பிளக்-இன் ஹைப்ரிட் அல்லது ஹைப்ரிட்: MG ஹெக்டர் டோமாஹாக் PHEV vs கிராண்ட் விட்டாரா - சிறந்தது எது?
100 கி.மீ-க்கும் அதிகமான முழுமையான EV பயன்முறை மற்றும் 1000 கி.மீ பயண வரம்பு இது கேட்க மிகவும் அருமையாக இருக்கிறதுதானே ?
- ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில் ஹைப்ரிட் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் இதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: MG ஹெக்டர் டோமாஹாக் போன்ற பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) மற்றும் மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா போன்ற ஸ்ட்ராங் ஹைப்ரிட். ICE (பெட்ரோல்/டீசல்) கார் வாங்குவதா அல்லது முழுமையான EV-க்கு மாறுவதா என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த இரண்டு தொழில்நுட்பங்களில் எது உங்கள் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானது என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
ஹைப்ரிட் என்றால் என்ன?
சுருக்கமாகச் சொன்னால் ஹைப்ரிட் கார் என்பது ஒரு பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டு பவர் சோர்ஸ்களையும் கொண்டது. இந்த இரண்டும் இணைந்து செயல்படுவதன் மூலம் காரின் மைலேஜை அதிகரிப்பதும் புகையை குறைப்பதும் தான் இதன் முக்கிய நோக்கம். ஆனால் இந்த இரண்டு பவர் சோர்ஸ்களும் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்துதான் அது ஸ்ட்ராங் ஹைப்ரிட் அல்லது PHEV என வகைப்படுத்தப்படுகிறது.

வெவ்வேறு பயன்பாடுகளுக்காக இந்த பவர்டிரெய்ன் கலவையைப் பயன்படுத்தும் பல்வேறு வகையான ஹைப்ரிட் அமைப்புகள் உள்ளன. இன்று, நாம் மிகவும் பொதுவான ஹைப்ரிட்களான பேரலல் ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிளக்-இன் ஹைப்ரிட் கார்கள் மீது கவனம் செலுத்துகிறோம்.
இரண்டு ஹைப்ரிட்களும் எப்படி வேலை செய்கின்றன?
இவ்விரண்டிற்கும் உள்ள பொதுவான அம்சங்களைப் பார்ப்போம். ஒவ்வொரு வகை கார்களிலும் ஒரு பெட்ரோல் இன்ஜின் ஒரு பேட்டரி பேக் மற்றும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் ஆகியவை அடங்கும். சிறந்த எரிபொருள் சிக்கனத்தை அடைவதற்காக இவை இணைந்து செயல்படுகின்றன. இந்தச் செயல்பாட்டில், பேட்டரியின் சார்ஜ் கிட்டத்தட்ட தீரும் வரை கார்கள் முடிந்தவரை மின்சார சக்தியில் இயங்குவதற்கே முன்னுரிமை கொடுக்கும். இது 'பியூர் EV மோட்' என்று அழைக்கப்படுகிறது. அப்போதுதான் பெட்ரோல் இன்ஜின் இயங்கி, பேட்டரியை சார்ஜ் செய்யத் தொடங்கும். இது 'சீரிஸ் ஹைப்ரிட் மோட்' என்று அழைக்கப்படுகிறது. இதில் இன்ஜின் சக்கரங்களுக்கு சக்தியளிப்பதில்லை மாறாக பேட்டரியை சார்ஜ் செய்யும் வேலையை மட்டுமே செய்கிறது.
இருப்பினும் உங்களுக்குக் கூடுதல் சக்தி தேவைப்படும்போது அதாவது ஆக்சிலரேட்டரை அழுத்தும் தருணத்தில் முந்திச் செல்வதற்கோ அல்லது மலைப்பாதைகளில் ஓட்டும்போதோ எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் இன்ஜின் ஆகிய இரண்டும் தங்களின் மொத்த ஒருங்கிணைந்த சக்தியை உங்களுக்கு வழங்குகின்றன. இது 'பேரல் ஹைப்ரிட் மோட்' என்று அழைக்கப்படுகிறது.

இறுதியாக நீங்கள் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டும்போது மின் மோட்டார் அதன் குறைந்தபட்ச செயல்திறன் நிலையில் இருக்கும். அப்போதுதான் என்ஜின் பயன்முறை செயல்படத் தொடங்கும். மேலும் என்ஜின் மட்டுமே காரின் சக்கரங்களுக்கு ஆற்றலை வழங்கும். இது பியூர் என்ஜின் பயன்முறை என்று அழைக்கப்படுகிறது. காரை இயக்குவதில் மின் மோட்டார் எந்தப் பங்கும் வகிப்பதில்லை.
PHEV Vs ஹைப்ரிட்: முக்கிய வேறுபாடுகள்
MG ஹெக்டர் டோமாஹாக் PHEV மற்றும் கிராண்ட் விட்டாரா ஹைபிரிட் -க்கு இடையிலான மிக முக்கியமான வேறுபாடு அவற்றின் பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதிதான். ஹெக்டர் டோமாஹாக் ஒரு பெரிய பேட்டரி பேக்குடன் வருகிறது, அதை ஒரு முழுமையான எலக்ட்ரிக் காரைப் போலவே வீட்டிலேயே சார்ஜ் செய்துகொள்ளலாம். ஆனால் கிராண்ட் விட்டாரா-வில் இருப்பது ஒரு சிறிய பேட்டரி. அதை வெளியே இருந்து சார்ஜ் செய்ய முடியாது; அது தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும்.

இந்த வேறுபாடுகளால், பயன்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. ஹெக்டர் டோமாஹாக் -ஐ ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 100 கி.மீ-க்கு மேல் பெட்ரோல் பயன்படுத்தாமலேயே பயணிக்க முடியும். அதாவது, உங்கள் தினசரி ஆஃபீஸ் அல்லது நகரப் பயணங்களை முழுமையான EV- போலவே பயன்படுத்தலாம். நீண்ட தூரப் பயணங்களின்போது பெட்ரோல் இன்ஜின் இருப்பதால் ரேஞ்ச் பற்றிய கவலையும் இல்லை. இதற்கு நேர்மாறாக கிராண்ட் விட்டாரா-வால் நீண்ட தூரம் EV மோடில் பயணிக்க முடியாது. அதன் எலக்ட்ரிக் மோட்டார் பெட்ரோல் இன்ஜினுக்குத் துணைபுரிந்து மிகச் சிறந்த மைலேஜை (ARAI கிட்டத்தட்ட 28 கிமீ/லி) கொடுக்கிறது.
இந்தியாவில் உள்ள PHEV மற்றும் ஹைப்ரிட் கார்களின் பட்டியல் இதோ:
| PHEV |
ஹைபிரிட் |
| MG ஹெக்டர் டோமாஹாக் PHEV |
மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா |
| BMW M5 |
டொயோட்டா ஹைரைடர் |
| Mercedes-Benz S-Class |
ஹோண்டா சிட்டி |
| ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் |
டொயோட்டா வெல்ஃபையர் |
| BYD சீல் U DM-i (அறிமுகமாகவுள்ளது) |
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் |
இந்தியாவில் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் விருப்பங்களைக் கொண்ட கார்கள் அதிகமாக இருந்தாலும் PHEV கார்கள் இன்னும் அரிதாகவே உள்ளன.
கார்தேக்கோ சொல்வது...
MG ஹெக்டர் டோமாஹாக் PHEV மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஹைபிரிட் ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வு உங்கள் தினசரிப் பயன்பாடு மற்றும் சார்ஜிங் வசதியைப் பொறுத்தது.
தினசரிப் பயணம் 100 கி.மீ-க்குள் இருந்து வீட்டில் சார்ஜிங் பாயின்ட் அமைக்கும் வசதி உங்களுக்கு இருந்தால் MG ஹெக்டர் டோமாஹாக் PHEV ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது தினசரிப் பயன்பாட்டிற்கு ஒரு EV-யின் நன்மைகளையும் (குறைந்த இயங்குச் செலவு) நீண்ட பயணங்களுக்கு ஒரு பெட்ரோல் காரின் வசதியையும் ஒருங்கே வழங்குகிறது. EV வாங்கத் தயங்குபவர்களுக்கு இது ஒரு சரியான மாற்று.
மாறாக உங்கள் பயணங்கள் கணிக்க முடியாதவையாகவும் சிட்டி மற்றும் நெடுஞ்சாலை என கலவையாகவும் இருந்து சார்ஜ் செய்யும் கவலை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு மாருதி கிராண்ட் விட்டாரா ஹைபிரிட் பொருத்தமானது. எந்தவிதமான வாழ்க்கைமுறை மாற்றமும் இல்லாமல் மிகச் சிறந்த மைலேஜை இது வழங்குகிறது.

எனவே EV போன்ற அனுபவத்துடன் கூடிய பாதுகாப்பு வேண்டுமானால் ஹெக்டர் டோமாஹாக் PHEV-ஐயும் அதிகபட்ச மைலேஜ் மற்றும் எளிமையான பயன்பாடு வேண்டுமானால் கிராண்ட் விட்டாரா ஹைபிரிட் -ஐயும் தேர்ந்தெடுக்கலாம். இந்த இரண்டு கார்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட்ஸில் தெரிவியுங்கள்.














