ஒன்னு முரட்டு லுக்... இன்னொன்னு செம ஸ்டைல்! 2026 ஹோண்டா எலிவேட் Vs ஹூண்டாய் பேயான் இரண்டில் எதை வாங்கலாம் ?
ஒரு நேர்த்தியான மற்றும் நவீன கொரிய SUV உடன் ஒப்பிடும்போது பெரிய மற்றும் தைரியமான ஜப்பானிய வடிவமைப்பு. எது சிறந்தது ?
- ஒரு கருத்தை எழுதுக

| எங்கள் வாசகர்களில் அதிர்ஷ்டசாலியான 50 பேரின் கார் வாங்கும் பயணத்தை எளிதாக்க நாங்கள் தயாராக உள்ளோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி, உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் எங்கள் குழுவினர் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்கள். |
விரைவில் ஒரு புதிய SUV காரை வாங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஆண்டு SUV சந்தைக்கு மிக முக்கியமான ஆண்டாக அமைந்திருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த முக்கிய அறிமுகங்களில், ரூ.11.80 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ரூ.10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் அறிமுகமான ஹூண்டாயின் புத்தம் புதிய பயான் ஆகியவை அடங்கும்.
காம்பாக்ட் SUV பிரிவில் களமிறங்கியுள்ள இந்த இரண்டும் தங்களின் தனித்துவமான குணங்களால் நேருக்கு நேர் மோதுகின்றன. ஒன்று சிறப்பான ரோடு பிரசன்ஸ் மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற ஹோண்டா பிராண்டுடன் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. மற்றொன்று, நவீன வசதிகள், தலைசிறந்த பில்ட் குவாலிட்டி மற்றும் ஸ்மூத் டிரைவிங் அனுபவத்திற்குப் பெயர்பெற்ற ஹூண்டாய் பேட்ஜுடன் களமிறங்கியுள்ளது.
பயான் சற்று உயரம் குறைவாக, சிறிய அமைப்பில் அதே சமயம் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. ஆனால் பேப்பரில் இவற்றின் விவரக்குறிப்புகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன? இரண்டில் எதில் அதிக வசதிகள் உள்ளன? விரிவாகப் பார்க்கலாம்:
விலை
| மாடல் |
ஹோண்டா எலிவேட் |
ஹூண்டாய் பேயான் |
||
| விலை |
|
|
(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்)
-
பயானின் ஆரம்ப விலை ரூ.10 லட்சம் என்பதால், எலிவேட்டை விட இது ரூ.1.80 லட்சம் குறைவான விலையில் துவங்குகிறது.
-
அதே நேரம், இரண்டு கார்களின் டாப் வேரியன்ட்கள் விலையில் பெரிய இடைவெளி இல்லை; வெறும் ரூ.40,000 மட்டுமே வித்தியாசம் உள்ளது. பயானில் கூடுதல் சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம்; அதைப் பற்றி விரிவாகப் பின்னால் காண்போம்.
-
எலிவேட்டின் விரிவான விலை விவரங்களை தெரிந்துகொள்ள எங்கள் விரிவான செய்திப் பதிவைப் பார்க்கலாம்.
அளவுகள்
| அளாவுகள் |
ஹோண்டா எலிவேட் |
ஹூண்டாய் பேயான் |
வித்தியாசம் |
| நீளம் |
4312 mm |
4245 mm |
+ 67 mm |
| அகலம் |
1790 mm |
1810 mm |
(- 20 mm) |
| உயரம் |
1650 mm |
1605 mm* |
+ 45 mm |
| வீல்பேஸ் | 2650 mm |
2600 mm |
+ 50 mm |
*HX10 வேரியன்ட்டில் உள்ள ரூஃப் ரெயில்களுடன் சேர்த்து.
-
படங்களைப் பார்க்கும்போதே பயான் ஒரு சிறிய காராகத் தெரிகிறது. பரிமாண அளவுகளும் அதை உறுதி செய்கின்றன. நீளம், உயரம் மற்றும் வீல்பேஸ் ஆகிய மூன்றிலும் எலிவேட் பெரியதாக உள்ளது.

-
அதேசமயம், அகலத்தைப் பொறுத்தவரை பயான் எலிவேட்டை விட 20 mm கூடுதல் அகலத்தைக் கொண்டுள்ளது.
-
எலிவேட்டில் உள்ள நீண்ட வீல்பேஸ் பயணிகளுக்கு சிறப்பான லெக்ரூம் வசதியைத் தரும். கூடுதலாக அதிக ஹெட்ரூம் மற்றும் பெரிய விண்டோக்கள் இருப்பதால் எலிவேட்டின் கேபின் பார்ப்பதற்கும் அமர்வதற்கும் மிக தாராளமான இடவசதியை உணர்த்துகிறது.

