டிஃபெண்டருக்கு டஃப் கொடுக்குமா JSW ஜெட்டூர் T2… இன்டீரியர் ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன!
JSW நிறுவனம் டிசம்பர் 03 அன்று வாகனத் துறையில் நுழைய உள்ளது
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் JSW நிறுவனம் அடியெடுத்து வைக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அந்நிறுவனம் முதலில் களமிறக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜெட்டூர் T2 (இந்தியாவில் 'காம்பாட்' என்ற பெயரில் வர வாய்ப்புள்ளது) எஸ்யூவியின் சோதனை ஓட்டம் சாலைகளில் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்கள், இந்திய ஸ்பெக் மாடலின் உள்பக்க வடிவமைப்பை முதல் முறையாகக் காட்டியுள்ளன. அதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை இங்கே பார்ப்போம்:
உள்பக்கம் எப்படி இருக்கிறது?

JSW காம்பாட் எஸ்யூவியின் உள்பக்க கேபின் முதன்முறையாக கேமராவில் சிக்கியிருப்பதுதான் இதில் ஹைலைட். பிளாக் மற்றும் ஆஃப்-ஒயிட் ஆகிய இரண்டு வண்ணக் கலவையில் இதன் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் மற்றும் ஸ்டீயரிங் வீல் முழுக்க லெதர் அமைப்பால் அலங்கரிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
செங்குத்தான டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டுள்ள இந்த காரில், பிரம்மாண்டமான 15.6 இன்ச் டச்ஸ்கிரீன் நடுநாயகமாக வீற்றிருக்கிறது. அதற்கு கீழே மெல்லிய சென்டர் ஏசி வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு சற்று அடியில் முக்கிய பயன்பாடுகளுக்கான பிசிக்கல் டாகிள் சுவிட்சுகள் அமைந்திருப்பதை கவனிக்க முடிகிறது. ஃப்ளோர் கன்சோலில் ஒரு தடிமனான கியர் செலக்டர் மற்றும் வெவ்வேறு டிரைவ் மோடுகளை மாற்றுவதற்கான ரோட்டரி டயல் இடம்பெற்றுள்ளது.
கூர்ந்து கவனித்தால் காரின் உட்புறத்திற்கு ஒரு முரட்டுத்தனமான ஆஃப்-ரோடு தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் ரிவெட் போன்ற டிசைன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது தெரியும். டிரைவருக்காக ஒரு தடிமனான ஸ்டீயரிங் வீலும், அதன் பின்னால் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவும் கொடுக்கப்பட்டுள்ளன.
வெளியே என்னென்ன மாற்றங்கள்?

சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த கார் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தாலும் அதன் தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது JSW ஜெட்டூர் T2 (காம்பாட்) மிக கம்பீரமான, ரக்கட் லுக்கில் வருவது உறுதியாகத் தெரிகிறது. இதன் பாக்ஸி மற்றும் மஸ்குலார் டிசைன் சாலையில் செல்லும்போது அனைவரின் கவனத்தையும் நிச்சயம் ஈர்க்கும். JSW மோட்டார்ஸ் பற்றி மேலும் பல சுவாரஸ்ய தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்த இணைப்பைத் தொடவும்.
முன்பக்க பம்பர் மற்றும் ஹெட்லைட்களின் அமைப்பு அப்படியே தொடரும் எனத் தெரிகிறது. ஆனால், இந்தியாவில் இந்த கார் 'காம்பாட்' என்ற பெயரில் வெளிவந்தால், முன்பக்க கிரில் அமைப்பில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

சைடு புரொஃபைலைப் பொறுத்தவரை அச்சு அசல் லேண்ட் ரோவர் டிஃபெண்டரை நினைவூட்டுகிறது. நிமிர்ந்த பாடி அமைப்பு, சாய்வான A-பில்லர் மற்றும் தடிமனான பாக்ஸி பரிமாணங்கள் ஆகியவை இதற்கு கம்பீரமான லுக்கை தருகின்றன. காரின் முரட்டுத்தனமான நிலைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பெரிய அளவிலான அலாய் வீல்களும், அதைச் சுற்றி பிரம்மாண்டமான வீல் ஆர்ச்சுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தைப் பார்த்தால், செங்குத்தான எல்இடி டெயில் லேம்ப்களும், டெயில்கேட்டில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பேர் வீலும் காரின் ஆஃப்-ரோடு அழகை மேலும் மெருகேற்றுகின்றன.
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
சர்வதேச சந்தையில் விற்பனையாகும் ஜெட்டூர் T2 மாடலில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்திய மாடலிலும் இடம்பெறும் என்று தெரிகிறது. அந்த வகையில் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் கிளஸ்டர், 15.6 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Android Auto மற்றும் Apple CarPlay வசதிகள் இதில் இருக்கும். மேலும், பனோரமிக் சன்ரூஃப், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட சோனி சவுண்ட் சிஸ்டம், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வென்டிலேட்டட் வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள், மசாஜ் மற்றும் மெமரி ஃபங்ஷன் கொண்ட பவர்டு முன்பக்க சீட்கள், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்டிங் போன்ற பிரீமியம் அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பைப் பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், Level-2 ADAS தொழில்நுட்பம், 540 டிகிரி பனோரமிக் கேமரா, EBD உடன் கூடிய ABS, டிராக்ஷன் கண்ட்ரோல் வசதியுடன் வரும் ESC மற்றும் TPMS போன்ற அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் என்ஜின் விவரங்கள்
சர்வதேச அளவில் ஜெட்டூர் T2 மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட். இதில் எந்த என்ஜின் இந்திய சந்தைக்கு வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவற்றின் முழு விவரங்கள் இதோ:
|
|
|
|
||||
| பவர் |
183.5 PS |
254.2 PS |
600 PS (Combined) |
||||
| டார்க் |
290 NM |
390 NM |
915 NM (Combined) |
||||
| டிரான்ஸ்மிஷன் |
7-speed DCT |
7-speed (DCT) |
3-speed DHT |
||||
|
FWD |
4WD |
4WD |
DCT - டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன், DHT - டெடிகேட்டட் ஹைபிரிட் டிரான்ஸ்மிஷன், FWD - ஃபிரன்ட் வீல் டிரைவ் , 4WD - ஃபோர் வீல் டிரைவ்
ஜெட்டூர் T2 காரின் பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் 43.2 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க எலெக்ட்ரிக் மோடில் மட்டுமே 160 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது (WLTC கணக்கீட்டின்படி). அத்துடன் இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதால் காரை விரைவாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இதனிடையே, JSW காம்பாட் காரின் அளவுகள் பின்வருமாறு:
| அளவுகள் |
|
| நீளம் |
4,785 mm* |
| அகலம் |
2,006 mm |
| உயரம் |
1,880 mm |
| வீல்பேஸ் |
2,800 mm |
* ரூஃப் ரெயில்களுடன் சேர்த்து
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
JSW ஜெட்டூர் T2 கார் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.38 லட்சம் அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையில் களம் இறங்கும்போது இந்த JSW காம்பாட் கார், கியா சோரெண்டோ, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி மெஜஸ்டர் ஆகிய கார்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும்.
கார்தேக்கோவின் கருத்து…
JSW ஜெட்டூர் T2 விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளதால், எஸ்யூவி பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மாடல்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மேலும் அதிகரிக்கும். JSW நிறுவனம் விலையை கச்சிதமாக நிர்ணயித்து, வலுவான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால், காம்பாட் இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
கவர்ச்சிகரமான பாக்ஸி டிசைனும், ஏகப்பட்ட அதிநவீன வசதிகளும் இந்த காரில் ஒன்றாகக் கலந்திருப்பது பல கார் பிரியர்களை இதை நோக்கி ஈர்க்கும். வரும் டிசம்பர் 3-ஆம் தேதி JSW தனது இந்தியப் பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உலகமும் அன்றைய தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.











