பன்ச் EV-க்கு போட்டியா புது எலக்ட்ரிக் காரா? வின்ஃபாஸ்ட் VF5 டிசைன் பேடன்ட் சொல்லும் ரகசியம்!
காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இது இந்தியாவிற்கு வரும் ஃபேஸ்லிஃப்ட் VF5 ஆக இருக்கலாம் என்று தெரிகிறது
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய கார்களின் டிசைன் பேடன்ட் தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியாவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் புதிய கார் ஒன்றின் டிசைன் பேடன்ட் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இந்த பேடன்ட்டில் காரின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது வின்பாஸ்ட் VF5 மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான டிசைன் பேடன்ட்களைப் போலவே, இந்த புதிய VF5 காரின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை இதன் மூலம் நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள பிற வின்பாஸ்ட் மாடல்களைப் போலவே, இந்த VF5 காரும் முற்றிலும் ஒரு எலக்ட்ரிக் மாடலாகவே களமிறங்கும்.
VF5 டிசைன் பேடன்ட் வெளிப்படுத்தும் முக்கிய மாற்றங்கள்
இந்த பேடன்ட் விவரங்கள் காரின் அடையாளங்களை வெளிப்படுத்தினாலும், வியட்நாமில் தற்போது தயாரிக்கப்பட்டு விற்பனையாகும் தற்போதைய VF5 மாடலில் இருந்து சில அம்சங்கள் மாறுபடுகின்றன. வின்பாஸ்ட் தனது சொந்த நாட்டில் அசெம்பிள் செய்யும் VF5 மாடலின் ஒட்டுமொத்த தோற்ற அமைப்பு இதிலும் தொடர்ந்தாலும், இதன் முன் மற்றும் பின் பக்க வடிவமைப்பிலும், அலாய் வீல்களிலும் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை பேடன்ட் காட்டுகிறது. முன்பகுதி இப்போது மிகவும் ஸ்லீக்காக மாறியுள்ளதுடன், பழைய ஆழமான லைட்டிங் அமைப்பிற்குப் பதிலாக தட்டையான கனெக்டட் LED DRL-கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதோடு புதிய முன் பக்க பம்பர் டிசைன் சேர்க்கப்பட்டு, ஹெட்லேம்ப்கள் பம்பரின் சற்று கீழ் பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பது போலத் தெரிகிறது.

காரின் பக்கவாட்டுத் தோற்றத்தில் புதிய 5-ஸ்போக் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட வேரியன்ட்டுக்கான வடிவமைப்பாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது என்பதால், இறுதி புரொடக்ஷன் மாடலில் முற்றிலும் மாறுபட்ட அலாய் வீல்கள் வரலாம். இவை தவிர்த்து, மேலே உயர்ந்து செல்லும் பெல்ட்லைன், ஷார்க் பின் ஆண்டெனா மற்றும் ORVM-கள் ஆகியவை தற்போதைய VF5 மாடலில் உள்ளதைப் போலவே தொடர்கின்றன.

VF5 மாடலில் மாறுபட்ட வடிவமைப்பிலான டெயில் லைட்டுகள் கொடுக்கப்படவுள்ளன. பின்புறத்தில் லைட் பார் அமைப்பு நீடித்தாலும், பிரேக் லைட்டுகள், ரிவர்ஸ் லேம்ப் மற்றும் ரிப்ளக்டர்கள் ஆகியவை பம்பரில் இருந்து மேலே மாற்றப்பட்டிருப்பது போல் தெரிகிறது. அதேபோல, நம்பர் பிளேட்டிற்கு புதிய ஹெக்சாகனல் ஹவுசிங் அமைப்புடன் பின்புற பம்பரும் முற்றிலும் ரீடிசைன் செய்யப்பட்டுள்ளது.

