டிகுவான் R-Line -க்கு டாட்டா சொன்ன ஃபோக்ஸ்வேகன்! இனி மிச்சமிருப்பது இந்த SUV -கள் மட்டுமே!
பிரீமியம் எஸ்யூவி வாங்க நினைப்பவர்களுக்கு இனி ஒரே தேர்வு டெய்ரான் மட்டுமே!
- ஒரு கருத்தை எழுதுக

| எங்களின் 50 அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பிரத்யேக கார் வாங்கும் அனுபவ வழிகாட்டலை நாங்கள் வழங்குகிறோம். இதன் மூலம் நீங்கள் நேரடியாக ஒரு ஆட்டோமொபைல் நிபுணரிடம் பேசி உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும். உடனே இந்த படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக இருந்தால் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம். |
ஃபோக்ஸ்வேகன் தனது இணையதளத்தில் இருந்து டிகுவான் R-Line காரை நீக்கியுள்ளதால், இந்த கார் இனி இந்தியாவில் கிடைக்காது என்றே தெரிகிறது. இது குறித்து அந்நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதால் அனைத்து கார்களும் விற்றுத் தீர்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் கடைசி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.47.11 லட்சமாக இருந்தது.
ஃபோக்ஸ்வேகனின் தற்போதைய எஸ்யூவி லைன்-அப்
டிகுவான் R-Line நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு இரண்டு எஸ்யூவி மாடல்கள் மட்டுமே உள்ளன. ஒன்று நடுத்தர பட்ஜெட்டை குறிவைத்து களமிறக்கப்பட்டுள்ள டைகுன், மற்றொன்று பிரீமியம் எஸ்யூவி பிரியர்களுக்கான டெய்ரான். இவற்றின் முழு விவரங்கள் இதோ:
| தற்போதைய ஃபோக்ஸ்வேகன் இந்தியா எஸ்யூவி கார்கள் |
|||
|
டைகுன் |
டெய்ரான் |
|
| எஞ்சின் |
1-litre turbo-petrol/1.5 litre turbo-petrol |
2-litre turbo-petrol |
|
| பவர் |
115 PS/150 PS |
204 PS |
|
| டார்ல் |
178 Nm/250 Nm |
320 Nm |
|
| டிரான்ஸ்மிஷன் |
6-speed MT / 8-speed AT / 7-speed DCT (1.5-litre only) |
7-speed DCT |
|
| டிரைவ்ட்ரெய்ன் |
FWD |
AWD |
|
| விலை |
ரூ. 11 லட்சம் முதல் ரூ. 19.47 லட்சம் |
ரூ. 42 லட்சம் முதல் ரூ. 47.74 லட்சம் |
|
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை, MT - மேனுவல் டிரான்ஸ்மிஷன், AT - ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன், DCT - டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
ஃபோக்ஸ்வேகன் வரிசையில் தொடக்க நிலை எஸ்யூவியாக இருக்கும் டைகுன் 3-சிலிண்டர் 1-லிட்டர் அல்லது 4-சிலிண்டர் 1.5-லிட்டர் என இரண்டு டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
அதே சமயம், ஃபோக்ஸ்வேகனின் ஒரே ஆடம்பர எஸ்யூவியாக தற்போது டெய்ரான் மட்டுமே வலம் வருகிறது. விற்பனை நிறுத்தப்பட்ட டிகுவான் R-Line மாடலில் இருந்த அதே எஞ்சின் இதில் பொருத்தப்பட்டிருந்தாலும், அளவுகளில் இது அதைவிட பெரிய காராகும். மேலும் 5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களுடன், அதைவிடக் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. டிகுவான் R-Line முழுமையாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார் என்பதாலும், டெய்ரான் உள்நாட்டிலேயே உதிரிபாகங்கள் கொண்டு அசெம்பிள் செய்யப்படுவதாலும் இந்த விலை வித்தியாசம் சாத்தியமாகியுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் R-Line வசதிகள்

டிகுவான் R-Line காரில் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 15 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay சப்போர்ட், 8 ஸ்பீக்கர்கள், த்ரீ-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், மல்டி-கலர் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் வயர்லெஸ் மொபைல் சார்ஜர் என எக்கச்சக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருந்தன.
ஏராளமான வசதிகளை அள்ளிக் கொடுத்திருந்தாலும், பவர்டு மற்றும் வென்டிலேட்டட் வசதி கொண்ட முன் இருக்கைகள் இதில் விடுபட்டிருந்தது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் R-Line பாதுகாப்பு வசதிகள்
பாதுகாப்பை பொறுத்தவரை இந்த காரில் 9 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், Level-2 ADAS, EBD உடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் டிசென்ட் கன்ட்ரோல் (HDC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் (HSA) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) போன்ற அதிரடியான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் R-Line பவர்ட்ரெய்ன்
பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே களமிறங்கிய டிகுவான் R-Line காரின் பவர்ட்ரெய்ன் விபரங்கள்:
| ஃபோக்ஸ்வேகன் டிகுவான் R-Line |
|
| எஞ்சின் |
2-litre turbo-petrol |
| பவர் |
204 PS |
| டார்க் |
320 Nm |
| டிரான்ஸ்மிஷன் |
7-speed DSG |
| டிரைவ்டிரெயின் |
AWD |
DSG - டேரக்ட் ஷிஃப்ட் கியர்பாக்ஸ்
ஒரு முழுமையான எஸ்யூவியாக இருந்தாலும், சிறந்த ரைடு மற்றும் ஹேண்ட்லிங் தன்மையால் ஓட்டுவதற்கு செம த்ரில்லான அனுபவத்தைத் தந்தது டிகுவான் R-Line. இதில் கொடுக்கப்பட்டிருந்த அடாப்டிவ் டேம்பர்களை சவுகரியமான பயணத்திற்கு ஏற்ப சாஃப்ட்டாகவும், வளைவுகளில் பக்காவான கண்ட்ரோலுக்கு ஏற்ப ஸ்டிஃப்பாகவும் மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியும் இருந்தது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் R-Line போட்டியாளர்கள்
ஜீப் காம்பஸ், ஸ்கோடா கோடியாக் மற்றும் அதே குடும்பத்தைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் ஆகிய கார்கள்தான் டிகுவான் R-Line மாடலுக்கு நேரடி போட்டியாளர்களாக இருந்தன. மேலும் ஆடம்பர கார்களான ஆடி Q3, மெர்சிடிஸ்-பென்ஸ் GLA மற்றும் பிஎம்டபிள்யூ X1 ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த பட்ஜெட் மாற்று தேர்வாகவும் இது பார்க்கப்பட்டது.
கார்தேக்கோவின் கருத்து
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் R-Line விற்பனையில் இருந்து விடைபெற்றிருப்பது சற்று ஏமாற்றம்தான். இருந்தாலும் ஒரு பிரீமியம் ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவியை சொந்தமாக்க நினைப்பவர்களுக்கு டெய்ரான் ஒரு சிறந்த சாய்ஸாக இருக்கிறது. டிகுவானின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாக வந்துள்ள டெய்ரான், கூடுதல் இடவசதி, அசத்தலான அம்சங்கள் மற்றும் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற 7-சீட்டர் அமைப்போடு கிடைக்கிறது. டிகுவான் கார் நம்மை விட்டுப் பிரிந்தாலும், டாப்-எண்ட் ஃபோக்ஸ்வேகனை தேடுபவர்களுக்கு அதைவிட நடைமுறைக்கு ஏற்ற டெய்ரான் தொடர்ந்து களத்தில் இருக்கிறது.














