• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    ரூ.13 லட்சத்தில் 500 கிமீ மைலேஜ் கொடுக்குமா ? 'அயோனிக் பி' என்ற பெயரை பதிவு செய்த ஹூண்டாய்!

    வரவிருக்கும் EV ஹூண்டாயின் இந்தியா வரிசையில் மிகவும் மலிவான எலக்ட்ரிக் காராக நிலைநிறுத்தப்படும் மற்றும் டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV 3XO EV போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    rohit
    rohit
    published on நவ 04, 2026 22:31 ist
    info icon
    published onNov 04, 2026 22:31 IST
    last updated onNov 04, 2026 22:31 IST
    14 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Hyundai Ioniq P electric SUV coming soon

    எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

    2026-27 நிதியாண்டு ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கப் போகிறது. ஏனெனில், இந்நிறுவனம் அடுத்தடுத்து பல புதிய மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் சமீபத்தில் வெளியான ஹூண்டாய் பேயான் மற்றும் விரைவில் வரவிருக்கும் சப்-4 மீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகியவை அடங்கும். குறிப்பாக இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி, இந்தியாவில் ஹூண்டாயின் மிகவும் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக இருக்கும். இந்நிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு ட்ரேட்மார்க் விண்ணப்பம் மூலம், இந்த புதிய இவி காருக்கு ஹூண்டாய் ஒரு பெயரை இறுதி செய்துவிட்டதாகத் தெரிகிறது.

    ட்ரேட்மார்க் விவரங்கள் என்ன சொல்கின்றன?

    அதிகாரப்பூர்வ ட்ரேட்மார்க் பதிவு இணையதளத்தில் கிளாஸ் 12 பிரிவின் கீழ் ‘அயோனிக் பி’ என்ற பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது வெறும் ட்ரேட்மார்க் விண்ணப்பம் மட்டுமே என்பதால் காரின் அறிமுகம் வரை இதை உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது. பொதுவாக ட்ரேட்மார்க் செய்யப்படும் எல்லாப் பெயர்களும் தயாரிப்பு நிலைக்கு வரும் கார்களுக்கு வைக்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அதே சமயம் வரவிருக்கும் புதிய ஹூண்டாய் இவி காருக்கு இந்தப் பெயர்தான் வைக்கப்படும் என நாம் நம்புவதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய காலாண்டு வருவாய் ஆய்வுக் கூட்டத்தில் இந்தப் பெயர் அதிகாரப்பூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இந்தப் பெயர் உறுதி செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

    மேலும் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் அயோனிக் 5 மற்றும் விரைவில் எதிர்பார்க்கப்படும் அயோனிக் 6 வரிசையில், ஹூண்டாயின் பிரத்யேக எலெக்ட்ரிக் பிராண்டான ‘அயோனிக்’ குடும்பத்தின் கீழ் இந்த புதிய மாடலையும் இது கொண்டு வருகிறது.

    ஹூண்டாயின் புதிய இவி பற்றிய கூடுதல் விவரங்கள்

    நிறுவனத்தின் உள்ளே 'HE1i' என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வரவுள்ளது. அத்துடன் இது முற்றிலும் பிரத்யேகமான புதிய இவி பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

    Hyundai Ioniq P electric SUV coming soon

    இதுவரை வெளியாகியுள்ள பல்வேறு ஸ்பை படங்களின்படி இந்த கார் தட்டையான ரூஃப்லைன் மற்றும் எடுப்பான ரூஃப் ரெயில்களுடன் கூடிய பக்காவான பாக்ஸி தோற்றத்தைக் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் டூயல்-பாட் எல்இடி ஹெட்லைட்கள், பிக்சலேட்டட் எல்இடி DRL-கள், 16 அல்லது 17 இன்ச் ஏரோடைனமிக் டிசைன் கொண்ட அலாய் வீல்கள் மற்றும் பிக்சலேட்டட் எல்இடி டெயில்லைட்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற வாய்ப்புள்ளது.

