2026 இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிப்ட்: வரப்போகும் மிரட்டலான புதிய அம்சங்கள்!
மேம்படுத்தப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் பெறப்போகும் அம்சங்களின் முன்னோட்டமாக இருந்தாலும் வடிவமைப்பு விவரங்கள் சரிவர தெரியவில்லை.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
இந்தோனேசிய சந்தையில் டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்தோனேசியாவில் 'கிஜாங் இன்னோவா ஜெனிக்ஸ்' என்ற பெயரில் விற்பனையாகும் இந்த பிரபலமான MPV காரில், வெளிப்புற தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படாமல், சில கூடுதல் வசதிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள, அநேகமாக நவம்பர் 2026 இறுதிக்குள் எதிர்பார்க்கப்படும் இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த மாடல்-இயர் அப்டேட் அமைந்துள்ளது. வரவிருக்கும் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, இந்த புதிய ஹைகிராஸ் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்ப்போம்:
மாற்றமில்லாத அதே டிசைன்
இந்த அப்டேட்டில் டொயோட்டா பெரிய அளவில் கைவைக்காத ஒரு விஷயம் என்றால் அது இதன் டிசைன் தான். இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மாடலின் அதே தோற்றத்தையே இதுவும் தொடர்கிறது; உண்மையில் இது ஒரு நல்ல விஷயமே. முன்பக்க கிரில்லின் மையத்தில் தேன்கூடு போன்ற அமைப்பை இணைக்கும் ஆல்-LED ஹெட்லைட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரேப்அரவுண்ட் LED டெயில் லைட்கள் ஆகியவை இதன் முக்கிய டிசைன் அம்சங்களாகத் திகழ்கின்றன. படத்தில் காட்டப்பட்டுள்ள கார், இந்தோனேசிய சந்தையில் ஆப்ஷனலாகக் கிடைக்கும் பாடி கிட் பொருத்தப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் டொயோட்டா நிறுவனம் வெளிப்புற டிசைனில் நிச்சயம் சில புதிய மாற்றங்களைச் செய்யும் என நம்பலாம்.
உட்புறத்தில் என்னென்ன மாற்றங்கள்?
இந்தோனேசிய பதிப்பில் வந்துள்ள மிகப்பெரிய மற்றும் ஒரே முக்கிய மாற்றம், இரட்டை டிஜிட்டல் டிஸ்பிளேக்கள் சேர்க்கப்பட்டிருப்பதுதான். தற்போது அப்டேட் செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸில், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய இரண்டிற்குமே தலா 12.3 இன்ச் திரைகளை டொயோட்டா வழங்கியுள்ளது. இதற்கு முந்தைய மாடலில் 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மட்டுமே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர, டேஷ்போர்டு வரை ஆம்பியன்ட் லைட்டிங் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், கிளைமேட் கண்ட்ரோல் திரையிலும் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் வரவிருக்கும் ஃபேஸ்லிஃப்ட் இன்னோவா ஹைகிராஸிலும் இந்த புதிய வசதிகளை டொயோட்டா அப்படியே வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், மெமரி வசதியுடன் கூடிய 8-வே பவர் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், பவர்டு டெயில்கேட் மற்றும் 9 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகளும் இதில் தொடரும் எனத் தெரிகிறது.

பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை, இந்தியாவிற்கான ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழக்கம்போல ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா செட்டப், ISOFIX சைல்ட் சீட் மவுண்ட்கள், ESC மற்றும் Level-2 ADAS போன்ற நவீன அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
பவர்டிரெய்ன் தேர்வுகள்
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனைப் பொறுத்தவரை இந்தோனேசிய மாடல் மற்றும் இந்திய மாடல் இரண்டிலுமே ஒரே மாதிரியான பவர்டிரெய்ன் தேர்வுகளே வழங்கப்படுகின்றன. அவற்றின் விரிவான தொழில்நுட்ப விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
| விவரங்கள் |
|
|
||
| இன்ஜின் |
|
|
||
| பவர் |
175 PS |
186 PS (combined) |
||
| டார்க் |
209 Nm |
188 Nm (combined) |
||
| டிரான்ஸ்மிஷன் |
CVT* |
e-CVT* |
*CVT - கண்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன், e-CVT - எலக்ட்ரிக்கலி கன்ட்ரோல்டு CVT
ஸ்ட்ராங்-ஹைப்ரிட் செட்டப் கொண்ட இந்திய மாடல் ஒரு லிட்டருக்கு 21.1 kmpl மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் இந்த புதிய இன்னோவா ஹைகிராஸை FWD அமைப்பில் மட்டுமே வழங்குகிறது. அதேசமயம் அசல் டீசல் இன்ஜின் பிரியர்களுக்காக, முந்தைய இன்னோவா கிரிஸ்டா மாடலை RWD அமைப்புடன் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது. இதற்கிடையில், இந்த மிட்-லைஃப் அப்டேட்டின் ஒரு பகுதியாக இந்தியாவில் பிளெக்ஸ்-ஃபியூயல் பதிப்பையும் டொயோட்டா அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலை விவரம் மற்றும் போட்டியாளர்கள்
இந்தோனேசியாவில், அப்டேட் செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.24.87 லட்சம் முதல் ரூ.32.47 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில், இந்தியாவில் தற்போது விற்பனையாகும் இன்னோவா ஹைகிராஸின் விலை ரூ.18.70 லட்சம் முதல் ரூ.31.84 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
இந்த டொயோட்டா MPV மாருதி இன்விக்டோவிற்கு நேரடிப் போட்டியாக அமைகிறது. இதுதவிர மாருதி எர்டிகா மற்றும் XL6, டொயோட்டா ரூமியான், கியா கேரன்ஸ் கிளாவிஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா போன்ற கார்களுக்கு ஒரு பிரீமியம் மாற்றாகவும் விளங்குகிறது.
கார்தேக்கோவின் கருத்து…
இந்தோனேசிய பதிப்பில் பெரிய அளவிலான இரட்டை டிஜிட்டல் டிஸ்பிளேக்களை டொயோட்டா வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இந்தியாவிற்கு வரவிருக்கும் ஃபேஸ்லிஃப்ட் காரிலும் இந்த வசதி நிச்சயம் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் காரின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ எந்தவொரு டிசைன் மாற்றங்களும் செய்யப்படாததால் வரவிருக்கும் இந்திய ஃபேஸ்லிஃப்ட்டின் முழுமையான முன்னோட்டமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்திய டெஸ்ட் மாடல்களில் சில தோற்ற மாற்றங்கள் தென்பட்டுள்ளன.
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தோனேசியாவில் வழக்கமான பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் தேர்வுகள் மட்டுமே தொடர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் அரசின் புதிய உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப பிளெக்ஸ்-ஃபியூயல் அமைப்பிலும் ஃபேஸ்லிஃப்ட் இன்னோவா ஹைகிராஸ் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.














