ஹூண்டாய் பேயான் vs கியா செல்டோஸ்: கொரியன் சகோதர்களின் நேரடி மோதல்... எது பெஸ்ட் சாய்ஸ்?
பேயான் மாடல் செல்டோஸை விட கணிசமான அளவு குறைந்த விலையில் கிடைக்கிறது. அதேநேரம் செல்டோஸ் கூடுதல் வசதிகளையும் அதிக பவரையும் வாரி வழங்குகிறது.
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவியான பேயான் மாடலை இந்தியாவில் 9.99 லட்சம் ரூபாய் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வென்யூ மற்றும் கிரெட்டா ஆகிய கார்களுக்கு இடைப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கிரெட்டாவை விட ஒரு படி கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், இது கியா செல்டோஸை விடவும் அரை செக்மென்ட் கீழேதான் அமைகிறது. ஆனாலும் கூட விலை, வசதிகள் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் இவ்விரு கார்களுக்கும் இடையே பெரிய அளவிலான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. செல்டோஸ் அதிக விலையுடனும் கூடுதலான சொகுசு வசதிகளுடனும் களமிறங்குகிறது; மறுபுறம் பேயான் மாடல் போட்டி நிறைந்த காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டில் ஒரு புதிய புதுமை உணர்வைக் கொண்டுவருகிறது.
இந்த விரிவான தொகுப்பில், இவ்விரு கார்களின் அனைத்து அம்சங்களையும் நேருக்கு நேர் ஒப்பிட்டுப் பார்க்க உள்ளோம். அத்துடன் செல்டோஸ் காரின் பெரிய உருவமும் கூடுதல் எஞ்சின் தேர்வுகளும் அதன் அதிகப்படியான விலைக்கு நியாயம் சேர்க்கிறதா என்பதையும் அலசுவோம்.
விலை
| மாடல் |
ஹூண்டாய் பேயான் |
கியா செல்டோஸ் |
|||
|
|
|
- பேயான் மாடல் மிகவும் சிக்கனமான தேர்வாக விளங்குகிறது; இதன் என்ட்ரி-லெவல் வேரியண்ட் செல்டோஸை விட சுமார் 1 லட்சம் ரூபாய் குறைவாகக் கிடைக்கிறது.
- டாப்-எண்ட் வேரியண்ட்டை ஒப்பிடுகையில் இந்த விலை வித்தியாசம் 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் உயர்கிறது. இருப்பினும், அதிக விலை கொண்ட செல்டோஸில் டர்போ-பெட்ரோல் அல்லது டீசல் ஆட்டோமேட்டிக் பவர்டிரெயின் கிடைக்கிறது, ஆனால் இத்தகைய தேர்வுகள் பேயானில் வழங்கப்படவில்லை என்பதால் இதை ஒரு நேரடி ஒப்பீடாக எடுத்துக்கொள்ள முடியாது.
- இவ்விரு எஸ்யூவிகளுமே வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எக்கச்சக்கமான வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
அளவீடுகள்
| அளாவுகள் |
ஹூண்டாய் பேயான் |
கியா செல்டோஸ் |
வித்தியாசம் |
| நீளம் |
4245 mm |
4460 mm |
(-215 mm) |
| அகலம் |
1810 mm |
1830 mm |
(-20 mm) |
| உயரம் |
1605 mm |
1630 mm |
(-25 mm) |
| வீல்பேஸ் |
2600 mm |
2690 mm |
(-90 mm) |
| பூட்ஸ்பேஸ் |
505 litres |
447 litres |
+58 litres |
-
செல்டோஸ் கார் அனைத்து அளவீடுகளிலுமே பெரியதாக இருக்கிறது; குறிப்பாக நீளம் மற்றும் வீல்பேஸ் ஆகியவற்றில் கூடுதல் முன்னிலை வகிக்கிறது. இந்த கூடுதல் வீல்பேஸ் காரின் பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு அதிக லெக்ரூம் இடவசதியைத் தரும்.

-
இரண்டு கார்களின் அகலம் மற்றும் உயரத்திற்கு இடையே மிகக் குறைந்த அளவிலான வித்தியாசமே உள்ளது.

-
அதேசமயம் பூட்ஸ்பேஸ் விஷயத்தில் பேயான் காரே முந்துகிறது; இதில் 505 லிட்டர் பூட்ஸ்பேஸ் கிடைக்கிறது, இது செல்டோஸை விட சுமார் 58 லிட்டர்கள் கூடுதலாகும்.

| டிசைன் விஷயத்திலும் இரண்டும் வேறுபடுகின்றன: செல்டோஸ் மாடல் மாடர்னாகவும், நிமிர்ந்த கம்பீர தோற்றத்துடனும், உயரமான முன்பகுதி மற்றும் செங்குத்தான லைட்டிங் கூறுகளுடன் ஒரு பாக்ஸி ஸ்டைலில் காட்சியளிக்கிறது. மறுபுறம் பேயான் மாடல் மிகவும் கச்சிதமாகவும், மிருதுவான வளைவுகள் கொண்ட டிசைனுடனும் காட்சியளிக்கிறது. |
கலர் ஆப்ஷன்கள்
| ஹூண்டாய் பேயான் |
கியா செல்டோஸ் |
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|
||
|
|||
|
|||
|
|||
கிராஃபைட் |
பிளாக் ரூஃப் உடன் டூயல்-டோன் தேர்விலும் கிடைக்கிறது.
^ - மேட் ஃபினிஷிலும் கிடைக்கிறது.
-
பேயான் மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கிறது; இதில் இரண்டு நிறங்களை பிளாக் ரூஃப் உடனும், இரண்டு நிறங்களை மேட் ஃபினிஷிலும் தேர்வு செய்யலாம்.
-
செல்டோஸ் கூடுதலான வண்ணத் தேர்வுகளை வழங்குகிறது; அதிக வெரைட்டி அல்லது தனித்துவமான தோற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்
பவர்டிரெயின்
| மாடல் |
ஹூண்டாய் பேயான் |
கியா செல்டோஸ் |
|||
| எஞ்சின் |
|
1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5-லிட்டர் டீசல் |
|
| டிரான்ஸ்மிஷன் |
6-speed MT/IVT |
6-speed MT/IVT |
7-speed DCT |
6-speed MT/6-speed AT |
|
| பவர் |
115 PS |
115 PS |
160 PS |
116 PS |
|
| டார்க் |
144 Nm |
144 Nm |
253 Nm |
250 Nm |
|
-
உற்சாகமான டிரைவிங்கை விரும்பும் ஸ்போர்ட்டி வாடிக்கையாளர்களுக்கு டர்போ-பெட்ரோலும், தினசரி அதிக தூரம் பயணிப்பவர்களுக்கு டீசலும் என செல்டோஸ் எக்கச்சக்கமான எஞ்சின் தேர்வுகளை வாரி வழங்குகிறது.

-
நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் ஆப்ஷனைப் பொறுத்தவரை இரண்டு கார்களுமே ஒரே மாதிரியான எஞ்சின், மேனுவல் மற்றும் CVT தேர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அதேநேரம் எடை குறைவாகவும் கச்சிதமான அளவிலும் இருப்பதால், இந்த எஞ்சின் பேயானுக்கு இன்னும் கூடுதல் பொருத்தமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-
பேயான் மாடலில் சிஎன்ஜி பவர்டிரெயினை 2027 ஜனவரிக்குள் அறிமுகப்படுத்த உள்ளதாக ஹூண்டாய் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அம்சங்கள்
| அம்சங்கள் |
ஹூண்டாய் பேயான் |
கியா செல்டோஸ் |
| Auto LED Headlamps |
✅ |
✅ |
| LED foglamps |
✅ |
✅ |
| LED Taillamps |
✅ |
✅ |
| Wheels |
17-inch alloy wheels |
18-inch alloy wheels |
| Height-adjustable Driver Seat |
✅ |
✅ |
| Infotainment Setup |
12.3-inch touchscreen |
12.3-inch touchscreen |
| Wireless Apple CarPlay/Android Auto |
✅ |
✅ |
| Instrument cluster |
12.3-inch semi-digital display |
12.3-inch semi-digital display |
| Wireless Phone Charger |
✅ |
✅ |
| Powered driver seats |
8-way |
10-way with memory function |
| Ambient lighting |
✅ |
✅ |
| Sunroof |
Panoramic sunroof |
Panoramic sunroof |
| Rear sunblinds |
❌ |
✅ |
| Sound system |
8-speaker BOSE |
8-speaker BOSE |
| Climate Control |
Single-zone |
Dual-zone |
| Keyless entry |
✅ |
✅ |
| Ventilated front seats |
✅ |
✅ |
| Front centre armrest |
✅ |
✅ |
| Connected Car Tech |
✅ |
✅ |
| Reclining Rear Seats |
✅ (2-step) |
✅ |
| Airbags |
6 |
6 |
| Parking Camera |
360-degree |
360-degree |
| Dashcam |
✅ |
❌ |
| ESC (electronic stability control) |
✅ |
✅ |
| Rear defogger |
✅ |
✅ |
| TPMS (Tyre Pressure Monitoring System) |
✅ |
✅ |
| ADAS |
✅ |
✅ |
-
இரண்டு கார்களின் கேபின்களுமே ஏராளமான சொகுசு வசதிகளால் நிறைந்துள்ளன; குறிப்பாக பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 8-ஸ்பீக்கர் போஸ் சிஸ்டம், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா, Level-2 ADAS மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.

-
இரண்டு கார்களிலுமே பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் செல்டோஸில் கூடுதலாக 10-வே டிரைவர் சீட் அட்ஜஸ்ட், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பின்பக்க ஜன்னல் சன்ஷேடுகள் இடம்பெற்றுள்ளன. இதற்குப் போட்டியாக செல்டோஸில் இல்லாத இன்பில்ட் டேஷ்கேம் வசதியை பேயான் வழங்குகிறது.

