2026 ஹூண்டாய் பேயான் மைலேஜ் விபரம் வெளியானது: மேனுவலா, ஆட்டோமேட்டிக்கா... எதுல அதிக மைலேஜ் கிடைக்கும்?
ஹூண்டாய் பேயான் தனது CVT கியர்பாக்ஸ் மூலம் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை உறுதிசெய்கிறது. ஆனால் மேனுவல் மாடலுடன் ஒப்பிடும்போது இதில் எந்த அளவிற்கு மைலேஜ் வித்தியாசம் கிடைக்கிறது?
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
ஹூண்டாய் நிறுவனம் பேயான் மாடலை இந்தியாவில் 10 லட்சம் ரூபாய் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அதிகாரப்பூர்வமாக களமிறக்கியுள்ளது. இந்த புதிய கார் வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இடைப்பட்ட பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாயின் வழக்கமான குடும்பக் கார்களின் தோற்றத்தைப் போலல்லாமல், பேயான் சற்றே துணிச்சலான மற்றும் நவீன வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.
கூடுதலாக, இந்த எஸ்யூவியில் நாம் ஏற்கனவே அறிந்த பழக்கமான 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மட்டுமே ஒரே பவர்டிரெயின் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் CVT ஆகிய இரண்டு வேரியண்ட்களுக்கும் இடையே மைலேஜில் சுவாரஸ்யமான வித்தியாசங்கள் உள்ள நிலையில், புதிய ஹூண்டாய் பேயான் எவ்வளவு எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
அதிகாரப்பூர்வ மைலேஜ் விவரங்கள்
இதில் கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மேனுவல் கியர்பாக்ஸை விட ஹூண்டாய் பேயானின் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கூடுதல் மைலேஜைத் தருகிறது. விரிவான மைலேஜ் புள்ளிவிவரங்கள் இதோ:
| என்ஜின் |
டிரான்ஸ்மிஷன் | மைலேஜ் |
|
|
மேனுவல் | 17.2 கிமீ/லி |
|
| CVT |
18.6 கிமீ/லி |
-
CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் லிட்டருக்கு 18.6 கி.மீ மைலேஜ் தருகிறது; இது மேனுவல் மாடலை விட லிட்டருக்கு 1.4 கி.மீ கூடுதலாகும்.

-
6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 17.2 கி.மீ மைலேஜை வழங்குகிறது.
-
இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுமே ஒரே மாதிரியான 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினுடனேயே இணைக்கப்பட்டுள்ளன.
| முக்கிய குறிப்பு: இவை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள மைலேஜ் புள்ளிவிவரங்கள் மட்டுமே. கார் ஓட்டும் விதம், சாலையின் தரம், வானிலை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து நிஜ பயன்பாட்டில் மைலேஜ் மாறுபட வாய்ப்புள்ளது. |
பவர்டிரெயின் விவரங்கள்
ஹூண்டாய் பேயான் காரில் 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே என்ஜின்தான் கிரெட்டா மற்றும் வெர்னா மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் விரிவான செயல்திறன் விபரங்கள் பின்வருமாறு:
| என்ஜின் |
|
|
| பவர் |
115 PS |
|
| டார்க் | 144 Nm |
|
| டிரான்ஸ்மிஷன் |
6-speed MT/CVT |
|
| டிரைவ்ட்ரெயின் |
FWD |
FWD- ஃபிரண்ட்-வீல் டிரைவ்
காரின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

ஹூண்டாய் பேயான் ஒரு தனித்துவமான கிராஸ்ஓவர் பாணி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் மெலிதான பிளாக் ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்ட தலைகீழ் L-வடிவ எல்இடி டிஆர்எல்களுடன் மினிமலிஸ்டிக் முகப்பு தோற்றம் தரப்பட்டுள்ளது. பம்பரின் கீழ்ப்பகுதியில் எல்இடி ஹெட்லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன; அதே நேரத்தில் சில்வர் ஸ்கிட் பிளேட் காருக்கு சற்றே முரட்டுத்தனமான லுக்கைக் கூட்டுகிறது. பக்கவாட்டுத் தோற்றத்தில் 17 இன்ச் அலாய் வீல்கள், தடிமனான பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் தலைகீழ் L-வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் சில்வர் பம்பர் அலங்கார வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

உள்பகுதியைப் பொறுத்தவரை குளோபல்-ஸ்பெக் i20 மாடலை அடிப்படையாகக் கொண்டு பேயானின் டேஷ்போர்டு லேஅவுட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே கொண்ட டூயல்-ஸ்கிரீன் செட்டப் உள்ளது. பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள், 8-வழிகளில் பவர்டு முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் போன்ற பல முக்கிய அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை, பேயான் காரில் ஆறு ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, Level-2 ADAS, ESC, TPMS, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் முன், பக்கவாட்டு மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.
விலை மற்றும் போட்டியாளர்கள்
இந்தியாவில் 2026 ஹூண்டாய் பேயான் மாடல் 10 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இது HX2, HX3, HX3 Plus, HX5, HX6, HX8 மற்றும் HX10 ஆகிய ஏழு வேரியண்ட்களில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் இந்த பேயான் மாடலானது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், மாருதி விக்டோரிஸ், ரெனால்ட் டஸ்டர், ஹோண்டா எலிவேட், டாடா சியரா, ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய முன்னணி கார்களுக்கு நேரடிப் போட்டியாக அமைகிறது.
கார்தேக்கோவின் கருத்து...
ஹூண்டாய் பேயானின் அதிகாரப்பூர்வ மைலேஜ் விபரங்கள், அதன் இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுக்கு இடையே ஒரு சுவாரஸ்யமான வித்தியாசத்தை வெளிப்படுத்துகின்றன. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 17.2 கி.மீ கொடுக்கும் நிலையில், CVT ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18.6 கி.மீ மைலேஜைத் தருகிறது. இரண்டு வேரியண்ட்களிலுமே ஒரே 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ஆட்டோமேட்டிக் மாடல் 1.4 கி.மீ கூடுதல் மைலேஜ் வழங்குவது வரவேற்கத்தக்க அம்சம்.
மைலேஜ் ஒரு முக்கியமான விஷயம் என்றாலும், அன்றாட பயணங்களில் இந்த என்ஜின் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதும் மேனுவலை விட கூடுதல் விலைக்கு வரும் CVT ஆப்ஷன் அந்த விலைக்கு நியாயம் சேர்க்கிறதா என்பதும் பேயானின் வெற்றியைத் தீர்மானிக்கும். ஒரே பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகள் மட்டுமே இருப்பதால் வாடிக்கையாளர்கள் குழப்பமின்றி எளிதாக முடிவெடுக்க முடியும். மைலேஜைப் பொறுத்தவரை CVT ஒரு தெளிவான முன்னிலையைப் பெறுகிறது; அதேசமயம் காரை முழுமையாகக் கையாண்டு ஓட்டும் ஃபீலை விரும்புவோருக்கு மேனுவல் வேரியண்ட் சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த இரண்டில் உங்கள் சாய்ஸ் எது? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் மறக்காமல் பதிவிடுங்கள்!