-
பயானின் உட்புற இடவசதியும் சொகுசும் வழக்கமான அளவிற்கு ஏற்ப அமைந்திருக்கிறது; சராசரி உயரமுள்ள பெரியவர்களுக்கு போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் இதில் கிடைக்கிறது.
கலர் ஆப்ஷன்கள்
| ஹோண்டா எலிவேட் |
ஹூண்டாய் பேயான் |
| பிளாட்டினம் ஒயிட் பேர்ல்* |
அட்லஸ் ஒயிட்* |
| லூனார் சில்வர் மெட்டாலிக் |
எகோட்ரானிக் கிரே |
| மெட்டிராய்டு கிரே மெட்டாலிக் |
கோல்டன் பிரான்ஸ் |
| கிரிஸ்டல் பிளாக் பேர்ல் |
டைட்டானியம் பிளாக் |
| அப்சிடியன் ப்ளூ பேர்ல் |
கிளாஸி ப்ளூ |
| ரேடியன்ட் ரெட் மெட்டாலிக்* |
ஃபியரி ரெட்* |
| நோர்டிக் ஃபாரஸ்ட் பேர்ல்* |
டைட்டானியம் பிளாக் மேட் |
| - |
கிளாஸி ப்ளூ மேட் |
*குறிப்பிடப்பட்டுள்ள வண்ணங்கள் பிளாக் ரூஃப் கொண்ட டூயல்-டோன் ஆப்ஷனிலும் கிடைக்கின்றன.
-
இரண்டு கார்களிலுமே தலா 10 வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட்டிருப்பது சிறப்பம்சம்; இரண்டிலும் டூயல்-டோன் வண்ணங்களும், பயானில் மட்டும் மேட்-ஃபினிஷ் வண்ணங்களும் இடம்பெற்றுள்ளன.
-
எலிவேட்டின் ZX பிளஸ் பிளாக் வேரியன்ட்டில் மட்டுமே முழுமையான பிளாக் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் கிடைக்கிறது.
-
மோனோடோன், டூயல்-டோன் மற்றும் மேட்-ஃபினிஷ் என பயான் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஃபினிஷ் தேர்வுகளை அளிக்கிறது.
-
பயானின் டூயல்-டோன் வேரியன்ட்கள் முழுமையான பிளாக் இன்டீரியர் தீமுடனும், மோனோடோன் தேர்வுகள் பிளாக் மற்றும் ஒயிட் கலந்த இன்டீரியர் தீமுடனும் வருகின்றன.
-
எலிவேட்டின் வேரியன்ட் வாரியான வண்ண விவரங்களை எங்கள் முந்தைய செய்தியில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
அம்சங்கள்
| அம்சங்கள் | ஹோண்டா எலிவேட் |
ஹூண்டாய் பேயான் |
| LED Projector Headlamps |
✅ |
✅ |
| LED DRLs |
✅(Connected) |
✅ |
| LED Taillamps |
✅(Connected) |
✅ |
| Wheels |
17-inch dual-tone alloy wheels |
17-inch dual-tone alloy wheels |
| Rear Spoiler |
✅ |
✅ |
| Sharkfin Antenna |
✅ |
✅ |
| Sunroof |
✅(Single-pane) |
✅(Panoramic) |
| Power-adjustable Driver Seat |
✅(8-way) |
✅(8-way) |
| Power-adjustable Co-driver Seat |
✅(4-way) |
❌ |
| Ventilated Seats |
✅(Front and Rear) |
✅(Front only) |
| Rear Reclining Seat |
❌ |
✅(2-step) |
| Ambient Lighting |
✅(Orange) |
✅(Blue) |
| Infotainment system |
✅(10.25-inch touchscreen) |
✅(12.3-inch touchscreen) |
| Wireless Apple CarPlay/Android Auto |
✅ |
✅ |
| Instrument Cluster |
Semi-digital (7-inch) |
Fully digital (12.3-inch) |
| Cabin air purifier |
✅(PM 2.5) |
❌ |
| Wireless Phone Charger |
✅ |
✅ |
| Sound system |
8-speaker |
8-speaker Bose |
| Generative AI Voice Assistant |
❌ |
✅ |
| Auto-dimming IRVM |
✅ |
✅ |
| Automatic Climate Control |
✅ |
✅ |
| Rear AC Vents |
✅ |
✅ |
| Keyless entry with push-button start/stop |
✅ |
✅ |
| USB charging ports |
✅(3x Type-C, 1x Type-A)* |
✅(Type-C, front and rear) |
| Paddle Shifters |
✅ |
✅ |
| Multi-drive Modes |
❌ |
✅(CVT only) |
| Connected Car Technology |
✅ |
✅ |
| Airbags |
6 |
6 |
| 360-degree Camera |
✅ |
✅ |
| Parking Sensors |
✅(Front and Rear) |
✅(Front, Rear and Side) |
| ESC (electronic stability control) |
✅ |
✅ |
| Hill hold assist (HHA) |
✅ |
✅ |
| Electric Parking Brake with Auto Hold |
✅(CVT only) |
✅ |
| Rear Disc Brakes |
✅(CVT only) |
✅ |
| TPMS (Tyre Pressure Monitoring System) |
❌ |
✅ |
| Dashcam |
❌ |
✅ |
| Level-2 ADAS (Advanced Driver Assistance Systems) |
✅ |
✅ |
| Adaptive Cruise Control |
✅ |
✅ |
| Blind-spot view monitor |
✅(Passenger side only) |
✅ |
| Rear Wiper with washer |
✅ |
✅ |
-
அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், கனெக்டட் கார் டெக்னாலஜி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், LED விளக்குகள் மற்றும் முன்பக்க வென்டிலேட்டட் சீட்கள் என இரண்டு SUV-களிலும் நவீன அம்சங்கள் தாராளமாக நிரம்பியுள்ளன.


-
அதே சமயம் பின்பக்க சீட் வென்டிலேஷன், கேபின் ஏர் பியூரிஃபையர் மற்றும் பவர் வசதி கொண்ட முன்பக்க பேசஞ்சர் சீட் ஆகிய வசதிகளை வழங்கி பயானை விட எலிவேட் முன்னிலை பெறுகிறது.

-
இதற்கு மாறாக, டேஷ்கேம், TPMS, டிரைவ் மோட்கள், பனோரமிக் சன்ரூஃப், ஜெனரேட்டிவ் AI மற்றும் பின்வரிசை ரிக்ளைனிங் சீட்கள் போன்ற எலிவேட்டில் இல்லாத பல நவீன அம்சங்களை பயான் தன்னகத்தே கொண்டுள்ளது.
-
பெரிய கர்வ்டு திரைகள் மற்றும் பிரம்மாண்ட பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றின் காரணமாக, பயானின் கேபின் கூடுதல் ஆடம்பர உணர்வைத் தருகிறது.
பவர்டிரெயின்
| மாடல் |
ஹோண்டா எலிவேட் |
ஹூண்டாய் பேயான் |
||
| எஞ்சின் |
|
|
||
| பவர் |
121 PS |
115 PS |
||
| டார்க் |
145 Nm |
144 Nm |
||
| டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / CVT |
6-ஸ்பீடு MT / CVT |
MT - மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT - கன்டினியூவஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமேட்டிக்)
-
இரண்டு மாடல்களிலும் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஒரே மாதிரியான கியர்பாக்ஸ் தேர்வுகளே உள்ளன. இருப்பினும், பவர் அளவீடுகளில் எலிவேட் பயானை விட அதிகமாக உள்ளது.

-
உற்சாகமாக கார் ஓட்ட விரும்புவோருக்கு எலிவேட்டின் பவர்டிரெயின் மிகவும் பிடிக்கும். அதிக பவர் வெளியீடு மற்றும் இன்ஜினை அதிவேகத்தில் முடுக்கும்போது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் குணம் இதற்கு கூடுதல் பலம்.

-
மறுபுறம், பயானின் இன்ஜின் மிக அமைதியான தன்மையுடன், அதிக ரிஃபைன்மென்ட் மற்றும் நகரப் பகுதிகளில் எளிதாகக் கையாளக்கூடிய சிறப்பான லோ-எண்ட் டிரைவிங் திறனையும் வெளிப்படுத்துகிறது.
-
இரண்டு கார்களிலுமே தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் CNG ஆப்ஷன் தற்போதைக்கு இல்லை. என்றாலும், பயானுக்கான CNG பவர்டிரெயின் 2027 ஜனவரியில் அறிமுகமாகும் என்பதை ஹூண்டாய் உறுதி செய்துள்ளது.
கார்பார்வையின் கருத்து...
மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் மைல்ட்-ஹைபிரிட் மாடல்களுக்கு மத்தியில் எலிவேட் மற்றும் பயான் இரண்டும் இந்த செக்மென்ட்டின் மிக இயல்பான நேரடி தேர்வுகளாக உள்ளன. இதில் எலிவேட்டுக்கு பலம் சேர்ப்பது ஹோண்டா பிராண்டுதான்; சிறந்த சஸ்பென்ஷன் சொகுசு, நீண்ட கால நம்பகத்தன்மை மற்றும் அவ்வப்போது உற்சாகமாக ஓட்டுவதற்கு கைகொடுக்கும் இன்ஜின் இதன் சிறப்பம்சங்கள். பயானுடன் ஒப்பிடுகையில் எலிவேட் பெரிய தோற்றத்தையும் அதிக இடவசதி கொண்ட கேபினையும் கொண்டுள்ளது.

அதே நேரத்தில், பிரீமியம் கேபின், மிக நீண்ட அம்சங்களின் பட்டியல் மற்றும் கேபின் அமைதி ஆகியவற்றில் பயான் அதிக புள்ளிகளைப் பெறுகிறது. வென்யூ மற்றும் கிரெட்டா ஆகியவற்றுக்கு இடைப்பட்ட விலைப் பிரிவை நிரப்பவே பயான் குறைவான விலையில் திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும், இரண்டும் தத்தமது தனித்துவமான பலங்களைக் கொண்டுள்ளன; வாங்கும் விலைக்கு ஏற்ற சிறந்த மதிப்பை வழங்குகின்றன.
இவற்றில் உங்கள் விருப்பத்திற்கு எது சரியாகப் பொருந்துகிறது? உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.
கவனிக்க வேண்டிய பிற கார்கள்:
-
ஹூண்டாய் கிரெட்டா: நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களில் முதன்மையாக இருப்பதற்கு நியாயமான பல காரணங்கள் உண்டு. சொகுசு, நவீன வசதிகள், பாதுகாப்பு மற்றும் ஆற்றல் என அனைத்திலும் மிகச் சிறந்த சமநிலையைத் தருகிறது.
-
கியா செல்டோஸ்: இந்த பிரிவிலேயே பெரிய அளவிலான SUV மாடல்களில் ஒன்று என்பதால், கேபினில் அதிக இடவசதியையும் பிரீமியம் உணர்வையும் தருகிறது. மூன்று இன்ஜின் தேர்வுகளுடன் ஏராளமான வசதிகளையும் கொண்டுள்ளது.
-
ரெனால்ட் டஸ்டர் / நிஸான் டெக்டான்: ஓட்டுவதற்கு அலாதி மகிழ்ச்சியைத் தரும் ஐரோப்பிய வடிவமைப்பு கொண்ட SUV-கள். இடவசதியில் முதலிடம் இல்லையென்றாலும், ஏராளமான அம்சங்களுடனும் ஸ்போர்ட்டியான டிரைவிங் உணர்வுடனும் வருகின்றன.
-
டாடா சியரா: ரெட்ரோ மற்றும் நவீன பாணி இணைந்த டாடாவின் இந்த SUV, இணையற்ற ரோடு பிரசன்ஸைக் கொண்டுள்ளது. டீசல் உட்பட மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் நவீன அம்சங்களுடன் கிடைக்கிறது.
-
மாருதி விக்டோரிஸ்: சிறந்த நம்பகத்தன்மை, வலுவான சர்வீஸ் நெட்வொர்க், சிறந்த இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் அழகான தோற்றம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த SUV மாடல்.
-
மாருதி கிராண்ட் விட்டாரா / டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர்: அனைத்து நவீன வசதிகளும் கொண்ட சிக்கலில்லாத ஒரு காம்பாக்ட் SUV வேண்டும் என்பவர்களுக்கான இரட்டை தேர்வுகள். அதிக மைலேஜ் தரும் மிகச் சிறந்த ஹைபிரிட் என்ஜின்களுடன் கிடைக்கின்றன.
-
ஃபோக்ஸ்வேகன் டைகுன் / ஸ்கோடா குஷாக்: கார் ஓட்டுவதை விரும்புவோருக்கான ஜெர்மன் தயாரிப்புகள். கேபின் இடவசதியும் சில அம்சங்களும் சற்று குறைவாக இருந்தாலும், தங்களின் ஆற்றல், ஸ்டைல் மற்றும் டிரைவிங் டைனமிக்ஸால் தனித்து நிற்கின்றன.
-
டாடா கர்வ்: தனித்துவமான ஸ்டைலுடன் வித்தியாசமான ஒரு கூபே பாணி SUV-யை எதிர்பார்ப்பவர்களுக்கான சிறந்த முயற்சி. மூன்று இன்ஜின் தேர்வுகள் மற்றும் ஏராளமான வசதிகளுடன் வருகிறது.
-
எம்ஜி ஆஸ்டர்: இந்த பிரிவில் பல காலம் புழக்கத்தில் இருக்கும் மாடல் என்றாலும், ஆடம்பரமான கேபின் உணர்வு மற்றும் சிறந்த விலை மதிப்பைக் கொண்டுள்ள ஒரு கார்.
-
சிட்ரோன் ஏர்கிராஸ்: 5+2 சீட்டர் அமைப்பைக் கொண்ட மற்றொரு சிறந்த மாடல்; மிகச் சிறந்த பேலன்ஸ்டு சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் சக்திவாய்ந்த பவர்டிரெயின் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது.














