ஒரே வருசத்துல ஹிட் அடிச்ச விக்டோரிஸ்... மாருதி களமிறக்கியுள்ள ‘ஆரம் எடிஷன்’ ஸ்பெஷல் என்ன?
விக்டோரிஸ் காரின் சாதனை படைத்த முதல் ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஆரம் எடிஷன் மாருதியின் வலுவான ஹைப்ரிட் பவர்டிரெய்னை காப்பர் மற்றும் குரோம் ஸ்டைல் உடன் சேர்க்கிறது.
- ஒரு கருத்தை எழுதுக

மாருதி சுஸூகி விக்டோரிஸ் கார் அறிமுகமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. போல்டான டிசைன், அதிநவீன கேபின் அம்சங்கள், தலைசிறந்த பாதுகாப்பு மற்றும் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான பவர்டிரெய்ன் தேர்வுகள் என அனைத்தையும் ஒரே காரில் தருவதாக உறுதியளித்து களமிறங்கிய இந்த மாடலை, இந்திய வாடிக்கையாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். விற்பனைக்கு வந்த முதல் பன்னிரண்டு மாதங்களிலேயே, இந்தியாவில் இதுவரை எந்தவொரு புதிய காரும் செய்திராத பிரம்மாண்ட விற்பனை சாதனைகளை நிகழ்த்தியதோடு, நாட்டின் மிக உயரிய ஆட்டோமொபைல் விருதுகளையும் விக்டோரிஸ் தட்டிச் சென்றுள்ளது.
இந்த வெற்றிகரமான முதல் ஆண்டைக் கொண்டாடும் வகையில், மாருதி சுஸூகி நிறுவனம் 'விக்டோரிஸ் ஆரம் எடிஷன்' என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்டில் மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் இந்த சிறப்பு பதிப்பில், ரூ.22,990 விலையில் பிரத்யேக காப்பர் மற்றும் க்ரோம் ஸ்டைலிங் கிட் வழங்கப்படுகிறது. இந்த காரை இமாலய வெற்றிபெறச் செய்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், புதிய காரை வாங்கத் திட்டமிட்டு வருபவர்களை ஈர்க்கும் வகையிலும் இந்த எடிஷனை மாருதி சுஸூகி களமிறக்கியுள்ளது. இந்த காரின் முழுமையான விபரங்களை விரிவாகப் பார்ப்போம்.
வரலாறு படைத்த அறிமுக ஆண்டு
இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் முதல் ஆண்டிலேயே இதுபோன்ற பிரம்மாண்ட சாதனைகளைப் படைத்த கார்கள் மிகக் குறைவு. பயணிகள் வாகனப் பிரிவில், களமிறங்கிய முதல் ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான புதிய மாடல் என்ற வரலாற்று சாதனையை விக்டோரிஸ் படைத்துள்ளது. அத்துடன், குறுகிய காலத்தில் 1 லட்சம் மற்றும் 1.5 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை மிகவேகமாக எட்டிய பயணிகள் வாகனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த மூன்று சாதனைகளையும் சர்வதேச ஆட்டோமொபைல் ஆராய்ச்சி நிறுவனமான JATO Dynamics அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
விற்பனை மட்டுமின்றி விருதுகளையும் இந்த கார் அள்ளிக் குவித்துள்ளது. மதிப்புமிக்க ICOTY 2026 விருதை வென்ற விக்டோரிஸ் நாட்டின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் இதழ்கள் மற்றும் நடுவர் குழுக்களின் 'கார் ஆஃப் தி இயர்' பட்டங்களையும் தட்டிச் சென்று, 2026-ஆம் ஆண்டின் அதிக விருதுகளை வென்ற காராக உருவெடுத்தது. இதுமட்டுமின்றி, Bharat NCAP மற்றும் Global NCAP ஆகிய இரண்டிலும் 5-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் மாருதி எஸ்யூவி என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் ஒரு தெளிவான எதார்த்தத்தை உணர்த்துகின்றன. வழக்கமான கார்களைத் தாண்டி கூடுதல் பிரீமியம் அனுபவத்தை விரும்புவதோடு, மாருதி சுஸூகியின் நம்பகத்தன்மையும் மனநிம்மதியும் வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வாக விக்டோரிஸ் மாறியுள்ளது.
"ஆரம்" என்ற பெயரின் பின்னணி
லத்தீன் மொழியில் 'ஆரம்' என்றால் தங்கம் என்று பொருள். பொன்னான அறிமுக ஆண்டைக் கொண்டாடும் இந்த காருக்கு இதைவிடப் பொருத்தமான பெயர் இருக்க முடியாது. ஆர்ப்பாட்டமில்லாத கம்பீரமான தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட விக்டோரிஸ் பிராண்டின் அடிப்படை டிசைன் தத்துவத்தை இந்த மாடலும் முழுமையாகப் பிரதிபலிக்கிறது. ஏற்கனவே உள்ள டிசைனை மாற்றியமைக்காமல், சில நேர்த்தியான கூடுதல் வேலைப்பாடுகள் மூலம் இந்த காரை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது இந்த ஆரம் எடிஷன்.
ஆரம் கிட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்னென்ன?
விக்டோரிஸ் ஆரம் எடிஷனில், காரின் பிரத்யேக தோற்றத்தை மெருகேற்றுவதோடு அன்றாட பயன்பாட்டுக்கும் உதவும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 ஜெனியூன் அக்சஸரீஸ்கள் வழங்கப்படுகின்றன. இதில் 10 அம்சங்கள் எக்ஸ்டீரியரிலும், 3 அம்சங்கள் இன்டீரியரிலும் இடம்பெற்றுள்ளன.
| வகை | ஆக்ஸசரீஸ்கள் |
விலை (ரூ) |
|
| எக்ஸ்டீரியர் |
|
ரூ. 3,125 |
|
| எக்ஸ்டீரியர் |
|
ரூ. 3,217 |
|
| எக்ஸ்டீரியர் |
|
ரூ. 4,692 |
|
| எக்ஸ்டீரியர் |
|
ரூ. 636 |
|
| எக்ஸ்டீரியர் |
|
ரூ. 728 |
|
| எக்ஸ்டீரியர் |
|
ரூ. 1,097 |
|
| எக்ஸ்டீரியர் |
|
ரூ. 1,466 |
|
| எக்ஸ்டீரியர் |
|
ரூ. 636 |
|
| எக்ஸ்டீரியர் |
|
ரூ. 3,850 |
|
| எக்ஸ்டீரியர் |
|
ரூ. 2,850 |
|
| இன்டீரியர் |
|
ரூ. 3,450 |
|
| இன்டீரியர் |
|
ரூ. 2,290 |
|
| இன்டீரியர் |
|
ரூ. 1,281 |
|
| தனித்தனியாக வாங்கினால் மொத்த விலை |
ரூ. 29,318 |
||
| ஆரம் கிட் விலை: |
ரூ. 22,990 |
||
| வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சேமிப்பு |
ரூ. 6,328 |
முன், பின் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள காப்பர் இன்சர்ட் கொண்ட கிரே ஸ்கிட் பிளேட்கள், இந்த காரின் தோற்றத்தை தனித்து அடையாளப்படுத்துகின்றன. வீல் ஆர்ச்சில் உள்ள காப்பர் கார்னிஷ்களும் இந்த நிற அமைப்பை முழுமையாக்குகின்றன. முன்பக்க கிரில், பம்பர்களின் மேல் பகுதி, ஃபெண்டர்கள் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ள க்ரோம் வேலைப்பாடுகள் காருக்கு கூடுதல் மினுமினுப்பைத் தருகின்றன. டார்க் க்ரோம் இன்சர்ட் கொண்ட டோர் வைசர்கள், மழைக் காலங்களில் பயன்படுவதோடு அழகுக்கும் வலுசேர்க்கின்றன.
