டொயோட்டா கிளான்ஸா: ₹72,000 கூட போட்டு S வேரியண்ட் வாங்கலாமா, வேண்டாமா?கூடுதல் விவரங்கள் இங்கே!
S ஒரு டச் ஸ்கிரீன், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் அதிக வசதி அம்சங்கள் உள்ளன. அதே நேரத்தில் பெட்ரோல் AMT மற்றும் ஃபேக்டர் பிட்டட் சிஎன்ஜி ஆப்ஷனையும் வழங்குகிறது.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
டொயோட்டா கிளான்ஸா மாடலின் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடக்க விலை 6.99 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கிளான்ஸா E, S, G, V மற்றும் V(O) ஆகிய ஐந்து வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் MT, AMT மற்றும் CNG ஆகிய பவர்டிரெயின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
கிளான்ஸா வரிசையின் என்ட்ரி லெவல் மாடலாக E வேரியண்ட் அமைந்துள்ளது. இதன் விலை 6.99 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இந்த விலைக்கு ஏற்றவாறு, அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான முக்கிய வசதிகளையும் அத்தியாவசிய அம்சங்களையும் இந்த பேஸ் வேரியண்ட் நியாயமான அளவில் வழங்குகிறது.
பேஸ் வேரியண்ட்டிற்கு அடுத்தபடியாக S வேரியண்ட் அமைகிறது. இதன் விலை 7.71 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. கூடுதல் விலைக்கு ஏற்ப, இதில் சில கூடுதல் வசதிகள் கிடைப்பதுடன் CNG மற்றும் AMT டிரைவ்ட்ரெய்ன் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன. அப்படி என்றால், அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட பேஸ் வேரியண்ட்டான E-ஐ வாங்குவதா அல்லது கூடுதல் பட்ஜெட்டை ஒதுக்கி S வேரியண்ட்டிற்கு மாறுவதா? இரண்டையும் விரிவாக ஒப்பிட்டுப் பார்த்துவிடலாம்:
விலை விவரம்
| வேரியண்ட் |
பெட்ரோல் |
பெட்ரோல் + CNG |
|||||
| MT |
AMT |
CNG MT |
CNG AMT |
||||
|
ரூ. 6.99 லட்சம் |
- |
- |
- |
|||
|
ரூ. 7.71 லட்சம் |
ரூ. 8.31 லட்சம் |
ரூ. 8.76 லட்சம் |
ரூ. 9.31 லட்சம் |
|||
விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன
புதிய கிளான்ஸாவின் தொடக்க விலை பேஸ் E ட்ரிம்மிற்கு 6.99 லட்சம் ரூபாயாகவும், S வேரியண்ட் வரிசை 7.71 லட்சம் ரூபாயாகவும் தொடங்குகிறது. இரண்டு வேரியண்ட்களிலுமே புதிய 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டுமே வழங்கப்படுகிறது. இருப்பினும், S வேரியண்ட்டில் கூடுதலாக CNG ஆப்ஷனும் கிடைக்கிறது.
இரண்டு வேரியண்ட்களுக்கும் இடையிலான விலை வித்தியாசம் 72,000 ரூபாய் மட்டுமே. பேஸ் வேரியண்ட்டில் மிக அடிப்படையான வசதிகள் மட்டுமே உள்ள நிலையில், கூடுதலாகப் பணம் கொடுத்து அடுத்த வேரியண்ட்டிற்கு அப்கிரேட் ஆவது எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வி நிச்சயம் எழும். அந்த கூடுதல் தொகைக்கு S வேரியண்ட் என்னென்ன சிறப்பம்சங்களை வழங்குகிறது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்:
கிளான்ஸாவின் அனைத்து வேரியண்ட்களின் விரிவான விலை விவரங்களை அறிந்துகொள்ள எங்களின் பிரத்யேகக் கட்டுரையைப் பாருங்கள்.
வெளிப்புற வடிவமைப்பு
டொயோட்டா கிளான்ஸாவின் E மற்றும் S ஆகிய இரண்டு வேரியண்ட்களுமே ஒரே மாதிரியான டிசைன் அம்சங்களைக் கொண்டுள்ளதால் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கின்றன. S வேரியண்ட்டில் பாடி கலர் பாகங்களும் சில கூடுதல் ஸ்டைலிங் அப்டேட்களும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. எனவே பேஸ் மாடலுக்கும் அதற்கு அடுத்த வேரியண்ட்டிற்கும் இடையே பெரிய அளவிலான வெளிப்புற மாற்றங்கள் எதுவும் இல்லை.
முன்பக்க தோற்றம்
முன்பக்க வடிவமைப்பைப் பொறுத்தவரை இரண்டு வேரியண்ட்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டிலுமே புதிய ஸ்போர்ட்டியான பம்பர், க்ளாஸ் பிளாக் மற்றும் க்ரோம் சரவுண்டுகளுடன் கூடிய பெரிய மெஷ் கிரில் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


LED DRLs இல்லாத ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க ஹூட்டிற்கு அருகே உள்ள டொயோட்டா லோகோவுடன் இரண்டு ஹெட்லைட்களையும் இணைக்கும் வகையில் ஒரு மெல்லிய க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களிலுமே ஃபாக் லேம்ப்கள் இல்லை என்றாலும், அவற்றை ஆஃப்டர் மார்க்கெட் ஆக்சஸரீயாகப் பொருத்திக் கொள்வதற்கான வசதிகள் உள்ளன.
பக்கவாட்டு தோற்றம்
பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது இரண்டு மாடல்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தெளிவாகக் கவனிக்க முடிகிறது. இரண்டு வேரியண்ட்களிலுமே ஒரே மாதிரியான பாடி ஷேப், ஷார்க் ஃபின் ஆண்டெனா, முன்பக்க ஃபெண்டரில் புதிய க்ரோம் இன்சர்ட், பெரிய ஜன்னல்கள், மிதக்கும் கூரை போன்ற வடிவமைப்பு மற்றும் வீல் கவர்களுடன் கூடிய 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


E ட்ரிம்மில் A, B மற்றும் C பில்லர்கள் அனைத்தும் பாடி கலரிலேயே வருகின்றன. ஆனால் S ட்ரிம்மில் அவை பிளாக்-அவுட் செய்யப்பட்டு அதிக ஸ்போர்ட்டியான லுக்கைத் தருகின்றன. மேலும், E வேரியண்ட்டில் ஃபெண்டரிலேயே இண்டிகேட்டர்கள், பிளாக் டோர் ஹேண்டில்கள் மற்றும் ORVMகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், S வேரியண்ட்டில் பாடி கலர் டோர் ஹேண்டில்கள் மற்றும் இண்டிகேட்டர்களுடன் கூடிய பாடி கலர் ORVMகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் S வேரியண்ட்டிற்கு கூடுதல் கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தருகின்றன.
பின்பக்க தோற்றம்
பின்பக்க வடிவமைப்பில் மாற்றங்கள் மிகக் குறைவே. இரண்டு வேரியண்ட்களிலுமே C-வடிவ LED டெயில்லைட்கள், மேலே பொருத்தப்பட்ட ஸ்டாப் லேம்ப் மற்றும் பூட்டின் நடுவில் டொயோட்டா லோகோ ஆகியவை இடம் பெற்றுள்ளன.


ஒட்டுமொத்தமாக E மற்றும் S ஆகிய இரண்டிலுமே பின்பக்க வடிவமைப்பும் அதன் அம்சங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன.
கலர் ஆப்ஷன்கள்
|
|
||
|
|
||
| என்டைசிங் சில்வர் |
என்டைசிங் சில்வர் |
||
| கேமிங் க்ரே |
கேமிங் க்ரே |
||
| இன்ஸ்டா ப்ளூ |
இன்ஸ்டா ப்ளூ |
||
| - |
|
||
| - |
|
புதிய டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கிறது. ஆனால் பேஸ் E வேரியண்ட்டில் 4 வண்ணங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அதேநேரம், S வேரியண்ட்டில் கூடுதலாக மேலும் 2 வண்ணங்கள் தேர்வு செய்யக் கிடைக்கின்றன. இதில் டிஜிட்டல் டீல் கிரீன் நிறம் மட்டும் உயர் வேரியண்ட்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு எங்களின் வேரியண்ட் வாரியான கலர் ஆப்ஷன் கட்டுரையைப் பார்க்கலாம்.
உட்புற வடிவமைப்பு
கேபினுக்குள் நுழையும்போது, இரண்டு வேரியண்ட்களுமே ஒரே மாதிரியான டேஷ்போர்டு அமைப்பு மற்றும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியைப் பகிர்ந்து கொள்கின்றன. பேஸ் மாடலை விட S வேரியண்ட்டில் சில கூடுதல் வசதிகள் இருப்பதால் கேபின் சற்று பிரிமியமாக உணர வைக்கிறது; அதைப் பற்றி அடுத்த பகுதியில் விரிவாகக் காண்போம்.


