• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    இன்னோவா பிரியர்களுக்கு ஷாக்! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா விலை உயர்வு – புதிய விலை என்ன?

    இந்த விலை உயர்வுக்கு மத்தியிலும், MPV பிரிவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவுக்கான மவுசு குறையாமல் தொடர்ந்து அதிக தேவையில் இருந்து வருகிறது.

    ninad
    ninad
    published on நவ 05, 2026 16:59 ist
    info icon
    published onNov 05, 2026 16:59 IST
    last updated onNov 05, 2026 16:59 IST
    55 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Toyota Innova Crysta Price Increase

    எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

    இந்தியாவில் எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரை வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? அப்படியென்றால், இனி நீங்கள் கூடுதலாகச் சில ஆயிரங்களைச் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாகத் திகழும் இன்னோவா க்ரிஸ்டாவின் விலையை டொயோட்டா நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது.

    ஒவ்வொரு வேரியண்ட்டின் புதிய விலை விவரங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்:

    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா விலை நிலவரம்

    வேரியண்ட்

    பழைய விலை

    புதிய விலை

    வித்தியாசம்

    GX 7-சீட்டர்/ GX 8-சீட்டர்

    Rs 19.72 லட்சம்/ Rs 19.77 லட்சம்

    Rs 19.95 லட்சம்/ Rs 20.02 லட்சம்

    + Rs 23,000

    GX+ 7-சீட்டர்/ GX+ 8-சீட்டர்

    Rs 21.15 லட்சம்/ Rs 21.20 லட்சம்

    Rs 21.41 லட்சம்/ Rs 21.48 லட்சம்

    + Rs 26,000

    VX 7-சீட்டர்/ 8-சீட்டர்

    Rs 24.93 லட்சம்/ Rs 24.98 லட்சம்

    Rs 25.24 லட்சம்/ Rs 25.31 லட்சம்

    + Rs 31,000

    ZX 7-சீட்டர்

    Rs 26.63 லட்சம்

    Rs 26.96 லட்சம்

    + Rs 33,000

    *அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்

    • இன்னோவா க்ரிஸ்டா GX வேரியண்ட்டின் விலை ₹23,000 உயர்த்தப்பட்டு, தற்போது ₹19.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னோவா க்ரிஸ்டாவின் ஆரம்ப விலையே முன்பை விடக் கூடுதலாகியுள்ளது.

    • 7-சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் டாப்-எண்ட் ZX வேரியண்ட்டின் விலை ₹33,000 வரை உயர்த்தப்பட்டு, தற்போது ₹26.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

    ஓவர்வியூ பார்வை

    இன்னோவா க்ரிஸ்டா இப்போதும் தனக்கே உரிய பாரம்பரிய MPV தோற்றத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஸ்லீக்கான ப்ரொஜெக்டர் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் முன்பக்கத்தில் சில்வர் இன்சர்ட்டுகளுடன் கூடிய பிரம்மாண்டமான கிரில் ஆகியவை இந்த காருக்கு கம்பீரமான லுக்கைத் தருகின்றன. பாடி கலரிலான டோர் ஹேண்டில்கள், சில்வர் ஃபினிஷ் அலாய் வீல்கள் மற்றும் வழக்கமான கனெக்டட் லைட் ட்ரெண்டில் சிக்காமல் தனித்துவமாகத் தெரியும் ரேப்-அரவுண்ட் டெயில்லேம்ப்களுடன் சிறப்பான MPV வடிவத்தைக் கொண்டுள்ளது.

    Toyota Innova Crysta

    உள்பகுதியைப் பொறுத்தவரை, டூயல்-டோன் இன்டீரியர், டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களில் உள்ள ஃபாக்ஸ் வுட் இன்சர்ட்டுகள் காருக்குள் ஒரு பிரிமியம் உணர்வைக் கொடுக்கின்றன. வசதிகளைப் பொருத்தவரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியுடன் கூடிய 8 இன்ச் இன்போடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், 8-வே பவர்டு டிரைவர் சீட் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    Toyota Innova Crysta

    பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தமட்டில், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், EBD வசதியுடன் கூடிய ABS, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX சைல்ட் சீட் மவுண்ட்கள் போன்ற பல அம்சங்களை டொயோட்டா இதில் கொடுத்துள்ளது.

    Toyota Innova Crysta

    பவர்டிரெயின் விவரங்கள்

    இன்னோவா க்ரிஸ்டா காரில் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டு, அது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

    இதன் முழுமையான விவரக்குறிப்புகள்:

    எஞ்சின்

    2.4-லிட்டர் டீசல்

    பவர்

    150 PS

    டார்க்

    343 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT

    MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன்

    போட்டியாளர்கள்

    மிகவும் பிரபலமான MPV மாடலான இந்த இன்னோவா க்ரிஸ்டா, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸுக்கு ஒரு பட்ஜெட் மாற்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மாருதி சுஸுகி எர்டிகா, XL6, டொயோட்டா ரூமியான் மற்றும் கியா கேரன்ஸ் போன்ற சந்தையில் உள்ள பிற பிரபல மாடல்களுடனும் பலமாகப் போட்டியிடுகிறது.

    கார்தேக்கோவின் கருத்து

    இந்த புதிய விலை உயர்வு இன்னோவா க்ரிஸ்டாவை சற்றே கூடுதல் விலை கொண்ட காராக மாற்றியிருந்தாலும், இந்த உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலேயே உள்ளது. தனது அசாத்தியமான பில்ட் குவாலிட்டி, மார்க்கெட்டில் இருக்கும் வலுவான ரீசேல் வேல்யூ மற்றும் திறமையான டீசல் இன்ஜின் மூலம் இந்த விலைக்குரிய மதிப்பை இந்த MPV தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

    அதிக இடவசதி, நீண்ட தூர பயணங்களில் சொகுசு மற்றும் குறைவான பராமரிப்புச் செலவை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரிமியம் அனுபவத்தை வழங்க நினைக்கும் டிராவல்ஸ் உரிமையாளர்களுக்கும் இது ஒரு தலைசிறந்த தேர்வாகும்.

    உங்களின் சாய்ஸ் இன்னோவா க்ரிஸ்டாவா அல்லது இன்னோவா ஹைகிராஸா? உங்கள் பதிலை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்!
     

    was this article helpful ?

    ninad
    Ninad Mestry is an automotive engineer, dieselhead, and lifelong automotive enthusiast with a passion for cars, motorcycles, and the technology behind them. An engineering graduate, he is particularly interested in vehicle engineering, emerging mobility solutions, and the stories that make every machine unique. When he\'s not exploring the latest developments in the automotive world, he enjoys finding new ways to share automotive experiences and insights with fellow enthusiasts. Whether it\'s a rugged SUV, a practical commuter, a cutting-edge EV, or a classic motorcycle, Ninad is always eager to learn more and dive deeper into all things automotive.மேலும் படிக்க

    Write your Comment on Toyota இனோவா Crysta

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எம்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    • denza d9
      denza d9
      Rs.1 - 1.10 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • denza z9 ஜிடி
      denza z9 ஜிடி
      Rs.1.25 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • மஹிந்திரா தார் இ
      மஹிந்திரா தார் இ
      Rs.25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw chery icar v23
      jsw chery icar v23
      Rs.20 - 25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw jaecoo j5 இவி
      jsw jaecoo j5 இவி
      Rs.20 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience