மைலேஜையும் பவரையும் அள்ளிக் கொடுக்கும்! இந்த தீபாவளிக்கு ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கும் டாப் 5 டீசல் SUV-கள்!
ஒரே விலையில் இயங்கும் பல்வேறு வகையான SUV -கள் பட்டியலில் மஹிந்திரா-வின் பெயரே ஆதிக்கம் செலுத்துகிறது.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்கள் வாசகர்களில் அதிர்ஷ்டசாலியான 50 பேரின் கார் வாங்கும் பயணத்தை எளிதாக்க நாங்கள் தயாராக உள்ளோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி, உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் எங்கள் குழுவினர் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்கள். |
தற்போது டீசல் கார்களின் எண்ணிக்கை சந்தையில் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. கடுமையான உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் DPF போன்ற சிக்கல்கள் இல்லாமல் டீசல் என்ஜின்களை உருவாக்குவது கார் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே பல முன்னணி நிறுவனங்கள் டீசல் மாடல்களின் உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டன. ஆனாலும் டீசல் வாகனங்களை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்குத் தெரியும்—குறிப்பாக அதிக தூரம் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு டீசல் என்ஜின்கள் தரும் பவர் மற்றும் மைலேஜ் இணைக்கு வேறு எதுவுமே ஈடாகாது.
வழக்கமான பயணங்களை விட தீபாவளி பண்டிகை காலத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஊர் சுற்றுவதற்கும் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும் காரின் பயன்பாடு நிச்சயம் அதிகமாகவே இருக்கும். எனவே இந்த தீபாவளிக்கு ரூ. 10 லட்சத்திற்குள் ஒரு சிறந்த டீசல் SUV வாங்கத் திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான டாப் 5 சாய்ஸ்கள் இதோ:
மஹிந்திரா பொலிரோ
| டீசல் வேரியண்ட் |
விலை (எக்ஸ்-ஷோரூம்) |
| B4 |
ரூ. 8.57 லட்சம் |
| B6 |
ரூ. 9.37 லட்சம் |
| B6 Opt |
ரூ. 9.69 லட்சம் |
| B8 |
ரூ. 9.99 லட்சம் |
மஹிந்திரா பொலேரோ என்பது மிகவும் பாரம்பரியமான லேடர்-ஃபிரேம் அமைப்பைக் கொண்ட ஒரு ரக்கட் டீசல் SUV. ஆடம்பர வசதிகளை விட கடினமான உழைப்புக்கு முக்கியத்துவம் தருவதால் தான் இந்தியாவில் ஆம்புலன்ஸ் முதல் போலீஸ் வாகனம் வரை பல துறைகளிலும் இது முதன்மை தேர்வாக வலம் வருகிறது. அந்த வகையில் இது ஒரு வழக்கமான குடும்பக் கார் கிடையாது.

ஆனால் கரடுமுரடான மோசமான சாலைகளில் அடித்து நொறுக்கி ஓட்டுவதற்கும், எங்கும் சிக்கிக் கொள்ளாமல் எவ்வித சேதாரத்தைப் பற்றியும் கவலைப்படாமல் பயணிப்பதற்கும் பொலேரோவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.
இதில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஹெவியான கிளட்ச், ஸ்டீயரிங் மற்றும் லாங் கியர் டிராவல் என அக்மார்க் பழைய கால டிரைவிங் அனுபவத்தை இது தருகிறது. இந்த என்ஜின் 76 PS பவரையும், 210 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் ரியர் வீல்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

இது ஒரு 7-சீட்டர் கார்; இதன் கடைசி வரிசையில் பக்கவாட்டு ஜம்ப் சீட்கள் உள்ளன. எனினும் இதில் சீட் பெல்ட்களோ அல்லது சொகுசு வசதிகளோ இல்லாததால், நெடுந்தூரப் பயணங்களின் போது இந்தப் பின் இருக்கைகளைத் தவிர்ப்பது நல்லது.
நவீன கார்களோடு ஒப்பிடும்போது இதில் ஆடம்பர வசதிகள் குறைவுதான். இருந்தாலும் மஹிந்திரா நிறுவனம் இதில் அறிமுகப்படுத்தியுள்ள போல்ட் எடிஷன் மூலமாக, கவர்ச்சிகரமான வெளிப்புற தோற்றம் மற்றும் பிரான்ஸ் லெதரெட் சீட்கள் போன்ற கூடுதல் அக்சஸெரீகள் கிடைக்கின்றன.
மஹிந்திரா பொலிரோ நியோ
| டீசல் வேரியண்ட் |
விலை (எக்ஸ்-ஷோரூம்) |
| N4 |
ரூ. 9.06 லட்சம் |
| N6 |
ரூ. 9.69 லட்சம் |
| N10 R |
ரூ. 10 லட்சம் |
பொலேரோவின் அதே முரட்டுத்தனமான மற்றும் நீடித்து உழைக்கும் குணத்துடன் கொஞ்சம் நவீனமும் ஸ்டைலும் கலந்த ஒரு பேக்கேஜ் வேண்டும் என்பவர்களுக்கான சிறந்த சாய்ஸ் தான் மஹிந்திரா பொலேரோ நியோ. இது ஐந்து வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டாலும் ரூ. 10 லட்சத்திற்குள் மூன்று வேரியண்ட்கள் மட்டுமே அடங்குகின்றன.

லேடர்-ஃபிரேம் பிளாட்ஃபார்மில் உருவான இந்த SUV காரில், மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட சக்திவாய்ந்த டீசல் என்ஜின் உள்ளது. வழக்கமான பொலேரோவை விட இதில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கூடுதல் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதனால் 100 PS பவர் மற்றும் 260 Nm டார்க் வெளிப்படுவதால் லோ RPM-லேயே நல்ல பஞ்சியான பிக்-அப் கிடைக்கிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள நவீன சஸ்பென்ஷன் செட்டப் கரடுமுரடான சாலைகளை எளிதாக சமாளிப்பதுடன் நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும்போது சிறந்த நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறது.

பொலேரோ நியோவிலும் மூன்றாவது வரிசையில் ஜம்ப் சீட்கள் கொண்ட 7-சீட்டர் அமைப்பே உள்ளது. கூடுதல் இருக்கைகள் தேவைப்பட்டால் ஒன்பது பேர் அமரக்கூடிய பொலேரோ நியோ பிளஸ் ஆப்ஷனும் உண்டு. ஆனால் அதன் விலை ரூ. 10 லட்சத்தைத் தாண்டிவிடும். இந்த பட்ஜெட்டுக்குள் குடும்பத் தேவைகளையும் சொகுசையும் பெரிய அளவில் விட்டுக் கொடுக்காமல் வாங்கக்கூடிய மிகச் சிறந்த ரக்கட் SUV இதுவேயாகும்.
டாடா நெக்ஸான்
| டீசல் வேரியண்ட் |
விலை (எக்ஸ்-ஷோரூம்) |
| Smart Plus MT |
ரூ. 9.27 லட்சம் |
| Smart Plus S MT |
ரூ. 9.57 லட்சம் |
| Pure Plus MT |
ரூ. 10 லட்சம் |
சப்-4m SUV பிரிவில் டர்போ-பெட்ரோல் என்ஜினுடன் சேர்த்து டீசல் என்ஜின் ஆப்ஷனையும் தொடர்ந்து வழங்கி வரும் ஒரு சில கார்களில் டாடாவின் நெக்ஸானும் ஒன்று. பொலேரோ மாடல்களைப் போல அல்லாமல இது முழுவதும் மாடர்ன் வசதிகள், கேபின் சொகுசு மற்றும் அசத்தலான ஸ்டைல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு சிட்டி SUV.

இதில் 115 PS பவர் மற்றும் 260 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ரூ. 10 லட்சத்திற்குள் மூன்று வேரியண்ட்கள் மட்டுமே கிடைக்கின்றன. இவை அனைத்துமே மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள் ஆகும். இதன் டீசல் ஆட்டோமேட்டிக் (AMT) வேரியண்ட்டான பியூர் பிளஸ் வாங்க வேண்டும் என்றால் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ. 10.87 லட்சம் வரை செலவிட வேண்டியிருக்கும்.

இந்தக் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் டீசல் வேரியண்ட்கள் குறைவாக இருந்தாலும், ஸ்மார்ட் பிளஸ், ஸ்மார்ட் பிளஸ் S மற்றும் பியூர் பிளஸ் ஆகிய மூன்றுமே சிறப்பான பலன்களைத் தருகின்றன. தேவையான பயன்பாட்டு வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு என அனைத்தும் சமவிகிதத்தில் இதில் கிடைக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட் பிளஸ் S வேரியண்ட்டில் உள்ள சன்ரூஃப் மூலமாக, தீபாவளி பண்டிகையின் போது ஊரின் அழகையும் விளக்கு அலங்காரங்களையும் குடும்பத்தினர் ரசித்து மகிழ முடியும்.
வாய்ஸ் அசிஸ்ட் கொண்ட பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் போன்ற பிரிமியம் வசதிகளை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் பட்ஜெட்டை அதிகப்படுத்த வேண்டும். என்றாலும் இந்த விலைக்கு நெக்ஸான் டீசல் மாடல்கள் அத்தியாவசிய தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து விடுகின்றன.
கியா சோனெட்
| டீசல் வேரியண்ட் |
விலை (எக்ஸ்-ஷோரூம்) |
| HTE (O) MT |
ரூ. 9.29 லட்சம் |
| HTE (O) AT |
ரூ. 10 லட்சம் |
| HTK (O) MT |
ரூ. 10 லட்சம் |
ரூ. 10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் டீசல் என்ஜினுடன் கிடைக்கும் மற்றொரு பிரபலமான சப்-4m SUV தான் கியா சோனெட். இதன் டாப்-எண்ட் டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 14.36 லட்சம் வரை சென்றாலும் நமது ரூ. 10 லட்சம் பட்ஜெட்டுக்குள் மூன்று வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

இன்ஜினைப் பொறுத்தவரை 115.5 PS பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் இதில் உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டாக வருகிறது. மேலும் நெக்ஸானின் AMT-யை விட மிக மென்மையாகவும் துல்லியமாகவும் இயங்கக்கூடிய டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் (AT) கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இதில் கிடைக்கிறது. சோனெட்டில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுகளும் உள்ளன.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஒட்டுமொத்தப் பட்டியலிலேயே ரூ. 10 லட்சத்திற்குள் கிடைக்கும் ஒரே ஆட்டோமேட்டிக் கார் HTE (O) டீசல் AT மட்டுமே. ஆனால் இதில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்கள் கிடையாது; மிக அடிப்படையான வசதிகள் மட்டுமே உள்ளன. அதே சமயம் இதே விலையில் கிடைக்கும் HTK (O) மேனுவல் வேரியண்ட்டில் இந்த வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே ஆட்டோமேட்டிக் தரும் டிரைவிங் எளிமை வேண்டுமா அல்லது கூடுதல் சொகுசு வசதிகள் வேண்டுமா என்பதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். இரண்டும் ஒன்றாக வேண்டும் என்றால் பட்ஜெட்டை சற்றே உயர்த்த வேண்டியிருக்கும்.
மஹிந்திரா XUV 3XO
| டீசல் வேரியண்ட் |
விலை (எக்ஸ்-ஷோரூம்) |
| MX2 MT |
ரூ. 9.36 லட்சம் |
நெக்ஸான் மற்றும் சோனெட் வரிசையில் டர்போ-பெட்ரோல் புதிதாக அறிமுகமான டர்போ-பெட்ரோல் வித் CNG மற்றும் டீசல் என பல என்ஜின் தேர்வுகளுடன் களமிறங்கும் ஒரு சப்-4m SUV தான் மஹிந்திரா XUV 3XO. ஆனாலும் ரூ. 10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் பட்ஜெட்டிற்குள் இதன் MX2 என்ற ஒற்றை டீசல் வேரியண்ட் மட்டுமே அடங்குகிறது.

இந்தப் பட்டியலில் உள்ள கார்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இதில் தான் உள்ளது; இது அதிகபட்சமாக 117 PS பவரையும், 300 Nm டார்க்கையும் வாரி வழங்குகிறது. இந்த MX2 வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கிறது. இதில் AMT ஆட்டோமேட்டிக் வேண்டும் என்றால், ரூ. 11.91 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையுள்ள REVX Edge (O) வேரியண்ட்டிற்கு செல்ல வேண்டும்.

MX2 வேரியண்ட்டிலேயே தினசரி பயன்பாட்டுக்குத் தேவையான பல முக்கிய அம்சங்கள், அட்ஜஸ்ட் செய்யும் வசதிகள் மற்றும் நான்கு ஸ்பீக்கர்களுடன் கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட நவீன வசதிகள் அனைத்தும் கிடைத்து விடுகின்றன. இதனால் பயன்பாட்டு ரீதியாக இதில் எந்தக் குறையும் இல்லை. அதே சமயம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தான் முக்கியம் என்பவர்கள், நெக்ஸான் அல்லது சோனெட்டைப் போல இல்லாமல், இதில் பட்ஜெட்டை கணிசமாக உயர்த்த வேண்டிய சூழல் உள்ளது.
கார்தேக்கோவின் கருத்து
இந்தத் தீபாவளிக்கு ரூ. 10 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய டாப் 5 மலிவு விலை டீசல் SUV கார்களின் பட்டியலில், மரபுசார்ந்த லேடர்-ஃபிரேம் மாடல்கள் முதல் நவீன கால ஃப்ரண்ட்-வீல் டிரைவ் கார்கள் வரை பலதரப்பட்ட தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.
பண்டிகை காலத்தில் பெரும்பாலும் குடும்பத்துடன் நகரப் பகுதிகளுக்குள்ளேயே பயணிக்கத் திட்டமிடுபவர்களுக்கு சோனெட், XUV 3XO மற்றும் நெக்ஸான் ஆகிய கார்கள் சொகுசான பயண அனுபவத்தைத் தரும். அதே சமயம் மொபைல் நெட்வொர்க் கூட சரியாகக் கிடைக்காத கரடுமுரடான கிராமப்புறச் சாலைகளிலும் மலைப் பாதைகளிலும் அசாத்திய திறனும் நீடித்த உழைப்பும் தான் முதன்மை என்றால், மஹிந்திராவின் முரட்டுத்தனமான பொலேரோ மாடல்களே சிறந்த தீர்வாக அமையும்.
எந்தக் காரைத் தேர்வு செய்வதாக இருந்தாலும் உங்கள் பகுதியில் கிடைக்கும் தள்ளுபடி சலுகைகள், ஆன்-ரோடு விலை மற்றும் EMI விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள அந்தந்த கார்களின் மாடல் பக்கங்களை நேரில் அல்லது ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்வது நல்லது. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!














