இந்த தீபாவளிக்கு லாங் டிரைவ் பிரியர்களுக்கு ஏற்ற 5 லாங் ரேஞ்ச் EV-கள் எது தெரியுமா ?
அதிக டிரைவிங் ரேஞ்ச் பெற எப்போதும் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. இதோ ரூ. 30 லட்சத்திற்குள் 700 கி.மீ வரை அதிக ரேஞ்ச் வழங்கும் ஐந்து சிறந்த எலக்ட்ரிக் கார்கள்.
- ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவின் எலக்ட்ரிக் கார் சந்தை குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. வெவ்வேறு விலைப் பிரிவுகளில் அதிக ரேஞ்ச் தரும் EV-களை வழங்குவதில் இந்திய நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் இப்போது முன்னணியில் உள்ளனர். இந்த பண்டிகை காலத்தில் ரூ.30 லட்சத்திற்குள் EV வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய முன்னணி பிராண்டுகளின் பல சிறந்த ஆப்ஷன்கள் உள்ளன. அதிக ரேஞ்ச், அட்டகாசமான ஸ்டைலிங் மற்றும் பல நவீன அம்சங்களுடன் கூடிய எலக்ட்ரிக் SUV மாடல்களை இந்த நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலான போட்டி, இந்திய பிராண்டுகள் நாட்டின் EV சூழலை எவ்வாறு வலுப்படுத்தி வருகின்றன என்பதையும், வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட மிகச் சிறந்த எலக்ட்ரிக் கார்களை எவ்வாறு வழங்கி வருகின்றன என்பதையும் காட்டுகிறது.
இந்த பண்டிகை காலத்தில் அதிக டிரைவிங் ரேஞ்ச் தான் உங்களது முதல் தேர்வாக இருந்தால் ரூ.30 லட்சத்திற்குள் அதிக ரேஞ்ச் தரும் சிறந்த 5 EV மாடல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த கார்களைப் பற்றிய விரிவான விவரங்கள் இதோ:
மஹிந்திரா BE 6 ஸ்போர்ட்டெக்
பேட்டரி பேக்: 79 kWh
கிளைம்டு ரேஞ்ச்: 708 கிமீ
| வேரியண்ட் |
விலை |
| பேக் FE 79 kWh |
ரூ. 24.45 லட்சம் |
| பேக் த்ரீ பிளஸ் 79 kWh |
ரூ. 24.95 லட்சம் |
| பேக் ஃபோர் 79 kWh |
ரூ. 26.95 லட்சம் |
| பேக் FE ஃபோர் 79 kWh |
ரூ. 26.95 லட்சம் |
| லாஞ்ச் எடிஷன் 79 kWh |
ரூ. 26.95 லட்சம் |
அதிக ரேஞ்ச் தரும் கார்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது மஹிந்திரா BE 6 ஸ்போர்ட்டெக் மாடல் ஆகும். XEV 9S காரில் உள்ளது போலவே, இந்த BE 6 ஸ்போர்ட்டெக் மாடலிலும் பெரிய 79 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 700 கி.மீ-க்கும் அதிகமான டிரைவிங் ரேன்ஜை வழங்கி அசத்துகிறது.

இந்த காரின் மோட்டார் 285 PS பவரையும் 380 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதன் காம்பாக்ட் அளவு தான் வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் முக்கிய காரணியாக உள்ளது, இது சிட்டி டிரைவிங்கிற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். இந்த காரோடு 11.2 kW சார்ஜர் வேண்டும் என்றால், வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.75,000 செலவிட வேண்டும்.
இந்த EV-ன் அனைத்து வேரியண்டுகளும் ரூ.30 லட்சத்திற்குள் கிடைக்கின்றன. மேலும் இதில் சிறிய அளவிலான 59 kWh மற்றும் 70 kWh பேட்டரி ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இந்த பட்டியலில் உள்ள அனைத்து கார்களையும் விட மிகவும் வித்தியாசமான மற்றும் அட்ராக்டிவ் டிசைனை BE 6 ஸ்போர்ட்டெக் கொண்டுள்ளது. இது சாலையில் செல்லும்போது தனித்துத் தெரியும். கவரும் எக்ஸ்டீரியர் லுக் மட்டுமின்றி நவீன டெக்னாலஜி நிறைந்த கேபின் மற்றும் ஏராளமான அம்சங்களையும் இது வழங்குகிறது.
மஹிந்திரா XEV 9S
பேட்டரி பேக்: 79 kWh
கிளைம்டு ரேஞ்ச்: 679 கிமீ
| வேரியண்ட் |
விலை |
| பேக் One Above 79 kWh (7-seater) |
ரூ. 22.65 லட்சம் |
| பேக் Two Above 79 kWh (7-seater) |
ரூ. 25.95 லட்சம் |
| பேக் Two Above 79 kWh (6-seater) |
ரூ. 26.15 லட்சம் |
| பேக் Three 79 kWh (7-seater) |
ரூ. 27.85 லட்சம் |
| பேக் Three 79 kWh (6-seater) |
ரூ. 28.05 லட்சம் |
| பேக் Three Above 79 kWh (7-seater) |
ரூ. 29.95 லட்சம் |
அடுத்ததாக உள்ள மஹிந்திரா XEV 9S, இந்த பட்டியலில் மூன்று வரிசை சீட்களைக் கொண்ட ஒரே EV ஆகும். XEV 9S மாடல் XUV 7XO-வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், பாரம்பரிய SUV-களைப் போன்ற இதன் பல்கியான மற்றும் பாக்ஸி லுக் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கிறது. சார்ஜிங் நிறுத்தம் ஏதுமின்றி நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய 7-சீட்டர் EV தேவைப்படுபவர்களுக்கு XEV 9S ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

