ஹூண்டாய் பேயான் நிஜத்துல எப்படி இருக்கு தெரியுமா? 18 படங்களில் ஒரு முழு பார்வை!
உடன்பிறப்பான கிரெட்டாவை போலவே பேயானும் ஒரு அம்சம் நிறைந்த கேபினை வழங்குகிறது. ஆனால் தனித்து தெரிய புதிய வடிவமைப்பு அணுகுமுறையை எடுக்கிறது.
- ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்யூவி வரிசையில் 'பேயான்' என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவியை ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வென்யூ மற்றும் க்ரெட்டா ஆகிய மாடல்களுக்கு இடையே நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த கார், பல பிரீமியம் வசதிகள் நிறைந்த கேபினைக் கொண்டுள்ளது. அதேவேளையில் தனது முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் ஒரே ஒரு எஞ்சின் தேர்வு மூலம் பிற மாடல்களில் இருந்து தன்னை தனித்துக் காட்டுகிறது. அதன் தனித்துவமான வெளிப்புற அமைப்பு முதல் வித்தியாசமான உட்புற கேபின் வரை அனைத்தையும் 18 நிஜ புகைப்படங்களின் மூலமாக விரிவாகப் பார்ப்போம்.
வடிவமைப்பு
-
புதிய பேயான் முன்பக்கத்தில் எடுப்பான பானெட் மற்றும் மஸ்குலர் பம்பருடன் மிகக் கூர்மையான தோற்றத்தைப் பெற்றுள்ளது.
-
மெலிதான எல்இடி DRL பட்டைகள் உயரமான பகுதியிலும், பிரதான எல்இடி ஹெட்லேம்ப்கள் அதற்கு சற்று கீழேயும் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளன.
-
விளக்குகளைச் சுற்றியுள்ள கருப்பு நிற அலங்காரம் கூடுதல் கான்ட்ராஸ்ட் லுக்கைத் தருவதுடன், பானெட்டின் மீதுள்ள ஹூண்டாய் லோகோ முன்பக்க கம்பீரத்தை முழுமைப்படுத்துகிறது.
-
முன்பக்க பம்பரில் உள்ள சில்வர் ஸ்கிட் பிளேட் இந்த எஸ்யூவிக்கு முரட்டுத்தனமான ஆஃப்-ரோடு தோற்றத்தை அளிக்கிறது.
-
பக்கவாட்டுத் தோற்றத்தில், தடிமனான பாடி கிளாடிங் மற்றும் செதுக்கப்பட்டது போன்ற பாடி பேனல்கள் இதன் மஸ்குலர் அழகை மேலும் கூட்டுகின்றன.
-
17 இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.
-
இவற்றுடன் கருப்பு நிற ரூஃப் ரெயில்கள், எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் கொண்ட ORVM-கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, பாடி கலர் டோர் ஹேண்டில்கள் மற்றும் பிளாக்-அவுட் B-பில்லர் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
-
பின்பக்க அமைப்பில் முன்பக்க DRL அமைப்பை நினைவுபடுத்தும் அதே டிசைன் தீமில் உருவான எல்இடி டெயில் லேம்ப்கள் உள்ளன. நேர்த்தியான பாக்ஸி டெயில்கேட்டில் ஹூண்டாய் மற்றும் பேயான் பேட்ஜிங்குகள் பொறிக்கப்பட்டுள்ளதுடன், இன்டகிரேட்டட் ரூஃப் ஸ்பாய்லர் ஸ்போர்ட்டியான உணர்வைத் தருகிறது.
-
மஸ்குலர் பின்பக்க பம்பரும், சில்வர் ஸ்கிட் பிளேட்டும் ரக்கடான தோற்றத்தை நிறைவு செய்கின்றன; இதில் ரிவர்ஸ் லேம்ப்கள் பம்பரின் டிசைனோடு மிக இயல்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
உள்புற வடிவமைப்பு
-
வழக்கமான மற்ற ஹூண்டாய் கார்களின் உட்புறத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கேபின் அமைப்பை பேயான் பெற்றுள்ளது.
-
டூயல்-டோன் வண்ண தீம் மற்றும் சற்று வளைந்த கர்வ்டு டூயல்-டிஸ்பிளே செட்டப் ஆகியவை டேஷ்போர்டிற்கு அதிநவீன தோற்றத்தை அளிக்கின்றன.
-
இதன் ஒட்டுமொத்த கேபின் அமைப்பிலும் பல தனித்துவமான டிசைன் கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன.
-
உதாரணமாக மெலிதான செங்குத்து வடிவ ஏசி வென்ட்கள் கொடுக்கப்பட்டு, அவற்றின் நடுவே ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் பேனல் வைக்கப்பட்டுள்ளது. கர்வ்டு டிஸ்பிளே அமைப்பில் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே ஆகிய இரண்டும் டிரைவர் எளிதில் இயக்கும் வகையில் அருகருகே அமைந்துள்ளன.
-
காரின் கேபினுக்கு தனி அடையாளத்தைக் கொடுக்கும் வகையில் வட்ட வடிவ டிசைன் கூறுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கதவின் உள்பக்க ஹேண்டில்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்றவை டேஷ்போர்டு மற்றும் டோர்-பேட்களில் இருந்து தனித்துத் தெரிகின்றன.
-
ஸ்டீயரிங் வீல் வடிவமைப்பு ஹூண்டாய் வென்யூ மற்றும் வெர்னா மாடல்களில் உள்ளதைப் போன்றே இருந்தாலும், இதில் உள்ள மோர்ஸ்-கோட் பாணியிலான புதிய ஹூண்டாய் லோகோ கேபினுக்கு ஒரு நுட்பமான புதுமையைத் தருகிறது.
| குறிப்பு: ஒற்றை நிற எக்ஸ்டீரியர் கொண்ட வேரியண்ட்களில் கிரே மற்றும் ஒயிட் கலந்த டூயல்-டோன் கேபின் தீம் ஸ்டாண்டர்டாகக் கிடைக்கிறது. இது கேபினை கூடுதல் வெளிச்சமாகவும் விசாலமாகவும் உணர வைக்கும். அதேவேளையில் மேட் மற்றும் டூயல்-டோன் வண்ண மாடல்களில் சிவப்பு நிற தையல்களுடன் கூடிய ஸ்போர்ட்டியான ஆல்-பிளாக் கேபின் வழங்கப்படுகிறது; இது அழுக்கு படியாமல் எளிதாகப் பராமரிக்க உதவும். |
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
-
பேயான் காரில் 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே என இரண்டு திரைகள் உள்ளன. மேலும் செங்குத்தாக அமைக்கப்பட்ட ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் பேனலும் இடம்பெற்றுள்ளது.
-
இவற்றுடன் வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், ஆட்டோ-டிம்மிங் IRVM, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் போன்ற பல்வேறு சொகுசு வசதிகளும் உண்டு. இதன் கூடுதல் வசதிகள் பற்றி அறிய எங்கள் வெளியீட்டுக் கட்டுரையைப் பார்க்கலாம்.
-
பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ-ஹோல்டு வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்ட்-சீட் ஆங்கர்கள் மற்றும் TPMS ஆகியவை இடம்பெற்றுள்ளன.
-
மேலும் 2026 பேயான் மாடலில் லெவல்-2 ADAS தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹை-பீம் அசிஸ்ட், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் அடங்கும். இவற்றுடன் ஆட்டோ-ஹெட்லைட்கள், பிளைண்ட் வியூ மானிட்டரிங் வசதியுடன் கூடிய 360 டிகிரி கேமராவும் முழுப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
பவர்டிரெய்ன் விவரங்கள்
2026 பேயான் மாடலில் க்ரெட்டாவில் பயன்படுத்தப்படும் அதே 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மட்டுமே ஒரே தேர்வாக வழங்கப்படுகிறது. அதன் விரிவான விவரங்கள்.
| எஞ்சின் |
|
|
| பவர் |
115 PS |
|
| டார்க் |
144 Nm |
|
| டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/CVT |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT- கண்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமெட்டிக)
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் பேயான் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி வரிசையில் க்ரெட்டாவிற்கு இணையாகக் களமிறங்குகிறது. பேயான் காருக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதனை முன்பதிவு செய்வதற்கான வழிகாட்டியை இங்கே பார்க்கலாம்.
சந்தையில் கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி விக்டோரிஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர், நிஸான் டெக்டான், டாடா சியரா, சிட்ரோன் ஏர்கிராஸ் எக்ஸ், ஹோண்டா எலிவேட் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற முன்னணி மாடல்களுடன் இது நேரடியாகப் போட்டியிடுகிறது.
கார்தேக்கோவின் கருத்து...
ஹூண்டாயின் கார் வரிசையில் பேயான் ஒரு சுவாரஸ்யமான வரவு என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இந்திய எஸ்யூவி சந்தையில் இது எந்த அளவுக்கு எடுபடும் என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஏராளமான தேர்வுகள் உள்ள நிலையில், வெறும் வசதிகள் பட்டியலை மட்டுமே வைத்து சந்தையில் நிலைத்துவிட முடியாது. விலை, பயன்பாட்டு நடைமுறை, பயண சௌகரியம் மற்றும் குறைவான பராமரிப்புச் செலவு என அனைத்திலும் ஒரு முழுமையான பேக்கேஜாக பேயான் தன்னை நிரூபிக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறான இதன் வித்தியாசமான வடிவமைப்பு புதுமையை விரும்புபவர்களைக் கவரலாம். ஆனால் ஏற்கனவே சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மாடல்களை விட்டுவிட்டு வாடிக்கையாளர்கள் இதைத் தேர்ந்தெடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.














