• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    டென்ஸா Z9 GT டீசர் வெளியானது: விரைவில் களமிறங்கும் 2வது மாடல்

    Z9 GT ஆனது செயல்திறன் மற்றும் சில நேர்த்தியான தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. ஆனால் அவை ஐரோப்பிய கார்களுக்கு சவால் விட போதுமானதாக இருக்குமா?

    ved
    ved
    published on அக்டோபர் 30, 2026 14:02 ist
    info icon
    published onOct 30, 2026 14:02 IST
    last updated onOct 30, 2026 14:02 IST
    15 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Denza Z9 GT

    எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

    BYD நிறுவனத்தின் சொகுசு பிராண்டான டென்ஸா அடுத்த மாதம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக உள்ள நிலையில் தற்போது இந்திய ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ள தனது புதிய மாடல்களில் ஒன்றான Z9 GT காரின் டீசரை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளது. தனித்துவமான 'ஷூட்டிங் பிரேக்' பாடி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், நேர்த்தியான மற்றும் பிரீமியம் இன்டீரியருடன் அசாத்தியமான பெர்ஃபார்மென்ஸ் திறனையும் கொண்டுள்ளது. காரைப் பற்றிய முழு விவரங்களையும் இங்கே விரிவாகப் பார்ப்போம்:

    டென்ஸா Z9 GT டீசர்: அதில் என்ன தெரிகிறது?

    டென்ஸா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டீசர் மிகச் சிறியதாக இருந்தாலும் இதில் காட்டப்பட்டிருப்பது Z9 GT கார் தான் என்பதை உறுதியாகச் சொல்ல முடிகிறது. அதன் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் தனித்துவமான 'பூட்லிட்' ஆங்கிள் இதன் டிசைனை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. அதோடு சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடலில் இருப்பது போலவே காரை வேகமாக இயக்கும் போது உடனடியாக கூடுதல் பவரை வெளிப்படுத்த உதவும் 'பூஸ்ட் மோடு' அம்சமும் இதில் இடம்பெறுவது டீசரின் மூலம் தெரியவந்துள்ளது.

    Denza Z9 GT
    Denza Z9 GT

    இது தவிர பளபளப்பான பினிஷிங் கொண்ட அடர் பச்சை நிறத்தில் காருக்கு தனித்துவமான கம்பீர தோற்றத்தைத் தரும் சிக்னேச்சர் 'Fjord Green' கலர் ஆப்ஷனும் இந்த மாடலுக்குக் கிடைக்கும்.

    டென்ஸா Z9 GT பற்றி ஒரு பார்வை

    டென்ஸா பிராண்டின் சர்வதேச முதன்மை மாடல்களில் ஒன்றாக Z9 GT விளங்குகிறது. ஐரோப்பிய முழு-அளவு சொகுசு செடான்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கும் வகையிலும் BYD நிறுவனத்தின் அதிநவீன திறனை உலகிற்கு நிரூபிக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. காரின் ஸ்போர்ட்டியான லுக்கை உறுதி செய்யும் நேர்த்தியான 'ஷூட்டிங் பிரேக்' ரூஃப்லைன், இதன் முற்போக்கான டிசைன் பாணியை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

    Denza Z9 GT

    இந்த காரின் உட்புறத்தில் ஏகப்பட்ட அதிநவீன சொகுசு வசதிகள் குவிந்து கிடக்கின்றன. இரண்டு குளிர்சாதனப் பெட்டிகள், டிஜிட்டல் சைட் மிரர்கள், 1150W பவர் கொண்ட 20-ஸ்பீக்கர் DEVIALET சவுண்ட் சிஸ்டம், ஹீட்டிங், வென்டிலேஷன், 10-பாயிண்ட் மசாஜ் ஃபங்ஷன் மற்றும் ஆக்டிவ் சைட் போல்ஸ்டர்களுடன் கூடிய 8-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் முன்பக்க இருக்கைகள், 17.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் முன்பக்கப் பயணிக்கான 13.2-இன்ச் என்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன் ஆகியவை இதில் உள்ளன. மேலும், ஃபோர்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் இரண்டு 50W வயர்லெஸ் போன் சார்ஜர்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

    Denza Z9 GT

    பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை முழுமையான Level 2+ ADAS, பல்வேறு ஏர்பேக்குகள் மற்றும் அனைத்து விதமான எலக்ட்ரானிக் அசிஸ்ட் வசதிகளும் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள VMC சிஸ்டம், கார் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் போது திடீரென டயர் வெடித்தாலும் கூட விபத்து ஏற்படாமல் காரைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சர்வதேச சந்தையில் Z9 GT கார் ஃபுல்லி-எலக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் என இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படுகிறது; இருப்பினும், இந்தியாவிற்கு இதன் எலக்ட்ரிக் மாடல் மட்டுமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் பவர்டிரெயினின் சிறப்பம்சங்கள் இதோ:

    பேட்டரி பேக்

    63.82 kWh

    எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை

    3

    க்ளெய்ம் செய்யப்படும் ரேஞ்ச் (WLTP)

    599 km

    பவர்

    1156 PS

    டார்க்

    1210 Nm

    டிரைவ்ட்ரெயின்

    AWD

    கிளைம்டு ஆக்ஸிலரேஷன் (0-100 கிமீ/மணி)

    2.7 நொடிகள்

    உச்சபட்ச வேகம்

    270 கிமீ/மணி

    AWD- ஆல்-வீல் டிரைவ்

    Denza Z9 GT

    மேலும், காரின் பின்பகுதியில் அடாப்டிவ் டூயல்-சேம்பர் ஏர் சஸ்பென்ஷன், கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் BYD-யின் மிகச் சிறந்த 1500 kW DC ஃபாஸ்ட்-சார்ஜிங் திறன் ஆகியவை உள்ளன; இந்த ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் பேட்டரியை வெறும் 5 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.

    அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டி கார்கள்

    Z9 GT காரின் இந்திய வெளியீட்டு தேதியை டென்ஸா இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் வரும் நவம்பர் 13-ஆம் தேதி பிராண்ட் அறிமுகத்தைத் தொடர்ந்து 2027-ஆம் ஆண்டில் இந்த கார் இந்திய சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1.25 கோடியாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. டென்ஸா Z9 GT, இந்திய சந்தையில் BMW i7, Mercedes-Benz EQS மற்றும் Porsche Taycan போன்ற அதிநவீன முழு எலக்ட்ரிக் சொகுசு கார்களுக்கு நேரடிப் போட்டியாகக் களமிறங்கும்.

    Denza Z9 GT

    கார்தேக்கோவின் கருத்து..

    பார்ப்பவர்களை ஆச்சரியத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்றால் அதை டென்ஸா Z9 GT மிகச் சரியாகவே பூர்த்தி செய்துள்ளது. பாரம்பரிய ஐரோப்பிய சொகுசு பிராண்டுகளுக்கு இருக்கும் அதே பிராண்ட் அந்தஸ்து இதற்கு உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். ஆனால் மிரட்டலான பெர்ஃபார்மென்ஸ் மற்றும் எதிர்காலத்தை உணர்த்தும் நவீன டெக்னாலஜி மூலமாக இந்தியாவில் டென்ஸா நிறுவனம் தடம் பதிக்க இது மிகச் சிறந்த மாடலாக இருக்கும். இன்னும் பல தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முதன்மை மாடல் வெற்றிபெற வேண்டுமானால் நிறுவனம் இதன் விலையை மிகவும் கவர்ச்சிகரமாக நிர்ணயிக்க வேண்டியது அவசியம்.

    டென்ஸா Z9 GT காரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமெண்ட்ஸில் உங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

    was this article helpful ?

    ved
    Ved Kulkarni is a Correspondent with CarDekho Group, and an automotive journalist with over 5 years of experience under his belt covering cars, motorcycles, mobility solutions and everything in between. A Product Design graduate, he specialises in analysing market trends, testing cars, creating automotive content and gathering customer insights. His love for vehicles began early, and he has vast hands-on experience with everything from classic cars to imported exotics and even the regular mass market vehicles. His technical expertise, combined with a deep-rooted passion for all things automotive, helps give buyers holistic and knowledgeable advice. மேலும் படிக்க

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience