• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    டேங் ஃபுல் பண்ணா 1400 கி.மீ ஓடும்! ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் அறிமுகம்... ஆரம்ப விலை என்ன தெரியுமா ?

    டீசல் கார்களுக்கு பை-பை சொல்லிட்டு புதிய டஸ்டர் ஹைபிரிட் மாடலுக்கு மாறுங்க... ரெனால்ட் நிறுவனத்தின் அசத்தல் பிளான்!

    ved
    ved
    published on அக்டோபர் 19, 2026 16:41 ist
    info icon
    published onOct 19, 2026 16:41 IST
    last updated onOct 19, 2026 16:41 IST
    4 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Renault Duster Hybrid

    இரண்டாம் தலைமுறை டஸ்டர் கார் இந்தியாவில் அறிமுகமாகி சுமார் ஏழு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்ட்ராங்-ஹைபிரிட் பவர்டிரெய்ன் மாடலை ரெனால்ட் நிறுவனம் தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரூ. 16.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் களமிறங்கியுள்ள இந்த புதிய டஸ்டர் ஹைபிரிட், இந்த பிராண்டிற்கே உரித்தான அதே ரக்கட் மற்றும் மாஸான ஸ்டைலிங்கை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதேவேளையில் ஸ்ட்ராங்-ஹைபிரிட் இன்ஜின் மூலம் சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவையும் உறுதியளிக்கிறது. இந்த புதிய மாடலைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இதோ:

    A post shared by CarDekho India (@cardekhoindia)

    விலை மற்றும் வேரியண்ட்கள்

    இதன் விரிவான விலைப் பட்டியல் இதோ:

    வேரியண்ட்

    1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

    1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் மைல்டு-ஹைபிரிட்

    1.8-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் ஸ்ட்ராங்-ஹைபிரிட் (NEW)

    MT

    MT

    DCT

    DHT

    Authentic

    ரூ. 10.49 லட்சம்

    -

    -

    -

    Evolution

    ரூ. 11.69 லட்சம்

    ரூ. 12.99 லட்சம்

    ரூ. 14.49 லட்சம்

    ரூ. 16.99 லட்சம்*

    Adventure

    ரூ. 12.99 லட்சம்

    ரூ. 13.99 லட்சம்*

    ரூ. 15.39 லட்சம்*

    -

    Techno

    -

    -

    -

    ரூ. 18.99 லட்சம்*

    Techno Plus

    -

    ரூ. 15.29 லட்சம்*

    ரூ. 16.69 லட்சம்*

    -

    Iconic

    -

    ரூ. 16.99 லட்சம்*

    ரூ. 18.49 லட்சம்*

    -

    Emotion

    -

    -

    -

    ரூ. 19.49 லட்சம்*

    *ரூ. 20,000 கூடுதல் கட்டணத்தில் டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன் கிடைக்கும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். டிசம்பர் 31, 2026 வரை செய்யப்படும் புக்கிங்குகளுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும்.

    • புதிய ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் கார் எவலூஷன், டெக்னோ மற்றும் எமோஷன் ஆகிய 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 16.99 லட்சம் ஆகும்.

    • ரெனால்ட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஷோரூம்கள் மூலமாக ரூ. 21,000 முன்பணத்தில் டஸ்டர் ஹைபிரிட் மாடலுக்கான புக்கிங்கை ஏற்கனவே தொடங்கியிருந்தது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 முதல் இதன் டெலிவரி பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது

    ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட்: என்னென்ன புதிய மாற்றங்கள்?

    ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் காரின் முக்கிய மாற்றங்கள் அதன் பொன்னெட்டுக்கு அடியில்தான் செய்யப்பட்டுள்ளன. இதில் 1.8-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 1.4 kWh பேட்டரி பேக் கொண்ட ஸ்ட்ராங்-ஹைபிரிட் செட்-அப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தொழில் நுட்ப விவரங்கள் இதோ:

    எஞ்சின்

    1.8-litre naturally aspirated petrol with strong-hybrid

    பேட்டரி பேக்

    1.4 kWh

    பவர் (ஒருங்கிணைந்த)

    160 PS

    டார்க் (மோட்டார் மட்டும்)

    208 Nm

    டிரான்ஸ்மிஷன்

    8-ஸ்பீடு DHT

    கிளைம்டு மைலேஜ் (ARAI)

    29 கிமீ/லி

    டிரைவ்டிரெயின்

    FWD

    DHT- டெடிகேட்டட் ஹைபிரிட் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமேடிக்), FWD- ஃபிரண்ட்-வீல் டிரைவ்

    Renault Duster Hybrid
    Renault Duster Hybrid

    • சிட்டி டிரைவிங் சூழலில் சுமார் 80 சதவீத நேரம் வரை இந்த டஸ்டர் ஹைபிரிட் காரை எலக்ட்ரிக் மோடிலேயே இயக்க முடியும் என்று ரெனால்ட் நிறுவனம் கூறுகிறது. இதனால் இந்த செக்மென்ட்டிலேயே மிகச் சிறந்த மைலேஜையும், ஒரு முறை முழுமையாக ஃபியூயல் நிரப்பினால் 1400 கி.மீ-க்கும் அதிகமான தூரம் பயணிக்கும் திறனையும் இது பெறுகிறது.
       
    • பெர்ஃபார்மன்ஸை பொறுத்தவரை இந்த ஸ்ட்ராங்-ஹைபிரிட் மாடலானது இதன் 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் மாடலை விட 3 PS பவர் மற்றும் 72 Nm டார்க் குறைவாகவே வெளிப்படுத்துகிறது.
       
    • குறிப்பாக டஸ்டர் ஹைபிரிட் மாடலில் ஃப்ரீக்வென்சி டிபென்டன்ட் டேம்பர்ஸ் (FDD) வசதியை ரெனால்ட் சேர்த்துள்ளது. இது பயணங்களின் போது காரின் ரைடு குவாலிட்டியை கணிசமாக உயர்த்த உதவும்.
       
    • எண்கள் அளவில் பெரிய வித்தியாசம் தெரிந்தாலும், இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கும் உடனடி பவர் காரணமாக டார்க் குறைபாடு பெரியதாக தெரியாது. இதன் மூலம் 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 9.6 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடும்.
       
    • இதுதவிர காரின் தரைப்பகுதிக்கு அடியில் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளதால், பெட்ரோல் மாடலில் 518 லிட்டராக இருந்த பூட் ஸ்பேஸ் ஹைபிரிட் மாடலில் 372 லிட்டராக குறைந்துள்ளது.

    ரெனால்ட் டஸ்டர் பற்றி...

    இந்தியாவில் மிகவும் பிரபலமான பிராண்டுகளில் ஒன்றான டஸ்டரை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தி சந்தைக்கு கொண்டு வந்தது ரெனால்ட். எல்இடி ஹெட்லேம்ப்கள், கனெக்டட் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் என கம்பீரமான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்துடன் கூடிய போல்டான டிசைன் இதன் முக்கிய சிறப்பம்சமாகும். ஹைபிரிட் மாடலில் கூடுதலாக கிரில் பகுதியில் ஒளிரும் 'DUSTER' எழுத்துக்களும், டெயில்கேட் மற்றும் முன்பக்க கதவுகளில் 'E-Tech' பேட்ஜும் கொடுக்கப்பட்டுள்ளன.

    Renault Duster Hybrid
    Renault Duster Hybrid

    உட்புறத்தில் டேஷ்போர்டு டிசைன் மாற்றமின்றி அப்படியே தொடர்ந்தாலும், புதிய டியூன் பிரவுன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி சேர்க்கப்பட்டுள்ளது. வசதிகளை பொறுத்தவரை ஸ்டாண்டர்ட் டஸ்டர் மாடலில் உள்ள அதே அம்சங்களே ஹைபிரிட் மாடலிலும் தொடர்கின்றன. இதில் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர்டு டெயில்கேட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பேனோராமிக் சன்ரூஃப், 6-வே பவர்டு மற்றும் வென்டிலேட்டட் ஃபிரண்ட் சீட்கள் மற்றும் வயர்லெஸ் Android Auto, Apple CarPlay கனெக்டிவிட்டி ஆகியவை அடங்கும்.

    Renault Duster Hybrid

    பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்டு அசிஸ்ட் (HHA), அனைத்து வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), 360-டிகிரி கேமரா, ஃபிரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த SUV கார் Bharat NCAP பாதுகாப்பு சோதனையில் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

    இந்த ஸ்ட்ராங்-ஹைபிரிட் மாடல் தவிர இரு வேறு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களிலும் இந்த கார் கிடைக்கிறது. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

    இன்ஜின்

    1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

    1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் மைல்டு-ஹைபிரிட்

    பவர்

    100 PS

    163 PS

    டார்க்

    166 Nm

    280 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-speed MT

    6-speed MT/6-speed DCT

    கிளைம்டுமைலேஜ் (ARAI)

    19.41 kmpl

    17.75 kmpl (MT)/ 18.45 kmpl (DCT)

    டிரைவ்ட்ரைன்

    FWD

    FWD

    MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், DCT- டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமேடிக்), FWD- ஃபிரண்ட்-வீல் டிரைவ்

    போட்டியாளர்கள்

    சந்தையில் ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் மாடலானது டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, விக்டோரிஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள கியா செல்டோஸ் ஹைபிரிட் போன்ற ஜப்பானிய SUV கார்களுக்கு நேரடியாக போட்டியிடுகிறது.

    அதேவேளையில், டஸ்டரின் அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் நிசான் டெக்டான் மாடலில் எதிர்காலத்தில் ஸ்ட்ராங்-ஹைபிரிட் ஆப்ஷன் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கார்தேக்கோ சொல்வது...

    கார் பிரியர்கள் மற்றும் SUV பிரியர்கள் என இருதரப்பாலும் விரும்பப்படும் டஸ்டர், இந்தியாவில் ரெனால்ட் பிராண்டின் அடையாளமாகவே திகழ்கிறது. இதுவரை டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடன் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பவர்டிரெய்ன் தேர்வு, டஸ்டரை அனைத்து விதத்திலும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் காராக மாற்றுகிறது.

    இதுவரை இந்தியாவில் ஸ்ட்ராங்-ஹைபிரிட் சந்தையில் ஜப்பானிய நிறுவனங்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. ஆனால் தற்போது டிரைவிங் அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ரக்கட் ஸ்டைல் டஸ்டர் ஹைபிரிட்டின் வருகை, அந்த கார்களுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கக்கூடும்.

    டஸ்டரின் டர்போ-பெட்ரோல் மாடல்களுக்கு பதிலாக இந்த புதிய ஹைபிரிட் மாடலை நீங்கள் தேர்வு செய்வீர்களா? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்!

    was this article helpful ?

    ved
    Ved Kulkarni is a Correspondent with CarDekho Group, and an automotive journalist with over 5 years of experience under his belt covering cars, motorcycles, mobility solutions and everything in between. A Product Design graduate, he specialises in analysing market trends, testing cars, creating automotive content and gathering customer insights. His love for vehicles began early, and he has vast hands-on experience with everything from classic cars to imported exotics and even the regular mass market vehicles. His technical expertise, combined with a deep-rooted passion for all things automotive, helps give buyers holistic and knowledgeable advice. மேலும் படிக்க

    Write your Comment on Renault டஸ்டர்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience