எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் vs மாருதி விக்டோரிஸ்: பெட்ரோல் பவரா? ஹைப்ரிட் மைலேஜா? எது பெஸ்ட் சாய்ஸ்?
ஹோண்டா எலிவேட்டைப் புதுப்பித்துள்ளது. ஆனால் விக்டோரிஸ் சில விஷயங்கள் தனக்குச் சாதகமாக சில விஷயங்களைக் கொண்டுள்ளது. எது முன்னால் வரும்? கண்டுபிடிக்கவும்.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
ஹோண்டா எலிவேட் மாடல் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டைப் பெற்றுள்ளது. ஆனால், இதற்குப் போட்டியாக விளங்கும் மாருதி விக்டோரிஸ் மாடலில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் உட்படப் பல்வேறு பவர்டிரெய்ன் தேர்வுகள் கிடைக்கின்றன. எலிவேட் ஒற்றை பவர்டிரெய்ன் விருப்பத்துடன் மட்டுமே தொடரும் நிலையில், விக்டோரிஸ் மாடலிலோ CNG, ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் ஆல் வீல் டிரைவ் எனப் பல ஆப்ஷன்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
அப்படியென்றால் ஹோண்டா எலிவேட்டின் வசதிகளும் அதன் ஒற்றை பவர்டிரெய்ன் தேர்வும் விக்டோரிஸை எதிர்கொள்ளப் போதுமானதாக இருக்குமா? இரண்டையும் விரிவாக ஒப்பிட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்வோம்.
2026 ஹோண்டா எலிவேட் vs மாருதி விக்டோரிஸ்: விலை விவரம்
| மாடல் |
|
|
|||
|
|
|
-
ஹோண்டா எலிவேட்டின் ஆரம்ப விலை ரூ. 11.80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மாருதி விக்டோரிஸின் பேஸ் வேரியன்ட் ரூ. 10.45 லட்சத்தில் தொடங்குகிறது. இதனால் எலிவேட் மாடலானது விக்டோரிஸை விட ரூ. 1.35 லட்சம் கூடுதல் விலையைக் கொண்டுள்ளது.

-
டாப் வேரியன்ட்களைப் பொறுத்தவரை எலிவேட்டின் அதிகபட்ச விலை ரூ. 18.40 லட்சமாக இருக்கிறது. ஆனால் விக்டோரிஸின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொண்ட டாப் வேரியன்ட்டின் விலை ரூ. 19.99 லட்சம் வரை செல்கிறது.

2026 ஹோண்டா எலிவேட் vs மாருதி விக்டோரிஸ்: அளவுகள்
| மாடல் |
ஹோண்டா எலிவேட் |
மாருதி விக்டோரிஸ் |
வித்தியாசம் |
| நீளம் |
4312 மிமி |
4360 மிமி |
(- 48 மிமி) |
| அகலம் |
1790 மிமி |
1795 மிமி |
(- 5 மிமி) |
| உயரம் |
1650 மிமி |
1655 மிமி |
(- 5 மிமி) |
| வீல்பேஸ் |
2650 மிமி |
2600 மிமி |
+ 50 மிமி |
-
நீளத்தைப் பொறுத்தவரை 4360 மி.மீ அளவுடன் மாருதி விக்டோரிஸ் சற்று முன்னிலையில் இருக்கிறது; எலிவேட் 4312 மி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது. அகலத்தில் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளன.


-
உயரத்தில் எலிவேட் சம அளவில் நின்றாலும், 50 மி.மீ கூடுதல் வீல்பேஸ் வழங்கி அதனை ஈடுசெய்கிறது. இந்த நீண்ட வீல்பேஸ் கேபினுக்குள் கூடுதல் இடவசதியைத் தரக்கூடும்; என்றாலும் நிஜமான சொகுசு பயண அனுபவம் இருக்கைகளின் வடிவமைப்பையும் சார்ந்துள்ளது.


-
ஒட்டுமொத்த அளவுகளைக் கவனித்தால் இரண்டு கார்களுக்கும் பெரிய இடைவெளி இல்லை. விக்டோரிஸ் அதிக நீளத்தைக் கொண்டிருக்கும் வேளையில், எலிவேட் சற்றே கூடுதலான உயரத்துடனும் கூடுதல் வீல்பேஸுடனும் வருகிறது.
2026 ஹோண்டா எலிவேட் Vs மாருதி விக்டோரிஸ்: Colour Options
| ஹோண்டா எலிவேட் |
மாருதி விக்டோரிஸ் |
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
*கருப்பு நிற ரூஃப் கொண்ட டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன
-
ஹோண்டா எலிவேட் அடக்கமான மெட்டாலிக் ஷேடுகளுடன், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் போன்ற எடுப்பான வண்ணங்களின் கலவையையும் வழங்குகிறது.
-
மாருதி விக்டோரிஸ் மிகவும் பிரீமியமாகவும் ஸ்டைலாகவும் தோற்றமளிக்கும் ஏழு வண்ணங்களை வழங்குகிறது; குறிப்பாக எடர்னல் ப்ளூ நிறம் காரை கூட்டத்தில் தனித்துக் காட்டுகிறது.
-
இரண்டு SUV மாடல்களிலுமே குறிப்பிட்ட நிறங்களுக்குக் கருப்பு நிற ரூஃப் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
2026 ஹோண்டா எலிவேட் Vs மாருதி விக்டோரிஸ்: பவர்டிரெய்ன்
| மாடல் |
ஹோண்டா எலிவேட் |
மாருதி விக்டோரிஸ் |
||
| எஞ்சின் | 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் |
1.5 லிட்டர் பெட்ரோல்-CNG |
1.5 லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் |
| பவர் | 121 PS |
104 PS |
88 PS |
116 PS (Combined) |
| டார்க் |
145 Nm |
139 Nm |
121.5 Nm |
141 Nm |
| டிரான்ஸ்மிஷன் |
6-speed MT/CVT |
5-speed MT, 6-Speed AT |
5-speed MT |
e-CVT |
| டிரைவ்ட்ரெய்ன் |
FWD |
FWD/AWD (AT Only) |
FWD |
FWD |
*MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT- கன்டினியூஸ் வேரியபிள் டிரான்ஸ்மிஷன், AT- டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக்
-
நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினில் எலிவேட் அதிக திறனை வெளிப்படுத்துகிறது. இது விக்டோரிஸின் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மாடலை விட 17 PS கூடுதல் ஆற்றலைத் தருகிறது.

-
ஆனால், மாருதி விக்டோரிஸ் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு அதிக விருப்பங்களை வழங்குகிறது. இதில் 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல்-CNG மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆகியவை அடங்கும்.

-
மாருதியின் இரண்டாவது ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலான விக்டோரிஸ், ஒரு லிட்டருக்கு 28.65 கி.மீ மைலேஜ் தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் CNG பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் காருக்கு அடியில் புத்திசாலித்தனமாகப் பொருத்தப்பட்ட டேங்க் பூட் ஸ்பேஸ் வீணாகாமல் பார்த்துக் கொள்கிறது.
-
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், எலிவேட் அதிக ஆற்றல் கொண்ட ஸ்மூத்தான பெட்ரோல் எஞ்சினைத் தருகிறது. அதே நேரத்தில் விக்டோரிஸ் பல்வேறு வகையான பவர்டிரெய்ன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது
2026 ஹோண்டா எலிவேட் Vs மாருதி விக்டோரிஸ்: Features
| Feature |
ஹோண்டா எலிவேட் |
மாருதி விக்டோரிஸ் |
| Auto LED Projector Headlamps |
✅ |
✅ |
| LED foglamps |
✅ |
✅ |
| LED DRLs |
✅ |
✅ |
| LED Taillamps |
✅ |
✅ |
| Wheels |
17-inch alloy wheels |
17-inch alloy wheels |
| Rear spoiler |
✅ |
✅ |
| Roof Rails |
✅ |
✅ |
| Powered Tailgate |
❌ |
✅ |
| Height-adjustable Driver Seat |
✅ |
✅ |
| Ambient Lighting |
✅ |
✅ |
| Infotainment Setup |
10.25-inch touchscreen |
10.1-inch touchscreen |
| Wireless Apple CarPlay/Android Auto |
✅ |
✅ |
| Digital Driver’s Display |
❌, 7-inch semi-digital instrument cluster |
10.25-inch display |
| Wireless Phone Charger |
✅ |
✅ |
| Sound system |
8-speaker audio system |
8-speaker Infinity sound system |
| Auto-diமிமிing IRVM |
✅ |
✅ |
| Cruise Control |
✅(Adaptive) |
✅(Adaptive) |
| Climate Control |
Automatic climate control |
Automatic climate control |
| Powered seats |
✅(8-way Driver, 4-way Co-Driver) |
✅ (6-way Driver) |
| Keyless entry with push-button start/stop |
✅ |
✅ |
| Ventilated Seats |
✅(Front & Rear) |
✅(Front Only) |
| Sunroof |
Single-pane sunroof |
Panoramic sunroof |
| Rear Sunshade |
❌ |
✅ |
| Multi-drive Modes |
❌ |
✅ (Eco, Normal, Sport) Only with Strong Hybrid |
| Cooled Glovebox |
❌ |
✅ |
| Connected Car Tech |
✅ |
✅ |
| Airbags |
6 |
6 |
| 360-degree Camera |
✅ |
✅ |
| Parking Sensors |
✅(Front and rear) |
✅(Front and rear) |
| ESC (electronic stability control) |
✅ |
✅ |
| Rain Sensing Wipers |
❌ |
✅ |
| Rear defogger |
✅ |
✅ |
| TPMS (Tyre Pressure Monitoring System) |
❌ |
✅ |
| ADAS (Advanced Driver Assistance System) |
✅ Level-2 |
✅ Level-2 |
-
பொதுவான அம்சங்களைப் பொறுத்தவரை இரண்டு கார்களிலுமே LED DRL உடன் கூடிய LED ஹெட்லேம்ப்கள், கனெக்டட் LED டெயில்லேம்ப்கள், அழகான 17-இன்ச் அலாய் வீல்கள், இன்டகிரேட்டட் ரியர் ஸ்பாய்லர் மற்றும் கருப்பு நிற ரூஃப் ரெயில்கள் இடம்பெற்றுள்ளன.


-
டிரைவிங்கை எளிதாக்கும் வகையில் இரண்டு மாடல்களிலும் Level-2 ADAS பாதுகாப்புத் தொகுப்பும், 360-டிகிரி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளன.
-
எலிவேட்டில் இரண்டு முன் இருக்கைகளுமே அட்ஜஸ்ட் செய்யும் வசதியுடன் வென்டிலேட்டட் அமைப்பைப் பெற்றுள்ளன. இதில் டிரைவர் சீட் 8 வழிகளிலும், பக்கத்து இருக்கை 4 வழிகளிலும் அட்ஜஸ்ட் ஆகும் வசதி கொண்டது. மேலும் இந்த செக்மென்ட்டிலேயே முதன்முறையாகப் பின் இருக்கைகளுக்கும் வென்டிலேஷன் வழங்கப்பட்டுள்ளது.


-
மறுபுறம் விக்டோரிஸ் மாடலில் முழுமையான 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, பிரம்மாண்டமான பனோரமிக் சன்ரூஃப், TPMS மற்றும் ரெயின்-சென்சிங் வைப்பர்கள் போன்ற ஏராளமான கூடுதல் வசதிகள் உள்ளன.

-
நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் தேவையான பின்புற சன்ஷேட் வசதியும் விக்டோரிஸில் இணைக்கப்பட்டுள்ளது.
-
வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் விக்டோரிஸ் கூடுதல் உபகரணங்களுடன் முன்னிலை வகித்து, விலைக்கு ஏற்ற அதிக மதிப்பைத் தருகிறது.
போட்டியாளர்கள்
ஹோண்டா எலிவேட் மாடலானது மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹூண்டாய் பேயான், ஸ்கோடா குஷாக், ஹூண்டாய் கிரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ரெனால்ட் டஸ்டர், டாடா சியரா, MG ஆஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு நேரடிப் போட்டியாக விளங்குகிறது.
கார்தேக்கோவின் கருத்து...
காம்பாக்ட் SUV சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பட்ஜெட் மற்றும் தேவைக்கேற்ப ஏராளமான தேர்வுகள் கிடைக்கின்றன.
தேவைக்கு அதிகமான ஆடம்பரங்கள் இல்லாமல், நேர்த்தியான வசதிகளுடனும் சக்திவாய்ந்த நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடனும் ஒரு SUV வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஹோண்டா எலிவேட் ஒரு சிறந்த தேர்வாக அமையும். முந்தைய மாடலை விட கூடுதல் அம்சங்களுடன் வந்துள்ள இந்த லேட்டஸ்ட் அப்டேட், மேனுவல் மற்றும் CVT ஆப்ஷன்களுடன் இன்றும் இந்த செக்மென்ட்டின் மிக மென்மையான பெட்ரோல் எஞ்சின் அனுபவத்தைத் தக்க வைத்துள்ளது.

மாறாக மாருதி சுஸூகி விக்டோரிஸ் பயண அனுபவத்தை மேலும் சொகுசாக்கப் பவர்டு டெயில்கேட், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ரியர் சன்பிளைண்ட்ஸ் போன்ற கூடுதல் சொகுசு அம்சங்களைத் தருகிறது. அத்துடன் CNG, ஆல் வீல் டிரைவ் மற்றும் மிக முக்கியமாக ஸ்ட்ராங் ஹைப்ரிட் எனப் பரந்த அளவிலான பவர்டிரெய்ன் வாய்ப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

பரிசீலிக்க வேண்டிய பிற கார்கள்
ஹோண்டா எலிவேட் அல்லது மாருதி விக்டோரிஸ் மாடல்களை வாங்குவதற்கு முன், ஒருமுறை கவனிக்க வேண்டிய சில மாற்று SUV-க்கள்:
- ஹூண்டாய் பேயான்: தனித்துவமான தோற்றம் மற்றும் நவீன கேபினுடன் புதிய டிசைன் அணுகுமுறையைக் கொண்டுள்ள இந்த மாடல், ஃப்ரெஷ்ஷான தோற்றமும் நவீன கேபினும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றது.
- ஹூண்டாய் கிரெட்டா: பல்வேறு வேரியன்ட்கள் மற்றும் எஞ்சின் தேர்வுகளுடன் சந்தையில் பலரது விருப்பமாக உள்ள கார். எனினும் இதன் புதிய அப்டேட் விரைவில் வரவுள்ளதால் சற்று காத்திருந்து முடிவெடுக்கலாம்.
- கியா செல்டோஸ்: பிரீமியம் கேபின், நம்பகமான பிராண்ட் மதிப்பு, அதிகப்படியான வசதிகள் மற்றும் பலவிதமான கியர்பாக்ஸ் விருப்பங்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மாற்று.
- ரெனால்ட் டஸ்டர் / நிஸான் டெக்டான்: ஈர்க்கக்கூடிய டிரைவிங் அனுபவமும் தனித்துவமான ஸ்டைலும் கொண்ட இந்த மாடல்கள், ஹேண்ட்லிங் மற்றும் நவீன அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்குப் பிடிக்கும்.
- டாடா சியரா: புதுமையான டிசைன், சிறப்பான கேபின் கட்டமைப்பு, பவர்டிரெய்ன் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் செக்மென்ட் எல்லைகளைத் தாண்டி நிற்கும் மாடல். இதன் பாதுகாப்புத் தரமும் கூடுதல் பலம்.
- மாருதி கிராண்ட் விட்டாரா / டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்: மைலேஜுக்கு முக்கியத்துவம் தருபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கார்கள். மாருதி விக்டோரிஸ் போன்றே இவையும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
- ஃபோக்ஸ்வேகன் டைகுன் / ஸ்கோடா குஷாக்: டர்போ-பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் சிறந்த ஹேண்ட்லிங் மூலம் டிரைவிங்கை ரசித்து ஓட்டும் நபர்களுக்கு உகந்த மாடல்கள்.
- டாடா கர்வ்: கூபே ஸ்டைல் வடிவமைப்பு, நவீன வசதிகள் மற்றும் மாறுபட்ட எஞ்சின் ஆப்ஷன்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான கார்.
- MG ஆஸ்டர்: பிரீமியம் கேபின் அனுபவத்தையும், நியாயமான விலையில் ஏராளமான நவீன வசதிகளையும் விரும்புவோர் இந்த காரைப் பரிசீலிக்கலாம்.
- சிட்ரோன் ஏர்கிராஸ்: சௌகரியமான சஸ்பென்ஷன், மூன்று வரிசை இருக்கை அமைப்பு மற்றும் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் வரும் மாடல்.














