ஒரே பட்ஜெட்... வேற லெவல் போட்டி! - எலிவேட் Vs சியரா: எந்த எஸ்யூவியை வாங்கலாம்?
ஹோண்டா சமீபத்தில் தனது மிட்-சைஸ் SUV -யான எலிவேட்டை அப்டேட் செய்துள்ளது. இது இந்த பிரிவில் முன்னணியில் இருக்கும் மேட்-இன்-இந்தியா டாடா சியாரா -வுக்கு எதிராகப் போட்டியிடுகிறது. இந்த இரண்டில் நீங்கள் எதை வாங்க வேண்டும் என்பதைக் பாருங்கள்.
- ஒரு கருத்தை எழுதுக

இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் இந்த SUV மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் அப்டேட் ஆகும். எலிவேட் மாடல் பெட்ரோல் இன்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஒப்பீட்டுக் கட்டுரையில், புதிய ஹோண்டா எலிவேட் மாடலை டாடா சியரா உடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். தகவலுக்கு சியரா மாடல் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிரிவில் சியரா மிகவும் பிரிமியம் மாடல்களில் ஒன்றாக இருக்கும் வேளையில் இந்த விலை வரம்பில் நம்பகத்தன்மை மற்றும் சௌகரியமான பயணத்தை வழங்கும் ஹோண்டா எலிவேட் ஒரு வலுவான போட்டியாளராகவே திகழ்கிறது.
இரண்டு கார்களும் ஒரே மாதிரியான விலை வரம்பில் வருவதோடு அம்சம் நிறைந்த, சௌகரியமான, விசாலமான கேபின் மற்றும் பலவகை பவர்ட்ரெய்ன் தேர்வுகளைக் கொண்ட பிராக்டிகலான மிட்-சைஸ் SUVயை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களைக் கவர்கின்றன. இருப்பினும் டிசைன், விலை, வசதிகள் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பு ஆகியவற்றில் இவை மாறுபடுகின்றன. ஹோண்டா எலிவேட் மற்றும் டாடா சியரா இடையேயான ஒப்பீட்டை விரிவாகப் பார்ப்போம்:
விலை
| மாடல் | ஹோண்டா எலிவேட் |
டாடா சியாரா |
| விலை (பெட்ரோல்) |
ரூ. 11.80 லட்சம் to ரூ. 18.50 லட்சம் |
ரூ. 11.49 லட்சம் to ரூ. 21.29 லட்சம் |
| விலை (டீசல்) |
- |
ரூ. 12.99 லட்சம் to ரூ. 21.59 லட்சம் |
(அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில்)
- விலை நிலவரத்தைப் பார்க்கும்போது, ஹோண்டா எலிவேட் மிகவும் சிக்கனமான தேர்வாக அமைகிறது.
- ஹோண்டா எலிவேட் ஒற்றை பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் மொத்தம் 6 வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
- மறுபுறம் டாடா சியரா இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று இன்ஜின் தேர்வுகளில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் மொத்தம் 11 வேரியன்ட்களில் தேர்வு செய்யக் கிடைக்கிறது.
- டாடா சியராவின் பேஸ் பெட்ரோல் வேரியன்ட் ரூ. 11.49 லட்சம் ஆரம்ப விலையிலும், டாப்-ஸ்பெக் டீசல் AT வேரியன்ட் ரூ. 21.59 லட்சம் விலையிலும் கிடைக்கின்றன.
- ஹோண்டா எலிவேட்டின் பேஸ் பெட்ரோல் வேரியன்ட் ரூ. 11.80 லட்சம் ஆரம்ப விலையிலும், டாப்-ஸ்பெக் பெட்ரோல் CVT ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ரூ. 18.50 லட்சம் விலையிலும் கிடைக்கின்றன.
- எலிவேட் உடன் ஒப்பிடும்போது டாடா சியராவின் ஆரம்ப விலை ரூ. 31,000 குறைவாக உள்ளது.
- எலிவேட்டின் டாப்-ஸ்பெக் வேரியன்ட், சியராவின் பெட்ரோல் டாப் வேரியன்ட்டை விட சுமார் ரூ 2.79 லட்சம் விலைக் குறைவிலும், டீசல் வேரியன்ட்டை விட ரூ. 3.09 லட்சம் விலைக் குறைவிலும் கிடைக்கிறது.
- இரண்டு கார்களும் ஒரே மாதிரியான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டிருந்தாலும், விலையில் பெரிய வித்தியாசம் உள்ளது. மேலும், இவை வழங்கும் இடம் மற்றும் வசதிகளிலும் மாறுபடுகின்றன.
இப்போது, இதே தொகையில் எந்த காரில் என்னென்ன வசதிகள் கிடைக்கின்றன என்பதைப் பார்ப்போம்:
அளவுகள்
| அளவுகள் | ஹோண்டா எலிவேட் |
டாடா சியாரா |
வித்தியாசம் |
|
| நீளம் | 4312 மிமீ |
4340 மிமீ |
(-28 மிமீ) |
|
| அகலம் |
1790 மிமீ |
1841 மிமீ |
(-51 மிமீ) |
|
| உயரம் |
1650 மிமீ |
1715 மிமீ |
(-65 மிமீ) |
|
| வீல்பேஸ் |
2650 மிமீ |
2730 மிமீ |
(-80 மிமீ) |
|
|
458 லிட்டர்கள் |
622 லிட்டர்கள் |
(-164 லிட்டர்கள்) |
-
ஒப்பீட்டு அட்டவணையில் உள்ளபடி டாடா சியரா நீளம், அகலம், உயரம் மற்றும் வீல்பேஸ் என அனைத்து அளவுகளிலுமே பெரியதாக இருப்பதால் உள்ளே மிகவும் தாராளமான கேபின் இடத்தை வழங்குகிறது.


-
இரண்டு SUV -களின் அளவுகளுக்கு இடையேயான வித்தியாசம் சாதாரணமானதாக இல்லை; சியரா அளவுகளில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்துகிறது.
-
சியராவில் உள்ள 80 mm கூடுதல் வீல்பேஸ் காரணமாகப் பின்சீட் பயணிகளுக்குக் கூடுதலான லெக் ரூம் கிடைக்கிறது.


-
பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, சியரா 622-litre அளவுள்ள மிகப்பெரிய பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளதால், பெரிய சூட்கேஸ்கள் மற்றும் அதிகமான லக்கேஜ்களை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
கலர் ஆப்ஷன்கள்
| ஹோண்டா எலிவேட் |
டாடா சியாரா |
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
- |
- இரண்டு கார்களிலுமே ஸ்டைலிஷான கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- ஹோண்டா எலிவேட்டின் டாப் வேரியன்ட்டில் அனைத்து நிறங்களுக்கும் டூயல்-டோன் ரூஃப் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது டாடா சியராவின் அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கிறது, ஆனால் கூரையின் சிறிய பகுதி மட்டுமே கருப்பு நிறத்தில் இருக்கும்.
- சியராவில் ஆல்-பிளாக் எக்ஸ்டீரியர் மற்றும் ஸ்டைலிங் அம்சங்களுடன் டார்க் எடிஷன் ஆப்ஷனும் கிடைக்கிறது.
- இதே போன்ற ஆல்-பிளாக் எக்ஸ்டீரியர் ஸ்டைலிங்கை எலிவேட்டின் பிளாக் எடிஷனிலும் காண முடிகிறது.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
| அம்சங்கள் |
ஹோண்டா எலிவேட் |
டாடா சியாரா |
| LED Headlamps |
✅ |
✅ |
| Connected LED DRLs |
✅ |
✅ |
| Foglamps |
✅ (LED) |
✅ (LED with cornering) |
| Connected LED Taillamps |
✅ |
✅ |
| Wheels |
17-inch alloy wheels |
19-inch alloy wheels |
| Flush Door Handles |
❌ |
✅ |
| Shark Fin Antenna |
✅ |
✅ |
| Triple-screen layout |
❌ |
✅ |
| Infotainment |
10.25-inch touchscreen |
12.3-inch touchscreen |
| Wireless Apple CarPlay / Android Auto |
✅ |
✅ |
| Passenger Entertainment Screen |
❌ |
12.3-inch touchscreen |
| Instrument Cluster |
7-inch colour TFT MID with digital ஸ்பீடுometer |
10.25-inch digital |
| Wireless Phone Charger |
✅ |
✅ |
| Sound System |
8 speakeரூ. (4 speakeரூ. + 4 tweeteரூ.) |
12-speaker JBL with Dolby Atmos and a SonicShaft Soundbar |
| Push-button start/stop |
✅ |
✅ |
| Cabin Theme |
Dual-tone Ivory and Black |
Dual-tone Black and White |
| Leatherette Upholstery |
✅ (White) |
✅ (White and Beige) |
| Leatherette-wrapped Steering Wheel |
✅ |
✅ |
| Tilt & Telescopic Steering Adjustment |
✅ |
✅ |
| Heads-up Display |
❌ |
✅ |
| Steering-Mounted Audio Controls |
✅ |
✅ |
| Extendable Sun Visor |
❌ |
✅ (8-way) |
| Ventilated Front Seats |
✅ |
✅ |
| Ventilated Rear Seats |
✅ |
❌ |
| Height-Adjustable Driver Seat |
✅ (8-way electric) |
✅ (6-way electric with memory) |
| Co-driver Seat Adjustment |
✅ (4-way electric) |
✅ (4-way manual) |
| Thigh Support Extender |
❌ |
✅ |
| Adjustable headrests |
✅ |
✅ |
| Reclining Rear Seats |
❌ |
✅ |
| Boss Mode |
❌ |
✅ |
| Rear centre armrest with storage |
✅ |
✅ |
| Rear Window Sunshades |
❌ |
✅ |
| Powered Tailgate |
❌ |
✅ |
| Paddle Shifteரூ. |
✅ |
✅ |
| Connected Car Tech |
✅ |
✅ |
| Cruise Control |
✅ |
✅ |
| Sunroof |
Electrically adjustable |
Panoramic |
| Automatic Climate Control |
✅ (single-zone) |
✅ (dual-zone) |
| Rear AC vents |
✅ |
✅ |
| Automatic Headlights |
✅ |
✅ |
| Rain Sensing Wipeரூ. |
✅ |
✅ |
| Ambient Lighting |
✅ (orange) |
✅ (multi-colour) |
| Cooled Glove Box |
❌ |
✅ |
| Keyless Entry |
✅ |
✅ |
| Airbags |
6 |
6 |
| Level-2 ADAS |
✅ |
✅ |
| Drive Modes |
❌ |
✅ (city and sport) |
| Terrain Modes |
❌ |
✅ (normal, wet, and rough) |
| Parking Sensoரூ. |
Front and rear |
Front and rear |
| Parking Camera |
✅ (360-Degree) |
✅ (360-Degree) |
| Blind View Monitor |
✅ |
✅ |
| Tyre Pressure Monitoring System (TPMS) |
❌ |
✅ |
| Electronic Stability Program (ESP) |
✅ |
✅ |
| Traction Control System (TCS) |
✅ |
✅ |
| All-wheel disc brakes |
✅ (CVT only) |
✅ |
| Electronic parking brake with auto-hold |
✅ (CVT only) |
✅ |
| Hill Hold Control |
✅ |
✅ |
| Hill Descent Control |
❌ |
✅ |
| Auto-diமிமீing IRVM |
✅ |
✅ |
| Electrically Adjustable & Foldable ORVMs |
✅ |
✅ |
| Rear Defogger |
✅ |
✅ |
| ISOFIX Child Seat Mount |
✅ |
✅ |
-
ஒப்பீட்டு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி இரண்டு கார்களிலுமே ஏராளமான வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்துள்ளன. டச்பேனல் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், வென்டிலேட்டட் ஃப்ரண்ட் சீட்கள், குரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்கள், லெவல்-2 ADAS, 360-டிகிரி கேமரா, லெதரெட் சீட்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை இரண்டிலும் பொதுவாகக் காணப்படுகின்றன.


-
டூயல்-டோன் தீம் மற்றும் லெதரெட் சீட்களுடன் இரண்டு கார்களின் கேபினும் மிகவும் பிரிமியமாக உணர்வை தருகிறது. சியராவில் உள்ள ரிக்லைனிங் ரியர் சீட்கள், ரியர் விண்டோ சன்ஷேட்கள் மற்றும் பாஸ் மோட் போன்றவை பின்வரிசைப் பயணத்தை மேலும் சொகுசானதாக மாற்றுகின்றன.
-
டிரைவிங் அனுபவத்தைப் பொறுத்தவரை சியரா 2 டிரைவ் மோட்கள், 3 டெரெய்ன் மோட்கள், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற அம்சங்களை அனைத்து வேரியன்ட்களிலுமே வழங்குகிறது.


-
சியராவின் நீண்ட வசதிகள் பட்டியலுக்கு ஈடுகொடுப்பது ஹோண்டா எலிவேட்டிற்கு சவாலாக இருந்தாலும் இதில் உள்ள வென்டிலேட்டட் ரியர் சீட்கள் மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் கோ-டிரைவர் சீட் ஆகிய அம்சங்கள் சியராவில் இல்லை என்பது எலிவேட்டின் பிளஸ் பாயிண்ட் ஆகும்.
-
சுருக்கமாகச் சொன்னால் டாடா சியரா நவீன அம்சங்கள் பலவற்றை வாரி வழங்குகிறது. ஹோண்டா எலிவேட் இதில் சற்று பின்தங்குகிறது. இருப்பினும் சியராவில் உள்ள சில ஹை-டெக் அம்சங்களைத் தவிர்த்தால், அன்றாட பயன்பாட்டிற்குத் தேவையான சிறந்த அம்சங்களின் தொகுப்பை எலிவேட்டிலும் பெற முடியும்.
பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
பவர்ட்ரெய்ன் தேர்வுகளைப் பார்க்கும்போது ஹோண்டா எலிவேட் மாடலில் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.5-லி நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் டாடா சியராவில் 1.5-litre நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 1.5-லிட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5-litre டீசல் இன்ஜின் என மூன்று தேர்வுகள் உள்ளன. இவற்றில் இரண்டு இன்ஜின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான இன்ஜின் தேர்வுகளை சியராவில் உறுதி செய்கிறது.
| மாடல் | ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிப்ட் |
டாடா சியாரா |
||||
| இன்ஜின் |
|
|
1.5-லி டர்போ-பெட்ரோல் |
1.5-litre டீசல் |
||
| பவர் | 121 PS |
106 PS |
160 PS |
118 PS |
||
| டார்க் |
145 Nm |
145 Nm |
255 Nm |
260 Nm (MT) / 280 Nm (AT) |
||
| டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/ CVT |
6-ஸ்பீடு MT/ 7-ஸ்பீடு DCA |
6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT |
||
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன்; CVT- கண்டினியூஅஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமேட்டிக்); DCA- டூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக்; AT- டார்க் கன்வெர்ட்டர் (ஆட்டோமேட்டிக்)


-
ஹோண்டா எலிவேட் ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜினை மட்டுமே கொண்டுள்ள நிலையில், மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கி சியரா முதன்மையாக நிற்கிறது.
-
டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருப்பது டாடா சியராவின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டுகளில் ஒன்றாகும்.
-
டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஹோண்டா எலிவேட்டில் வழங்கப்படவில்லை.
-
இரு கார்களின் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்களை ஒப்பிடும்போது, எலிவேட் கூடுதலான பவரை வெளிப்படுத்துகிறது, அதேசமயம் டார்க் அளவில் இரண்டும் சமமாகவே உள்ளன.


-
இந்த விலை வரம்பைக் கருத்தில் கொள்ளும்போது சியராவின் இன்ஜின் தேர்வுகள் சிறந்த மதிப்பை வழங்கினாலும், எலிவேட்டும் சளைத்தது அல்ல. எலிவேட்டின் 1.5-லி இன்ஜின் இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சாலையில் தனது நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளதோடு ஹையர் RPM வரம்பில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதால் டிரைவிங் பிரியர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
கார்தேக்கோவின் கருத்து...
அளவுகள், பூட் ஸ்பேஸ், பவர்ட்ரெய்ன் தேர்வுகள் மற்றும் நவீன வசதிகள் என அனைத்திலுமே ஹோண்டா எலிவேட்டை விட டாடா சியரா சிறந்து விளங்குகிறது. டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் உட்பட மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை சியரா வழங்கும் வேளையில், எலிவேட் ஒரே ஒரு நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், காகித அளவில் எலிவேட்டின் பெட்ரோல் இன்ஜின் கூடுதல் பவரைத் தருவதோடு இந்தியாவில் நீண்டகால நம்பகமான வரலாற்றையும் கொண்டுள்ளது.

சியராவின் கேபின் டிரிபிள்-ஸ்கிரீன் லேஅவுட், பேனோராமிக் சன்ரூஃப், பிரிமியம் JBL சவுண்ட் சிஸ்டம், பவர்டு டெயில்டோர் மற்றும் பின்சீட் சொகுசு வசதிகளுடன் மிகவும் வசதியாகவும் பிரிமியமாகவும் காட்சியளிக்கிறது. இரண்டு SUVகளுமே சிறந்த பாதுகாப்பு மற்றும் சௌகரியமான அம்சங்களை வழங்கினாலும், சியராவின் அதிகமான உபகரணங்கள், பெரிய அலாய் வீல்கள், கூடுதல் டிரைவிங் மற்றும் டெரெய்ன் மோட்கள் அதற்குத் தனித்துவமான பலத்தைத் தருகின்றன. இருந்தாலும், இந்த செக்மென்ட்டிலேயே வென்டிலேட்டட் ரியர் சீட்களை வழங்கும் ஒரே காராக ஹோண்டா எலிவேட் திகழ்கிறது.

ரூ. 11.49 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் டாடா சியரா, ஹோண்டா எலிவேட்டை விட (ரூ. 11.80 லட்சம்) சற்றே குறைந்த விலையில் அதிக இடம், வசதிகள் மற்றும் பரந்த இன்ஜின் தேர்வுகளை வழங்குவதால், ஒரு முழுமையான மிட்-சைஸ் SUV -யை விரும்புவோருக்குச் சிறந்த தேர்வாக அமைகிறது. இருப்பினும் ஒரு நம்பகமான நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை நீங்கள் விரும்பினால், சியராவின் டாப் வேரியன்ட்களை விட எலிவேட்டின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்கள் குறைந்த விலையில் கிடைப்பதோடு, அன்றாட தேவைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சிறப்பாகவே வழங்குகின்றன.
கருத்தில் கொள்ள வேண்டிய பிற மாற்றுக் கார்கள்
ஹோண்டா எலிவேட் மற்றும் டாடா சியரா ஆகிய இரண்டுமே தங்களின் சொந்தப் பிரிவில் சிறந்த தயாரிப்புகளாகும். எலிவேட் 2023 முதல் இந்தியச் சந்தையில் விற்பனையில் இருந்து தனக்கென ஒரு விசுவாசமான வாடிக்கையாளர் வட்டத்தைக் கொண்டுள்ள வேளையில் சியரா புதிய காராக இருந்தாலும் நாட்டின் அடையாளமாக விளங்கும் பெயர் மற்றும் வலுவான தோற்றத்துடன் களமிறங்கியுள்ளது. இந்த செக்மென்ட்டில் உள்ள பிற மாற்று விருப்பங்களையும் அவை வழங்கும் அம்சங்களையும் கீழே காணலாம்:
-
ஹூண்டாய் கிரெட்டா: ஏராளமான வசதிகள், சௌகரியமான பயணம் மற்றும் பலவிதமான இன்ஜின் தேர்வுகளுடன் இந்திய சந்தையில் அதிக அளவில் விற்பனையாகும் மிட்-சைஸ் SUV.
-
கியா செல்டோஸ்: அம்சம் நிறைந்த கேபின், நம்பகமான பிராண்ட் இமேஜ் மற்றும் பல்வேறு இன்ஜின், கியர்பாக்ஸ் தேர்வுகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த ஆப்ஷன்.
-
ரெனால்ட் டஸ்டர் / நிஸான் டெக்டான்: சவாரி, கையாளுதல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கு இடையே சிறந்த சமநிலையை வழங்கி, சாலையில் கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் கார்கள். இரண்டும் கார்ப்பரேட் ட்வின்ஸ் மாடல்களாகும்.
-
மாருதி விக்டோரிஸ்: ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த மைலேஜ், குறைவான பராமரிப்புச் செலவு,வித்தியாசமான டிசைன், விசாலமான கேபின் மற்றும் AWD ஆப்ஷனுடன் தொந்தரவில்லாத அனுபவத்தைத் தரும் SUV.
-
மாருதி கிராண்ட் விட்டாரா / டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்: விக்டோரிஸ் மாடலில் உள்ள அனைத்து அம்சங்களையும் பாரம்பரியமான பாக்ஸி SUV டிசைனில் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான கார்.
-
போக்ஸ்வேகன் டைகுன் / ஸ்கோடா குஷாக்: பஞ்சியான டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹை-பெர்ஃபார்மன்ஸ் DSG கியர்பாக்ஸ் சேர்க்கையுடன் சிறந்த டிரைவிங் டைனமிக்ஸை விரும்பும் நபர்களுக்கான ஸ்போர்ட்டியான மாடல்கள்.
-
எம்ஜி ஆஸ்டர்: அதிக செயல்திறனை விட, பணத்திற்கான மதிப்பு, ஆடம்பரமான டாஷ்போர்டு, விசாலமான கேபின் மற்றும் சௌகரியமான பயணத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாடல்.