இன்டீரியர்: VF6-ன் மினிமலிஸ்டிக் வெர்ஷனா?
இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள அனைத்து வின்பாஸ்ட் கார்களின் கேபினும் மிக எளிமையான மினிமலிஸ்டிக் டிசைன் பாணியைக் கொண்டுள்ளன. பெரிய டச் ஸ்கிரீன், ஸ்டீயரிங் வீல் மற்றும் டச் ஸ்கிரீனுக்கு கீழே சில கன்ட்ரோல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். VF5 மாடலும் இதற்கு விதிவிலக்கல்ல; இதன் பேஸ்லிப்ட் மாடலிலும் இதே பாணி தொடரவே அதிக வாய்ப்புள்ளது. காரின் இன்டீரியர் தோற்றம் அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த தளத்திலும் வெளியாகவில்லை என்றாலும், தற்போதைய மாடலை விட மிகக் குறைந்த அளவிலான மாற்றங்களே இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*விளக்கக் காட்சிக்காக தற்போதைய குளோபல்-ஸ்பெக் வின்பாஸ்ட் VF5 படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவி வரும் ஸ்பை படங்களில், பாக்ஸி டிசைன் அமைப்புடன் கூடிய புதிய ஸ்டீயரிங் வீல் காணப்படுகிறது. இதில் டச்-கெபாசிட்டிவ் பட்டன்களும், இருபுறமும் இரண்டு நாப்களும் இடம்பெற்றுள்ளன.
பவர்டிரெயின் மற்றும் பேட்டரி விவரங்கள்
தற்போதைய சர்வதேச VF5 மாடலில் 29.6 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது முன் சக்கரங்களுக்கு பவரை அனுப்பி 95 PS பவரையும் 135 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. ஒரு முழு சார்ஜில் 268 கிமீ வரை செல்லும் என NEDC மதிப்பீட்டின்படி வின்பாஸ்ட் தெரிவிக்கிறது; இந்த பவர்டிரெயின் அமைப்பு இந்தோனேசியாவில் விற்பனையில் உள்ளது. வேறு சில நாடுகளில் 37.23 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் கிடைக்கிறது; இது ஒரு முழு சார்ஜில் 326 கிமீ ரேஞ்ச் (NEDC) வரை செல்லக்கூடியது. இந்த பேட்டரியுடன் முன்பக்க ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 136 PS பவரையும் 135 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

வின்பாஸ்ட் VF5 யாருக்குப் போட்டியாக அமையும்?
VF5 கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தைக் கொண்டுள்ளது. வின்பாஸ்ட் இந்தியா நிறுவனம் எந்த பவர்டிரெயின் தேர்வை இங்கு அறிமுகப்படுத்த முடிவு செய்கிறது என்பதைப் பொறுத்து, இது டாடா பஞ்ச் EV அல்லது டாடா நெக்ஸான் EV பிரிவில் போட்டியாளராகக் களமிறங்கலாம். பஞ்ச் EV பிரிவில் வந்தால் சிட்ரோயன் e-C3 காருக்கும், நெக்ஸான் EV பிரிவில் அமைந்தால் MG விண்ட்சர் EV மற்றும் மஹிந்திரா XUV 3XO EV போன்ற மாடல்களுக்கும் இது கடுமையான போட்டியை ஏற்படுத்தும்.
கார்தேக்கோவின் கருத்து…
இந்தியாவின் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் கார் சந்தையில் வின்பாஸ்ட் VF5 ஒரு சுவாரஸ்யமான தேர்வாக அமையக்கூடும்; குறிப்பாக பிராண்ட் இதனை VF6 மாடலுக்குக் கீழே நிலைநிறுத்தும்போது இதன் வரவேற்பு அதிகரிக்கலாம். இருப்பினும், ஒரு டிசைன் பேடன்ட் வெளியாகிவிட்ட காரணத்தினாலேயே இந்தியாவில் இதன் அறிமுகம் உறுதியாகிவிட்டது என்று கூறிவிட முடியாது; மேலும் எந்த பேட்டரி பேக் அல்லது பவர்டிரெயின் இங்கு வழங்கப்படும் என்பதில் இன்னும் தெளிவான தகவல்கள் இல்லை.
மார்க்கெட்டில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் எலக்ட்ரிக் SUV-களுக்கு இது எந்த அளவிற்கு சவால் கொடுக்கும் என்பதை இதன் விலை நிர்ணயம், ரியல்-வேர்ல்ட் ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் திறன்களே தீர்மானிக்கும். இப்போதைக்கு, VF5 கார் உண்மையிலேயே இந்தியாவிற்கு வருகிறதா என்பதை உறுதிப்படுத்த வின்பாஸ்ட் நிறுவனத்திடமிருந்து வரவிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
வியட்நாமின் இந்த புதிய எலக்ட்ரிக் காரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட்டில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!












