• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    BMW, மெர்சிடிஸ் கார்களுக்கு டஃப் கொடுக்க வருது BYD-ன் டென்ஸா... ரிலீஸ் தேதி இதுதான்!

    டென்ஸா இந்தியாவில் அறிமுகமான சிறிது நேரத்திலேயே D9 சொகுசு MPV -யை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    rohit
    rohit
    published on அக்டோபர் 27, 2026 21:44 ist
    info icon
    published onOct 27, 2026 21:44 IST
    last updated onOct 27, 2026 21:44 IST
    5 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Denza Brand Launch Confirmed

    எங்கள் வாசகர்களில் தேர்வு செய்யப்படும் 50 அதிர்ஷ்டசாலிகளுக்குப் பிரத்யேகமான கார் வாங்கும் வழிகாட்டுதல் பயணத்தை நாங்கள் வழங்க உள்ளோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி, உங்கள் சந்தேகங்கள் அனைத்திற்கும் விளக்கம் பெறலாம். படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டால் எங்கள் குழுவினர் உங்களை விரைவில் தொடர்புகொள்வார்கள்.

    BYD நிறுவனம் தனது சொகுசு கார் பிரிவான டென்ஸா-வை இந்திய சந்தையில் விரைவில் களமிறக்கத் திட்டமிட்டிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. தற்போது இதனை உறுதி செய்துள்ள சீன ஆட்டோமொபைல் நிறுவனம், நவம்பர் 13 அன்று இந்தியாவில் இந்த ஆடம்பர பிராண்ட் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. டென்ஸா பிராண்ட் மற்றும் அதன் தயாரிப்புகள் பற்றிய முக்கிய விவரங்கள் இதோ:

    டென்ஸா என்றால் என்ன?

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டெய்ம்லர் மற்றும் BYD இணைந்து கடந்த 2010-ம் ஆண்டு ஒரு கூட்டு நிறுவனமாக டென்ஸாவைத் தொடங்கின. ஆனால் 2014 முதல் இது முழுக்க முழுக்க BYD நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்து நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஒரு பிரீமியம் பிராண்டாக உருவெடுத்துள்ளது.

     Denza Logo

    தற்போது விற்பனையில் இருக்கும் BYD மாடல்களுக்கு மேல் இடம்பிடிக்கவுள்ள இந்த டென்ஸா கார்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதல் ஆடம்பர அனுபவத்தை வழங்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், டொயோட்டாவிற்கு லெக்ஸஸ் எப்படியோ, போக்ஸ்வேகனுக்கு ஆடி எப்படியோ, அதே போன்றதொரு இடத்தில் தான் BYD குழுமத்தில் இந்த டென்ஸா நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவிற்கு என்னென்ன மாடல்கள் வரவுள்ளன?

    இந்தியாவில் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு D9 என்ற பிரீமியம் MPV காரையே டென்ஸா முதலில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் Z9 GT என்ற ஸ்போர்ட்டி ஸ்டேஷன் வேகன் மாடலையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஒருசில தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Denza D9

    இதில் Z9 GT மாடலானது வெறும் 2.7 வினாடிகளிலேயே 0-விலிருந்து 100 கிமீ/மணி வேகத்தைத் தொடும் அபார பெர்ஃபாமன்ஸ் கொண்ட ஸ்டேஷன் வேகனாக இருக்கும். மற்றொருபுறம் D9 மாடலானது சௌகரியமான பயணத்தை மட்டுமே விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் EV மற்றும் PHEV ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் கூடிய சொகுசு MPV மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

    Denza Z9 GT

    டென்ஸா D9 பற்றிய கூடுதல் விவரங்கள்

    டென்ஸா D9 ஒரு பிரம்மாண்டமான 3-வரிசை இருக்கைகள் கொண்ட MPV ஆகும். இது 5.2 மீட்டருக்கும் அதிகமான நீளமும், 3.1 மீட்டருக்கு அதிகமான வீல்பேஸும் கொண்டது.

     Denza D9

    முழுக்க முழுக்கப் பயணிகளின் சௌகரியத்திற்கு முக்கியத்துவம் தந்து வடிவமைக்கப்பட்ட இதன் இரண்டாம் வரிசையில் வென்டிலேஷன், மசாஜ் மற்றும் எலக்ட்ரிக் அட்ஜஸ்ட்மென்ட் வசதிகள் கொண்ட கேப்டன் சீட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வரவுள்ள டென்ஸா D9 மாடலில் பல டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், கூடுதலான சொகுசு வசதிகள் மற்றும் விரிவான ADAS அம்சங்கள் அடங்கிய முழுமையான பாதுகாப்பு வசதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

    Denza D9 Middle Row Seats 

    சர்வதேச அளவில் இந்த MPV மாடல் எலக்ட்ரிக் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் ஆகிய இரண்டு வகைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் முழு எலக்ட்ரிக் மாடல் சில நாடுகளில் NEDC விதிகளின்படி 600 கிமீ தூரம் வரை ரேஞ்ச் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய மாடலில் என்னென்ன பவர்டிரெய்ன் தேர்வுகள் இடம்பெறும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் டென்ஸா D9 வழங்கவுள்ள 5 முக்கிய அம்சங்களை நாங்கள் ஏற்கனவே விரிவாகத் தொகுத்துள்ளோம்.

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

    அறிமுகத்தைத் தொடர்ந்து மிக விரைவிலேயே இந்த டென்ஸா D9 சொகுசு MPV மாடல் இந்திய விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 கோடிக்கு மேல் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் MG M9 மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் ஆகிய கார்களுக்கு இடையிலான பிரிவில் இது நிலைநிறுத்தப்படலாம்.

    கார்தேக்கோவின் பார்வை

    இந்தியாவில் டென்ஸா பிராண்டின் வருகை கார் பிரியர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். காரணம் இது நமது சந்தையில் சொகுசு கார்களின் தேர்வை மேலும் விரிவுபடுத்துகிறது. குறிப்பாக ஏற்கனவே BYD கார்களை வாங்க நினைத்து, இன்னும் சற்று கூடுதல் ஆடம்பரத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் வேறு எந்த நிறுவனத்தையும் தேடிச் செல்லாமல் இந்த குழுமத்திற்குள்ளேயே அதைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.

    அதிலும் நமது நாட்டில் ஆடம்பர MPV கார்களுக்கெனத் தனி வரவேற்பு நிலவி வரும் சூழலில் D9 மாடலின் மூலம் தனது பயணத்தைத் தொடங்குவது மிகச் சரியான நகர்வாகும். சரியான விலையில் களமிறக்கப்பட்டால், இந்தியாவின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பாளர்களின் வரிசையில் டென்ஸா நிறுவனமும் நிச்சயம் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

    was this article helpful ?

    rohit
    Rohit Shah is a Content Writer with the CarDekho Group and an automotive journalist with nearly seven years of experience covering the automotive industry. He holds a Bachelor\'s degree in Business Management (International Business) and a Post Graduate Diploma in Business Management. Over the course of his career, Rohit has authored more than 2,500 articles for CarDekho, covering topics ranging from new car launches to the latest developments in the Indian and global automotive industries. His interest in cars began in childhood when he started collecting scale models, and he unwinds by taking a car out for a spin. When he\'s not talking or writing about cars, you can find him watching new movies and series or learning new languages.மேலும் படிக்க

    Write your Comment on Denza d9

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    ரிமோட் ஏசி ஆன்/ஆஃப்

      டிரெண்டிங் மினிவேன் கார்கள்

      • உபகமிங்
      • பிரபலமானவை
      *ex-showroom <cityname> யில் உள்ள விலை
      ×
      we need your சிட்டி க்கு customize your experience