மணாலியில் டெஸ்டிங்... கன்னாபின்னானு மாறிய 2027 ஹூண்டாய் கிரெட்டா: வெளியான ரகசிய ஸ்பை ஷாட்ஸ் !
வரவிருக்கும் அடுத்த தலைமுறை கிரெட்டா தற்போதைய மாடலை விட அதிக அகலமாக இருக்கும்.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் SUV என்ற பெருமையைப் பெற்ற ஹூண்டாய் கிரெட்டா இந்நிறுவனத்தின் மிகவும் பிரியமான மற்றும் மிக முக்கியமான அடையாளமாகத் திகழ்கிறது. இதன் பிளாட்ஃபார்ம் பார்ட்னரான கியா செல்டோஸ் கடந்த ஆண்டே அடுத்த தலைமுறை மாற்றத்தைப் பெற்றுவிட்ட நிலையில் கிரெட்டாவிற்கான இந்த தலைமுறை மாற்றம் நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்த தலைமுறைக்கான புதிய கிரெட்டா இமயமலைப் பகுதிகளில் தீவிர சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. வரவிருக்கும் இந்த புதிய மாடலில் நாம் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
வெளிப்புறத் தோற்றத்தில் என்னென்ன மாற்றங்கள்?
தற்போது விற்பனையில் உள்ள மாடலிலேயே ஃபிரண்ட் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. சோதனை ஓட்டத்தில் இருக்கும் காரின் முன் பகுதியைப் பார்க்கும்போது இந்த அம்சம் இதிலும் தொடர்வது தெளிவாகிறது. இதற்காக உருமறைப்பு அட்டையில் சிறிய வட்ட வடிவத் துளைகள் இடப்பட்டிருப்பது தெரிகிறது. ஹெட்லேம்ப்கள் தற்போதைய மாடலைப் போலவே பம்பரில் பொருத்தப்பட்டிருந்தாலும் முந்தையதை விட மேலும் நேர்த்தியான வடிவமைப்புடன் வர வாய்ப்புள்ளது.


பக்கவாட்டுப் பகுதிக்கு வந்தால் புதிய அலாய் வீல்கள் இடம்பெறுவதை உணர முடிகிறது. இவை சற்று பெரிய அளவிலும் பெரும்பாலும் டாப் வேரியண்ட்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் அமையலாம். ORVM-களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரிவதால் இதிலும் 360 டிகிரி கேமரா இடம்பெறுவது உறுதியாகிறது.


காரின் பின்பகுதியைக் காட்டும் காட்சிகளைப் பார்க்கும்போது கியா செல்டோஸைப் போலவே தற்போதைய கிரெட்டாவை விட இது அகலமாகத் தெரிகிறது. டெயில்கேட் முழுவதும் கிடைமட்டமாக நீளும் எல்இடி ஸ்ட்ரிப் கொண்ட புதிய டெயில் லேம்ப்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இருப்பினும் கார் முழுமையாக மறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதால், கூடுதல் வடிவமைப்பு விவரங்களை முழுமையாகக் கண்டறிய முடியவில்லை.
அம்சங்கள் & பாதுகாப்பு
தற்போதைய தலைமுறை கிரெட்டாவிலேயே ஏராளமான நவீன அம்சங்கள் நிரம்பியுள்ளன. இதில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே கொண்ட இரட்டைத் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அடாப்டர் மூலம் வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay சப்போர்ட்டும் இதில் கிடைக்கிறது. இவற்றுடன் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பெரிய பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் வசதியுடன் கூடிய பவர்டு ஃபிரண்ட் சீட்கள், முன்புற மற்றும் பின்புற பயணிகளுக்கான வயர்லெஸ் போன் சார்ஜர், ரியர் ஏசி வென்ட்கள் போன்றவையும் உள்ளன.

பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை இதில் Level-2 ADAS இடம்பெற்றுள்ளது. இது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது. மேலும் 6 ஏர்பேக்குகள், ஃபிரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்களும் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

பவர்டிரெயின் தேர்வுகள்
அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா தற்போதைய மாடலில் உள்ள அதே மூன்று எஞ்சின் தேர்வுகளிலேயே தொடர வாய்ப்புள்ளது.
தற்போதைய தலைமுறை கிரெட்டாவின் விவரங்கள் பின்வருமாறு:
| மாடல் |
ஹூண்டாய் கிரெட்டா |
||
| எஞ்சின் |
1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் |
1.5-லிட்டர் டீசல் |
| டிரான்ஸ்மிஷன் |
6-speed MT/CVT |
7-speed DCT |
6-speed MT/6-speed AT |
| பவர் |
115 PS |
160 PS |
116 PS |
| டார்க் |
144 Nm |
253 Nm |
250 Nm |
*MT - மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT - கண்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன், AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக்

வரவிருக்கும் புதிய கிரெட்டாவின் அதிகாரப்பூர்வ எஞ்சின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இது ஹைப்ரிட் பவர்டிரெயின் தேர்விலும் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை & போட்டி
தற்போதைய ஹூண்டாய் கிரெட்டா ரூ.10.91 லட்சம் முதல் ரூ.20.46 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய தலைமுறை மாடலின் ஆரம்ப விலை சுமார் ரூ.11 லட்சம் என்ற அளவில் தொடங்கலாம் என கணிக்கப்படுகிறது.
இந்த பிரிவில் புதிய கிரெட்டாவுக்குக் கடுமையான போட்டி காத்திருக்கிறது. இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ரெனால்ட் டஸ்டர், டாடா சியரா, நிஸான் டெக்டான், மாருதி விக்டோரிஸ், ஹூண்டாய் பேயான், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலிவேட், சிட்ரோயன் ஏர்கிராஸ் X, எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற கார்களுடன் சந்தையில் நேருக்கு நேர் மோதும்.
கார்தேக்கோவின் கருத்து...
இந்தியச் சந்தையில் நீண்ட காலமாகத் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் ஹூண்டாய் கிரெட்டா, விசாலமான கேபின், எக்கச்சக்கமான தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பலவிதமான எஞ்சின் ஆப்ஷன்கள் மூலம் குடும்பங்களுக்கு ஏற்ற சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.
இதன் புதிய தலைமுறை மாடல் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு தற்போது சோதனையில் சிக்கியுள்ளது.
சோதனை ஓட்டத்தில் இருக்கும் மாடலின் மூலம் இது தற்போதைய அளவை விடப் பெரிதாக இருக்கும் என்பது தெரிகிறது. மேலும் புதிய ஃபிரண்ட் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், மாற்றியமைக்கப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்கள் போன்ற வெளிப்புற மாற்றங்களும் தெளிவாகின்றன. வரவிருக்கும் புதிய கிரெட்டாவில் நீங்கள் எதிர்பார்க்கும் கூடுதல் அம்சங்கள் என்ன என்பதை உங்கள் கருத்துகளில் தெரியப்படுத்துங்கள்!














