இந்தியாவே எதிர்பார்க்கும் புதிய ஃபார்ச்சூனர் SUV.. புது லுக் இப்படித்தான் இருக்குமா?
அடுத்த தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் டிசம்பர் 1 அன்று உலகளவில் அறிமுகமாகிறது!
- ஒரு கருத்தை எழுதுக

டொயோட்டா ஃபார்ச்சூனரின் இரண்டாம் தலைமுறை மாடல் அறிமுகமாகி ஏறத்தாழ 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும் தனது போட்டி மாடல்கள் அனைத்தின் மொத்த விற்பனையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக விற்பனையாகி சந்தையில் தொடர்ந்து கெத்து காட்டி வருகிறது. இருப்பினும் அதன் காலத்திற்கு ஏற்ப காரை மேம்படுத்த முடிவு செய்துள்ள டொயோட்டா தற்போது ஃபார்ச்சூனரின் மூன்றாம் தலைமுறை மாடலை உருவாக்கி வருகிறது. இந்த புதிய கார் பலமுறை சோதனை ஓட்டத்தின் போது முழுமையாக மறைக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது சர்வதேச அளவில் வெளியாகியுள்ள பல்வேறு செய்திகளின்படி இந்த புதிய எஸ்யூவி காரை வரும் டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் அறிமுகமான ஹைலக்ஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல் முன்பை விட குறைவான கூர்மையான விளிம்புகளுடன், மிகவும் நவீனமான டிசைன் அமைப்பையும் பல்வேறு புதிய வசதிகளையும் பெற்று வரவுள்ளது. வரவிருக்கும் 2027 டொயோட்டா ஃபார்ச்சூனர் குறித்த முக்கிய விவரங்கள் இதோ:
2027 டொயோட்டா ஃபார்ச்சூனர் அறிமுகம் உறுதி: இந்தியாவில் எப்போது ரிலீஸ்?
இணையதள செய்திகளின்படி இந்த அடுத்த தலைமுறை எஸ்யூவி காரை டிசம்பர் 1 அன்று தென்னாப்பிரிக்காவில் உலகளவில் அறிமுகம் செய்ய டொயோட்டா தயாராகி வருகிறது. இந்த காலக்கெடுவின்படி பார்த்தால் 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த கார் இந்தியச் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

*AI-மூலம் உருவாக்கப்பட்ட படங்கள்
இப்போது இதில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களைப் பார்ப்போம்:
2027 டொயோட்டா ஃபார்ச்சூனர் பற்றிய விவரங்கள்
காரின் வெளிப்புற அமைப்பைப் பொறுத்தவரை, புதிய ஃபார்ச்சூனர் பழைய மாடலின் முரட்டுத்தனமான தோற்றத்தைக் குறைத்து சற்று எளிமையான மற்றும் நவீனமான டிசைன் மொழியைப் பின்பற்றியுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள ஸ்பை படங்களின்படி, இதன் முன்பகுதி பாக்ஸி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலே DRLs வசதியுடன் கூடிய ஸ்லீக் LED ஹெட்லேம்ப்கள், ரெட்ரோ பாணியிலான 'TOYOTA' லோகோவுடன் கூடிய பெரிய 'ஹனிகோம்ப்' மெஷ் கிரில் மற்றும் ஓரங்களில் ஏர் வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சில்வர் ஸ்கிட் பிளேட்டுடன் கூடிய தடிமனான பம்பர் இதில் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்கவாட்டு தோற்றத்தில் காரின் நிமிர்ந்த A-பில்லர் அதன் கம்பீரமான தோற்றத்தை மேலும் கூட்டுகிறது. அதோடு ரூஃப் ரெயில்கள் புதிய டிசைனிலான அலாய் வீல்கள் மற்றும் ORVMகள் போன்ற புதிய அம்சங்களையும் எதிர்பார்க்கலாம். பின்புறத்தில், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட LED டைல் லேம்ப் அமைப்பு மற்றும் தட்டையான டெயில்கேட் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பம்பரும் சற்றே சதுர வடிவில் மாற்றப்பட்டு தற்போதைய மாடலின் அளவுக்கு அதிகமான தடிமன் சற்றே குறைக்கப்பட்டுள்ளது.

இதன் வசதிகள் குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், புதிய ஹைலக்ஸ் காரை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர் அட்ஜஸ்டபிள் மற்றும் வென்டிலேட்டட் ஃப்ரண்ட் சீட்கள், சன்ரூஃப், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், மல்டி-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*தற்போதைய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனரின் படம் எடுத்துக்காட்டுக்காக கொடுக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பைப் பொறுத்தவரை லெவல்-2 ADAS தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு மிகப்பெரிய அப்கிரேட் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுதவிர பல ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், ESC மற்றும் TPMS போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம் பெறலாம்.
பவர்டிரெயின்கள்
அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் மாடலில், தற்போதைய மாடலில் உள்ள அதே 2.8-லிட்டர் டீசல் என்ஜினே மைல்ட்-ஹைப்ரிட் ஆப்ஷனுடன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய 2.7-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினுக்குப் பதிலாக ஸ்ட்ராங்-ஹைப்ரிட் செட்டப் வரக்கூடும். தற்போதைய ஃபார்ச்சூனரின் என்ஜின் விவரங்கள் இதோ:
| எஞ்சின் |
|
|
|
|||
| பவர் |
166 PS |
204 PS |
204 PS |
|||
| டார்க் | 245 Nm |
420 Nm (MT)/ 500 Nm (AT) |
500 Nm |
|||
| டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு AT |
|||
| Drivetrain |
RWD |
RWD/4WD |
4WD |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், AT- ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் (டார்க் கன்வெர்டர்), RWD- ரியர்-வீல் டிரைவ், 4WD- ஃபோர்-வீல் டிரைவ்

*தற்போதைய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனரின் படம் எடுத்துக்காட்டுக்காக கொடுக்கப்பட்டுள்ளது
புதிய ஃபார்ச்சூனர் கார், ஆஃப்-ரோடு திறன்களை மேம்படுத்தவும் அதன் கரடுமுரடான கட்டமைப்பிற்கு பலம் சேர்க்கும் வகையிலும் லோ-ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ் கொண்ட 4WD ஆப்ஷனுடன் வெளிவர அதிக வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டி கார்கள்
இந்த அனைத்து மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் வரவிருக்கும் 2027 ஃபார்ச்சூனர் கார் சுமார் ரூ.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இது சந்தையில் எம்ஜி மெஜஸ்டர் காருக்குப் போட்டியாக அமைவதுடன் ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வேகன் டெய்ரன் மற்றும் கியா சொரெண்டோ போன்ற மோனோகாக் ரக கார்களுக்குச் சிறந்த மாற்றாகவும் இருக்கும்.


*AI-மூலம் உருவாக்கப்பட்ட படங்கள்
கார்தேக்கோவின் கருத்து
வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய வரவேற்பு இருந்தாலும், தற்போதைய ஃபார்ச்சூனர் கார் சற்றே பழமை வாய்ந்ததாக மாறத் தொடங்கிவிட்டது என்பதை மறுக்க முடியாது. எனவே அனைத்துத் துறைகளிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய தலைமுறை அப்கிரேட் நிச்சயம் கார் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். மேலும் தனது முரட்டுத்தனமான அடையாளத்தையும் கம்பீரமான தோற்றத்தையும் தக்கவைத்துக்கொண்டே ஐரோப்பிய போட்டி கார்களுக்கு கடுமையான சவாலை அளிக்க இதனால் முடியும். அறிமுகத்தின் போது இந்த காரை நேரில் காண நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் இந்தியாவிற்கும் இது வரும் என நம்புவோம்.
Spy Shot Image Source: Kurdistan Automotive Blog