CarDekho Says…
நடைமுறைக்கு உகந்த எஞ்சின் அதிக வசதிகள் கொண்ட கேபின் மற்றும் புதிய டிசைன் அமைப்பை விரும்பினால் பேயான் ஒரு மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் வேரியண்ட்களை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தாலும் கூட இது செல்டோஸை விட மிகக் குறைந்த விலையிலேயே கிடைக்கிறது.
அதேசமயம், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது செல்டோஸ் இன்னும் முழுமையான காராகவும் அதிக ஈர்ப்பு கொண்ட மாடலாகவும் திகழ்கிறது. இதில் கூடுதல் வசதிகள், அதிக இடவசதி மற்றும் டர்போ-பெட்ரோல் அல்லது டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. எனவே நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்பவர்கள் அதிக பவர் எதிர்பார்ப்பவர்கள் அல்லது தினசரி நீண்ட தூரப் பயணங்களுக்காக டீசல் கார் தேவைப்படுபவர்களுக்கு செல்டோஸ் தான் சரியான சாய்ஸ்.
ஒருவேளை உங்களுக்கு நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மட்டுமே போதும் என்றால் பேயான் மாடலைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமானது. ஆனால் பலதரப்பட்ட எஞ்சின் தேர்வுகளும், பெரிய உருவமும், கூடுதல் பிரீமியம் அனுபவமும் வேண்டுமென்றால் செல்டோஸ் அதன் அதிக விலைக்கு முழு நியாயம் சேர்க்கிறது.
பரிசீலிக்க வேண்டிய பிற கார்கள்
ஹூண்டாய் கிரெட்டா: நீண்ட அம்சங்களின் பட்டியல், சிறந்த பயண சௌகரியம் மற்றும் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களுடன் இந்தியாவின் நம்பர் 1 காம்பேக்ட் எஸ்யூவியாகவும் செக்மென்ட் லீடராகவும் வலம் வருகிறது.
ஹோண்டா எலிவேட்: சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் மூலம் அசத்தலான புதிய வசதிகள், ஸ்மூத்தான பெட்ரோல் எஞ்சின், உறுதியான ரைடு குவாலிட்டி மற்றும் விசாலமான கேபின் இடவசதியைக் கொண்டுள்ளது.
டாடா சியரா: இதன் கிளாசிக் ரெட்ரோ டிசைன், விசாலமான உட்புறம், பலவிதமான எஞ்சின் தேர்வுகள் மற்றும் செக்மென்ட்டிலேயே முன்னணியில் இருக்கும் வசதிகளுக்காக இதைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாருதி விக்டோரிஸ்: தொந்தரவில்லாத மெயின்டனன்ஸ், தனித்துவமான டிசைன், ஹைப்ரிட் டெக்னாலஜி தரும் அபார மைலேஜ், அதிநவீன கேபின் மற்றும் ஆப்ஷனல் AWD அமைப்பு ஆகியவற்றுக்காகப் பரிசீலிக்கலாம். எங்களின் பேயான் vs விக்டோரிஸ் ஒப்பீட்டையும் பார்க்கத் தவறாதீர்கள்.
மாருதி கிராண்ட் விட்டாரா / டொயோட்டா ஹைரைடர்: விக்டோரிஸ் காரில் உள்ள அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கிறது. ஆனால் கூடுதல் பாக்ஸியான பாரம்பரிய எஸ்யூவி தோற்றத்தில் கிடைக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் டைகுன்/ ஸ்கோடா குஷாக்: மிகச் சிறந்த டிரைவிங் டைனமிக்ஸ், அதிரடியான TSI எஞ்சின்கள் மற்றும் மின்னல் வேகத்தில் செயல்படும் DSG கியர்பாக்ஸ் அனுபவத்திற்காக இவற்றைத் தேர்வு செய்யலாம்.
ரெனோ டஸ்டர்: பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் ஆகிய இரண்டு தேர்வுகளிலும் கிடைக்கிறது. குறிப்பாக இதன் புதிய ஹைப்ரிட் மாடல், 20 லட்சம் ரூபாய்க்குள் வாங்கக் கூடிய மிகச் சிறந்த கார்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
எம்ஜி ஆஸ்டர்: இந்த செக்மென்டில் சற்று பழமையான மாடலாக இருந்தாலும், இது மிகவும் பிரீமியமான கேபினை வழங்கி தற்போதைய சந்தையில் ஒரு சிறந்த வேல்யூ-ஃபார்-மனி தேர்வாக இருக்கிறது.
சிட்ரோன் ஏர்கிராஸ் X: சிட்ரோனின் இந்த 5+2 சீட்டர் மாடல் ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட காராகும். இந்த பிரிவிலேயே மிகவும் சிறப்பான சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் சக்திவாய்ந்த பவர்டிரெயின் தேர்வுகளை இது வழங்குகிறது.














