• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    ₹69,000 எக்ஸ்ட்ரா... ஆனா கிரெட்டா -ல இது இல்லையா? 2026 ஹூண்டாய் பேயான் HX10 vs கிரெட்டா கிங்!

    இரண்டு SUV -களும் சலுகையில் உள்ள அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு இணையாக உள்ளன. ஆனால் பிந்தையது மிகவும் வசதியான அம்சங்களைக் கொண்டுள்ளது.

    ninad
    ninad
    published on அக்டோபர் 29, 2026 15:45 ist
    info icon
    published onOct 29, 2026 15:45 IST
    last updated onOct 29, 2026 15:45 IST
    20 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Bayon HX10 Vs Creta King Compared

    எங்கள் வாசகர்களில் அதிர்ஷ்டசாலியான 50 பேரின் கார் வாங்கும் பயணத்தை எளிதாக்க நாங்கள் தயாராக உள்ளோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி, உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் எங்கள் குழுவினர் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்கள்.

    ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பேயான் SUV காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கிரெட்டா காருக்கு இணையாகவே இது களமிறக்கப்பட்டுள்ளது. இரண்டு கார்களுமே கிட்டத்தட்ட ஒரே அளவிலும், ஒரே மாதிரியான 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் உடனும் வருவதால், இவற்றுக்கு இடையே என்னென்ன வித்தியாசங்கள் உள்ளன என்ற குழப்பம் பலருக்கும் எழலாம்.

    அந்தக் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் இந்த இரண்டு மாடல்களின் டாப்-எண்ட் வேரியண்ட்களான பேயான் HX10 மற்றும் கிரெட்டா கிங் ஆகியவற்றை இங்கே விரிவாக ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதலில் அவற்றின் விலையில் இருந்து தொடங்குவோம்:

    விலை விவரம்

    இரண்டு SUV மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இதோ:

    மாடல்

    ஹூண்டாய் பேயான் HX10 CVT

    ஹூண்டாய் கிரெட்டா கிங் CVT

    விலை (எக்ஸ்-ஷோரூம்)

    ரூ. 18 லட்சம்

    ரூ. 18.69 லட்சம்

    • பேயான் காரின் டாப் வேரியண்ட்டான HX10 CVT மாடல் ரூ. 18 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. அதே சமயம் அதே என்ஜின் ஆப்ஷனுடன் வரும் கிரெட்டா கிங் CVT மாடல் இதைவிட ரூ. 69,000 கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    வடிவமைப்பு

    முன்பக்க வடிவமைப்பில் பேயான் மாடல் முற்றிலும் புதிய முகப்புத் தோற்றத்தைப் பெற்றுள்ளது. மேல் பகுதியில் மெல்லிய எல்இடி DRL-கள், பம்பரின் கீழ் பகுதியில் டூயல் ப்ரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் முரட்டுத்தனமான லுக்கைத் தரும் வகையில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கிட் பிளேட் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

    கிரெட்டா கிங் CVT மாடலைப் பொறுத்தவரை பெரிய பிளாக் குரோம் கிரில், கனெக்டட் எல்இடி DRL-கள் மற்றும் பம்பருக்கு சற்று மேலே எல்இடி ரிஃப்ளெக்டர் ஹெட்லேம்ப்கள் என தனித்துவமான கிரெட்டா அடையாளத்துடன் காட்சியளிக்கிறது.

    Hyundai Bayon Front
    Hyundai Creta Front

    பக்கவாட்டுத் தோற்றத்தில் தற்போதைய தலைமுறை கிரெட்டா மற்றும் பேயான் ஆகிய இரண்டுமே நீளம் மற்றும் வீல்பேஸ் அளவில் மிகவும் நெருக்கமாக உள்ளன. இதில் கிரெட்டா சற்றே கூடுதல் நீளத்தைப் பெற்றுள்ளது.

    டிசைன் அடிப்படையில் பார்த்தால், பேயான் கார் ஒரு கிராஸ்ஓவர் போன்ற தோரணையை வெளிப்படுத்துகிறது. தடிமனான பிளாக் வீல் ஆர்ச் கிளாடிங், கதவு பேனல்களில் பிளாக் ஸ்ட்ரிப் மற்றும் உயரமான ரூஃப் ரெயில்கள் போன்றவை இதற்கு தனி அழகு சேர்க்கின்றன. அத்துடன் பாடி கலரிலான டோர் ஹேண்டில்கள் மற்றும் மஸ்குலர் ஹான்சஸ் ஆகியவை இதன் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகின்றன.

    Hyundai Bayon Side
    Hyundai Creta Side

    கிரெட்டா கிங் CVT வழக்கமான SUV போன்ற கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதோடு குரோம் டோர் ஹேண்டில்கள், சில்வர் சைடு டோர் கிளாடிங் மற்றும் புதிய 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் போன்ற பிரிமியம் அம்சங்களும் இதில் நிறைந்துள்ளன. பேயான் காரின் ஃபியூச்சரிஸ்டிக் மற்றும் எட்ஜி தோற்றத்தோடு ஒப்பிடும் போது, கிரெட்டா மிகவும் மெச்சூர்டான மற்றும் கம்பீரமான லுக்கைத் தருகிறது.

    பின்பக்க வடிவமைப்பில் பேயான் கார் மெல்லிய எல்இடி டெயில்லேம்ப்கள், சதுர வடிவிலான டெயில்கேட், டிக்கியில் பேயான் பேட்ஜ், சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் இன்டகிரேட்டட் ரூஃப் ஸ்பாய்லர் என மினிமலிஸ்டிக் ஸ்டைலைத் தொடர்கிறது.

    Hyundai Bayon Rear
    Hyundai Creta Rear

    அதே சமயம் கிரெட்டா தற்போதைய டிரெண்டிற்கு ஏற்ப கனெக்டட் எல்இடி டெயில்லேம்ப் செட்டப், சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் இன்டகிரேட்டட் ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவற்றுடன் அசத்துகிறது.

    கலர் ஆப்ஷன்கள்

    ஹூண்டாய் பேயான் HX10 CVT

    ஹூண்டாய் கிரெட்டா கிங் CVT

    அட்லஸ் வொயிட்*

    டைட்டானியம் பிளாக்^

    எகோட்ரானிக் கிரே

    ரோபஸ்ட் எமரால்ட் பேர்ல்

    டைட்டானியம் பிளாக்^

    அட்லஸ் வொயிட்*

    கோல்டன் புரோன்ஸ்

    எகோட்ரானிக் கிரே^

    கிளாஸி புளூ^

    ஸ்டாரி நைட்

    ஃபியரி ரெட்*

    -

    * கருப்பு நிற ரூஃப் ஆப்ஷனுடன் கிடைக்கிறது, ^ மேட் ஃபினிஷிலும் கிடைக்கிறது

    பேயான் HX10 வேரியண்ட் மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களிலும், கிரெட்டா மாடல் 7 கலர் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வருகின்றன. இரண்டு கார்களிலுமே பெரும்பாலான நிறங்கள் ஒன்றாகவே பகிரப்பட்டுள்ளன. பேயான் காரின் முழுமையான கலர் ஆப்ஷன்களைப் பற்றி விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.

    இண்ட்டீரியர்

    உள்ளே நுழைந்ததும் பேயான் HX10 கேபினில் டிரைவரை நோக்கி வளைந்த டூயல்-டிஸ்பிளே செட்டப் கொண்ட முற்றிலும் புதிய டேஷ்போர்டு டிசைன் வரவேற்கிறது. செங்குத்தாக அமைக்கப்பட்ட ஏசி வென்ட்கள், புதிய டச்-பேஸ்டு கிளைமேட் கண்ட்ரோல் பேனல், இன்ஃபோடெயின்மென்ட்டுக்கான பட்டன்கள் மற்றும் வால்யூம் கண்ட்ரோல் நாப்கள் ஆகியவை பயன்பாட்டிற்கு மிக எளிதாக உள்ளன. வென்யூ மற்றும் வெர்னா மாடல்களில் இருப்பது போலவே, ஹூண்டாயின் மோர்ஸ் கோட் லோகோவுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் இதிலும் இடம்பெற்றுள்ளது.

    Hyundai Bayon Interior

    கிரெட்டா கிங் CVT கேபினிலும் டூயல்-டிஸ்பிளே செட்டப் கொண்ட அழகான மினிமலிஸ்டிக் டேஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் சாஃப்ட்-டச் ஃபேப்ரிக் மற்றும் நேர்த்தியாக இணைக்கப்பட்ட மெல்லிய ஏசி வென்ட்கள் உள்ளன. மேலும் லெதரெட் சுற்றப்பட்ட 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கேபினை மேலும் ரிச்சாக மாற்றுகிறது. நம் ஊர் வெயில் காலத்திற்கு மிகவும் பயனுள்ள அம்சமான இன்டகிரேட்டட் சன்பிளைண்ட்ஸ் பின் இருக்கை பயணிகளின் சௌகரியத்திற்காக இதில் வழங்கப்பட்டுள்ளது.

    Hyundai Creta Interior

    ஒட்டுமொத்தமாக இரண்டு கார்களிலுமே தரமான மெட்டீரியல்கள், டேஷ்போர்டு, டோர் பேனல்கள் மற்றும் ஆர்ம்ரெஸ்ட்களில் சாஃப்ட்-டச் ஃபினிஷ் என பிரிமியம் தரத்திலான இன்டீரியர் ஃபீல் கிடைக்கிறது.

    அம்சங்கள்

    வசதிகளைப் பொறுத்தவரை இரண்டு SUV மாடல்களிலுமே வென்டிலேட்டட் ஃப்ரண்ட் சீட்கள், 8 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர்டு டிரைவர் சீட், பெரிய பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆட்டோ-டிம்மிங் IRVM, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற முக்கிய அம்சங்கள் பொதுவாகக் கிடைக்கின்றன.

    Hyundai Bayon Panoramic Sunroof

    பேயான் HX10 மாடலில், நவீன சாஃப்ட்வேர், OTA அப்டேட்கள் மற்றும் ஜெனரேட்டிவ் AI வசதிகளுடன் கூடிய பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், துல்லியமான 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகியவை உள்ளன; கிரெட்டாவில் இந்த அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெறவில்லை.

    Hyundai Bayon Infotainment Unit

    அதே சமயம் கூடுதலாக ரூ. 69,000 விலையில் வரும் கிரெட்டா கிங் மாடலில் பவர்டு கோ-டிரைவர் சீட், டிரைவர் சீட்டுக்கான மெமரி ஃபங்ஷன், டூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பின்பக்க பயணிகளுக்கான தனி வயர்லெஸ் போன் சார்ஜர் ஆகியவை கிடைக்கின்றன. இந்த அம்சங்கள் டிரைவர் மற்றும் பின் இருக்கை பயணிகள் இருவருக்குமே கூடுதல் சொகுசான அனுபவத்தைத் தருகின்றன.

    Hyundai Creta Front Seats

    பாதுகாப்பு

    பாதுகாப்புப் பிரிவில் இரண்டு கார்களிலுமே 6 ஏர்பேக்குகள், TPMS, பிளைண்ட் வியூ மானிட்டருடன் கூடிய 360-டிகிரி கேமரா, ஆட்டோ-ஹோல்டு வசதியுடன் கூடிய EPB, HHA, ESC, ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் முன்பக்க-பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் என பாதுகாப்பு சாதனங்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன

    Hyundai Bayon Level-2 ADAS

    இரண்டு கார்களிலுமே லெவல்-2 ADAS பாதுகாப்புத் தொகுப்பு இருந்தாலும், பேயான் மாடலில் கூடுதலாக HDA மற்றும் நேவிகேஷன் அடிப்படையிலான குரூஸ் கண்ட்ரோல் போன்ற கூடுதல் வசதிகள் உள்ளன. இவை நெடுஞ்சாலைப் பயணங்களிலும், நீண்ட தூர டிரைவிங்கிலும் சிறப்பான பாதுகாப்பு அனுபவத்தை அளிக்கின்றன.

    Hyundai Bayon Steering Controls

    பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    இரண்டு மாடல்களின் எஞ்சின் விவரங்கள் இதோ:

    மாடல்

    ஹூண்டாய் பேயான் CVT

    ஹூண்டாய் கிரெட்டா கிங் CVT

    என்ஜின்

    1.5-litre naturally aspirated petrol

    1.5-litre naturally aspirated petrol

    பவர்

    115 PS

    115 PS

    டார்க்

    144 Nm

    144 Nm

    டிரான்ஸ்மிஷன்

    CVT

    CVT

    MT - மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT - கன்டினியூவஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமேட்டிக்)

    Hyundai Bayon Engine
    Hyundai Creta Engine

    இரண்டு SUV மாடல்களுமே ஒரே 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜினைப் பகிர்ந்து கொள்வதால் அவற்றின் பவர் மற்றும் டார்க் அளவுகள் முற்றிலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. ஆனால் கிரெட்டா கிங் மாடலில் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களும் கிடைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வுகள் உள்ளன.

    போட்டியாளர்கள்

    கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ரெனால்ட் டஸ்டர், டாடா சியரா, நிஸான் டெக்டான், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட், சிட்ரோயன் ஏர்கிராஸ் X, எம்ஜி ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகியவை புதிய ஹூண்டாய் பேயானுக்கு சந்தையில் கடும் போட்டியாளர்களாக உள்ளன.

    கார்தேக்கோவின் கருத்து

    பேயான் மற்றும் கிரெட்டா ஆகிய இரண்டுக்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகள் உள்ளதால் கிரெட்டா போன்ற ஒரு முழுமையான பேக்கேஜ் தற்போது இந்த புதிய பேயான் மூலமாக சற்று குறைவான விலையிலேயே கிடைக்கிறது. சுமார் ரூ. 69,000 விலை குறைவாக இருந்தாலும், அருமையான நவீன அம்சங்கள், தலைசிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் அதே பவர்டிரெய்ன் ஆகியவற்றை பேயான் வழங்குகிறது. எனவே மாடர்ன் டிசைன், பிரிமியம் கேபின் மற்றும் முரட்டுத்தனமான லுக் ஆகியவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு பேயான் ஒரு பக்காவான சாய்ஸ்.

    அதே சமயம் கிரெட்டா எல்லா விதத்திலும் உருவத்தில் பெரிய காராக இருப்பதால் இதன் கேபினில் தாராளமான இடவசதி கிடைக்கிறது. அத்துடன் டிரைவர் சீட்டுக்கான மெமரி ஃபங்ஷன், ரியர் சன்பிளைண்ட்ஸ் மற்றும் பின்பக்க வயர்லெஸ் சார்ஜர் போன்ற கூடுதல் சொகுசு அம்சங்கள் இருப்பதால், டிரைவரை வைத்து பின் இருக்கையில் சவுகரியமாகப் பயணிக்க விரும்புபவர்களுக்கு கிரெட்டா கிங் ஒரு சிறந்த பேக்கேஜாக அமையும்.

    was this article helpful ?

    ninad
    Ninad Mestry is an automotive engineer, dieselhead, and lifelong automotive enthusiast with a passion for cars, motorcycles, and the technology behind them. An engineering graduate, he is particularly interested in vehicle engineering, emerging mobility solutions, and the stories that make every machine unique. When he\'s not exploring the latest developments in the automotive world, he enjoys finding new ways to share automotive experiences and insights with fellow enthusiasts. Whether it\'s a rugged SUV, a practical commuter, a cutting-edge EV, or a classic motorcycle, Ninad is always eager to learn more and dive deeper into all things automotive.மேலும் படிக்க

    Write your Comment on Hyundai கிரெட்டா

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience