மொத்தமே 18 வண்டிதான் ரெடி பண்ணிருக்காங்க! ₹4.90 கோடியில் களமிறங்கிய ரேஞ்ச் ரோவர் சவாய் எடிஷன்!
இந்த பிரத்யேக ரேஞ்ச் ரோவர் எஸ்வி -யின் எடிஷனில் மொத்தமாகவே 18 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
உங்கள் அடுத்த பிசினஸ் பயணங்கள் அதிநவீன சொகுசுடனும் வசதியுடனும் அமைய வேண்டும். அதே வேளையில் நகரும் அரண்மனை போன்ற காரில் இந்திய பாரம்பரியத்தின் தனித்துவமும் மிளிர வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்கான கார் இதோ! லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ரேஞ்ச் ரோவர் SV மாடலில், இந்தியாவுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'சவாய் எடிஷன்' என்ற அல்ட்ரா-லிமிடெட் கலெக்ஷனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வெளிவந்த இரண்டு ஸ்பெஷல் எடிஷன்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்த சவாய் எடிஷன் களமிறங்குகிறது. ராஜஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று விதமான இன்டீரியர் தீம்களுடன் இந்தியாவின் கட்டிடக்கலை பாரம்பரியத்தை இது பிரதிபலிக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
இதில் என்ன ஸ்பெஷல்?
ரேஞ்ச் ரோவர் SV ரந்தம்போர் எடிஷன் அல்லது ரேஞ்ச் ரோவர் SV மசரா எடிஷன் ஆகியவற்றை முன்பதிவு செய்ய தவறவிட்டவர்களுக்கு இந்த புதிய ரேஞ்ச் ரோவர் சவாய் எடிஷன் ஒரு அருமையான வாய்ப்பாக வந்துள்ளது.
இந்த சவாய் கலெக்ஷன் ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் ஜெய்சால்மர் போன்ற ராஜஸ்தானின் பாரம்பரிய நகரங்களை அடிப்படையாகக் கொண்ட இன்டீரியர் தீம்களை உள்ளடக்கியுள்ளது.
ரேஞ்ச் ரோவர் SV சவாய் ஜெய்ப்பூர் எடிஷன்
இந்தியாவின் பிங்க் சிட்டி என்றழைக்கப்படும் ஜெய்ப்பூரின் பெருமையை உணர்த்தும் வகையில், இந்த எடிஷனில் எக்ரூ மற்றும் டீப் கார்னட் ஆகிய இரு வண்ண கலவை இன்டீரியர் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் வரலாற்றுச் சின்னமான ஹவா மஹால் கலைநயத்தை நினைவூட்டும் விதமாக வடிவமைக்கப்பட்ட லெதரெட் இருக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன. முன்பக்க கேபினில் இந்த கலைநயத்துடன் சென்டர் கன்சோலில் வெள்ளை நிற செராமிக் கன்ட்ரோல்களும் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது வரிசையில், டீப் கார்னட் வண்ண தீமுடன் முன்பக்க இருக்கைகளில் உள்ள அதே வடிவமைப்பு தொடர்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த கேபின் ஜெய்ப்பூரின் ஹவா மஹாலுக்குள் இருக்கும் உணர்வை அப்படியே கண்முன் நிறுத்துகிறது.


ரேஞ்ச் ரோவர் SV சவாய் ஜோத்பூர் எடிஷன்
தார் பாலைவனத்தின் அழகு மற்றும் ஜோத்பூரின் நீல வானத்தின் வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்த எடிஷனின் வெளிப்புறத்தில் மென்மையான ப்ளூ ஷேட் வழங்கப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில் பெர்லினோ மற்றும் ரிவியேரா லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய வெளிர் நிற கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு மற்றும் சீட்பெல்ட்டுகளிலும் இந்த தீம் தொடர்வதோடு, அதே வெள்ளை நிற செராமிக் கன்ட்ரோல்கள் இந்த எஸ்யூவியை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகின்றன.

இரண்டாவது வரிசை இருக்கைகளில், ரிவியேரா மற்றும் பெர்லினோ வண்ணங்கள் அழகாகக் கலந்துள்ளன. ஏற்கனவே அதிக இடவசதி கொண்ட இதன் கேபினை இந்த வண்ணக் கலவை மேலும் சொகுசானதாக மாற்றுகிறது.


ரேஞ்ச் ரோவர் SV சவாய் ஜெய்சால்மர் எடிஷன்
உங்கள் சொகுசு எஸ்யூவிக்குள் ராஜபுத்திர கோட்டைகளின் கம்பீர வடிவமைப்பு இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த ஜெய்சால்மர் எடிஷன் அதை நிறைவேற்றுகிறது. பெர்லினோ மற்றும் கேரவே வண்ண இன்டீரியர் தீம் கொண்ட இந்த கேபின், ரேஞ்ச் ரோவர் SV-யின் உச்சக்கட்ட சொகுசுடன் ராஜபுதன கோட்டைகளின் கம்பீரத்தை இணைத்து வழங்குகிறது.

மற்ற எடிஷன்களைப் போலவே முன்பக்கத்தில் வெளிர் நிற பெர்லினோ ஷேடும், பின்பக்கத்தில் கேரவே தீம் கொண்ட லெதரெட் இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன.


இந்த அனைத்து எடிஷன்களிலுமே நீங்கள் தேர்வு செய்யும் நகரம் மற்றும் காரின் தயாரிப்பு வரிசை எண் பொறிக்கப்பட்ட பிரத்யேக சவாய் எடிஷன் பிளேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உங்கள் ஸ்பெஷல் சொகுசு காரின் தனித்துவத்தை பெருமையுடன் காட்டிக் கொள்ள முடியும்.

பவர்டிரெயின் விவரங்கள்
ரேஞ்ச் ரோவர் சவாய் எடிஷனில் 4.4 லிட்டர் V8 எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான விவரங்கள் இதோ:
| எஞ்சின் |
4.4 லிட்டர் V8 பெட்ரோல் |
| பவர் |
615 PS |
| டார்க் |
750 Nm |
| டிரான்ஸ்மிஷன் |
8-speed AT* |
| டிரைவ்ட்ரெயின் |
ஆல்-வீல் டிரைவ் |
*AT- டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
விலை & போட்டியாளர்கள்
இந்த மூன்று தீம்களில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், ரேஞ்ச் ரோவர் SV சவாய் எடிஷனின் விலை 4.90 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், புது தில்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மசரா எடிஷனை விட 9 லட்சம் ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அல்ட்ரா லக்சரி எஸ்யூவி செக்மென்ட்டில் உள்ள இந்த கார் பென்ட்லே பெண்டாய்கா, ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் மற்றும் மெர்சிடிஸ்-மேபெக் GLS ஆகிய மாடல்களுடன் நேரடியாகப் போட்டியிடுகிறது.
கார்தேக்கோ சொல்வது...
இந்திய கலாச்சார அடையாளத்துடன் வெளிவரும் பிரத்யேக சொகுசு கார்களுக்கு இங்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதை முந்தைய ரந்தம்போர் மற்றும் மசரா எடிஷன்கள் நிரூபித்துக் காட்டியுள்ளன. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் கட்டிடக்கலை மரபையும் அரச பாரம்பரியத்தையும் தனது முதன்மை சொகுசு எஸ்யூவியில் இணைத்து இந்த சவாய் கலெக்ஷனை லேண்ட் ரோவர் களமிறக்கியுள்ளது.

வெறும் 18 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதால் இந்த சவாய் கலெக்ஷன் வெறும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட சொகுசு கார் மட்டுமல்ல. ஒரு அரிய பொக்கிஷமாகும். ரேஞ்ச் ரோவர் SV-யின் சிறந்த செயல்திறன், கைவினைத்திறன் மற்றும் சொகுசு ஆகியவற்றை தக்கவைத்துக்கொண்டு, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் இது கொண்டாடுகிறது.
விற்பனைக்கு வரும் இந்த 18 பிரத்யேக கார்களை எந்தெந்த கார் ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் சொந்தமாக்கப் போகிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஒருவேளை நீங்கள் வாங்குவதாக இருந்தால் ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சால்மர் ஆகிய மூன்று எடிஷன்களில் எதைத் தேர்வு செய்வீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்கள்!