சிறிய 59 kWh மற்றும் 70 kWh பேட்டரி ஆப்ஷன்களிலும் இது கிடைக்கிறது என்றாலும், 679 கி.மீ வரை அதிக ரேஞ்ச் பெற பெரிய 79 kWh பேட்டரி பேக்கை தேர்வு செய்வது சிறந்தது. இந்த பட்டியலில் இரண்டாவது அதிகபட்ச ரேஞ்ச் தரும் காராக இது உள்ளது. இதன் பவர்டிரெயின் 285 PS பவரையும் 380 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது, இது முழு குடும்பத்துடனும் லக்கேஜ்களுடனும் சிரமமின்றி பயணிக்கப் போதுமானது. தேர்வுசெய்யப்பட்ட வேரியண்டுகளில் கூடுதலாக ரூ.20,000 கட்டணத்தில் கேப்டன் சீட்களையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் 11.2 kW சார்ஜரை அனைத்து வேரியண்டுகளிலும் ரூ.75,000 கூடுதல் விலையில் பெற முடியும்.
டாடா சியாரா EV
பேட்டரி பேக்: 75 kWh
கிளைம்டு ரேஞ்ச்: Up To 665 கிமீ
| வேரியண்ட் |
விலை |
| Adventure 75 RWD |
ரூ. 22.19 லட்சம் |
| Empowered 75 RWD |
ரூ. 23.79 லட்சம் |
| Empowered A 75 RWD |
ரூ. 24.79 லட்சம் |
| Empowered A 75 AWD |
ரூ. 25.99 லட்சம் |
பெரிய 75 kWh பேட்டரி பேக் ஆப்ஷனில் ரூ.22.19 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் டாடா சியரா EV, இந்த பட்டியலின் மிகவும் மலிவான கார் ஆகும். சியரா EV பாரம்பரியமான பாக்ஸி சிலுவட்டைக் கொண்டுள்ளதுடன், 1991-ல் வந்த புகழ்பெற்ற டாடா சியராவின் டிசைன் எலிமென்ட்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடர்ன் டிசைன், ஏராளமான அம்சங்களுடன் இணைந்து இதை ஒரு சிறந்த காராக மாற்றுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் சியரா EV மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

சியரா EV மாடல் சிறிய 63 kWh பேட்டரி பேக் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. RWD வேரியண்டுகளில் உள்ள 75 kWh பேட்டரி பேக் 209 PS பவரையும் 315 Nm டார்க்கையும் வழங்கி, 665 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் தருகிறது. அதேசமயம் இதன் டாப்-ஸ்பெக் எம்பவர்டு A வேரியண்டில் AWD வசதி பெறலாம், இது 504 Nm வரை வலுவான டார்க் அவுட்புட்டை வழங்குகிறது. ஆனால் இதன் ரேஞ்ச் சற்று குறைந்து 624 கி.மீ ஆக உள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் சார்ஜர் இல்லாத விலையாகும்; ACFC (AC ஃபாஸ்ட் சார்ஜர்) பெற விரும்புவோர் ஒவ்வொரு வேரியண்டிற்கும் கூடுதலாக ரூ.49,000 செலுத்த வேண்டும்.
மஹிந்திரா XEV 9e
பேட்டரி பேக்: 79 kWh
கிளைம்டு ரேஞ்ச்: 656 கிமீ
| வேரியண்ட் |
விலை |
| பேக் Two 79 kWh |
ரூ. 26.50 லட்சம் |
| Cineluxe 79 kWh |
ரூ. 29.35 லட்சம் |
இந்த பட்டியலில் அடுத்ததாக வரும் மஹிந்திரா XEV 9e, சற்றே அதிக விலைகொண்ட ஆப்ஷனாகும். ரூ.30 லட்சம் பட்ஜெட்டிற்குள் பெரிய 79 kWh பேட்டரி பேக் கொண்ட XEV 9e காரை தேர்வு செய்ய இரண்டு வேரியண்டுகள் உள்ளன. மற்ற மாடல்களைப் போலவே, பெரிய 79 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்தி 656 கி.மீ ரேஞ்ச் வழங்கும் இந்த கார், 285 PS பவரையும் 380 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

மஹிந்திரா இந்த XEV 9e மாடலை சிறிய 59 kWh பேட்டரி பேக்கிலும் வழங்குகிறது. ஆனால் அதிக ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் கூபே-SUV வேண்டுமானால் பெரிய பேட்டரி பேக்கையே தேர்வு செய்ய வேண்டும். இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் இந்த காரின் விசாலமான மற்றும் சௌகரியமான கேபின் மற்றும் சாய்வான ரூஃப்லைன் கொண்ட தனித்துவமான கூபே ஸ்டைலிங், காரை ஸ்போர்ட்டியாகவும் கவர்ச்சியாகவும் காட்டுகிறது.
டாடா ஹாரியர் EV
பேட்டரி பேக்: 75 kWh
கிளைம்டு ரேஞ்ச்: 622 கிமீ to 627 கிமீ
| வேரியண்ட் |
விலை |
| Fearless Plus 75 |
ரூ. 25.29 லட்சம் |
| Fearless Plus QWD 75 |
ரூ. 26.79 லட்சம் |
| Empowered 75 |
ரூ. 27.79 லட்சம் |
| Empowered 75 Stealth Edition |
ரூ. 28.54 லட்சம் |
| Empowered QWD 75 |
ரூ. 29.29 லட்சம் |
டாடா நிறுவனத்திலிருந்து இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் இரண்டாவது கார் ஹாரியர் EV. 2025-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஹாரியர் EV, இந்த விலைப்பிரிவில் மிகச் சிறந்த லுக் மற்றும் அதிக அம்சங்கள் கொண்ட கார்களில் ஒன்றாக திகழ்கிறது. ஹாரியர் EV சிறிய 65 kWh பேட்டரி பேக்கிலும் கிடைக்கிறது, ஆனால் அதிகபட்ச ரேஞ்ச் பெறவும், அடிக்கடி சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும் பெரிய 75 kWh பேட்டரி பேக்கை தேர்வு செய்ய வேண்டும்.

அனைத்து 75 kWh வேரியண்டுகளிலும் உள்ள பவர்டிரெயின் 238 PS பவரையும் 315 Nm டார்க்கையும் வழங்கி, 627 கி.மீ வரை ரேஞ்ச் தருகிறது. ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்ட டாப்-ஸ்பெக் எம்பவர்டு QWD வேரியண்டில் டார்க் அளவு 504 Nm ஆக உயர்கிறது, இதன் ரேஞ்ச் RWD மாடலை விட 5 கி.மீ மட்டுமே குறைவாகும். சியராவைப் போலவே இந்த காரின் விலையிலும் சார்ஜர் சேர்க்கப்படவில்லை; ACFC (AC ஃபாஸ்ட் சார்ஜர்) வேரியண்டிற்கு கூடுதலாக ரூ.50,000 கட்டணம் வசூலிக்கப்படும்.
ஹாரியர் EV அதன் வழக்கமான ICE மாடலைப் போன்றே தோற்றமளித்தாலும் அதிக அம்சங்களை வழங்கி சிறந்த வேல்யூ-ஃபார்-மனி ஆப்ஷனாக உள்ளது.
கார்தேக்கோவின் கருத்து...
ரூ.30 லட்சத்திற்குள் அதிக ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் SUV வாங்க விரும்பினால், இந்திய உற்பத்தியாளர்களிடம் தற்போது ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் டிசைன், ஸ்பேஸ் மற்றும் பிராக்டிகாலிட்டியில் மாறுபட்ட அனுபவத்தை தருகின்றன. இருப்பினும், உங்கள் பட்ஜெட், தேவைகள் மற்றும் விருப்பமான கார் பாடி ஸ்டைல் (வழக்கமான SUV சில் அவட், ஸ்போர்ட்டி அல்லது கூபே) ஆகியவற்றைப் பொறுத்தே உங்களுக்கான சரியான காரை முடிவு செய்ய முடியும். ஒரு காரை நீங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தால், அதில் உங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் அடங்கிய மற்றும் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வேரியண்டை தேர்வு செய்வது இறுதிக்கட்ட முடிவாக இருக்கும்.
எனவே, உங்கள் அடுத்த குடும்ப காராக இதில் எந்த EV-யை தேர்வு செய்வீர்கள்? உங்களுக்கு எது மிகவும் முக்கியம் என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கலாம்.
(குறிப்பு: குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்; குறிப்பிடப்பட்டுள்ள ரேஞ்ச் MIDC சான்றளிக்கப்பட்டவை ஆகும்)














