சோதனையின் போது கேமராவில் சிக்கிய மஹிந்திரா BE 07 ! புதிய லைட்டிங் லுக் உடன் மிரட்டும் டிசைன்
ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் பார்க்கையில் BE 07 கூர்மையான தோற்றமுடைய எலக்ட்ரிக் SUV ஆக இருப்பது தெரிய வருகிறது.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
சமீபத்தில் புதிய மஹிந்திரா தார் OG மாடலை களமிறக்கிய மஹிந்திரா நிறுவனம், தனது அடுத்தகட்ட முக்கிய கார்களை வரிசையாக அறிமுகப்படுத்த தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த வரிசையில் பல முக்கிய எஸ்யூவிகள் உள்ள நிலையில், கர்நாடகாவில் முழு தயாரிப்பு நிலைக்கு இணையான தோற்றத்தில் BE 07 சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் போது கேமராவில் சிக்கியுள்ளது. BE 6 மாடலுக்கு மேலான இடத்தில் நிலைநிறுத்தப்பட உள்ள இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி, 2027-ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்பை படங்களில் இருந்து நமக்கு தெரியவரும் முக்கிய விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
வெளிப்புறத் தோற்றத்தில் தெரிவது என்ன?
சமீபத்தில் வெளியான ஸ்பை படங்களில் BE 07 எஸ்யூவியானது அடர்த்தியான ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்டிருந்தாலும், விற்பனைக்கு தயாராக உள்ள இறுதி வடிவில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதற்கு முன்பு சோதனை செய்யப்பட்ட போது இருந்ததை விட, தற்போது இதன் வடிவமைப்பு சார்ந்த கூடுதல் நுணுக்கங்களை தெளிவாகக் கவனிக்க முடிகிறது.

BE 6 மாடலைப் போலவே BE 07 காரும் மிகவும் ஷார்ப்பான மற்றும் மாடர்ன் தோற்றத்தைக் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவியாகவே உருவாகி வருகிறது. இதன் முகப்பில் பெரிய அளவிலான C-வடிவ DRL இடம்பெற்றுள்ளதுடன், அந்த DRL-ன் மேற்பகுதிக்கு கீழே நேர்த்தியாக எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பகுதி முழுவதுமாக மூடப்பட்ட பேனலாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பேட்டரிகளை குளிர்விப்பதற்காக பம்பரின் கீழ்பகுதியில் சிறிய அளவிலான ஏர் டேம் கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டு வடிவமைப்பைப் பொருத்தவரை சாய்வான விண்ட்ஸ்கிரீன் மற்றும் பாக்ஸி தோற்றத்துடன் அச்சு அசல் மஹிந்திராவின் கம்பீரமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. மற்ற மஹிந்திரா எஸ்யூவிகளில் இருப்பதை விட சற்று வித்தியாசமாக மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் கார்களில் வருவது போல வெளியே நீட்டிக்கொள்ளும் வகையிலான ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ரூஃப் பகுதியோடு அழகாக ஒருங்கிணைக்கப்பட்ட ரூஃப் ரெயில்கள் மற்றும் பெரிய 5-ஸ்போக் அலாய் வீல்கள் காருக்கு ஒரு முரட்டுத்தனமான ஸ்டான்ஸை தருகின்றன. மேலும் காரின் இடதுபுற ரியர் ஃபெண்டரில் பேட்டரி சார்ஜிங் போர்ட் அமைந்திருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

பின்பகுதியைப் பார்த்தால் முன்பக்கத்தைப் போலவே C-வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள் மூலம் அதே டிசைன் ஸ்டைல் தொடர்கிறது. சற்று பெரியதாகத் தெரிந்தாலும் காரின் வடிவமைப்புக்கு கச்சிதமாகப் பொருந்தும் கிளாம்ஷெல் போன்ற பூட் லிட் இதில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. உருமறைப்பு ஸ்டிக்கர்கள் ஏதுமின்றி இதன் அசல் தயாரிப்பு வடிவத்தைப் பார்க்கும்போதுதான் இதன் உண்மையான தோற்றம் எந்தளவுக்கு வெளிப்படுகிறது என்பது தெரியவரும். மேலும், டிஜிட்டல் IRVM-க்கான கேமரா மற்றும் ரியர் ஸ்பாய்லரின் அடியில் புத்திசாலித்தனமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள ரியர் வைப்பர் ஆகியவையும் காரின் பின்பகுதியில் தென்படுகின்றன.
எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்
மஹிந்திராவின் பிற பிரீமியம் கார்களைப் போலவே, BE 07 மாடலிலும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் தாராளமாக வாரி வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதன்படி, டேஷ்போர்டில் மூன்று ஸ்கிரீன்கள் கொண்ட செட்டப், வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், இரண்டு போன்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும் டூயல் வயர்லெஸ் சார்ஜர், கீலெஸ் என்ட்ரி, அட்ஜஸ்ட் மற்றும் வென்டிலேஷன் வசதி கொண்ட முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட், நம் விருப்பப்படி மாற்றிக்கொள்ளும் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் மிகச் சிறந்த தரத்திலான Harman-Kardon சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

*விளக்கப்படமாக BE 6 ஸ்போர்ட்டெக் படம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பிலும் மஹிந்திரா எந்த சமரசமும் செய்யாது என்றே நம்பலாம். இதில் பல ஏர்பேக்குகள், EBD உடன் இணைந்த ABS, 360-டிகிரி கேமரா, முன்புறம், பக்கவாட்டு மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், Level-2 ADAS, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ESC மற்றும் ஆட்டோ ஹில்-ஹோல்டு வசதியுடன் கூடிய EPB போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படலாம். மஹிந்திராவின் பெரும்பாலான எஸ்யூவிகள் பாதுகாப்பு கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள நிலையில், BE 07 மாடலும் அதே தரத்தை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.
பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் விவரங்கள்
மஹிந்திராவின் பிற போர்ன்-எலெக்ட்ரிக் மாடல்களின் அடிப்படை கட்டமைப்பையே BE 07 காரும் பகிர்ந்து கொள்கிறது. அதாவது, மஹிந்திராவின் INGLO பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படும் இந்த எஸ்யூவியில் 59 kWh முதல் 79 kWh வரையிலான பேட்டரி தேர்வுகள் கொடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஒப்பீட்டுப் பார்வைக்காக BE 6 Sporteq மாடலின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
| பேட்டரி பேக் |
59 kWh |
70 kWh |
79 kWh |
|
|
1 (RWD) |
1 (RWD) |
1 (RWD) |
|
| பவர் |
232 PS |
245 PS |
286 PS |
|
| டார்க் |
380 Nm |
380 Nm |
380 Nm |
|
|
573 km |
651 km |
708 km |
RWD - ரியர்-வீல்-டிரைவ்
BE 07 மாடலில் RWD அமைப்புடன் சேர்த்து விருப்பத்தேர்வாக AWD அமைப்பும் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த ஆப்ஷன் கொடுக்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2027-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கவுள்ள BE 07, எக்ஸ்-ஷோரூம் விலையாக சுமார் 25 லட்சம் ரூபாய் தொடக்க விலையில் விற்பனைக்கு வரக்கூடும்.
சந்தையில் டாடா ஹாரியர் EV, MG ஹெக்டர் டோமாஹாக் EV மற்றும் வரவிருக்கும் டாடா சஃபாரி EV ஆகிய மாடல்களுக்கு இது நேரடிப் போட்டியாக அமையும்.
கார்தேக்கோவின் கருத்து...
எதிர்காலத்துக்கு ஏற்ற டிசைன், நடைமுறைப் பயன்பாடு மற்றும் நவீன அம்சங்களுடன் சந்தையில் வெற்றிகரமாக வலம் வரும் BE 6 மாடலைத் தொடர்ந்து வரவிருக்கும் BE 07, கூடுதல் நடைமுறைப் பயன்பாட்டை வழங்கும் என்பதில் ஐயமில்லை. இதன் பெரிய அளவிலான பரிமாணங்களும், பாக்ஸி வடிவமைப்பும் கேபினுக்குள் அதிக இடவசதியையும் வசதியான பயணத்தையும் உறுதி செய்யும். கார் அறிமுகமாகும் போது இதன் விலை நிர்ணயம் எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் பொறுத்தே இதன் முழுமையான வெற்றி அமையும். கூடுதல் தகவல்களுக்கு இணைந்திருங்கள்.

BE 07 மாடலில் நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அம்சம் எது? உங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Image Source - u/ParticularNext1196 (Reddit)