    Hyundai Ioniq P electric SUV coming soon

    இந்த புதிய ஹூண்டாய் இவி காரின் உட்புற கேபின் இன்னும் கேமராவில் சிக்கவில்லை என்றாலும் தற்போதைய நவீன ஹூண்டாய் கார்களைப் போலவே இதிலும் எக்கச்சக்கமான தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், நிறுவனத்தின் லேட்டஸ்ட் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் டூயல் டிஜிட்டல் டிஸ்பிளே அமைப்பும் இதில் வரக்கூடும்.

    Hyundai Ioniq P electric SUV coming soon

    வசதிகளைப் பொறுத்தவரை அடுத்த தலைமுறை கிரெட்டா காரில் வரவிருக்கும் ஹூண்டாயின் புதிய பிளியோஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இதிலும் கொடுக்கப்படலாம். இதுதவிர, வென்டிலேட்டட் வசதி கொண்ட முன்பக்க சீட்கள், பனோரமிக் அமைப்பாக இருக்கக்கூடிய சன்ரூஃப், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற பிரீமியம் வசதிகளும் இடம்பெறலாம்.

    பாதுகாப்புப் பிரிவில் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள், ESC, குழந்தைகளுக்கான ISOFIX ஆங்கரேஜ்கள், 360-டிகிரி கேமரா செட்டப் மற்றும் சில ADAS பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

    Hyundai Ioniq P electric SUV coming soon

    இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பவர்டிரெய்ன் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் இதில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்பதை நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. இது முழு சார்ஜில் அதிகபட்சமாக 500 கிமீ வரை செல்லும் டிரைவிங் ரேஞ்சை வழங்கும் எனத் தெரிகிறது. நீண்ட தூரப் பயணங்களின் போது காரை உடனுக்குடன் சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் ஃபாஸ்ட் DC சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்படும்.

    எதிர்பார்க்கப்படும் அறிமுகம், விலை மற்றும் போட்டியாளர்கள்

    ஹூண்டாய் அயோனிக் பி கார் வரும் 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நமது சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.13 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படலாம். சந்தையில் களமிறங்கும்போது டாடா நெக்ஸான் இவி, கியா சைரோஸ் இவி மற்றும் மஹிந்திரா XUV 3XO இவி ஆகிய கார்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும். அதே சமயம், இதே விலைப்பிரிவில் இருக்கும் டாடா பஞ்ச் இவி மற்றும் மஹிந்திரா XUV400 இவி போன்ற மாடல்களுடனும் இது நேரடியாக மோதும்.

    கார்தேக்கோவின் கருத்து…

    ட்ரேட்மார்க் செய்யப்பட்ட பெயரும், ஹூண்டாயின் வருவாய் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களும் இந்த புதிய மாடலுக்கு ‘அயோனிக் பி’ என்றுதான் பெயரிடப்படும் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்துகின்றன. தற்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் காம்பாக்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. எனவே, இந்த சரியான நேரத்தில் ஹூண்டாய் களமிறங்குவது நல்ல திட்டமிடலாகும்.

    ஹூண்டாய் நிறுவனம் சரியான விலையை நிர்ணயித்து, ஏற்கனவே சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மற்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் சிறந்த பவர்டிரெய்னை வழங்கினால், இவி சந்தையில் இந்த அயோனிக் பி ஒரு மிகப்பெரிய கேம்சேஞ்சராக உருவெடுக்கும்.

    பிரீமியமாக பார்க்கப்படும் அயோனிக் பிராண்ட் கார் ஒன்று இந்தியாவில் இவ்வளவு குறைவான பட்ஜெட் விலையில் கிடைப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

    Image Source: 1, 2, 3

    was this article helpful ?

    rohit
    Rohit Shah is a Content Writer with the CarDekho Group and an automotive journalist with nearly seven years of experience covering the automotive industry. He holds a Bachelor\'s degree in Business Management (International Business) and a Post Graduate Diploma in Business Management. Over the course of his career, Rohit has authored more than 2,500 articles for CarDekho, covering topics ranging from new car launches to the latest developments in the Indian and global automotive industries. His interest in cars began in childhood when he started collecting scale models, and he unwinds by taking a car out for a spin. When he\'s not talking or writing about cars, you can find him watching new movies and series or learning new languages.மேலும் படிக்க

    Write your Comment on Hyundai லாங்கி p

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience