• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    எந்த கலர்ல ஸ்கார்பியோ-N வாங்குனா கெத்தா இருக்கும்? உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இதுதான்!

    நீங்கள் வேரியண்ட்,எஞ்சினை தேர்வு செய்துள்ளீர்கள். இப்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் SUV -யை நீங்கள் பார்க்கும் போது தெரியும் விஷயம் வருகிறது.

    Anonymous
    published on நவ 03, 2026 12:03 ist
    info icon
    published onNov 03, 2026 12:03 IST
    last updated onNov 03, 2026 12:03 IST
    11 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Guide For Choosing Mahindra Scorpio N's Colour

    ஸ்கார்பியோ-N காரை வாங்கியவர்களிடம், “எதை முடிவு செய்வதற்கு ரொம்ப நேரம் யோசிச்சீங்க?” என்று கேட்டால், பலரும் சொல்வது அதன் கலரை பற்றித்தான். என்ஜின் மற்றும் வேரியண்ட்களை நாம் பட்ஜெட், சிறப்பம்சங்களை பார்த்து எளிதாக தேர்வு செய்துவிடலாம். ஆனால், காரின் கலர் என்பது முழுக்க முழுக்க நமது ரசனை சார்ந்தது. தினமும் காலையில் பார்க்கிங்கில் முதலில் பார்ப்பது, போகும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களில் பளிச்சென தெரிவது, கார் துடைத்து சுத்தமாக இருக்கிறதா அல்லது சர்வீஸ் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்பதை காட்டிக்கொடுப்பது என எல்லாமே காரின் கலர்தான்.

    ஸ்கார்பியோ-N காரை பொறுத்தவரை கலர் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 4662 மிமீ நீளமும், 1857 மிமீ உயரமும் கொண்ட இந்த பிரம்மாண்ட எஸ்யுவி, கம்பீரமான முன்பக்க அமைப்பையும் அகலமான பக்கவாட்டு பேனல்களையும் கொண்டிருப்பதால், காரின் பெரும்பகுதி பெயிண்டால் சூழப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் தேர்வு செய்யும் கலரே இந்த காரின் தோற்றத்தை முழுமையாக தீர்மானிக்கிறது.

    2026 அப்டேட்டில் இரண்டு புதிய ஆப்ஷன்களான கேலக்ஸி கிரே மற்றும் ஓசியானிக் உள்பட மொத்தம் ஐந்து வண்ணங்களை மஹிந்திரா வழங்குகிறது. ஒவ்வொரு கலரும் ஸ்கார்பியோ-N காருக்கு ஒவ்வொரு தனித்துவமான லுக்கை தருகிறது. இதில் உங்களுக்கு எந்த கலர் சரியாக இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

    வண்ணத்தை தேர்வு செய்வதற்கு முன் டிசைனை தெரிந்துகொள்வோம்

    ஒரு கார் எந்த அளவுக்கு அழகான வடிவமைப்பு கொண்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அதன் கலரும் எடுபடும். ஸ்கார்பியோ-N மாடலில் சில அழுத்தமான டிசைன் அம்சங்கள் உள்ளன. நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணத்திற்கு ஏற்ப இந்த அம்சங்கள் தனித்து தெரியும் விதம் மாறும்.

    • முன்பக்கம்: மஹிந்திராவின் ட்வின்-பீக்ஸ் லோகோவுடன் கூடிய வெர்டிகல் ஸ்லாட்ஸ் கிரில்லின் இருபுறமும் டூயல்-பேரல் ஹெட்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள ஃபாக் லேம்ப்களை சுற்றி தேளின் கொடுக்கைப் போன்ற எல்இடி டிஆர்எல்கள் அமைந்துள்ளன.

    2026 Mahindra Scorpio Facelift

    • பக்கவாட்டு பகுதி: எடுப்பான ஷோல்டர் லைன், அகலமான வீல் ஆர்ச்சுகள் மற்றும் ஜன்னல் ஓரத்தில் அமைந்திருக்கும் மெட்டாலிக் ஸ்கார்பியன்-டெயில் டிசைன் எலிமென்ட் ஆகியவை பக்கவாட்டிற்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன.

    2026 Mahindra Scorpio Facelift

    • பின்பக்கம்: உயரமான அடுக்கடுக்கான எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் பக்கவாட்டில் திறக்கும் டெயில்கேட் ஆகியவை இதன் கம்பீரத்தை கூட்டுகின்றன.

    2026 Mahindra Scorpio Facelift

    • 2026 புதுமை: Z8T மற்றும் Z8L வேரியண்ட்களில் புதிதாக ரீடிசைன் செய்யப்பட்ட 18 இன்ச் டயமண்ட்-கட் அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    2026 Mahindra Scorpio Facelift

    லைட் கலர்களை தேர்வு செய்யும்போது ஹெட்லேம்ப் ஹவுசிங், கிளாடிங் மற்றும் கிரில் ஸ்லாட்ஸ் போன்ற டார்க் டீட்டெய்ல்கள் தனியாக பளிச்சென தெரியும். அதுவே டார்க் கலர்களில் குரோம் பினிஷ் மற்றும் விளக்குகளின் வெளிச்சம் எடுப்பாக காட்சியளிக்கும். இதை மனதில் வைத்துக்கொண்டு கலரை தேர்வு செய்வது நல்லது.

    ஸ்கார்பியோ-N காரின் 5 அசத்தல் வண்ணங்கள்

    ஒவ்வொரு வண்ணமும் காரின் உரிமையாளரின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அவை ஒவ்வொன்றின் சிறப்புகளையும் பார்க்கலாம்.

    எவரெஸ்ட் ஒயிட்: எப்போதுமே ஏமாற்றாத கிளாசிக் சாய்ஸ்

    எஸ்யுவி கார்களில் வெள்ளை நிறம் எப்போதும் அதிகம் விற்பனையாகும் ஒரு கலராக இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. ஸ்கார்பியோ-N மாடலில் இந்த வெள்ளை நிறம், கருப்பு நிற கிளாடிங், டார்க் ஹெட்லேம்ப் மற்றும் கிரில் பகுதிகளை தனியாக எடுப்பாக காட்டுகிறது. இதனால் கார் பார்ப்பதற்கு இன்னும் அகலமாகவும் எடுப்பாகவும் தெரிகிறது. அத்துடன் இதில் தூசிகளோ அல்லது சிறிய கீறல்களோ அவ்வளவு எளிதில் கண்ணுக்குத் தெரியாது என்பதால் பராமரிப்பதும் மிக எளிது.

    2026 Mahindra Scorpio Facelift

    யாருக்கு ஏற்றது: கார் எப்போதும் அதிக மெனக்கெடல் இல்லாமல் சுத்தமாக காட்சியளிக்க வேண்டும், எக்காலத்துக்கும் ஏற்ற டிரெண்டியான லுக்கில் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சரியான தேர்வு.

    ஸ்டெல்த் பிளாக்: அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் மிரட்டல் லுக்

    ஸ்கார்பியோ-N காரின் அசாத்தியமான கம்பீரத்தை வெளிப்படுத்துவது இந்த பிளாக் கலர்தான். இதில் உள்ள குரோம் கிரில் ஸ்லாட்கள் அட்டகாசமாக தெரிவதுடன் இரவில் எல்இடி டிஆர்எல்கள் தகதகவென மின்னும் போது கார் இன்னமும் பிரம்மாண்டமாகத் தோன்றும். ஆனால், இதை பராமரிப்பது சற்று சவாலானது. சிறிய தூசிகள், தண்ணீர் கறை மற்றும் ஸ்விர்ல் மார்க்குகள் இந்த கருப்பு நிறத்தில் உடனே அப்பட்டமாக தெரிந்துவிடும்.

    2026 Mahindra Scorpio Facelift

    யாருக்கு ஏற்றது: சாலையில் செல்லும்போது காரின் கம்பீரம் அனல் பறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காரை அடிக்கடி கழுவி பளபளப்பாக பார்த்துக்கொள்ள தயங்காதவர்கள் தாராளமாக இதைத் தேர்ந்தெடுக்கலாம்.

    டீப் ஃபாரஸ்ட்: சாகச விரும்பிகளின் ஆப்ஷன்

    இந்த அடர் பச்சை நிறம் எப்போதுமே ஆஃப்-ரோடு வாகனங்களுக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒன்று. அது ஸ்கார்பியோ-N காரின் முரட்டுத்தனமான ஆஃப்-ரோடு பாணிக்கு பக்காவாக செட் ஆகிறது. மலைப்பாதைகளிலும் மண் சாலைகளிலும் பயணிக்கும்போது இந்த நிறம் அந்த சூழலோடு மிக இயல்பாக ஒன்றிப்போவதுடன், நகரத்து பார்க்கிங்கில் நின்றாலும் தேவையில்லாத ஆர்ப்பாட்டம் இல்லாமல் ராயலாக காட்சியளிக்கும்.

    2026 Mahindra Scorpio Facelift

    யாருக்கு ஏற்றது: வார இறுதி நாட்களில் ஆஃப்-ரோடிங், மலைப்பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை விரும்புபவர்களுக்கு இந்த நிறம் சிறந்த தேர்வாக இருக்கும்.

    கேலக்ஸி கிரே (புதியது): நவீனமும் சமநிலையும் கொண்ட மாடர்ன் சாய்ஸ்

    2026 அப்டேட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிறம் இது. இது ஸ்கார்பியோ-N காரின் பாடி லைன்களையும் மேற்பரப்புகளையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. பராமரிப்பை பொறுத்தவரை, கருப்பு நிறத்தை விட இதில் அழுக்கு அதிகம் தெரியாது; வெள்ளை நிறம் போல வழக்கமானதாகவும் இல்லாமல் நவீன கார்ப்பரேட் லுக்கைத் தரும்.

    2026 Mahindra Scorpio Facelift

    யாருக்கு ஏற்றது: எளிதில் பராமரிக்கக்கூடிய அதேசமயம் மாடர்னான மற்றும் டீசண்டான லுக் வேண்டும் என்பவர்களுக்கு இது அட்டகாசமான சாய்ஸ்.

    ஓசியானிக் (புதியது): தனித்து நிற்கும் ஸ்பெஷல் ஷேட்

    ஓசியானிக் என்பது ஒரு அடர் நீல நிறமாகும். ஸ்கார்பியோ-N கலர் வரிசையிலேயே மிக போல்டான நிறம் இதுதான். வெயில் படும்போது காரின் வளைவு நெளிவுகளை பளீச்சென காட்டும் இந்த நிறம், வெளிச்சம் குறைவான நேரங்களில் கருப்பு நிறம் போலவே காட்சியளிக்கும். சாலையில் செல்லும் மற்ற கார்களில் இருந்து உங்கள் ஸ்கார்பியோ-N முற்றிலும் மாறுபட்டு தெரிய வேண்டும் என்றால் இதுவே சரியான சாய்ஸ்.

    2026 Mahindra Scorpio Facelift

    யாருக்கு ஏற்றது: லேட்டஸ்ட் கலர் வேண்டும் என ஆசைப்படுபவர்கள் மற்றும் சாலையில் காரை பலரும் உற்றுப் பார்க்க வேண்டும் என விரும்புபவர்கள் இதை தாராளமாக தேர்வு செய்யலாம்.

    நீங்கள் விரும்பும் கலர் உங்கள் வேரியண்ட்டில் கிடைக்கிறதா?

    ஒரு கலரைப் பார்த்ததும் பிடித்துப்போவது இயல்புதான். ஆனால் முன்பதிவு செய்வதற்கு முன், நீங்கள் வாங்க நினைக்கும் வேரியண்ட்டில் அந்த கலர் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மஹிந்திரா இதில் ஒரு எளிய முறையைக் கையாண்டுள்ளது. மூன்று கிளாசிக் கலர்கள் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கும் நிலையில், புதிய இரண்டு வண்ணங்கள் Z6 வேரியண்ட்டில் இருந்து மட்டுமே கிடைக்கின்றன.

