• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    அடிக்கடி சார்ஜ் போட தேவையில்லை! ரூ. 15 லட்சத்துக்குள் அதிக ரேஞ்ச் தரும் 5 EV கார்கள்!

    ரூ. 15 லட்சத்தைத் தாண்டாமல் கிட்டத்தட்ட 500 கி.மீ வரை டிரைவிங் ரேஞ்ச் வேண்டுமா ? இந்த பண்டிகைக் காலத்தில் நீங்கள் வாங்குவதற்கு ஏற்ற 5 சிறந்த எலக்ட்ரிக் கார்கள் இவைதான்!

    Anonymous
    published on அக்டோபர் 19, 2026 20:50 ist
    info icon
    published onOct 19, 2026 20:50 IST
    last updated onOct 19, 2026 20:50 IST
    2 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Top EV Cars With Highest Range Under Rs 15 Lakh

    பண்டிகைக் காலம்னாலே புதிய கார் வாங்குவதற்கு மிகவும் உகந்த நேரமாகும். அதிலும் இந்த விஜயதசமி/ஆயுதபூஜை பண்டிகை காரை வீட்டிற்கு வாங்கி வர வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. தற்போது எலக்ட்ரிக் கார்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் பட்ஜெட்டை தாண்டாமல் அதிக டிரைவிங் ரேஞ்ச் தரும் சிறந்த EV காரை வாங்கவே பலரும் விரும்புவார்கள். அதிர்ஷ்டவசமாக தினசரி சிட்டி பயன்பாட்டிற்கும், வார இறுதி நீண்ட தூரப் பயணங்களுக்கும் ஏற்ற வகையில் ரூ.15 லட்சத்திற்குள் சிறந்த ரேஞ்ச் தரும் பல எலக்ட்ரிக் கார்கள் சந்தையில் கிடைக்கின்றன.

    இந்த 2026 விஜயதசமி பண்டிகைக்கு அடிக்கடி சார்ஜிங் ஸ்டேஷனில் நிற்கத் தேவையில்லாத புதிய EV காரை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால் ரூ.15 லட்சத்திற்குள் அதிக டிரைவிங் ரேஞ்ச் தரும் டாப் 5 எலக்ட்ரிக் கார்களின் பட்டியல் இதோ. குறைந்த ஆரம்ப விலையிலிருந்து அதிக விலை வரையிலான வரிசையில் இவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளன:

    டாடா பன்ச் EV

    பேட்டரி பேக்: 40 kWh

    கிளைம்டு ரேஞ்ச்: 468 கிமீ

    வேரியண்ட்

    விலை

    Smart Plus 40

    ரூ. 11.19 லட்சம்

    Adventure 40

    ரூ. 11.94 லட்சம்

    Empowered 40

    ரூ. 12.69 லட்சம்

    Empowered Plus S 40

    ரூ. 12.99 லட்சம்

    இந்தப் பட்டியலில் மிகவும் குறைந்த ஆரம்ப விலையைக் கொண்ட காராக டாடா பன்ச் EV திகழ்கிறது. பெரிய பேட்டரி பேக் கொண்ட இதன் ஆரம்ப விலை ரூ. 11.19 லட்சம் ஆகும். இளைஞர்களைக் கவரும் வகையிலான டிசைன் மற்றும் ஏராளமான அம்சங்களுடன் பன்ச் EV சந்தையில் கலக்கி வருகிறது.

    Top EV Cars With Highest Range Under Rs 15 Lakh

    பன்ச் EV காரில் 30 kWh மற்றும் 40 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் அதிக ரேஞ்ச் பெற விரும்புபவர்கள் 40 kWh பேட்டரி பேக்கை தேர்வு செய்யலாம். இந்த 40 kWh பேட்டரியானது 129 PS பவரையும், 154 Nm டார்க்கையும் வெளிப்படுத்துவதுடன், 468 கி.மீ வரை சிறந்த டிரைவிங் ரேஞ்சையும் வழங்குகிறது. தற்போது பன்ச் EV காருக்கு சந்தையில் நேரடி போட்டி கார்கள் எதுவும் இல்லை. குறைந்த விலை அதிக ரேஞ்ச் மற்றும் நவீன அம்சங்கள் காரணமாக எலக்ட்ரிக் கார் பிரியர்களின் முதன்மைத் தேர்வாக பன்ச் EV உள்ளது.

    டாடா நெக்ஸான் EV

    பேட்டரி பேக்: 45 kWh

    கிளைம்டு ரேஞ்ச்: 489 கிமீ

    வேரியண்ட்

    விலை

    Creative 45

    ரூ. 14.34 லட்சம்

    அடுத்தபடியாக டாட்டா நிறுவனத்தின் மற்றொரு சிறந்த தயாரிப்பான நெக்ஸான் EV இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த முழுப் பட்டியலிலேயே மிக அதிக டிரைவிங் ரேஞ்ச் வழங்கும் காராக நெக்ஸான் EV முதலிடத்தில் உள்ளது. பன்ச் EV காரைப் போலவே இதிலும் 30 kWh பேட்டரி ஆப்ஷன் உள்ளது, ஆனால் 489 கி.மீ வரை பிரம்மாண்டமான ரேஞ்ச் தரும் 45 kWh பேட்டரி ஆப்ஷன்தான் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இது 145 PS பவர் மற்றும் 215 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

    Top EV Cars With Highest Range Under Rs 15 Lakh

    ரூ.15 லட்சம் பட்ஜெட்டில் நெக்ஸான் EV காரின் Creative 45 வேரியண்டை உங்களால் வாங்க முடியும். இது அதிக ரேஞ்ச் வசதியுடன் தேவையான அனைத்து முக்கிய அம்சங்களையும் நிறைவாகக் கொண்டுள்ளது. இந்த வேரியண்டிற்கு கீழே ஏற்கனவே இரண்டு வேரியண்ட்கள் உள்ளதால் இதில் வசதிகளுக்கு எந்தக் குறையும் இருக்காது. இருப்பினும், இன்னும் அதிக டெக்னாலஜி அம்சங்களை எதிர்பார்ப்பவர்கள் இதன் உயர் ரக வேரியண்ட்களையோ அல்லது பட்டியலிலுள்ள பிற கார்களையோ பரிசீலிக்கலாம்.

    கியா சைரோஸ் EV

    பேட்டரி பேக்: 42 kWh

    கிளைம்டு ரேஞ்ச்: 443 கிமீ

    வேரியண்ட்

    விலை

    HTK 42 kWh

    ரூ. 13.49 லட்சம்

    HTK Plus 42 kWh

    ரூ. 14.99 லட்சம்

    இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் களமிறங்குகிறது கியா சைரோஸ் EV. வழக்கமான கிளாசிக் SUV கார்களை நினைவூட்டும் பாக்ஸி டிசைனுடன் காம்பாக்ட் அமைப்பில் மிகவும் போல்டாகவும் ஸ்மார்ட்டாகவும் காட்சிளிக்கிறது சைரோஸ் EV. இந்த காரை வாங்கத் திட்டமிட்டால், ரூ.15 லட்சத்திற்குள் இதன் 2 வேரியண்ட்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். HTK மற்றும் HTK Plus ஆகிய இரு வேரியண்ட்களிலும் 42 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 135 PS பவர் மற்றும் 255 Nm டார்க்கை வெளிப்படுத்துவதுடன், இந்தப் பட்டியலிலேயே மூன்றாவது அதிகபட்ச ரேஞ்சான 443 கி.மீ தூரத்தை வழங்குகிறது.

    Top EV Cars With Highest Range Under Rs 15 Lakh

    கியா பிராண்டின் நம்பிக்கையான பெயர் மதிப்பால் சைரோஸ் EV நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இரண்டு வேரியண்ட்களிலுமே மிகவும் விசாலமான கேபின் மற்றும் சிறந்த வசதிகள் உள்ளன. ஒருவேளை உங்கள் பட்ஜெட்டை உயர்த்தத் தயாராக இருந்தால், அதிக ரேஞ்ச் மற்றும் கூடுதல் வசதிகளைத் தரும் 51.4 kWh பேட்டரி பேக் கொண்ட உயர் வேரியண்ட்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

    மஹிந்திரா XUV 3XO EV

    பேட்டரி பேக்: 39.4 kWh

    கிளைம்டு ரேஞ்ச்: 351கிமீ

    வேரியண்ட்

    விலை

    AX5

    ரூ. 13.88 லட்சம்

    AX7L

    ரூ. 14.95 லட்சம்

    எலக்ட்ரிக் கார் சந்தையைக் கைப்பற்ற இந்திய நிறுவனங்கள் தீவிரமாக உழைத்து வருகின்றன. அதற்கு இந்தப் பட்டியலே சிறந்த சான்றாகும். மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா XUV 3XO EV காரானது இந்த வரிசையில் இடம்பெறும் மூன்றாவது இந்திய காராகும். இதன் அனைத்து வேரியண்ட்களுமே ரூ.15 லட்சத்திற்குள் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    Top EV Cars With Highest Range Under Rs 15 Lakh

    XUV 3XO EV மாடலில் ஒற்றை 39.4 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இது 150 PS பவர் மற்றும் 310 Nm டார்க்கை வெளிப்படுத்தி, 351 கி.மீ டிரைவிங் ரேஞ்சை வழங்குகிறது. பவர் அடிப்படையில் பார்த்தால் இந்தப் பட்டியலிலேயே மிக அதிக பவர் மற்றும் டார்க் கொண்ட காராக XUV 3XO EV திகழ்கிறது. இருப்பினும், இந்த விலைப் பட்டியலில் சார்ஜர்களுக்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வழக்கமான பெட்ரோல்/டீசல் XUV 3XO காரைப் போன்றே தோற்றத்திலும் வசதிகளிலும் இருக்கும் இந்த எலக்ட்ரிக் கார் போட்டி கார்களுக்கு இணையாகச் சிறந்த வேல்யூ ஃபார் மணி தேர்வாக அமைகிறது.

    MG விண்ட்ஸர் EV

    பேட்டரி பேக்: 38 kWh

    கிளைம்டு ரேஞ்ச்: 332 கிமீ

    வேரியண்ட்

    விலை

    Excite 38 kWh

    ரூ. 14.84 லட்சம்

    இந்தப் பட்டியலின் கடைசி மற்றும் அதிக விலை கொண்ட மாடலாக MG விண்ட்ஸர் EV இடம்பெறுகிறது. ரூ.15 லட்சம் பட்ஜெட்டில், விண்ட்ஸர் EV காரின் அடிப்படை வேரியண்டான Excite மாடலை வாங்க முடியும். இதன் விலை ரூ. 14.84 லட்சம் ஆகும். இதில் உள்ள 38 kWh பேட்டரி பேக் 332 கி.மீ டிரைவிங் ரேஞ்சை மட்டுமே வழங்குகிறது. இந்த பேட்டரி 136 PS பவர் மற்றும் 200 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது, இது இந்த அளவுள்ள காருக்குத் போதுமானதே. சிறிய பேட்டரி பேக் என்பதால், இந்தப் பட்டியலில் மிகக் குறைந்த ரேஞ்ச் தரும் காராக இது உள்ளது. மேலும், அடிப்படை வேரியண்ட் என்பதால் இதில் அதிகப்படியான பிரீமியம் வசதிகளை எதிர்பார்க்க முடியாது.

    Top EV Cars With Highest Range Under Rs 15 Lakh

    இருப்பினும் ஹையர் வேரியண்ட்களுக்குச் சென்றால் பெரிய 52.9 kWh பேட்டரி பேக் ஆப்ஷனைப் பெற முடியும். தொழில் நுட்ப விவரங்களைத் தாண்டி விண்ட்ஸர் EV காரின் முக்கிய சிறப்பம்சமே அதன் சொகுசான சீட்கள் மற்றும் விசாலமான, நவீன வசதிகள் நிறைந்த கேபின்தான்.

    கார்தேக்கோ சொல்வது...

    ரூ.15 லட்சத்திற்குள் அதிக டிரைவிங் ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் காரை வாங்க விரும்பினால் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பேட்டரி ஆப்ஷன்களில் பல சிறந்த தேர்வுகள் உள்ளன. MG விண்ட்ஸர் EV விசாலமான கேபின் மற்றும் பிராக்டிகலான டிசைனை வழங்குகிறது. அதே நேரத்தில் டாடா நெக்ஸான் EV அதிகபட்ச ரேஞ்சை வழங்குகிறது. வழக்கமான SUV தோற்றத்தை விரும்பினால் மஹிந்திரா XUV 3XO EV சிறந்த தேர்வாகும். அதேபோல் கியா சைரோஸ் EV மூன்றாவது அதிகபட்ச ரேஞ்சுடன் மற்றொரு வலுவான தேர்வாக அமைகிறது. முதன்மையாகச் நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற காம்பாக்ட் காரை விரும்பி அதேசமயம் அதிக ரேஞ்சையும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு டாடா பன்ச் EV எப்போதும்போல சிறந்த வேல்யூ ஃபார் மணி தேர்வாகத் தொடர்கிறது.

    இறுதியில் உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளைப் பொறுத்தே உங்களுக்கான சரியான கார் அமையும். இருப்பினும் இந்த விலைப் பிரிவில் வேறு பாடி டைப் கார்கள் எதுவுமில்லை. ஒரு குறிப்பிட்ட காரை நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வேரியண்ட் மற்றும் உங்களுக்குத் தேவையான வசதிகள் அதில் இருக்கிறதா என்பதைப் பொறுத்து இறுதி முடிவை எடுக்கலாம்.

    எனவே இந்த எலக்ட்ரிக் கார்களில் உங்களின் அடுத்த குடும்ப காராக எதைத் தேர்வு செய்வீர்கள்? உங்களுக்கு எது முக்கியம் மற்றும் உங்கள் தேர்வு எது என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    குறிப்பு: குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்; டிரைவிங் ரேஞ்ச் என்பது MIDC (பாகம் 1 + பாகம் 2) சோதனையின்படி சான்றளிக்கப்பட்ட அளவீடாகும்.

    was this article helpful ?

    Anonymous
    Anonymous

    Write your Comment on Tata பன்ச் EV

    1 கருத்தை
    1
    K
    khasim syed
    Oct 18, 2026, 10:16:14 PM

    looks great with my budget but I am looking for 400 + real time range at 15 lacs all included on road cost

      பதில்
      Write a Reply

      explore similar கார்கள்

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      கார் செய்திகள்

      • சமீபத்தில் செய்திகள்

      டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

      • உபகமிங்
      • பிரபலமானவை
      *ex-showroom <cityname> யில் உள்ள விலை
      ×
      we need your சிட்டி க்கு customize your experience