மீதமுள்ள மூன்று உதிரிபாகங்கள் கேபின் உட்பகுதியைப் பாதுகாக்க உதவுகின்றன. ஆல்-வெதர் 3D ஃப்ளோர் மேட்ஸ் சேறு மற்றும் தண்ணீரில் இருந்து உட்பகுதியைப் பாதுகாக்கிறது. 3D பூட் மேட் லக்கேஜ் வைக்கும் இடத்தை சுத்தமாக வைக்கிறது.அத்துடன் கொடுக்கப்பட்டுள்ள ரியர் ட்ரங்க் சில் கார்டு, பொருட்களை ஏற்றி இறக்கும்போது காரின் பெயிண்ட் கீறல் விழாமல் தடுக்கிறது. இந்த பாகங்கள் அனைத்தும் காரின் உட்புறத்தை எப்போதும் புத்தம் புதிய தோற்றத்துடன் பராமரிக்க உதவுகின்றன.
இந்த கிட்டின் மிகப்பெரிய சிறப்பம்சமே இதன் விலைதான். இந்த 13 அக்சஸரீஸ்களையும் தனித்தனியாக வாங்கினால் ரூ.29,318 செலவாகும். ஆனால் ஆரம் கிட் தொகுப்பாக வாங்கும்போது ரூ.22,990 மட்டுமே செலுத்தினால் போதும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.6,328 வரை, அதாவது சுமார் 21.6 சதவீத தொகை மிச்சமாகிறது.
டிசைன்: காப்பர் மற்றும் க்ரோம் நேர்த்தி
விக்டோரிஸ் மாடல் 4,360 மிமீ நீளம், 1,795 மிமீ அகலம், 1,655 மிமீ உயரம் மற்றும் 2,600 மிமீ வீல்பேஸ் அளவைக் கொண்டுள்ளது.
| அளாவுகள் |
விக்டோரிஸ் |
| நீளம் |
4,360 mm |
| அகலம் |
1,795 mm |
| உயரம் | 1,655 mm |
| வீல்பேஸ் |
2,600 mm |
| டேர்னிங் ரேடியஸ் |
5.4 m |
| எரிபொருள் டேங்க் |
45 லிட் |
இந்த அளவுகள் காருக்கு கம்பீரமான சாலைப் பிரசன்னத்தைத் தருகின்றன. அதே சமயம், 5.4 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டிருப்பதால், நெரிசலான நகர வீதிகளிலும் இறுக்கமான பார்க்கிங் ஏரியாக்களிலும் காரை எளிதாகத் திருப்பி இயக்க முடிகிறது. இதிலுள்ள 45 லிட்டர் ஃப்யூயல் டேங்க், ஹைப்ரிட் என்ஜினின் அபார மைலேஜோடு இணைந்து நீண்ட தூரப் பயணங்களின் போது அடிக்கடி பெட்ரோல் பங்க் செல்ல வேண்டிய தேவையை வெகுவாகக் குறைக்கிறது.
மாருதி வரிசையிலேயே மிகக் கூர்மையான டிசைனைக் கொண்ட மாடலாக விக்டோரிஸ் விளங்குகிறது. கம்பீரமான மஸ்குலர் பானட்டின் கீழ், போல்டான எல்இடி DRL மற்றும் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டுத் தோற்றத்தில் 17-இன்ச் ஏரோ-கட் அலாய் வீல்கள் காரை அலங்கரிக்கின்றன. பின்பக்கத்தில் அகலமாக நீளும் எல்இடி டெயில் லேம்ப், சாலையில் செல்லும்போது காரை எளிதில் அடையாளம் காணும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த அடிப்படையைக் கொண்டு, ஆரம் எடிஷனுக்கென பிரத்யேக ஸ்டைலிங் கிட் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் முன் பம்பர், பக்கவாட்டுப் பகுதி மற்றும் பின் பம்பர் வரை தொடரும் காப்பர் இன்சர்ட் கொண்ட கிரே ஸ்கிட் பிளேட்கள் காரை அனைத்து கோணங்களிலும் பளிச்செனக் காட்டுகின்றன.


வீல் ஆர்ச்சில் உள்ள காப்பர் வேலைப்பாடுகள் ஒட்டுமொத்த டிசைனையும் அழகாக இணைக்கின்றன. மிஸ்டிக் கிரீன் மற்றும் ப்ளூயிஷ் பிளாக் ஆகிய அறிமுக நிறங்களில் இந்த காப்பர் டீட்டெய்லிங் பார்க்கும்போது காருக்கு மிகவும் தனித்துவமான, பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.

காப்பர் நிறத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் முன்பக்க கிரில், பம்பர்களின் மேல் பகுதிகள், ஃபெண்டர்கள் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் க்ரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைக்கால பயன்பாட்டிற்கான டார்க் க்ரோம் டோர் வைசர்கள் எக்ஸ்டீரியர் வேலைப்பாடுகளை முழுமையாக்குகின்றன. உட்புறத்தில் சேர்க்கப்பட்டுள்ள 3D கேபின் மேட்கள், 3D பூட் மேட் மற்றும் ரியர் ட்ரங்க் சில் கார்டு ஆகியவை காரின் தரைப்பகுதி மற்றும் டிக்கியை எந்த சேதமும் இன்றி நீண்ட காலம் புதியது போலவே பராமரிக்க உதவுகின்றன. இது குடும்பத்துடன் பயணிப்போருக்கும் இந்திய மழைக்காலங்களில் அதிகம் கார் ஓட்டுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ள அம்சமாகும்.
இன்டீரியர்: உள்ளே கோல்டு, வெளியே காப்பர்
காரின் உள்ளே நுழைந்ததும் இந்த ஆரம் தீம் மிக இயல்பாகத் தொடர்வதைக் காண முடிகிறது. விக்டோரிஸ் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களில் ஏற்கனவே கோல்டு ஹைலைட்டுகள் கொண்ட ஆல்-பிளாக் கேபின் வழங்கப்பட்டுள்ளது. இது வெளிப்புறத்தில் உள்ள காப்பர் நிற வேலைப்பாடுகளுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது.
மாருதி இதுவரை தயாரித்ததிலேயே மிகச் சிறந்த கேபின்களில் இதுவும் ஒன்று. க்ளாஸ் பிளாக் பாகங்களுடன் கூடிய மூன்று அடுக்கு டேஷ்போர்டு டிசைன் காரின் உட்புறத்தைக் கவர்ச்சிகரமாக்குகிறது. லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் உள்ள சாஃப்ட்-டச் பேடிங் ஆகியவை கேபினின் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றன. அத்துடன் கொடுக்கப்பட்டுள்ள 64-கலர் ஆம்பியன்ட் லைட்டிங் வசதி, பயணிகளுக்குப் பிடித்தமான சூழலை உருவாக்க வழிசெய்கிறது.

இடவசதியும் இந்த காரின் முக்கிய பலங்களில் ஒன்றாகும். பின்னிருக்கை பயணிகளுக்குப் போதுமான லெக்ரூம் மற்றும் இந்த செக்மென்ட்டிலேயே சிறப்பான தொடைக்கான சப்போர்ட் கிடைக்கிறது. முன்பக்க பயணிகளுக்கு ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் தேவையான ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. மேலும், முன்னிருக்கை மற்றும் பின்னிருக்கை இரண்டிலுமே USB Type-C சார்ஜிங் போர்ட்கள் உள்ளதால், நீண்ட தூரப் பயணங்களின் போது சார்ஜருக்காக எவரும் சண்டையிட வேண்டியதில்லை.
டெக்னாலஜி: ஸ்மார்ட் கனெக்டிவிட்டி வசதிகள்
இன்றைய நவீன டிஜிட்டல் தலைமுறை வாடிக்கையாளர்களை மனதில் வைத்து, விக்டோரிஸில் அதிநவீன டெக்னாலஜி பேக்கேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் மையத்தில், மாருதி இதுவரை வழங்கியதிலேயே மிகப்பெரிய திரையான 10.1-இன்ச் SmartPlay Pro X டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay சப்போர்ட் கொண்ட இந்த சிஸ்டத்தில், உள்ளமைக்கப்பட்ட ஆப் ஸ்டோர் மூலம் 35-க்கும் மேற்பட்ட ஆப்களைப் பயன்படுத்தலாம். ஸ்டீயரிங் வீலில் இருந்து கைகளை எடுக்காமலேயே 40-க்கும் மேற்பட்ட வசதிகளைக் கட்டுப்படுத்த Alexa Auto வாய்ஸ் AI உதவுகிறது. ஆடியோவிற்காக வழங்கப்பட்டுள்ள 8-ஸ்பீக்கர் கொண்ட Dolby Atmos சப்போர்ட் உடனான Infinity by Harman மியூசிக் சிஸ்டம், காருக்குள் மிகச் சிறந்த இசை அனுபவத்தை வழங்குகிறது.

டிரைவருக்கான தகவல்களைத் தெளிவாகக் காட்டும் வகையில் பிரத்யேக லே-அவுட்களை மாற்றியமைக்கக்கூடிய 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிஸ்பிளே மற்றும் ஹெட்-அப் டிஸ்பிளே ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. காரை விட்டு தூரத்தில் இருக்கும்போதும் அதனுடன் இணைப்பில் இருக்க e-Call வசதியுடன் கூடிய புதிய தலைமுறை Suzuki Connect உதவுகிறது. ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மூலமாகவே காரின் கதவுகளை லாக் செய்யவோ அன்லாக் செய்யவோ முடியும். ஹசார்ட் விளக்குகளை இயக்கலாம். அத்துடன் பேட்டரி மற்றும் ஹெட்லைட் நிலையைத் தெரிந்துகொள்ளலாம். கேபினில் உள்ள காற்றின் தரத்தை PM2.5 சென்சார் மூலம் கண்காணிப்பதுடன், டிரைவிங் ஸ்கோரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளும் லீடர்போர்டு வசதியையும் இது வழங்குகிறது.

வசதியும் சொகுசும்
அன்றாட பயணங்களை மிக எளிதாக்கும் பல சொகுசு அம்சங்களை விக்டோரிஸ் கொண்டுள்ளது. கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட், பின்னிருக்கைக்கான ஏசி வென்ட்கள் கொண்ட ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஹோல்டு வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை இதில் உள்ளன. ஸ்மார்ட்போன் சூடாவதைத் தடுக்கும் கூல்டு வயர்லெஸ் சார்ஜர் மற்றும் கைகளில் லக்கேஜ் இருக்கும்போது காலசைவிலேயே திறக்கும் பவர்டு டெயில்கேட் ஆகியவை காரின் பயன்பாட்டை எளிதாக்குகின்றன. காற்றோட்டமான வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, ஆட்டோ-ஃபோல்டிங் ORVM மற்றும் கேபினுக்குள் வெளிச்சத்தை அள்ளித்தரும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை சொகுசு அனுபவத்தை இரட்டிப்பாக்குகின்றன.

காரின் சஸ்பென்ஷன் அமைப்பு இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. கரடுமுரடான பள்ளங்களையும் பழுதடைந்த சாலைகளையும் சஸ்பென்ஷன் எளிதாகச் சமாளிப்பதால், நகர்ப்புற நெரிசலிலும் சரி, அதிவேக நெடுஞ்சாலைப் பயணங்களிலும் சரி, சவாரி மிகவும் மென்மையாகவும் அலுப்பின்றியும் அமைகிறது.
பெர்ஃபாமன்ஸ்: ஸ்ட்ராங் ஹைப்ரிட் என்ஜின்
விக்டோரிஸ் மாடலின் அதிநவீன பவர்டிரெய்னான 1.5-லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜினில் மட்டுமே இந்த ஆரம் எடிஷன் கிடைக்கிறது. 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினுடன் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக் இணைந்து, மொத்தமாக 116 PS பவர் மற்றும் 141 Nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த ஆற்றலானது ஸ்மூத்தான eCVT கியர்பாக்ஸ் மூலம் முன்பக்க வீல்களுக்கு அனுப்பப்படுகிறது. பயணத்தின் தன்மைக்கேற்ப மாற்றிக்கொள்ள Eco, Normal மற்றும் Power ஆகிய டிரைவ் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
| விவரங்கள் |
விக்டோரிஸ் Strong Hybrid |
|
| எஞ்சின் |
|
|
|
116 PS / 141 Nm |
|
| டிரான்ஸ்மிஷன் |
eCVT |
|
|
Eco, Normal, Power |
|
|
28.65 கிமீ/லி |
இது செல்ஃப்-சார்ஜிங் ஹைப்ரிட் அமைப்பு என்பதால், காரை சார்ஜிங் பிளக்கில் செருக வேண்டிய அவசியமில்லை. வழக்கம்போல பெட்ரோல் நிரப்பினாலே போதுமானது. நகர்ப்புற குறைந்த வேகங்களில், இந்த கார் ஒரு சொட்டு பெட்ரோல் கூட செலவழிக்காமல் முழுமையான எலக்ட்ரிக் முறையில் சத்தமின்றி இயங்கும். முந்திச் செல்லும்போது எலக்ட்ரிக் மோட்டார் உடனடி டார்க்கை வழங்கி சீரான பவர் டெலிவரியைத் தருகிறது. கியர்களை மாற்றத் தேவையில்லாத eCVT கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதால், குலுங்கல்கள் ஏதுமின்றி டிராபிக் நெரிசலிலும் காரை சோர்வின்றி இயக்க முடிகிறது.

இந்த என்ஜினின் மிகப்பெரிய பலமே லிட்டருக்கு 28.65 கிமீ மைலேஜ் தருவதாகக் கூறப்படுவதுதான். இது பெட்ரோல் செலவை வெகுவாகக் குறைப்பதுடன், நீண்ட தூரப் பயணங்களை எந்தவித தயக்கமுமின்றி மேற்கொள்ள வழிவகை செய்கிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, சார்ஜிங் தீர்ந்துவிடுமோ என்ற பதற்றம் ஏதுமின்றி குறைவான கார்பன் உமிழ்வுடன் பயணிக்க இது சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
பாதுகாப்பு: 5-ஸ்டார் தரம்
தனது பிரிவிலேயே மிக பாதுகாப்பான எஸ்யூவிகளில் ஒன்றாக விளங்கும் விக்டோரிஸின் அனைத்து பிரதான பாதுகாப்பு அம்சங்களும் இந்த ஆரம் எடிஷனிலும் தொடர்கின்றன. ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ABS, EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர்வியூ கேமரா மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM ஆகியவை கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. 11 வியூக்கள் கொண்ட 360-டிகிரி HD கேமரா மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டர் வசதியானது முன்பக்க பார்க்கிங் சென்சார்களுடன் இணைந்து செயல்படுவதால், குறுகிய இடைவெளிகளிலும் காரை எளிதாக பார்க் செய்ய முடிகிறது.

காரின் கட்டுமானத்திற்கு அதிநவீன ஹை-ஸ்ட்ரென்த் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு உருவான Suzuki TECT பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வலுவான கட்டமைப்பே, Bharat NCAP மற்றும் Global NCAP ஆகிய இரண்டு கிராஷ் டெஸ்ட்டுகளிலும் இந்த கார் 5-ஸ்டார் மதிப்பீட்டைப் பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
பிராண்ட் அம்பாசிடர்: ஷாஹித் கபூர்
ஆரம் எடிஷனின் விளம்பரத் தூதராக இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான ஷாஹித் கபூரை மாருதி சுஸூகி தேர்வு செய்துள்ளது. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் புதுமைகளை விரும்பும் குணத்திற்காக அறியப்படும் அவர், விக்டோரிஸ் யாரை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ அந்த இளம் தலைமுறையினரை அடையாளப்படுத்துகிறார். எதிலும் சமரசம் செய்யாமல், ஸ்டைல் மற்றும் டெக்னாலஜி இரண்டையும் விரும்புவோரின் அடையாளமாக அவர் திகழ்கிறார்.
விக்டோரிஸ் ஆரம் எடிஷன் யாருக்கெல்லாம் ஏற்றது?
-
ஹேட்ச்பேக் அல்லது செடான் கார்களில் இருந்து முதன்முறையாக பிரீமியம் எஸ்யூவிக்கு மாற நினைக்கும், அதே சமயம் மாருதியின் சர்வீஸ் நம்பகத்தன்மையை விரும்பும் வாடிக்கையாளர்கள்.
-
டெக்னாலஜி, ஸ்டைல் மற்றும் கூட்டத்தில் தனித்துத் தெரியும் காரை விரும்பும் இளம் தலைமுறை வாகன ஓட்டிகள்.
-
ஸ்ட்ராங் ஹைப்ரிட் என்ஜினின் அபார மைலேஜை முழுமையாகப் பயன்படுத்த நினைக்கும் அதிக தூரம் பயணிப்பவர்கள்.
-
கூடுதல் ஸ்டைல் கொண்ட லிமிடெட் எடிஷன் காரையும், அதே சமயம் 5-ஸ்டார் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தையும் விரும்பும் குடும்பங்கள்.
-
ஏற்கனவே விக்டோரிஸ் காரை வாங்கத் திட்டமிட்டு அதற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த வாடிக்கையாளர்கள்
கார்தேக்கோவின் கருத்து...
பொதுவாக சிறப்பு பதிப்புகள் என்றாலே ஸ்டிக்கர்களையும் பேட்ஜ்களையும் மாற்றி வெளியிடுவார்கள் என்ற பிம்பம் உண்டு. ஆனால் விக்டோரிஸ் ஆரம் எடிஷன் அந்த வழக்கமான பாணியில் இல்லாமல் உண்மையான தரமான அப்கிரேடுகளைக் கொண்டுள்ளது. விற்பனை சாதனை மற்றும் விருதுகளை அள்ளிய அதன் முதல் ஆண்டின் வெற்றிக் கொண்டாட்டத்தை இது மிகச் சரியாகப் பிரதிபலிக்கிறது. இதிலுள்ள காப்பர் மற்றும் க்ரோம் கிட் காருக்கு மிதமிஞ்சிய அலங்காரமின்றி ஒரு கம்பீரமான பிரீமியம் தோற்றத்தைத் தருகிறது. கேபினில் உள்ள பாதுகாப்பு மேட்கள் நடைமுறை பயன்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, லிட்டருக்கு 28.65 கிமீ மைலேஜ் தரும் மிகச் சிறந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் என்ஜினில் இந்த ஆரம் எடிஷன் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5-ஸ்டார் பாதுகாப்பு, சிறப்பம்சங்கள் நிறைந்த கேபின் மற்றும் மாருதி சுஸூகியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை இந்த காரின் மதிப்பை மேலும் உயர்த்துகின்றன. புதிய விக்டோரிஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்கனவே இருந்திருந்தால், முதல் ஆண்டிலேயே இந்தியாவின் முதன்மை மாடலாக உருவெடுத்துள்ள இந்த எஸ்யூவியின் 'ஆரம் எடிஷன்' உங்களுக்கான சிறந்த தேர்வாக அமையும்.