    கலர்

    Z2

    Z4

    Z6

    Z8S

    Z8

    Z8T

    Z8L

    எவரெஸ்ட் ஒயிட்

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    ஸ்டெல்த் பிளாக்

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    டீப் ஃபாரஸ்ட்

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    கேலக்ஸி கிரே

    ❌

    ❌

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    ஓசியானிக்

    ❌

    ❌

    ✅

    ✅

    ✅

    ✅

    ✅

    இதன் மூலம் தெரிந்துகொள்ள வேண்டியவை:

    • Z2 மற்றும் Z4: எவரெஸ்ட் ஒயிட், ஸ்டெல்த் பிளாக் மற்றும் டீப் ஃபாரஸ்ட் ஆகிய மூன்று வண்ணங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். கிளாசிக், மாஸ் மற்றும் சாகச லுக் என மூன்றுமே இதில் அடக்கம் என்பதால் பட்ஜெட் வேரியண்ட்களிலேயே அருமையான ஆப்ஷன்கள் உள்ளன.

    • Z6 மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியண்ட்கள்: புதிய கேலக்ஸி கிரே மற்றும் ஓசியானிக் உள்பட ஐந்து வண்ணங்களுமே இதில் கிடைக்கும். எனவே இந்த வேரியண்ட்களில் முழு சுதந்திரத்துடன் உங்கள் ரசனைக்கேற்ப கலரை தேர்வு செய்யலாம்.

    பட்ஜெட் விலையில் காரை திட்டமிட்டு, கிளாசிக் வண்ணங்களை விரும்பினால் Z2 வேரியண்ட்டே போதுமானது. அதுவே புதிய கேலக்ஸி கிரே அல்லது ஓசியானிக் கலர் வேண்டும் என்றால் Z6 அல்லது Z8S போன்ற நல்ல வசதிகள் நிறைந்த வேரியண்ட்களுக்கு செல்ல வேண்டும்.

    வேரியண்ட்டிற்கு ஏற்ப மாறும் காரின் எக்ஸ்டீரியர் லுக்

    ஒரே கலர் பெயிண்ட்டாக இருந்தாலும் வேரியண்ட்டிற்கு ஏற்ப அதன் வெளிப்புற தோற்ற அமைப்புகள் மாறுபடுவதால், கார் தரும் லுக் முற்றிலும் மாறுபடும். உதாரணமாக கருப்பு நிற Z2 வேரியண்ட்டும், கருப்பு நிற Z8L வேரியண்ட்டும் ஒரே பெயிண்ட் என்றாலும் இரண்டையும் பார்க்கும்போது ஒரே மாதிரியாக இருக்காது.