E மற்றும் S ஆகிய இரண்டு வேரியண்ட்களுமே கருப்பு மற்றும் பெய்ஜ் வண்ணக் கலவையிலான டூயல்-டோன் கேபின் தீமைப் பெற்றுள்ளன. இதில் அடுக்கு டேஷ்போர்டு டிசைன், பளபளப்பான க்ளாஸ் பிளாக் பாகங்கள் மற்றும் கதவுப் பகுதிகளில் சாஃப்ட்-டச் ஃபேப்ரிக் டிரிம்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சீட்களும் கருப்பு மற்றும் பெய்ஜ் வண்ண ஃபேப்ரிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு வேரியண்ட்களிலுமே 3-ஸ்போக் ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் இருந்தாலும், S வேரியண்ட்டில் ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. பேஸ் E வேரியண்ட்டின் பெரிய குறைபாடு என்னவென்றால், அதில் முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இல்லாததே ஆகும். இதனால் டேஷ்போர்டின் நடுப்பகுதி காலியாக இருந்து, முழுமையற்ற தோற்றத்தை அளிக்கிறது.


பயன்பாடு மற்றும் இருக்கை வசதிகளைப் பொறுத்தவரை, அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 60:40 ஸ்பிளிட் ரியர் சீட்கள் என இரண்டு வேரியண்ட்களும் சம பலத்துடன் விளங்குகின்றன. S வேரியண்ட்டில் ஸ்லைடிங் வசதி கொண்ட முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், ரியர் AC வென்ட்கள் மற்றும் ரியர் பார்சல் ஷெல்ஃப் போன்ற கூடுதல் சௌகரியங்கள் உள்ளன. இருப்பினும், இரண்டு வேரியண்ட்களிலுமே பின்பக்க நடுப்பகுதி ஆர்ம்ரெஸ்ட் மற்றும் சீட்டின் பின்பக்க பாக்கெட்டுகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. அதேசமயம், பின்பக்க இருக்கையில் இரண்டு பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யும் அளவுக்கு போதுமான நீ ரூம், ஹெட்ரூம் மற்றும் ஷோல்டர் ரூம் இடவசதி மிகச் சிறப்பாக உள்ளது.
| விரிவான புகைப்படத் தொகுப்பு: டொயோட்டா கிளான்ஸாவின் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பை இன்னும் நெருக்கமாகப் பார்க்க விரும்பினால் எங்களின் விரிவான புகைப்பட கேலரியைப் பார்வையிடுங்கள். |
வசதிகள் மற்றும் அம்சங்கள்
கிளான்ஸாவின் பேஸ் E வேரியண்ட்டில் மிகக் குறைந்த வசதிகளே உள்ளன என்றாலும் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான முக்கிய அம்சங்கள் இதில் விடுபடவில்லை. அதேநேரம் S வேரியண்ட் காரின் அனுபவத்தை முழுமையாக்கும் சில கூடுதல் நவீன அம்சங்களை வழங்குகிறது.


டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட மேனுவல் ஏர் கண்டிஷனிங், கீலெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங், டிரைவர் பக்க ஒன்-டச் அப்/டவுன் வசதியுடன் கூடிய அனைத்து பவர் விண்டோக்கள், பவர் ஸ்டீயரிங், டில்ட் அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் வீல், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்கள், மேனுவல் டே/நைட் IRVM, MID உடன் கூடிய அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர் ஷிப்ட் இண்டிகேட்டர், முன்பக்க 12V பவர் சாக்கெட் மற்றும் 60:40 ஸ்பிளிட் பின்பக்க இருக்கைகள் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. எனினும் பேஸ் மாடலில் பல முக்கிய வசதிகள் இல்லை என்பதை மறுக்க முடியாது.
S வேரியண்ட்டில் இந்த வசதிகளுடன் சேர்த்து வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay வசதி கொண்ட 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல்கள், ரியர் AC வென்ட்கள், எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ORVMகள், முன்பக்க USB சாக்கெட் மற்றும் பின்பக்க ஃபாஸ்ட்-சார்ஜிங் USB போர்ட் ஆகியவை கூடுதலாகக் கிடைக்கின்றன. இவை கேபினை பேஸ் மாடலை விட பிரீமியமாக மாற்றுகின்றன.
ஒவ்வொரு வேரியண்ட்டிலும் உள்ள சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரங்களையும் அறிய, எங்களின் வேரியண்ட் விளக்கக் கட்டுரையைப் படிக்கவும்.
பாதுகாப்பு வசதிகள்
பாதுகாப்பைப் பொறுத்தவரை, E மற்றும் S ஆகிய இரண்டு வேரியண்ட்களுமே பேஸ் மாடலிலிருந்தே ஒரே மாதிரியான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. 6 ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, பிரேக் அசிஸ்ட், ESP, ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார்கள், ரியர் டிஃபாகர், சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், சீட்பெல்ட் ரிமைண்டர், சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர், அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட் மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.
S வேரியண்ட்டில் பாதுகாப்புக்காக கூடுதலாக TPMS வசதி மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது; மற்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இரண்டு வேரியண்ட்களிலும் சமமாகவே உள்ளன.
பவர்டிரெயின் விவரங்கள்
புதிய டொயோட்டா கிளான்ஸா ஒரே ஒரு என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது; அது புதிய 1.2-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆகும். E மற்றும் S ஆகிய இரண்டு வேரியண்ட்களிலுமே இந்த புதிய என்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், பேஸ் E வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும்; ஆனால் S வேரியண்ட்டில் ஃபேக்டரி-ஃபிட்டட் CNG ஆப்ஷனுடன், பெட்ரோல் மற்றும் CNG ஆகிய இரண்டுக்குமே AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கிடைக்கிறது.

கிளான்ஸாவின் என்ஜின் விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்:
| எஞ்சின் | 1.2-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.2-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் + CNG |
|
|
3 |
3 |
|
| பவர் |
83 PS |
70 PS |
|
| டார்க் |
112 Nm |
102 Nm |
|
| டிரான்ஸ்மிஷன் |
5-speed MT / 5-speed AMT |
5-speed MT / 5-speed AMT |
|
|
23.80 kmpl (MT) / 24.77 kmpl (AMT) |
33.61 km/kg (MT) / 34.47 km/kg (AMT) |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், AMT- ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்
வேரியண்ட் வாரியான பவர்டிரெயின் ஆப்ஷன்கள் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள இந்தச் செய்தியைப் படிக்கவும்.
போட்டியாளர்கள்
டொயோட்டா கிளான்ஸா மாடலானது பிரீமியம் சப்-4-மீட்டர் ஹேட்ச்பேக் பிரிவில் மாருதி சுஸூகி பலேனோ, ஹூண்டாய் i20 மற்றும் டாடா அல்ட்ராஸ் போன்ற நேரடி கார்களுடன் போட்டியிடுகிறது. மேலும் இதே விலை வரம்பில் உள்ள மாருதி சுஸூகி ஃபிரான்க்ஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைஸர், டாடா பன்ச், மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் போன்ற மாடல்களுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது.
கார்தேக்கோவின் பார்வை...
டொயோட்டா கிளான்ஸாவின் பேஸ் E வேரியண்ட் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் வெளிப்புறத்தில் நல்ல தோற்றத்தையும் பெற்றுள்ளது. ஆனால் போதுமான வசதிகள் இல்லாத அதன் அடிப்படை கேபின், ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக்கை வாங்குவோருக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடும். இந்த இடத்தில்தான் கூடுதல் வசதிகளுடனும் நடைமுறைப் பயன்பாடுகளுடனும் S வேரியண்ட் முன்னிலை பெறுகிறது.

கூடுதலாக 72,000 ரூபாய் செலவழித்தால் S வேரியண்ட்டில் 7-இன்ச் டச்ஸ்கிரீன், நான்கு ஸ்பீக்கர்கள், எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ORVMகள் மற்றும் பின்பக்க AC வென்ட்கள் ஆகியவை கிடைக்கின்றன. அத்துடன் AMT கியர்பாக்ஸ் மற்றும் ஃபேக்டரி-ஃபிட்டட் CNG தேர்வுகள் கிடைப்பது இதை ஒரு முழுமையான காராக மாற்றுகிறது. இந்த கூடுதல் வசதிகளைக் கணக்கில் கொண்டால் E வேரியண்ட்டை விட கொடுக்கப்படும் கூடுதல் விலை நியாயமானதே. காரை நீண்ட காலம் வைத்திருக்க திட்டமிட்டிருந்தால் தொடக்கத்திலிருந்தே இந்த வசதிகள் இருப்பது உங்களுக்குப் பெரிய திருப்தியைத் தரும்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் அடிப்படை வசதிகள் மட்டுமே போதும் என்று நினைப்பவர்களுக்கு 6.99 லட்சம் ரூபாய் விலையுள்ள கிளான்ஸா E சிறந்த தேர்வு. ஆனால் காரை வாங்கிய பிறகு வெளியில் பல ஆக்சஸரீஸ்களைப் பொருத்த வேண்டியிருக்கும். அதேநேரம் உங்களால் பட்ஜெட்டை 7.71 லட்சம் ரூபாய் வரை நீட்டிக்க முடியும் என்றால் அதிக சௌகரியமும் தேர்வுகளும் வழங்கும் S வேரியண்ட்டையே நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
இந்த இரண்டு வேரியண்ட்களில் உங்கள் தேர்வு எதுவாக இருக்கும்? கீழே உள்ள கமெண்ட் பிரிவில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!














