2026 ஹூண்டாய் பேயானில் மிஸ்ஸான அந்த 5 முக்கிய அம்சங்கள்! இருந்திருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்!
பேயான் பிரிவு-முதலாவதாக இரண்டு அம்சங்களைப் பெறுகிறது. ஆனால் பிரிவின் வழக்கமாக கிடைக்கக்கூடிய சில வசதிகள் இல்லை.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
காம்பாக்ட் SUV செக்மென்ட்டில் க்ரெட்டாவிற்கு அடுத்தபடியாக, தனது இரண்டாவது மாடலாக புதிய பேயான் காரை ரூ.10 லட்சம் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் களமிறக்கியுள்ளது. இருப்பினும், க்ரெட்டாவில் இருந்து தன்னைத் தனித்து அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு கிராஸ்ஓவர் போன்ற தோற்றம், பிரீமியம் இன்டீரியர் மற்றும் புத்தம் புதிய டிசைன் பாணியுடன் சில கூடுதல் சிறப்பம்சங்களையும் இது பெற்றுள்ளது.
க்ரெட்டாவை விட கூடுதல் வசதிகள் இதில் இருந்தாலும் கூட தற்போதுள்ள கடுமையான போட்டியைச் சமாளிக்க இன்னும் சில முக்கிய அம்சங்கள் இதில் இருந்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. அந்த வகையில் பேயானில் மிஸ்ஸாகும் முக்கியமான டாப் 5 அம்சங்களைப் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்:
டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல்
காம்பாக்ட் SUV செக்மென்ட்டில் தற்போது பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள, மிகவும் பயனுள்ள மற்றும் கேபினில் சொகுசான சூழலைத் தரும் ஒரு முக்கிய வசதி டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் ஆகும். இதன் நேரடிப் போட்டியாளர்களான சியரா, செல்டோஸ் மற்றும் டஸ்டர் போன்ற கார்களிலேயே இந்த அம்சம் இடம்பெற்றுள்ள நிலையில், நிச்சயம் பேயானிலும் இது வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ரியர் விண்டோ சன்ஷேடுகள்
பார்ப்பதற்கு மிகவும் சாதாரண அம்சமாகத் தோன்றினாலும் நமது ஊரின் சுட்டெரிக்கும் வெயில் காலங்களில் மிகப்பெரிய பலனைத் தருவது இந்த ரியர் விண்டோ சன்ஷேடுகள் தான். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் புதிய பேயானில் இந்த வசதி தவிர்க்கப்பட்டுள்ளது. பேயானை விட விலை குறைந்த செக்மென்ட்டில் உள்ள வென்யூவிலேயே இந்த அம்சம் இருக்கும் போது, இதில் இல்லாதது சற்று ஏமாற்றமே.

பவர்டு டெயில்கேட்
நீங்கள் அடிக்கடி லாங் டிரைவ் செல்பவராகவோ அல்லது அடிக்கடி ஏர்போர்ட் ட்ரிப் அடிப்பவராகவோ இருந்தால், பேயானில் நீங்கள் அதிகம் மிஸ் செய்யப்போகும் ஒரு வசதி பவர்டு டெயில்கேட் ஆகும். விக்டோரிஸ் மற்றும் கர்வ் போன்ற போட்டி கார்களில் இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்குக் கூடுதல் சௌகரியத்தை தருவதோடு மட்டுமல்லாமல், டிக்கியை பலமாக அறைந்து மூடாமல் ஒரே ஒரு பட்டன் பிரஸ் மூலம் சுலபமாகவும் இதமாகவும் திறந்து மூடுவதற்கு வழிசெய்கிறது.

ஹெட்-அப் டிஸ்பிளே
அடுத்ததாக உள்ள முக்கிய அம்சம் ஹெட்-அப் டிஸ்பிளே. காரின் வேகம், நேவிகேஷன் மற்றும் டகோமீட்டர் போன்ற மிக முக்கியமான தகவல்களை முன்பக்க விண்ட்ஷீல்டிலேயே இது பிரதிபலிக்கும் என்பதால் டிரைவர் சாலையில் இருந்து கவனத்தைத் திருப்ப வேண்டிய அவசியமே இருக்காது. காரின் நவீன தோற்றத்தைக் கூட்டுவதோடு மட்டுமல்லாமல் இது கூடுதல் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் ஹூண்டாய் நிறுவனம் இதனை பேயானில் வழங்கி இருக்கலாம். குறிப்பாக கிராண்ட் விட்டாரா, ஹைரைடர் மற்றும் சிறிய காரான ஃப்ரான்க்ஸிலேயே கூட இந்த அம்சம் நீண்ட காலமாகவே கிடைத்து வருகிறது.

பவர்-அட்ஜஸ்ட்டபிள் கோ-டிரைவர் சீட்
பேயானைப் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும் இதில் 8-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இது டிரைவருக்கு ஒரு பிரீமியம் ஃபீலைத் தருவதோடு தனக்கேற்ற சரியான டிரைவிங் பொசிஷனை மிகத் துல்லியமாக செட் செய்ய உதவுகிறது. ஆனால் முன்பக்கப் பயணியின் இருக்கைக்கு மேனுவல் ஸ்லைடு மற்றும் ரிக்லைன் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய குறைபாடு இல்லை என்றாலும் டைகுன் மற்றும் குஷாக் போன்ற போட்டி கார்கள் 2023 முதலே இந்த வசதியை வழங்கி வருகின்றன. எனவே பேயானிலும் இது இடம்பெற்றிருந்தால் குறிப்பாக நீண்ட தூரப் பயணங்களின் போது முன்பக்கப் பயணிக்கும் கூடுதல் சொகுசான உணர்வு கிடைத்திருக்கும்.

கார்தேக்கோவின் கருத்து...
ஜெனரேட்டிவ் AI திறன்கள் மற்றும் மேம்பட்ட ADAS போன்ற பல அதிநவீன, செக்மென்ட்டிலேயே முன்னணியில் இருக்கும் வசதிகளுடன் ஹூண்டாய் பேயான் களமிறங்கியுள்ளது. ஆனாலும் வழக்கமாக அனைத்து வசதிகளையும் வாரி வழங்கும் ஹூண்டாய் பாணியில் இருந்து மாறுபட்டு மேற்கூறிய சில அம்சங்கள் இதில் இடம்பெறவில்லை. பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இவை பெரிய டீல்-பிரேக்கராக அமையாது என்றாலும் கூட கடும் போட்டி நிறைந்த இந்த செக்மென்ட்டில் பேயான் தனது போட்டியாளர்களை விடத் தனித்து நிற்க இந்த அம்சங்கள் பேருதவியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஐந்து அம்சங்களைத் தவிர பேயானில் வேறு என்னென்ன அம்சங்கள் மிஸ்ஸாகியிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமெண்ட்ஸில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!














