ஷோரூம்களுக்கு வந்த புது ஹூண்டாய் பேயான் SUV கார்! நேரில் பார்க்க எப்படி இருக்கு? லீக் ஆன படங்கள்!
புதிய பேயான் காரில் பேனோராமிக் சன்ரூஃப் வசதியும் இடம்பெற இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பேயான் SUV காரை இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டிருந்தது. இந்த கார் வென்யூ மற்றும் விரைவில் வரவிருக்கும் அடுத்த தலைமுறை கிரெட்டா ஆகிய மாடல்களுக்கு இடையே பொசிஷன் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே அதிகாரப்பூர்வ டிசைன் படங்கள் வழியாக இந்த காரைப் பார்த்திருந்தாலும், தற்போது இந்த SUV கார் ஷோரூம்களுக்கு வரத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் நேரில் இதன் தோற்றம், வசதிகள், டிசைன் மற்றும் இன்டீரியர் எப்படி இருக்கிறது என்பது குறித்த தெளிவான விவரங்கள் கசிந்த வீடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது. அவை பற்றிய அனைத்து தகவல்களும் இதோ:
ஹூண்டாய் பேயான் ஷோரூம்களுக்கு வந்தது: லீக் ஆன தகவல்கள் சொல்வது என்ன?
வடிவமைப்பு
டிசைனில் இருந்து தொடங்கினால் லீக் ஆன வீடியோவில் ஹூண்டாயின் சர்வதேச டிசைன் லாங்குவேஜைப் பிரதிபலிக்கும் எதிர்காலத்தனமான முன்பகுதி காட்சிளிக்கிறது. இதில் கிளாஸ் பிளாக் ஸ்டிரிப் மூலம் இணைக்கப்பட்ட மெலிதான தலைகீழ் 'L' வடிவ LED DRLகள் மற்றும் பல கூறுகள் கொண்ட தடிமனான கிளாடிங் உடன் கூடிய பிஸியான பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. LED ஹெட்லேம்ப்கள் சற்று கீழே பொருத்தப்பட்டுள்ளன. அதேவேளையில் சில்வர் ஸ்கிட் பிளேட் நேரில் பார்க்கும்போது இந்த காருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது.


பக்கவாட்டுப் பகுதியில் இதன் விசித்திரமான 17-இன்ச் அலாய் வீல்கள் நேரில் பார்க்கும்போது மிகவும் ஸ்மார்ட்டாக உள்ளன. தடிமனான வீல் ஆர்ச் கிளாடிங்கும் காரின் கம்பீரத்தை கூட்டுகிறது. இருப்பினும் கூர்மையாகச் சாய்ந்த விண்ட்ஷீல்டு மற்றும் வித்தியாசமான விண்டோலைன் ஆகியவை வழக்கமான பாரம்பரிய SUV தோற்றம் கொண்ட கிரெட்டாவைப் போல் இல்லாமல் ஒரு க்ராஸ்ஓவர் ரக காரைப் போன்ற தோற்றத்தை இதற்கு வழங்குகின்றன.

காரின் பின்புறமும் முன்பகுதியைப் போன்றே மெலிதான LED DRLகள், கிளாஸ் பிளாக் ஸ்டிரிப் மற்றும் பெரிய சில்வர் அப்ளிக்கே உடன் கூடிய தடிமனான கிளாடிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் ஸ்போர்ட்டி உணர்வை சேர்க்கும் வகையில் ஷார்க்ஃபின் ஆண்டெனா மற்றும் வெள்ளை நிற இன்சர்ட் கொண்ட ரூஃப் ஸ்பாய்லரும் இதில் இடம்பெற்றுள்ளது.

இன்டீரியர்
உட்புறத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே பார்த்தது போல டூயல்-டோன் வெள்ளை மற்றும் கருப்பு ஃபினிஷிங் கேபினுக்கு ஒரு பிரீமியம் மற்றும் விசாலமான உணர்வைத் தருகிறது. மேலும் இதில் வளைந்த டூயல்-ஸ்கிரீன் செட்-அப் மற்றும் வென்யூ காரில் உள்ளதைப் போன்ற 'மோர்ஸ்-கோட்' லோகோ கொண்ட 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டிரைவ் மோட் பட்டனையும் பார்க்க முடிகிறது. இது காரில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய டிரைவ் மோட்கள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இதுதவிர சென்ட்ரல் ஏசி வென்ட்கள் கீழே பொருத்தப்பட்டு அவற்றிற்கு இடையே க்ளைமேட் கன்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கேபின் அனுபவத்தை மேலும் உயர்த்த ப்ளூ ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் சில்வர் இன்சரட்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

வசதிகள் & பாதுகாப்பு
ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்த தகவல்களிலிருந்து இந்த காரில் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, வயர்லெஸ் போன் சார்ஜர், டிரைவ் மோட்கள், போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஜெனரேட்டிவ் AI வசதியுடன் கூடிய கனெக்டெட் கார் டெக்னாலஜி மற்றும் வென்டிலேட்டட் ஃபிரண்ட் சீட்கள் போன்ற அம்சங்கள் இருப்பது நமக்குத் தெரியும்.

இவற்றுடன் கூடுதலாக இந்த செக்மென்ட்டில் வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பேனோராமிக் சன்ரூஃப் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை பேயான் காரில் லெவல் 2 ADAS, 360-டிகிரி கேமரா, ஃபிரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஆட்டோ-ஹோல்ட் வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB) ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் மல்டிபிள் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்டு கன்ட்ரோல் (HHC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இதில் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
பவர்டிரெய்ன்
பேயான் காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கூடிய 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படும் என்பதை ஹூண்டாய் உறுதி செய்துள்ளது. இதன் தொழில் நுட்ப விவரங்கள் இதோ:
| இன்ஜின் |
|
|
| பவர் | 115 PS |
|
| டார்க் |
144 Nm |
|
| டிரான்ஸ்மிஷன் |
6-speed MT/CVT |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT- கண்டினியூவஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமேடிக்)

அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டி கார்கள்
ஹூண்டாய் பேயான் கார் அக்டோபர் 26 அன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 17.5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த SUV காருக்கான புக்கிங் இந்த மாதத் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது.

பேயான் கார் சந்தையில் கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி விக்டோரிஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர், நிஸான் டெக்டான், டாடா சியரா, சிட்ரோயன் ஏர்கிராஸ் X, ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஹூண்டாயின் சொந்த கிரெட்டா ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கும்.
கார்தேக்கோவின் கருத்து...
கடந்த 2015-இல் கிரெட்டாவை அறிமுகப்படுத்தியதிலிருந்து காம்பாக்ட் SUV செக்மென்ட்டை ஹூண்டாய் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கிரெட்டாவை மூன்றாம் தலைமுறைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அதே பிரிவில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ளவும் விரிவுபடுத்தவும் ஹூண்டாய் எடுக்கும் முயற்சியே இந்த பேயான். இதன் அதிகாரப்பூர்வ வெளியீடே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அறிமுக தேதிக்கு நெருக்கமாக பேயான் ஷோரூம்களுக்கு வரத் தொடங்கியுள்ளது. இதன் நேரில் பார்க்கும் ஆர்வத்தையும் ஐகானிக் கிரெட்டாவின் வெற்றியை இது மீண்டும் மீண்டும் நிகழ்த்துமா என்பதை ஓட்டிப் பார்க்கும் ஆர்வத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.
புதிய பேயான் காரை வாங்க நீங்கள் காத்திருக்கிறீர்களா? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்!














