• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    மாருதி மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்களின் ஜனவரி மாத விற்பனையில் லேசான தொய்வு

    மாருதி மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்களின் வாகன விற்பனை ஜனவரி 2016 ல் லேசாக குறைந்துள்ளது. இதற்கு இந்நிறுவனங்கள் தங்களது தயாரிப்புக்களின் விலையை ஜனவரி முதல் ஏற்றியதே காரணமாக தோன்றுகிறது. இந்த விலை உயர்வில் இருந்து தப்பிக்க கார் வாங்க நினைத்த பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் கடந்த டிசெம்பர் மாதமே கார்களை வாங்கி விட்டனர். ஹயுண்டாய், தனது கார்களின் விலையை 30,000 ரூபாய் வரை உயர்த்தியது.  மாருரி நிறுவனம் சராசரியாக 4,000 ரூபாய் வரை தங்கள் கார்களின் விலையை உயர்த்தியது. பலேனோ கார்கள் ரூ. 12,000 வரை உயர்த்தப்பட்டது.  இதன் காரணமாக,    கடந்த ஜனவரியில்  மாருதி நிறுவனம் 2.6% விற்பனை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்னொருபுறம் ஹயுண்டாய் நிறுவனம் 1.23%  வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.  தொடர்ந்து 14 மாதங்களாக வாகன விற்பனை அதிகரித்து வந்துள்ளது என்று கடந்த டிசம்பரில் SIAM அறிவித்தது. மொத்தம் 172,671  வாகனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து டீலர்ஷிப் மையங்களுக்கு  அனுப்பி வைக்க பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    nabeel
    nabeel
    published on பிப்ரவரி 02, 2016 10:53 ist
    info icon
    published onFeb 02, 2016 10:53 IST
    last updated onFeb 02, 2016 10:53 IST
    24 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    மாருதி 2016 ஜனவரியில் 1,13,606 வாகனங்களை விற்றுள்ளது. 2015  ஜனவரியில் சற்று கூடுதலாக 1,16,606 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டையும் சேர்த்த ஒட்டு மொத்த எண்ணிக்கையாகும். ஆனால் உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை கடந்த  2015  ஜனவரி மாத விற்பனையான 1,05,559 வாகனங்களுடன் இந்த வருட ஜனவரி மாத விற்பனையை ஒப்பிட்டால் 0.8%  சதவிகிதம் உயர்ந்து 1,06,383 வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன.  க்ரேண்ட் விடாரா , ஜிப்ஸி மற்றும் எர்டிகா போன்ற   பயன்பாட்டு வாகனங்களின் விற்பனையும் 26.2%  உயர்ந்துள்ளது.  கடந்த 2015  ஜனவரி மாதம் 6,432  பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த வருடம் ஜனவரியில் இந்த எண்ணிக்கை உயர்ந்து மொத்தம் 8,114  வாகனங்கள் விற்பனை  ஆகியுள்ளன. “ இதை விட கூடுதலாகவே உள்நாட்டு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பண்டிகை கால விடுமுறை நாட்கள் ஜனவரி மாதத்தில் நிறைய வந்ததால் குறைந்த  நாட்களே தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகள் செயல்பட்டன. இதன் காரணமாகவே விற்பனை வளர்ச்சி சற்று குறைந்து விட்டது " என்று மாருதி தெரிவித்துள்ளது.  ஏற்றுமதியும் 34.6% சதவிகிதம் குறைந்துள்ளது.    கடந்த 2015  ஜனவரி மாதம் 11,047 வாகனங்கள்ஆ ஏற்றுமதி ஆகி இருந்தன.  ஆனால் 2016 ஜனவரியில்  வெறும் வாகனங்கள் 7,223  வாகனங்களே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    2016 ஜனவரியில் ஹயுண்டாய் 44,230 வாகனங்களை விற்பனை செய்தது.  அதுவே  கடந்த 2015  ஜனவரி மாதம் சற்று கூடுதலாக  44,783  வாகனங்களை விற்பனை செய்திருந்தது.  உள்நாட்டு விற்பனை 9.3%  உயர்ந்து காணப்பட்டது.  கடந்த 2015  ஜனவரி மாதம் 34,780  வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தன. இந்த ஜனவரியில் 38,016  வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதியும் 37.87% சதவிகிதம் குறைந்துள்ளது.  கடந்த 2015  ஜனவரியில் 10,003  வாகனங்கள் ஏற்றுமதி ஆகி இருந்தன. ஆனால் 2016 ஜனவரியில் 6,214  வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. “ க்ரேண்ட் ,க்ரேடா மற்றும் i20 எளிட்/ஏக்டிவ் போன்ற கார்கள் அதனதன் பிரிவில் வலுவாக காலூன்றியுள்ளதால் கடந்த வருடத்தைப் போன்றே இந்த வருடமும் விற்பனை நல்ல முறையில் அதிகர்த்து உள்ளது" என்று ஹயுண்டாய் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெடிங் பிரிவுகளின் மூத்த துணை - தலைவர் ராகேஷ் ஸ்ரீவாத்சவ் கூறியுள்ளார்.  ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ள ஹ்யுடை தயாரிப்புக்களை பற்றி கேட்ட போது, “ அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை  பூர்த்தி செய்யும் விதத்தில் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் எங்களது தனித்துவமிக்க தயாரிப்புக்கள் வரும் ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு அற்புதமான அனுபவத்தை தரும்" என்று கூறினார்,

    was this article helpful ?

    nabeel
    Nabeel Khan is an Associate Editor with the CarDekho Group and an automotive journalist with over 12 years of experience covering cars, motorcycles, and ever-evolving mobility trends. A Mechanical Engineering graduate, he specialises in vehicle testing, buyer guidance, ownership analysis, and automotive video content. His hands-on automotive experience began early, working on everything from tanks and motorcycles to project cars with his dad, and later rebuilding two-stroke engines during his engineering studies. He combines technical expertise with real-world driving experience to help consumers make informed vehicle purchase decisions.மேலும் படிக்க

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience