இந்தியாவில் என்ட்ரி கொடுத்த ஃபெராரியின் முதல் EV கார் !... 1000+ PS பவர்... 0-10 வேகத்தை 2.5 நொடியில் எட்டும்
சமீப காலத்தில் ஃபெராரி வெளியிட்ட கார்களிலேயே மிகவும் விவாதத்திற்குரிய டிசைனைக் கொண்ட மாடலாக இந்த லூசி இருந்தது.
- ஒரு கருத்தை எழுதுக

ஃபெராரி நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காரான 'லூசி' மாடலை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியித்துள்ளது. இந்த புகழ்பெற்ற சூப்பர் கார் பிராண்ட் இதுவரை தயாரித்து வந்த வழக்கமான மாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, இதுவரை பார்த்திராத புதிய டிசைன் லாங்குவேஜுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. 4 சீட்டர் வசதி கொண்ட இந்த எலக்ட்ரிக் கார், பெர்ஃபார்மன்ஸிலும் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் அமைந்துள்ளது. லூசி கார் பற்றிய அனைத்து விவரங்களையும் விரிவாக கீழே காணலாம்:
வடிவமைப்பு
லூசி காரின் டிசைனுக்காக ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சீஃப் டிசைன் ஆஃபீஸரான ஜோனி ஐவ் உடன் ஃபெராரி கை கோர்த்துள்ளது. காற்று தடையின்றி காரைக் கடந்து செல்ல உதவும் ஏரோடைனமிக் எஃபிஷியன்சியை அதிகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். ஏனெனில், சிறந்த ஏரோடைனமிக் டிசைன் இருந்தால் காற்று எதிர்ப்பு குறைந்து காரை முன்னோக்கி நகர்த்த மோட்டார்கள் குறைந்த ஆற்றலையே பயன்படுத்தும். இதன் காரணமாகவே வளைவான பாடி பேனல்களுடன் கூடிய வழக்கத்திற்கு மாறான கூபே-செடான் வடிவம் இந்த காரில் கிடைத்துள்ளது. முன்பக்கத்தில் நடுவில் பெரிய ஏர் வென்ட் கொண்ட வளைவான பொன்னெட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாஸ் பிளாக் பேனலுக்குள் அடங்கிய மெலிதான LED ஹெட்லேம்ப்கள் மற்றும் DRLs உடன் காரின் முன்பக்கம் சிம்பிளான தோற்றத்தைப் பெறுகிறது.

பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது ஒரு சூப்பர் காரை விட ஸ்போர்ட்டியான செடான் கார் போல காட்சிளிக்கும் லூசி, 4 கதவுகள் மற்றும் கூபே போன்ற சாய்வான ரூஃப்லைனைக் கொண்டுள்ளது. முன்பக்க கதவுகளில் கிளாஸ் பிளாக் இன்சர்ட் வசதி உள்ளது. மேலும் முன்பக்கத்திற்கு 23-இன்ச் மற்றும் பின்புறத்திற்கு 24-இன்ச் என்ற அளவில் வித்தியாசமான வீல் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது.


பின்பக்கத்தில் ஃபெராரி குடும்பத்தின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வட்ட வடிவ LED டெயில்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் முன்பக்கத்தைப் போலவே ஸ்டைலை விட ஏரோடைனமிக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பின்புறமும் வழக்கத்திற்கு மாறான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு
பாரம்பரிய ஃபெராரி காக்பிட்களுடன் ஒப்பிடும்போது இதன் இன்டீரியரிலும் முற்றிலும் புதிய தீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஃபெராரி கார்களில் எதிர்பார்க்கப்படும் உயர்தரமான மெட்டீரியல்கள் உட்புறம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், டிசைன் அம்சங்களில் ஒரு ரெட்ரோ-கூல் தீம் தெரிகிறது. டேஷ்போர்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை செல்லும் பெரிய அலுமினியம் இன்சர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாசிக் மாடல்களை நினைவூட்டும் வகையில் மெலிதான 3-ஸ்போக் புரோஃபைல் மற்றும் சில்வர் ஃபினிஷிங்குடன் கூடிய ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றுள்ளது.

டிரைவர் அல்லது பேசஞ்சர் பக்கத்திற்கு வசதியாக திருப்பி வைத்துக் கொள்ளக்கூடிய பெரிய சென்ட்ரல் டச்ஸ்கிரீன் மற்றும் அனலாக் டயல்களைப் போன்றே காட்சிளிக்கும் ஷார்ப்பான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை காரில் உள்ளன. பின்புற பயணிகளுக்கும் சொகுசான அனுபவம் கிடைக்கிறது. லெதர் மெட்டீரியல், பின்பக்க ஏசி வென்ட்களுக்கு கீழே காரின் வசதிகளைக் கட்டுப்படுத்த டச்ஸ்கிரீன் மற்றும் புரோசங்குவே மாடலில் இருப்பதைப் போன்ற ரியர்-ஹிங்கிடு டோர்ட்ஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.


வசதிகள் & பாதுகாப்பு
மாடர்ன் காலத்து ஃபெராரி காராக உருவாகியுள்ள லூசி மாடலில் அதற்கேற்ற வசதிகளை நிறுவனம் வழங்கியுள்ளது. இதில் 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே 21-ஸ்பீக்கர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், மல்டி-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் என ஏராளமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பைப் பொறுத்தவரை மல்டிபிள் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஃபிரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், 360-டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS போன்ற உயர்தர பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
பவர்டிரெய்ன்
லூசி மாடலில் மிகப்பெரிய 112 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீலுக்கும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் வீதம் மொத்தம் 4 மோட்டார்கள் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக 1050 PS பவரை இந்த கார் அள்ளி வழங்குகிறது. இதன் தொழில் நுட்ப விவரங்கள் இதோ:
|
112 kWh |
|
|
4 |
|
|
530 km |
|
| பவர் |
1050 PS |
|
| டார்க் |
990 Nm |
|
| கிளைம்டு ஆக்சிலரேஷன் (0-100 kmph) |
2.5 நொடிகள் |
|
| டாப் ஸ்பீட் |
310 kmph |
சிறந்த ஹேண்ட்லிங் அனுபவத்திற்காக லூசி காரில் ரியர்-வீல் ஸ்டீயரிங் ஆக்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் ஆக்டிவ் டார்க் வெக்டரிங் போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இது 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டது.

விலை மற்றும் போட்டி கார்கள்
ஃபெராரி லூசி காரின் இந்திய விலையை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் ஆப்ஷன்கள் சேர்க்கப்படுவதற்கு முன் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 8.5 கோடி என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையிலும் தனது தனித்துவமான அமைப்பிலும் லூசி காரிற்கு நேரடி போட்டி கார்கள் எதுவும் இல்லை. இருப்பினும் போர்ஷே தய்கான் டர்போ மற்றும் விரைவில் வரவிருக்கும் டெஸ்லா ரோட்ஸ்டர் ஆகிய எலக்ட்ரிக் கார்களை இதற்கான மாற்றாகக் கருதலாம்.
கார்தேக்கோவின் கருத்து...
இந்த ஆண்டின் தொடக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டபோதே, ஃபெராரி ரசிகர்களிடையே லூசி மாடல் பெரும் விவாதத்தையும் கலவையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. முழுமையான எலக்ட்ரிக் பவர்டிரெய்ன், வளைவான டிசைன் மற்றும் வழக்கமான சொகுசுக்கு பதிலாக டெக்னாலஜிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இன்டீரியர் போன்றவற்றால் ஃபெராரியின் பாரம்பரியத்தை இந்த கார் கைவிட்டுவிட்டதாக கார் பிரியர்கள் சிலர் கூறுகின்றனர்.
இருப்பினும் ஃபெராரி கார்களில் வழக்கமாகப் பார்க்க முடியாத ஒரு புதிய டிசைனை இந்த மாடல் கொண்டு வந்துள்ளது. பாசிட்டிவ், நெகட்டிவ் என எந்த மாதிரியான விமர்சனங்களாக இருந்தாலும் லூசி கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்படி ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்ததற்காக ஃபெராரி நிறுவனத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்!
ஃபெராரி லூசி காரைப் பற்றிய உங்களது கருத்துக்கள் என்ன? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!














