செப்டம்பர் முதல் நவம்பர் 2026: தீபாவளிக்கு முன் களமிறங்கும் 5 புதிய SUV -கள்
அடுத்த இரண்டு மாதங்களும் வரிசையாக கார்கள் களமிறங்க காத்திருக்கின்றன!
- ஒரு கருத்தை எழுதுக

2026 தீபாவளி பண்டிகைக் காலம் இந்திய கார் சந்தைக்கு மிகவும் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களுக்குள், காம்பாக்ட் முதல் சொகுசு எலக்ட்ரிக் வரை ஐந்து புதிய SUV மாடல்கள் அறிமுகமாக உள்ளன. ஒவ்வொரு மாடலும் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவை இலக்காகக் கொண்டு வருவதால், புதிய கார் வாங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக அமையும். இந்த புதிய SUV -க்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஹூண்டாய் பேயான்: காம்பாக்ட் SUV பிரிவில் புதிய போட்டி
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: அக்டோபர்
ஹூண்டாய் நிறுவனம் அக்டோபர் மாதம் பேயான் என்ற புதிய காம்பாக்ட் SUV-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இது ஹூண்டாய்-யின் SUV வரிசையில் வென்யூ -க்கு ஒரு ஸ்டைலான மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரவிருக்கிறது. இதன் மூலம் செயல்திறன் விரும்பிகளுக்கும் அதிக மைலேஜ் எதிர்பார்ப்பவர்களுக்கும் ஏற்ற தேர்வாக பேயான் இருக்கும். இதன் அறிமுகம் டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியை உருவாக்கும்.

மஹிந்திரா தார் ஃபேஸ்லிப்ட்: இன்னும் புதிய அம்சங்களுடன்
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: செப்டம்பர் 22
மஹிந்திராவின் மிகவும் பிரபலமான ஆஃப்-ரோடு SUV தார் ஒரு புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டுடன் செப்டம்பர் 22 அன்று அறிமுகமாகிறது. இந்த புதிய மாடலில் வெளிப்புற தோற்றத்தில் சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சாஃப்ட்-டாப் ஆப்ஷன் மீண்டும் கொண்டுவரப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஆஃப்-ரோடு பிரியர்களின் மனதைக் கவர்ந்த தார் இந்த புதிய அப்டேட்கள் மூலம் லைஃப்ஸ்டைல் SUV வாங்க நினைப்பவர்களையும் கவரும்.

ஆடி Q3: மூன்றாவது தலைமுறை வருகை
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: அக்டோபர்
ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி தனது மூன்றாவது தலைமுறை Q3 மாடலை அக்டோபரில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. முந்தைய மாடலை விட மிகவும் கூர்மையான மற்றும் கவர்ச்சிகரமான ஸ்டைலிங்குடன் இந்த கார் வருகிறது. இதில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் இது சிறந்த செயல்திறனை வழங்கும். புதிய டிசைன் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் மூலம் BMW X1 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLA போன்ற கார்களுக்கு இது ஒரு வலுவான போட்டியாளராக இருக்கும்

வோல்வோ EX90: பாதுகாப்பான சொகுசு EV
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: அக்டோபர் 12
வோல்வோ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் SUV ஆன EX90-ஐ அக்டோபர் 12 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. இது ஒரு டூயல்-மோட்டார் ஆல்-வீல் டிரைவ் (AWD) அமைப்புடன் வருகிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 625 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. வோல்வோ கார்களின் சிறப்பம்சமான பாதுகாப்பு அம்சங்களுடன் பிரீமியம் தொழில்நுட்பங்கள் மற்றும் சொகுசான உட்புற வடிவமைப்புடன் இந்த EV வருகிறது. இது இந்திய சொகுசு EV சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட்: மீண்டும் ஒருமுறை களம் காணும் டஸ்டர்
எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: நவம்பர்
இந்திய SUV சந்தையில் ஒரு காலத்தில் கோலோச்சிய ரெனால்ட் டஸ்டர் இப்போது ஒரு புதிய ஹைப்ரிட் அவதாரத்தில் மீண்டும் வருகிறது. இந்த மாடல் நவம்பர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.8-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 1.4 kWh பேட்டரி கொண்ட ஹைப்ரிட் சிஸ்டம் இடம்பெறும். இதன் மூலம் சிறந்த மைலேஜ் மற்றும் குறைவான மாசு வெளியீடு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். வலுவான கட்டமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் வரும் டஸ்டர், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்குப் போட்டியாக அமையும்.

கார்தேக்கோ சொல்வது...
2025-இன் பண்டிகைக் காலம் SUV வாங்குபவர்களுக்கு பலவிதமான தேர்வுகளை வழங்குகிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஹூண்டாய் பேயான், ஆஃப்-ரோடு மற்றும் லைஃப்ஸ்டைல் பயணங்களுக்கு மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் எரிபொருள் சிக்கனத்தை விரும்புவோருக்கு ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் என ஒவ்வொரு தேவைக்கும் ஒரு மாடல் உள்ளது. அதே நேரத்தில் சொகுசு மற்றும் பிரீமியம் அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு புதிய ஆடி Q3 மற்றும் வோல்வோ EX90 EV ஆகியவை சிறந்த தேர்வுகளாக அமைகின்றன. இந்த புதிய அறிமுகங்கள் காம்பாக்ட் மற்றும் சொகுசு SUV பிரிவுகளில் போட்டியை நிச்சயம் அதிகரிக்கும்.
இந்தப் பட்டியலில் உள்ள எந்தக் காருக்கு நீங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள்? கீழே கமென்ட்ஸில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!














