியைத் தாராளமாக வழங்குகின்றன.
கலர் ஆப்ஷன்கள்
| ஹூண்டாய் பேயான் |
மாருதி விக்டோரிஸ் |
| அட்லஸ் ஒயிட்* |
ஆர்க்டிக் ஒயிட் |
| எகோட்ரானிக் கிரே |
மேக்மா கிரே |
| கோல்டன் பிரான்ஸ் |
ஸ்ப்ளெண்டிட் சில்வர்* |
| டைட்டானியம் பிளாக் |
புளூயிஷ் பிளாக் |
| கிளாஸி ப்ளூ |
எடர்னல் ப்ளூ* |
| ஃபியரி ரெட்* |
சிஸ்லிங் ரெட்* |
| டைட்டானியம் பிளாக் மேட் |
மிஸ்டிக் கிரீன் |
| கிளாஸி ப்ளூ மேட் |
- |
*டூயல்-டோன் தேர்வுகள்
-
பேயான் மொத்தம் ஆறு அடிப்படை வண்ணங்களில் வருகிறது; இதில் ஃபியரி ரெட் மற்றும் அட்லஸ் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்கள் பிளாக் ரூஃப் உடன்கூடிய டூயல்-டோன் தேர்வில் கிடைக்கின்றன.
-
டைட்டானியம் பிளாக் மற்றும் கிளாஸி ப்ளூ ஆகிய இரண்டு மேட் ஃபினிஷ் வண்ணங்களும் இதில் உண்டு.
-
மறுபுறம் விக்டோரிஸ் 7 அடிப்படை வண்ணங்களை வழங்குகிறது; இதில் எடர்னல் ப்ளூ, சிஸ்லிங் ரெட் மற்றும் ஸ்ப்ளெண்டிட் சில்வர் ஆகிய மூன்று நிறங்கள் பிளாக் ரூஃப் உடன்கூடிய டூயல்-டோன் தேர்வில் கிடைக்கின்றன.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்
| அம்சங்கள் |
ஹூண்டாய் பேயான் |
மாருதி விக்டோரிஸ் |
| LED Projector Headlamps |
✅ |
✅ |
| LED DRLs |
✅ |
✅ |
| LED Taillamps |
✅ |
✅ (Connected) |
| Wheels |
17-inch dual-tone alloy |
17-inch dual-tone alloy |
| Rear Spoiler |
✅ |
✅ |
| Sharkfin Antenna |
✅ |
✅ |
| Roof Rails |
✅ |
✅ |
| Panoramic Sunroof |
✅ |
✅ |
| Powered Tailgate |
❌ |
✅ (With gesture control) |
| Power-adjustable Driver Seat |
✅ (8-way) |
✅ (8-way) |
| Ventilated Seats |
✅ (Front only) |
✅ (Front only) |
| Rear Reclining Seat |
✅ (2-step) |
❌ |
| Ambient Lighting |
✅ (Blue) |
✅ (64 colours) |
| Infotainment System |
✅ (12.3-inch touchscreen) |
✅ (10.1-inch touchscreen) |
| Wireless Apple CarPlay/Android Auto |
✅ |
✅ |
| Digital driver’s display |
✅ (12.3-inch) |
✅ (10.25-inch) |
| Head-up Display |
❌ |
✅ |
| Cabin Air Purifier |
❌ |
✅ (PM 2.5 with display) |
| Wireless Phone Charger |
✅ |
✅ |
| Sound System |
8-speaker Bose |
8-speaker Infinity |
| Generative AI Voice Assistant |
✅ |
❌ |
| Auto-dimming IRVM |
✅ |
✅ |
| Automatic Climate Control |
✅ |
✅ |
| Rear AC Vents |
✅ |
✅ |
| Keyless Entry with Push-button Start/Stop |
✅ |
✅ |
| USB Charging Ports |
✅ (Type-C, front and rear) |
✅ (Type-C, front and rear) |
| Paddle Shifters |
✅ (CVT only) |
✅ (6-speed AT only) |
| Multi-drive Modes |
✅ (CVT only) |
✅ (Strong hybrid & AWD only) |
| Connected Car Technology |
✅ |
✅ |
| Adaptive Cruise Control |
✅ |
✅ |
| Rear Wiper with Washer |
✅ |
✅ |
| Airbags |
6 |
6 |
| 360-degree Camera |
✅ |
✅ |
| Parking Sensors |
✅ (Front, Rear and Side) |
✅ (Front and Rear) |
| ESC (Electronic Stability Control) |
✅ |
✅ |
| Hill Hold Assist (HHA) |
✅ |
✅ |
| Electric parking brake (EPB) with auto hold |
✅ |
✅ (6-speed AT only) |
| Rear Disc Brakes |
✅ |
✅ |
| Tyre pressure monitoring system (TPMS) |
✅ |
✅ |
| Dashcam |
✅ |
❌ |
| Level-2 ADAS |
✅ |
✅ |
| Blind-spot Warning |
✅ |
✅ |
| Blind-spot View Monitor |
✅ |
❌ |
| Driver Attention Warning |
✅ |
❌ |
-
இவ்விரு கார்களும் அம்சங்களில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல; பேயானில் ரிக்ளைனிங் வசதி கொண்ட பின் இருக்கைகள், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், இன்பில்ட் டேஷ்கேம் மற்றும் பிளைண்ட்-வியூ மானிட்டர் ஆகியவை கிடைக்கின்றன.


-
அதேசமயம் விக்டோரிஸில் பவர்டு டெயில்கேட், ஹெட்-அப் டிஸ்பிளே, கேபின் ஏர் பியூரிஃபையர் மற்றும் 64 வண்ணங்களில் மாற்றிக்கொள்ளக்கூடிய ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற பிரத்யேக வசதிகள் இடம்பெற்றுள்ளன.
-
இருந்தாலும் கூட பனோரமிக் சன்ரூஃப், பவர்டு டிரைவர் சீட், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற நவீன வசதிகளை இரண்டுமே வழங்கி சமபலத்துடன் நிற்கின்றன.
-
பாதுகாப்பு விஷயத்திலும் இரண்டும் சமமாக 6 ஏர்பேக்குகள், Level-2 ADAS, பிளைண்ட்-ஸ்பாட் வார்னிங், TPMS, 360-டிகிரி கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார்களைக் கொண்டுள்ளன.
-
கிராஷ் டெஸ்ட் சோதனையில் மாருதி விக்டோரிஸ் BNCAP பாதுகாப்பு சோதனையில் முழுமையாக 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்று அசத்தியுள்ளது. பேயான் கார் இன்னும் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
| மாடல் |
ஹூண்டாய் பேயான் |
மாருதி விக்டோரிஸ் |
||||
|
|
1.5-லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் வித் மைல்டு ஹைஒஇரிட் |
1.5-லிட்டர் பெட்ரோல் + CNG |
1.5-லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் |
||
| பவர் |
115 PS |
103 PS |
88 PS |
92 PS (engine) + 80 PS (motor) |
||
| டார்க் | 144 Nm |
139 Nm |
121.5 Nm |
122 Nm (engine) + 141 Nm (motor) |
||
| டிரான்ஸ்மிஷன் |
6-speed MT / CVT |
5-speed MT / 6-speed AT |
5-speed MT |
e-CVT |
||
| டிரைவ்டிரெய்ன் |
2WD |
2WD / AWD |
2WD |
2WD |
||
|
17.2 கிமீ/லி (MT) / 18.6 கிமீ/லி (CVT) | 21.18 கிமீ/லி (MT) / 21.06 கிமீ/லி (AT) / 19.07 கிமீ/லி (AllGrip AT) |
27.02 km/kg |
28.65 கிமீ/லி |
||
MT - மேனுவல் டிரான்ஸ்மிஷன், AT - ஆட்டோமேட்டிக் (டார்க் கன்வெர்ட்டர்), CVT - கன்டினியூவஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்
-
இரண்டு கார்களிலுமே மிகச் சிறந்த ஸ்மூத்னெஸ் கொண்ட 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பேயானில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கிறது; விக்டோரிஸில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன.

-
விக்டோரிஸ் மாடலில் அடிபாகத்தில் பொருத்தப்பட்ட அண்டர்பாடி CNG சிலிண்டர் அமைப்பு மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. இருப்பினும் ஹூண்டாய் நிறுவனமும் 2027 ஜனவரிக்குள் பேயான் CNG மாடலை அறிமுகப்படுத்த உள்ளதை உறுதி செய்துள்ளது.

-
விக்டோரிஸில் 1.5-லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் அமைப்பும் உண்டு; இது காம்பேக்ட் எஸ்யூவி சந்தையிலேயே மிக அதிக மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக விளங்குகிறது. அத்துடன் இந்த ஒப்பீட்டில் 6-ஸ்பீடு AT உடன் AWD ஆப்ஷனைக் கொண்டிருக்கும் ஒரே காராகவும் விக்டோரிஸ் திகழ்கிறது.
கார்தேக்கோவின் கருத்து
செக்மென்ட்டிலேயே மிகக் குறைந்த ஆரம்ப விலையுடனும், அதே சமயம் சற்று கச்சிதமான அளவீடுகளுடனும் ஒரு சுவாரஸ்யமான இடத்தில் ஹூண்டாய் பேயான் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 4.2 மீட்டர் நீளம் மட்டுமே கொண்டிருந்தாலும், ஒரு நடுத்தர குடும்பத்திற்குத் தேவையான வசதியையும் இடத்தையும் பேயான் தாராளமாகத் தருகிறது. மேலும் வழக்கமான ஹூண்டாய் கார்களைப் போலவே இதில் வசதிகளுக்கு எந்தவித பஞ்சமும் வைக்கப்படவில்லை.
அதேவேளையில், அதிக வசதிகள், பலவிதமான பவர்டிரெயின் ஆப்ஷன்கள் மற்றும் கம்பீர தோற்றத்துடன் விக்டோரிஸும் ஒரு நேர்த்தியான காராக வலம் வருகிறது. நம்பகத்தன்மை, நீண்ட நாள் உழைப்பு மற்றும் கடினமான சாலைகளுக்கு ஏற்ற கரடுமுரடான பயன்பாட்டை விரும்புபவர்களுக்கு AWD ஆப்ஷனுடன் வரும் விக்டோரிஸ் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த இரண்டு காம்பேக்ட் எஸ்யூவிகளில் உங்கள் சாய்ஸ் எது? கீழே உள்ள கமெண்ட்டில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
பரிசீலிக்க வேண்டிய பிற மாற்று கார்கள்
-
ஹோண்டா எலிவேட்: அசத்தலான கம்பீர தோற்றம், நம்பகமான நேச்சுரலி அஸ்பிரேட்டட் எஞ்சின் மற்றும் குடும்பத்துடன் பயணிக்க சௌகரியமான விசாலமான கேபினைக் கொண்டுள்ளது.
-
ஹூண்டாய் கிரெட்டா: இந்த செக்மென்ட்டின் ராஜாவான கிரெட்டா, எக்கச்சக்கமான வசதிகள் மற்றும் பலவித பவர்டிரெயின் ஆப்ஷன்களுடன் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் விருப்பமாகத் திகழ்கிறது. பேயான் vs கிரெட்டா ஒப்பீட்டையும் பார்க்கலாம்.
-
கியா செல்டோஸ்: சமீபத்திய தலைமுறை அப்டேட்டுக்குப் பிறகு, இந்த பிரிவிலேயே மிகப்பெரிய எஸ்யூவிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இதன் அதிரடி ஸ்டைலிங், சிறப்பான ரோடு பிரசன்ஸ் மற்றும் பிரம்மாண்டமான கேபின் ஒரு புதுவித அனுபவத்தைத் தரும். பேயான் vs செல்டோஸ் ஒப்பீட்டைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
-
ரெனோ டஸ்டர் / நிஸான் டெக்டான்: ஸ்போர்ட்டியான இந்த ஐரோப்பிய கார்களில், குறிப்பாக டஸ்டர் இந்த செக்மென்ட்டிலேயே மிகச் சிறந்த ஹைப்ரிட் ஆப்ஷனைக் கொண்டுள்ளது; சிறந்த டிரைவிங் அனுபவத்திற்கும் நிறைய வசதிகளுக்கும் பெயர் பெற்றது.
-
டாடா சியரா: இந்த பிரிவின் மிகப்பெரிய எஸ்யூவியான இது, ரெட்ரோ-மாடர்ன் ஸ்டைலைத் தனது பலமாகக் கொண்டுள்ளது. டாடாவின் தயாரிப்பு என்பதால் வசதிகள் நிரம்பியுள்ளதுடன் 3 விதமான எஞ்சின் ஆப்ஷன்களையும் வழங்குகிறது.
-
மாருதி கிராண்ட் விட்டாரா / டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்: பிராண்ட் மீதான நம்பகத்தன்மைக்கும் அனுபவத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கு ஏற்ற, AWD மற்றும் ஹைப்ரிட் வசதிகளுடன் வரும் நம்பகமான எஸ்யூவிகள்.
-
ஃபோக்ஸ்வேகன் டைகுன் / ஸ்கோடா குஷாக்: கச்சிதமான உருவத்தில் உள்ளே போதுமான இடவசதியுடன், ஸ்போர்ட்டியான டிரைவிங் அனுபவத்தைத் தரும் கார்கள். சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட்டிற்குப் பிறகு ரியர் மசாஜ் சீட்கள் (குஷாக்) போன்ற புதிய வசதிகளையும் கொண்டுள்ளன. பேயான் vs குஷாக் ஒப்பீட்டைப் பற்றி மேலும் அறிய இங்கே செல்லவும்.
-
டாடா கர்வ்வ்: முற்றிலும் வித்தியாசமான டிசைனை விரும்புபவர்களுக்கான சிறந்த சாய்ஸ். இதன் கூபே போன்ற ஷேப் பலரையும் கவரும்; காரின் உள்பகுதியிலும் ஏராளமான நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
-
எம்ஜி ஆஸ்டர்: இந்த செக்மென்டில் சற்று பழமையான மாடலாக இருந்தாலும், பிரீமியமான உட்புற வடிவமைப்பு மற்றும் ஐரோப்பிய கார்களுக்கு இணையான ஸ்மூத்தான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது.
-
சிட்ரோன் ஏர்கிராஸ் X: இந்த செக்மென்ட்டிலேயே மிகச் சிறந்த சொகுசான ரைடு குவாலிட்டியைத் தரும் கார்களில் ஒன்று. சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஆடம்பரமான கேபினைக் கொண்டுள்ளது.