    டிசைன் எலமெண்ட்

    Z2

    Z4

    Z6

    Z8S

    Z8

    Z8T

    Z8L

    கிரில் ஃபினிஷ்

    பிளாக

    சில்வர்

    சில்வர்

    குரோம்

    குரோம்

    குரோம்

    குரோம்

    ஹெட்லேம்ப்கள்

    ஹாலோஜன்

    ஹாலோஜன்

    ஹாலோஜன்

    LED புரொஜெக்டர்

    LED புரொஜெக்டர்

    LED புரொஜெக்டர்

    LED புரொஜெக்டர்

    வீல்கள்

    17 இன்ச் ஸ்டீல்

    கவர்களுடன் 17 இன்ச் ஸ்டீல்

    கவர்களுடன் 17 இன்ச் ஸ்டீல்

    17 -இன்ச் அலாய்

    17 -இன்ச் அலாய்

    18 இன்ச் டயமண்ட்-கட் அலாய்

    18 இன்ச் டயமண்ட்-கட் அலாய்

    குரோம் டோர் ஹேண்டில்கள்

    ❌

    ❌

    ❌

    ❌

    ✅

    ✅

    ✅

    சீக்வென்ஷியல் எல்இடி இண்டிகேட்டர்கள்

    ❌

    ❌

    ❌

    ✅

    ✅

    ✅

    ✅

    Z8S வேரியண்ட்டில் இருந்து குரோம் கிரில், எல்இடி புரொஜெக்டர்கள் மற்றும் அலாய் வீல்கள் போன்றவை கூடுதல் பிரீமியம் காண்ட்ராஸ்ட் லுக்கைத் தருகின்றன. இது ஸ்டெல்த் பிளாக், ஓசியானிக் மற்றும் டீப் ஃபாரஸ்ட் போன்ற அடர் வண்ணங்களுக்கு அட்டகாசமாக பொருந்துகிறது. அதேநேரம் ஆரம்ப நிலை வேரியண்ட்களின் பிளாக் மற்றும் சில்வர் பாகங்கள், எவரெஸ்ட் ஒயிட் போன்ற வெளிர் நிறங்களுக்கு மிகச் சிறப்பாக செட் ஆகின்றன.

    வெளிப்புற கலருக்கு ஏற்ற கேபின் இன்டீரியர்

    காரின் வெளிப்புற பெயிண்ட்டை விட நாம் அதிக நேரம் செலவழிப்பது காரின் உள்ளேதான். எனவே வெளிப்புற கலரும் உட்புற கேபினும் எந்த அளவுக்கு ஒன்றிப்போகிறது என்பதை பார்ப்பதும் மிக அவசியம். வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் போது கார் அழகாக தெரிவது மட்டுமல்லாமல், கதவை திறந்து உள்ளே நுழையும் ஒவ்வொரு முறையும் அது தரும் உணர்வும் முக்கியமானது.

    ஸ்கார்பியோ-N காரில் இதை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். பேஸ் வேரியண்ட்டில் இருந்தே பிளாக் மற்றும் டான்-பிரவுன் கலர் காம்பினேஷனில் கேபின் வருகிறது. இது ஒரு கதகதப்பான, கிளாஸியான உணர்வைத் தருவதுடன் காரின் அனைத்து வெளிப்புற வண்ணங்களுக்கும் இயல்பாகவே பொருந்துகிறது. இதனால் என்ட்ரி லெவல் மாடலில் ஏறும்போது கூட ஒரு பிரீமியம் அனுபவம் கிடைக்கிறது.

    Z8S வேரியண்ட்டில் இருந்து கேபின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. காபி-பிளாக் லெதரைட் அப்ஹோல்ஸ்டரி சீட்கள், லெதர் சுற்றப்பட்ட டேஷ்போர்டு மற்றும் மெட்டல் பினிஷ் டிரிம்கள் ஆகியவை கேபினுக்கு ஆடம்பர லேஅவுட்டை வழங்குகின்றன. குடும்பத்துடன் டின்னர் செல்லும்போது எவ்வளவு அழகாக இருக்கிறதோ அதேபோல நீண்ட தூர பயணங்களுக்குப் பிறகும் இது மெருகேறித் தெரியும். மேலும் குழந்தைகளுடன் செல்லும்போது ஸ்நாக்ஸ் கொட்டினாலும் இந்த லெதரைட் சீட்களை மிக எளிதாக துடைத்து சுத்தம் செய்துவிடலாம்.

    கேபின் அனுபவத்தில் வெளிச்சமும் பெரிய பங்கு வகிக்கிறது. Z4 வேரியண்ட்டில் இருந்து சிங்கிள்-பேன் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. அதேசமயம் Z8L வேரியண்ட்டில் உள்ள மஹிந்திராவின் பனோரமிக் ஸ்கைரூஃப், கேபினுக்குள் அதிக இயற்கை வெளிச்சத்தை கொண்டு வந்து உட்புற அமைப்பை மிக பிரம்மாண்டமாகவும் தாராளமாகவும் உணர வைக்கிறது.

    2026 Mahindra Scorpio Facelift

    ஒவ்வொரு வெளிப்புற வண்ணமும் கேபினுடன் எவ்வாறு இணைகிறது என்பதை பார்ப்போம்:

    • எவரெஸ்ட் ஒயிட்: காரின் வெளிப்புறத்திற்கும் உட்புறத்திற்கும் இடையே அற்புதமான காண்ட்ராஸ்ட்டை உருவாக்குகிறது. கதவை திறந்தவுடன் வெளியே இருக்கும் வெள்ளை நிறத்திற்கும் உள்ளே இருக்கும் டார்க் இன்டீரியருக்கும் இடையே உள்ள வித்தியாசம் கேபினை உடனே வரவேற்கும் உணர்வைத் தரும்.

    • ஸ்டெல்த் பிளாக்: உள்ளேயும் வெளியேயும் ஒரே சீரான டார்க் லுக் கிடைக்கிறது. உள்ளே இருக்கும் மெல்லிய பிரவுன் டோன்கள் தேவையான அளவுக்கு சரியான காண்ட்ராஸ்ட்டை கொடுக்கின்றன.

    • டீப் ஃபாரஸ்ட்: இந்த அடர் பச்சை நிறமும், கேபினின் பிரவுன் டோன்களும் அருமையாக பொருந்துகின்றன. இது ஒரு இயற்கையான, கரடுமுரடான உணர்வைத் தந்து வார இறுதி அவுட்டிங்குகளுக்கு ஏற்ற அனுபவத்தை வழங்குகிறது.

    • கேலக்ஸி கிரே: மாடர்னான மற்றும் சமநிலையான காம்பினேஷன். காரின் வெளிப்புற கிரே நிறம் உள்ளே இருக்கும் கேபினை தனியாக தூக்கி காட்டுவதுடன், ஒட்டுமொத்த காருக்கும் ஒரு நேர்த்தியான சிட்டி லுக்கை தருகிறது.

    • ஓசியானிக்: இந்த ஐந்து வண்ணங்களிலேயே மிகவும் ரிச்சான கலவை இதுதான். அடர் நீல நிறமும் உட்புற பிரவுன் டோன்களும் இணைந்து காருக்கு முழுமையான பிரீமியம் அனுபவத்தை தருகின்றன.

    நீங்கள் எந்த கலரை தேர்வு செய்தாலும், ஸ்கார்பியோ-N காரின் கேபின் அதற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு பிடித்த வெளிப்புற நிறத்தை தேர்ந்தெடுக்கும்போதே, அதற்கு இணையான சிறந்த இன்டீரியர் அமைப்பும் கிடைத்துவிடும்.

    முடிவு செய்வதற்கு முன் உங்களிடம் கேட்க வேண்டிய 5 கேள்விகள்

    இன்னமும் இரண்டு கலர்களுக்கு இடையே குழப்பமாக இருக்கிறதா? இந்த எளிய கேள்விகள் உங்கள் தேர்வை எளிதாக்கும்:

    • காரை எங்கே அதிகம் ஓட்டப் போகிறீர்கள்? தூசியான சாலைகள் மற்றும் மண் பாதைகளில் அடிக்கடி ஓட்டுபவர் என்றால் எவரெஸ்ட் ஒயிட் மற்றும் கேலக்ஸி கிரே ஆகியவை அழுக்கை எளிதில் காட்டிக்கொடுக்காது.

    • காரை பராமரிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும்? ஸ்டெல்த் பிளாக் மற்றும் ஓசியானிக் ஆகியவை பளபளப்பாக இருக்கும்போது பிரமிக்க வைக்கும். ஆனால் நீர் கறைகளும் கீறல்களும் சட்டென தெரிந்துவிடும் என்பதால் தொடர் பராமரிப்பு தேவை.

    • உங்கள் ஊரில் வெயில் எப்படி இருக்கும்? வெளிர் நிறங்கள் வெப்பத்தை குறைவாகவே ஈர்க்கும் என்பதால் இந்திய கோடை காலங்களுக்கு வெள்ளை மற்றும் கிரே நிறங்கள் உதவியாக இருக்கும்.

    • எந்த வேரியண்ட்டை வாங்கப் போகிறீர்கள்? புதிய கேலக்ஸி கிரே மற்றும் ஓசியானிக் வண்ணங்கள் Z6 வேரியண்ட்டில் இருந்து மட்டுமே கிடைக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

    • உங்கள் கார் எந்த அளவுக்கு கவனத்தை ஈர்க்க வேண்டும்? ஓசியானிக் மற்றும் டீப் ஃபாரஸ்ட் ஆகியவை கூட்டத்தில் தனியாக தெரியும். அதேநேரம் எவரெஸ்ட் ஒயிட் மற்றும் கேலக்ஸி கிரே ஆகியவை டீசண்டான அமைதியான லுக்கை தரும்.

    கார்தேக்கோவின் கருத்து...

    ஸ்கார்பியோ-N காரின் கம்பீரமான பாடி ஸ்டைல் மற்றும் ரோடு பிரசன்ஸ் எப்போதும் அதன் மிகப்பெரிய பலமாகும். இதன் உயரமான பாக்ஸி எஸ்யுவி வடிவமைப்பு, அகலமான ஷோல்டர்கள் மற்றும் அசாத்தியமான விகிதங்கள் எந்த சாலையிலும் இதை உடனடியாக அடையாளம் காண வைக்கின்றன. 2026 அப்டேட்டில், இந்த சூப்பர் டிசைனை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த பாணியில் வெளிப்படுத்த மஹிந்திரா கூடுதல் வாய்ப்புகளை தந்துள்ளது.

    புதிய இரண்டு வண்ணங்கள் இந்த மாடலுக்கு கூடுதல் புத்துணர்ச்சியை தந்துள்ளன. கேலக்ஸி கிரே நிறம் நவீனமாகவும், காரின் பாடி லைன்களை நகர்ப்புற பாணியில் அழகாகவும் காட்டுகிறது. ஓசியானிக் நிறமோ ஸ்கார்பியோ-N வரலாற்றிலேயே மிகவும் போல்டான வண்ணமாக அமைந்துள்ளது. வெளிச்சத்திற்கு ஏற்ப நிறம் மாறும் இந்த அடர் நீல நிறம், காரை ஓட்டும் அனுபவத்தைப் போலவே அதன் லுக்கிலும் அனல் பறக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கானது.

    வழக்கமான எவரெஸ்ட் ஒயிட் எப்போதுமே ஒரு தூய்மையான கிளாசிக் லுக்கைத் தருகிறது. ஸ்டெல்த் பிளாக் அதன் ஆளுமைமிக்க கம்பீரத்தை உச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது. டீப் ஃபாரஸ்ட் அதன் சாகச பயண குணத்திற்கு நியாயம் சேர்க்கிறது. எந்த கலரை தேர்வு செய்தாலும் ஸ்கார்பியோ-N அதை மிக நேர்த்தியாக தாங்கி நிற்கிறது.

    இந்த கலர் பாலெட்டில் எதுவுமே தவறான தேர்வு கிடையாது. உங்கள் தனிப்பட்ட ரசனைக்கு எது பொருந்துகிறதோ அதுவே சிறந்த தேர்வு. அடக்கமான நேர்த்தி வேண்டுமா அல்லது செல்லும் இடமெல்லாம் உங்கள் கார் தனித்து தெரிய வேண்டுமா என்பதை மட்டும் முடிவு செய்துகொள்ளுங்கள்.

    வண்ணங்களை தேர்வு செய்ய மிகச்சிறந்த வழி அவற்றை நேரில் சென்று பார்ப்பதுதான். உங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா ஷோரூமுக்கு சென்று, உங்களுக்கு பிடித்த வண்ணங்களில் ஸ்கார்பியோ-N காரை இயற்கை வெளிச்சத்தில் சுற்றிப் பார்த்து சோதியுங்கள். அதைவிடச் சிறப்பாக, ஒரு டெஸ்ட் டிரைவ் எடுத்துப் பாருங்கள். காரின் வண்ணத்தை நேரில் பார்த்துவிட்டு, ரோட்டில் அதன் பவரை உணர்ந்துவிட்டால் உங்களுக்கான காரை நீங்கள் உடனடியாக தேர்வு செய்துவிடலாம்.

    was this article helpful ?

    Anonymous
    Anonymous

    Write your Comment on Mahindra ஸ்கார்பியோ என் இசட்2

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    ரிமோட் ஏசி ஆன்/ஆஃப்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience