ஹூண்டாய் ஆராவுக்கு டஃப் ஃபைட் கொடுக்குமா புது டாடா ஏரிஸ்? - எதை வாங்குவது பெஸ்ட்?
டாடா ஏரிஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா: இந்த காம்பாக்ட் செடான்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் பார்க்க, அவற்றின் விலை, பரிமாணங்கள், அம்சங்கள், பாதுகாப்பு, பவர்டிரெய்ன்கள் ஆகியவற்றை இங்கே ஒப்பிட்டுள்ளோம்.
- ஒரு கருத்தை எழுதுக

டாடா நிறுவனத்தின் புதிய அறிமுகமான டாடா ஏரிஸ் கடந்த மாதம் இந்திய சந்தையில் களமிறங்கியது. இதன் மூலம் தனியார் வாடிக்கையாளர்களுக்கான டாடா டிகோர் மாடலுக்குப் பதிலாக புதிய பெயரில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. ஏரிஸ் மாடல் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்+சிஎன்ஜி என இரண்டு இன்ஜின் விருப்பங்களிலும் கிடைக்கிறது. இன்றைய ஒப்பீட்டில், புதிதாக வந்துள்ள டாடா ஏரிஸ் காரை ஹூண்டாய் ஆரா காரோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஹூண்டாய் ஆரா காரும் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்+சிஎன்ஜி இன்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வரவான ஏரிஸ் பார்ப்பதற்கு மிகவும் பிரீமியமாக இருந்தாலும், இந்த விலை பிரிவில் பல குடும்பங்களின் முதல் தேர்வாக இருந்து வரும் ஹூண்டாய் ஆரா, தனது நம்பகத்தன்மை மற்றும் வசதியால் ஏரிஸுக்கு கடுமையான போட்டியைத் தருகிறது.
இந்த இரண்டு கார்களும் ஒரே விலை வரம்பில் வருவதோடு, வசதியான, நடைமுறைக்கு ஏற்ற மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிஎன்ஜி கார்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களைக் கவர்கின்றன. இருப்பினும், டிசைன், விலை, வசதிகள் மற்றும் ஒட்டுமொத்த பயன்பாட்டில் இவை மாறுபடுகின்றன. எனவே, இந்த அறிக்கையில் டாடா ஏரிஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய இரண்டு கார்களின் விலை, அளவுகள், கலர் ஆப்ஷன்கள், வசதிகள், பாதுகாப்பு அம்சம் மற்றும் இன்ஜின் விபரங்களை ஒப்பிட்டு, உங்கள் தேவைக்கு எது சிறந்த தேர்வாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
விலை
| மாடல் |
டாடா ஏரிஸ் |
ஹூண்டாய் ஆரா |
| விலை (பெட்ரோல்) |
ரூ. 5.29 லட்சம் முதல் ரூ. 8.74 லட்சம் |
ரூ. 5.99 லட்சம் முதல் ரூ. 8.42 லட்சம் |
| விலை (பெட்ரோல் + CNG) |
ரூ. 6.29 லட்சம் முதல் ரூ. 9.74 லட்சம் |
ரூ.. 7.89 லட்சம் முதல் ரூ.. 8.67 லட்சம் |
(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்)
-
அட்டவணையில் உள்ளபடி டாடா ஏரிஸ் கார் மிகவும் சிக்கனமான தேர்வாக அமைகிறது. ஆரா காரின் ஆரம்ப விலை, ஏரிஸை விட Rs 70,000 கூடுதலாக உள்ளது.
-
டாடா ஏரிஸ் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்+சிஎன்ஜி மாடல்களில் MT மற்றும் AMT தேர்வுகளுடன் மொத்தம் 18 வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஹூண்டாய் ஆரா 8 வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இதிலும் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்+சிஎன்ஜி ஆப்ஷன்கள் இருந்தாலும் சிஎன்ஜி மாடலில் AMT கியர்பாக்ஸ் வசதி இல்லை.
-
டாடா ஏரிஸ் காரின் பேஸ் பெட்ரோல் வேரியன்ட் ரூ. 5.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற குறைந்த விலையில் தொடங்கி, டாப்-எண்ட் பெட்ரோல்+சிஎன்ஜி AMT வேரியன்ட் Rs 9.74 lakh (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது.

-
ஹூண்டாய் ஆரா காரின் ஆரம்ப விலை சற்று அதிகமாக ரூ. 5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்கி, டாப்-எண்ட் பெட்ரோல்+சிஎன்ஜி மேனுவல் வேரியன்ட் ரூ. 8.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-
ஏரிஸ் காரின் டாப்-எண்ட் வேரியன்ட்கள், பெட்ரோலில் சுமார் ரூ. 32,000 வரையிலும், பெட்ரோல்+சிஎன்ஜி மாடலில் ரூ. 1.07 லட்சம் வரையிலும் ஆரா காரை விட விலை அதிகமாக உள்ளன.
-
சிஎன்ஜி மாடல்களின் ஆரம்ப விலையை ஒப்பிடும்போது டாடா ஏரிஸ், ஆரா காரை விட ரூ. 1.6 லட்சம் வரை குறைவு.
-
இரண்டு கார்களும் ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டிருந்தாலும், விலையில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது. மேலும், உள்ளே இருக்கும் இடம் மற்றும் வசதிகளிலும் மாறுபடுகின்றன.
ஒரே அளவிலான பட்ஜெட்டில் எந்த காரில் என்னென்ன வசதிகள் கிடைக்கின்றன என்பதை இப்போது பார்ப்போம்:
அளவுகள்
| அளவுகள் |
டாடா ஏரிஸ் |
ஹூண்டாய் ஆரா |
வித்தியாசம் |
| நீளம் | 3995 மிமீ |
3995 மிமீ |
(0 மிமீ) |
| அகலம் |
1684 மிமீ |
1680 மிமீ |
(+4 மிமீ) |
| உயரம் | 1532 மிமீ |
1520 மிமீ |
(+12 மிமீ) |
| வீல்பேஸ் |
2450 மிமீ |
2450 மிமீ |
(0 மிமீ) |
-
இந்த அட்டவணையின்படி இரண்டு கார்களின் அளவுகளும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தாலும் டாடா ஏரிஸ் அகலத்திலும் உயரத்திலும் சற்று பெரியதாக உள்ளது.


-
ஏரிஸ் மற்றும் ஆரா ஆகிய இரண்டுமே ஒரே நீளத்தையும் வீல்பேஸையும் கொண்டுள்ளன.


-
இரண்டு கார்களின் அளவுகளும் மிக நெருக்கமாக இருப்பதால், கேபினுக்குள் இருக்கும் இடவசதியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும்.
கலர் ஆப்ஷன்கள்
| டாடா ஏரிஸ் |
ஹூண்டாய் ஆரா |
| பிரிஸ்டைன் வொயிட் |
அட்லஸ் வொயிட் |
| பியூர் கிரே |
டைபூன் சில்வர் |
| டயோட்னா கிரே |
டைட்டன் கிரே |
| டியூன் க்ளோவ் |
ஸ்டாரி நைட் |
| நிட்ரோ கிரிம்ஸன் |
- |
| டேண்டெலி டிரிஸில் |
- |
-
ஏரிஸ் காரில் எளிமையான மற்றும் ஆடம்பரமான வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன. ஆரா காரின் கலர் தேர்வுகள் சற்று சாதாரணமானதாகவே உள்ளது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஏரிஸ் காரில் கூடுதல் தேர்வுகள் உள்ளன.
-
டாடா ஏரிஸ் மொத்தம் ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது: Pristine White, Pure Grey, Daytona Grey, Dune Glow, Nitro Crimson, மற்றும் Dandeli Drizzle.
-
ஹூண்டாய் ஆரா காரில் Atlas White, Typhoon Silver, Titan Grey, மற்றும் Starry Night என நான்கு வண்ணங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
-
டாடா ஏரிஸ் காரின் டாப்-எண்ட் வேரியன்ட்டில் அனைத்து கலர்களுக்கும் டுயல்-டோன் ரூஃப் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த வசதி ஹூண்டாய் ஆராவில் இல்லை.
அம்சங்கள் & பாதுகாப்பு
| அம்சங்கள் |
டாடா ஏரிஸ் |
ஹூண்டாய் ஆரா |
| Headlamps |
LED |
Projector |
| LED DRLs |
✅ |
✅ |
| Foglamps |
✅ (LED) |
❌ |
| LED Taillamps |
✅ |
✅ |
| Connected Taillights |
✅ |
❌ |
| Wheels |
15-inch alloy wheels |
15-inch alloy wheels |
| Shark Fin Antenna |
✅ |
✅ |
| Rear Spoiler |
❌ |
✅ |
| Infotainment |
10.25-inch touchscreen |
8-inch touchscreen |
| Wireless Apple CarPlay / Android Auto |
✅ |
✅(Through Adaptor) |
| Instrument Cluster |
5-inch digital |
Analog with 3.5-inch MID display |
| Wireless Phone Charger |
✅ |
✅ |
| Sound System |
6 speakeரூ. (4 speakeரூ. + 2 tweeteரூ.) |
4-speakeரூ. |
| Push-button start/stop |
✅ |
✅ |
| Cabin Theme |
Dual-tone Beige |
Dual-tone Grey |
| Leatherette Upholstery |
✅ |
❌ |
| Leatherette-wrapped Steering Wheel |
✅ |
✅ |
| Tilt Steering Adjustment |
✅ |
✅ |
| Steering Mounted Audio Controls |
✅ |
✅ |
| Ventilated Front Seats |
✅ |
❌ |
| Adjustable Driver Seat |
✅ (6-way manual) |
✅ (6-way manual) |
| Co-driver Seat Adjustment |
✅ (4-way manual) |
✅ (4-way manual) |
| Adjustable headrests |
Only front |
Only rear |
| Rear centre armrest with storage |
✅ |
✅ |
| Paddle Shifteரூ. |
✅ |
❌ |
| Connected Car Tech |
✅ |
❌ |
| Cruise Control |
✅ |
✅ |
| Automatic Climate Control |
✅ |
✅ |
| Rear AC vents |
✅ |
✅ |
| Automatic Headlights |
✅ |
✅ |
| Rain Sensing Wipeரூ. |
✅ |
❌ |
| Cooled Glove Box |
✅ |
❌ |
| Keyless Entry |
✅ |
✅ |
| Footwell lighting |
❌ |
✅ |
| In-built Dashcam Recorder |
✅ |
❌ |
| Airbags |
6 |
6 |
| Parking Sensoரூ. |
Rear |
Rear |
| Parking Camera |
✅ (360-Degree) |
✅ (Only Rear) |
| Blind View Monitor |
✅ |
❌ |
| TPMS (tyre pressure monitoring system) |
✅ |
✅ |
| Electronic Stability Program (ESP) |
✅ |
✅ |
| Traction Control System (TCS) |
✅ |
❌ |
| Hill Hold Control |
✅ |
✅ |
| Electrically Adjustable & Foldable ORVMs |
✅ |
✅ |
| Rear Defogger |
✅ |
✅ |
| ISOFIX Child Seat Mount |
✅ |
✅ |
-
மேலேயுள்ள ஒப்பீட்டு அட்டவணையில் பார்த்தபடி, இரண்டு கார்களுமே ஏராளமான வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன. வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay கொண்ட டச்பேனல் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய டிரைவர் சீட், குரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் AC வென்ட்கள், ஆட்டோ-டிம்மிங் IRVM மற்றும் ஸ்டீயரிங் மவுன்டெட் கன்ட்ரோல்கள் ஆகியவை இரண்டு கார்களிலும் இருக்கும் பொதுவான வசதிகளாகும்.


-
வெளிப்புறத்தை பொறுத்தவரை இரண்டிலும் 15-inch அலாய் வீல்கள், LED DRLs, LED டெயில்லைட்கள் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனா வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் அம்சமாக ஏரிஸ் காரில் LED ஹெட்லைட்கள், LED ஃபாக் லைட்கள் மற்றும் கனெக்டெட் LED டெயில்லைட்கள் உள்ளன. ஆரா காரில் ரியர் விங் ஸ்பாய்லர் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் இடம்பெற்றுள்ளன.
-
ஹூண்டாய் ஆராவை விடக் குறைந்த விலையில் கிடைக்கும் டாடா ஏரிஸ் பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடைன்மென்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் ஃப்ரண்ட் சீட்கள், முன் மற்றும் பின்புற சென்சார்களுடன் கூடிய 360-டிகிரி கேமரா, பேடில் ஷிஃப்டர்கள், ரெய்ன்-சென்சிங் வைப்பர்கள், இன்-பில்ட் டேஷ்கேம் ரெக்கார்டர் மற்றும் கனெக்டெட் கார் டெக்னாலஜி என பல நவீன அம்சங்களை கூடுதலாக வழங்குகிறது

-
லெதரெட் அபஹோல்ஸ்டரி மற்றும் சாஃப்ட்-டச் லெதரெட் மெட்டீரியல்களால் ஏரிஸ் காரின் கேபின் மிகவும் பிரீமியமாக உள்ளது. மேலும் இதில் அதிகமான ஸ்பீக்கர்களும் கூல்டு குளோவ் பாக்ஸ் வசதியும் உள்ளன.
-
ஏரிஸ் காரின் நீண்ட அம்சங்களின் பட்டியலை ஈடுசெய்வது ஹூண்டாய் ஆராவுக்கு சற்று கடினம் தான். இருப்பினும் ஏரிஸில் இல்லாத ஃபுட்வெல் லைட்டிங் மற்றும் ரியர் ஸ்பாய்லர் போன்ற சில சிறப்பம்சங்கள் ஆராவில் உள்ளன.

-
மொத்தத்தில் டாடா ஏரிஸ் அதிக வசதிகளை வழங்கும் வேளையில், ஹூண்டாய் ஆரா நவீன அம்சங்களில் சற்று பின்தங்கியுள்ளது. ஏரிஸில் உள்ள சில அதிநவீன அம்சங்களைத் தவிர்த்தால், ஆரா காரிலும் சிறந்த வசதிகள் கிடைக்கின்றன. இருப்பினும், குறைந்த விலையில் கிடைப்பதால் ஏரிஸ் மாடல் கூடுதல் மதிப்புமிக்கதாக மாறுகிறது.
பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
இன்ஜின் தேர்வுகளைப் பொறுத்தவரை, டாடா ஏரிஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய இரண்டுமே 1.2-litre நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளன. இதில் ஃபேக்டரி-ஃபிட்டட் சிஎன்ஜி ஆப்ஷனும் கிடைக்கிறது. ஆனால், டாடா நிறுவனம் சிஎன்ஜி மாடலிலும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனை வழங்குகிறது. ஆரா சிஎன்ஜி மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே உள்ளது. இதனால் ஏரிஸ் காரில் சிஎன்ஜியின் மைலேஜுடன் ஆட்டோமேட்டிக் காரின் ஓட்டுதல் வசதியும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. இன்ஜின் விபரங்கள் இதோ:
Let’s take a look at the specifications:
| மாடல் | டாடா ஏரிஸ் |
ஹூண்டாய் ஆரா |
|||
| இன்ஜின் |
1.2-litre NA பெட்ரோல் |
1.2-litre NA பெட்ரோல் with CNG |
1.2-litre NA பெட்ரோல் |
1.2-litre NA பெட்ரோல் with CNG |
|
|
3 |
3 |
4 |
4 |
|
| பவர் (PS) |
86 PS |
76 PS |
83 PS |
69 PS |
|
| டார்க் (Nm) |
113 Nm |
97 Nm |
114 Nm |
95 Nm |
|
| டிரான்ஸ்மிஷன் | 5-ஸ்பீடு MT / 5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT / 5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT / 5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT |
|
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன்; AMT- ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்
-
இரண்டு கார்களிலுமே பெட்ரோல் மற்றும் பெட்ரோல்+சிஎன்ஜி இன்ஜின்கள் உள்ளன. ஆனால் சிஎன்ஜி இன்ஜினிலும் AMT வசதியை வழங்கி டாடா ஏரிஸ் இதில் தனித்து நிற்கிறது.
-
டாடா ஏரிஸில் 3-சிலிண்டர் இன்ஜின் இருக்கும் நிலையில், ஹூண்டாய் ஆரா காரில் 4-சிலிண்டர் இன்ஜின் கொடுக்கப்பட்டிருப்பது அதன் சாதகமான அம்சமாகும்.


-
பெட்ரோல் மாடல்களை ஒப்பிடும்போது, ஏரிஸ் கார் காகித அளவில் சற்று கூடுதல் பவரை வெளிப்படுத்துகிறது. டார்க் அளவில் இரண்டும் சமமாகவே உள்ளன. எனினும் ஆரா காரின் இன்ஜின் பல ஆண்டுகளாகச் சந்தையில் தனது நம்பகத்தன்மையை நிருபித்துள்ளது.
-
சிஎன்ஜி மாடலில் ஏரிஸ் கார் அதிக பவர் மற்றும் டார்க்கை வழங்குவதோடு, மேனுவல் மற்றும் AMT என இரண்டு டிரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் தருகிறது.

-
இரண்டு கார்களுக்கும் இடையிலான விலையை கருத்தில் கொள்ளும்போது, ஏரிஸ் காரின் இன்ஜின் தேர்வுகள் சிறந்த மதிப்பைத் தருகின்றன. அதேநேரத்தில் ஆரா காரும் இதில் பின்தங்கிவிடவில்லை. பல ஆண்டுகளாகச் சந்தையில் இருக்கும் இந்த கார், குறிப்பாக டாக்ஸி மற்றும் வணிக பயன்பாட்டில் தனக்கென நம்பகமான பெயரைப் பெற்றுள்ளது
போட்டியாளர்கள்
சப்-4 மீட்டர் காம்பேக்ட் செடான் பிரிவில் களமிறங்கும் டாடா ஏரிஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா கார்களுக்கு மாருதி சுஸூகி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய இரு கார்கள் மட்டுமே முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.
கார்தேக்கோவின் கருத்து...
டாடா ஏரிஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய இரண்டுமே அளவிலும் வசதிகளிலும் நெருக்கமான போட்டியாளர்களாக உள்ளன. ஆனால் சற்று பெரிய பாடி, அதிக பவர் தரும் இன்ஜின் மற்றும் சிஎன்ஜி மாடலிலும் AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் ஆகிய காரணங்களால் டாடா ஏரிஸ் முந்துகிறது. மறுபுறம் ஹூண்டாய் ஆரா கார் தனது நம்பகமான 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டு வலுவாக நிற்கிறது.

ஏரிஸ் காரின் கேபினில் லெதரெட் அபஹோல்ஸ்டரி மற்றும் சாஃப்ட்-டச் மெட்டீரியல்கள் வழங்கப்பட்டு பிரீமியமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன், வென்டிலேட்டட் ஃப்ரண்ட் சீட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற கூடுதல் வசதிகளுடன் ஏரிஸ் காரின் கை ஓங்கியுள்ளது. ஆரா காரில் சில தனித்துவமான வசதிகள் இருந்தாலும் ஒட்டுமொத்த அம்சங்களில் ஏரிஸ் தெளிவான முன்னிலையில் உள்ளது.

ரூ. 5.29 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வரும் டாடா ஏரிஸ், ரூ. 5.99 லட்சம் தொடக்க விலை கொண்ட ஹூண்டாய் ஆராவை விட விலை குறைவாக உள்ளது. குறைந்த ஆரம்ப விலை, நீண்ட வசதிகளின் பட்டியல் மற்றும் கூடுதல் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை கருத்தில் கொண்டால் டாடா ஏரிஸ் கார் கொடுக்கும் பணத்திற்கு சிறந்த மதிப்பை அளிக்கிறது. நம்பகமான 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஹூண்டாய் ஆரா சிறந்த தேர்வாக இருக்கும்
பரிசீலனை செய்ய வேண்டிய பிற கார்கள்
டாடா ஏரிஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய இரண்டுமே தங்களது வழியில் சிறந்த கார்களாகும். சந்தையில் ஆரா காரை விரும்பும் வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில், புதிய ஏரிஸ் காரும் அதற்கு நிகரான திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த பிரிவில் உள்ள பிற மாற்றுகளையும் அவை வழங்கும் வசதிகளையும் நீங்கள் பரிசீலிக்கலாம்:
மாருதி சுஸூகி டிசையர்: சிறந்த மைலேஜ் தரும் பெட்ரோல் இன்ஜின், வசதியான கேபின், அதிகமான வசதிகள் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் வசதிக்காக இதை பரிசீலிக்கலாம்.
ஹோண்டா அமேஸ்: முதிர்ச்சியான டிசைன், சிறந்த ரைடிங் மற்றும் ஹேண்ட்லிங், விசாலமான கேபின் மற்றும் டாப்-எண்ட் வேரியன்ட்டில் உள்ள ADAS பாதுகாப்பு வசதிக்காக இதை பரிசீலிக்கலாம்.














