ஹூண்டாய் பேயோனில் இத்தனை கலர் ஆப்ஷன்களா… எது உங்க சாய்ஸ்னு பாருங்க ?
ஸ்போர்ட்டியான டூயல் டோன் ஃபயரி ரெட் முதல் குடும்பங்களுக்கு ஏற்ற கோல்டன் ப்ரான்ஸ் வரை பலவிதமான வண்ணங்களில் இது அறிமுகமாகிறது; இந்த இரண்டு நிறங்களுமே பேயான் காரின் வடிவத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்துகின்றன.
- ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் பேயான் SUV விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், நீங்கள் இந்த காரை புக்கிங் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியத் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதுதான் இதன் கலர் ஆப்ஷன்கள். ஹூண்டாய் நிறுவனம் பேயான் SUV காரில் கிடைக்கவுள்ள நிறங்கள் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹூண்டாய் பேயான் காரில் வழங்கப்பட்டுள்ள கலர் ஆப்ஷன்களை விரிவாக கீழே பார்க்கலாம்:
கலர் ஆப்ஷன்கள்
ஹூண்டாய் பேயான் கார் 6 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் டியூவல் டோன் மற்றும் மேட் ஃபினிஷ் ஆப்ஷன்களும் அடங்கும்:
-
டைட்டானியம் பிளாக்

-
கிளாஸி ப்ளூ

-
அட்லாஸ் வொயிட்


-
ஃபயரி ரெட்


-
கோல்டன் ப்ரான்ஸ்

-
எகோட்ரானிக் கிரே

இதில் டியூவல் டோன் கலர்கள் அட்லாஸ் வொயிட் மற்றும் ஃபயரி ரெட் ஆகிய ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கின்றன.
அதேபோல் மேட் ஃபினிஷ் கலர்கள் டைட்டானியம் பிளாக் மற்றும் கிளாஸி ப்ளூ ஆகிய ஆப்ஷன்களில் வழங்கப்படுகின்றன.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான பாணியில், பேயான் காரிலும் ஏராளமான வசதிகள் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 12.3 இன்ச் கர்வ்டு டச்ப்ரீன் இன்போடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், என்ஜின் புஷ் பட்டன் ஸ்டார்ட்டுடன் கூடிய கீலெஸ் என்ட்ரி, கஸ்டமைஸ் செய்யும் வசதி கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், பானரோமிக் சன்ரூஃப் மற்றும் இன்டக்ரேட்டட் AI ஃபீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், ஆட்டோ ஹில் ஹோல்டு வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB), லெவல் 2 ADAS, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டாபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவை இதில் அடங்கும்.
பவர்டிரெய்ன்
பேயான் கார் ஒரே ஒரு என்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே சந்தைக்கு வருகிறது. ஏற்கனவே பரிச்சயமான 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
| எஞ்சின் | 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
| பவர் |
115 PS |
| டார்க் |
144 Nm |
| டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / CVT |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT- கன்டினியூவஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமேட்டிக்)
எதிர்பார்க்கப்படும் விலை, அறிமுக தேதி மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் பேயான் காம்பேக்ட் SUV ரூ.10 லட்சம் முதல் ரூ.17.50 லட்சம் வரையிலான விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் வரும் அக்டோபர் 26, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேரியண்ட்கள் மற்றும் விரிவான விலை விவரங்கள் அறிமுக நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி விக்டோரிஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், நிஸான் டெக்டான், டாடா சியரா, சிட்ரோயன் ஏர்கிராஸ் X, ஹோண்டா எலிவேட், MG ஆஸ்டர் மற்றும் ஹூண்டாயின் சொந்த மாடலான கிரெட்டா ஆகிய கார்களுக்கு இது நேரடி போட்டியாக அமையும்.
கார்தேக்கோவின் கருத்து...
பேயான் காரின் பிரீமியம் தோற்றத்திற்கு இதில் கொடுக்கப்பட்டுள்ள கலர் ஆப்ஷன்கள் மிகவும் கச்சிதமாக பொருந்துகின்றன. குறிப்பாக டைட்டானியம் மேட் பிளாக் கலர் பேயோனின் கூர்மையான மற்றும் மஸ்குலார் கோடுகளை எடுப்பாகக் காட்டி, காரை மேலும் ஸ்போர்ட்டியாகக் காட்டுகிறது. அதேவேளையில் கோல்டன் ப்ரான்ஸ் போன்ற வண்ணங்கள் குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு மென்மையான தோற்றத்தைக் கொடுக்கின்றன.
புதிய பேயான் காரில் உங்களுக்கு எந்த கலர் மிகவும் பிடித்திருக்கிறது என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.














